பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கடைசியில பாருங்க பெரிய தளபதி,கொன்னது நம்ம கட்சிக்காரங்க‌

கடைசியில பாருங்க பெரிய தளபதி,கொன்னது நம்ம கட்சிக்காரங்க‌ இதுக்குத்தான் பெரியவரு யார் செத்தாலும் உடனே போகமாட்டாரு, அவருக்கு தெரியும் கட்சி பற்றி. அதனால முழு தகவலும் வந்துசேரும் வரைக்கும் அமைதியாய் இருப்பாரு தா.கிருட்டினன் கொலையும் அப்படித்தான், ஆலடி அருணா கொலையும் அப்படித்தான் கையாண்டாரு எவ்வளவு உட்கட்சி தகறாறு, வெட்டு குத்து கொலை எல்லாம் நடந்திருக்கு, வீரபாண்டி ஆறுமுகம் வரலாறெல்லாம் சும்மாவா? பெரிசு எதுக்காவது ஓடி போச்சுதா? அதுக்கு கட்சி பற்றி தெரியும் உங்களுக்குத்தான் தெரியல‌ பாருங்க எவ்வளவு […]

நெல்லை காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

இறுதியாக நெல்லை முன்னாள் திமுக மேயர் கொலைக்கு காரணம் உட்கட்சி விவகாரம் என வந்து நிற்கின்றது வழக்கு கொன்றவரும் கொல்லபட்டவரும் தாழ்த்தபட்டவர்கள் என்பது இன்னொரு கோணம் தாழ்த்தபட்டோருக்கான இயக்கத்தில் தாழ்த்தபட்ட ஒருவர் அந்த இனத்தில் ஒருவரால் கொல்லபட்டிருக்கின்றார் என்றால் சம்பவம் சொல்ல வருவது என்ன? தலித்துக்களுக்கு எதிரி வேறு யாருமல்ல, அவர்களேதான் அதிரடி நடவடிக்கையால் குற்றவாளிகளை பிடித்து, நெல்லையில் சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டில் இருக்கின்றது என காட்டியிருக்கும் நெல்லை காவல்துறைக்கு வாழ்த்துக்கள்

முந்திரிகாடு..

முந்திரிகாடு.. முந்திரிகாட்டுக்குள்ள இவருக்கு என்னடா வேலை? பார்வையே சரியில்லையே…. எல்லாம் NIA சட்டதிருத்தம் செய்த விளைவு, பூரா பயலும் ஒழுங்காக அவனவன் வேலைக்கு திரும்பிகொண்டிருக்கின்றார்கள்

கற்றதை பற்றவை.. பற்ற வை

சவுதி அரேபிய வரலாற்றை படித்துகொண்டிருகின்றேன் அந்த வறண்ட பூமி பெட்ரோல் கண்டுபிடிக்கு முன் அவ்வளவு பிரசித்தி இல்லை, இஸ்லாம் மட்டும் வாழ்ந்துகொண்டிருந்தது இன்றிருக்கும் இளவரசரின் கொள்ளுதாத்தா ரியாத் சுல்தான், மக்கா சுல்தான், மதீனா சுல்தான், தமாம் சுல்தான் என பலரை மடக்கி இன்றிருக்கும் ஒன்றுபட்ட சவுதியினை உருவாக்கியிருக்கின்றார் இன்று மிகபெரும் பலம்வாய்ந்த நாடு சவுதி, மன்னர் குடும்பமே ஆள்கின்றது ஆனால் எவனாவது என் நிலத்தை பிடுங்கிய மன்னர் பரம்பரை இது, என் பெட்ரோல் கிணறை பிடுங்கிய வம்சம் […]

முதல் மனைவியினை விட்டு இரண்டாம் மனைவி கட்டிய யாரும் அதன் பின் பழைய இடம் பெறவில்லை என்பார்கள்

தமிழ் சினிமாவில் ஒரு சென்டிமென்ட் உண்டு முதல் மனைவியினை விட்டு இரண்டாம் மனைவி கட்டிய யாரும் அதன் பின் பழைய இடம் பெறவில்லை என்பார்கள் ஜெமினி கணேசனை தவிர‌ ஜெமினி வழி தனி வழி பாலுமகேந்திரா,பாக்யராஜ், பிரகாஷ்ராஜ் என பலரை காட்டமுடியும். இரண்டாம் திருமணம் செய்தபின் அவர்களின் கொடி பழையமாதிரி பறக்கவில்லை கிரிக்கெட்டில் இந்த சாபம் பெற்றவர் சிலர் உண்டு பட்டோடியினை விடுங்கள் அது பழங்காலம், இந்திய கிரிக்கெட்டின் திருப்புமுனை என அசாருதீனை சொல்லலாம் மிக சிறந்த […]

பத்திரிகா தர்மம் சினிமா தர்மமாகிவிட்டதா?

முன்பு ஒரு தெலுங்கன் எம்மோடு வேலை செய்துகொண்டிருந்தான் அது பாகுபலிக்கு முந்தைய காலம் சினிமா பற்றி பேச்சு வந்தபொழுது ஆந்திர சினிமா அட்டகாசங்கள் குறிப்பாக மழை காட்சி, கடவுளால் கூட நம்ப முடியாத சண்டை காட்சிகளை சொன்னால் சிரித்து கொண்டான், தொடர்ந்து அவர்களை கலாய்த்த பொழுது அவனால் பொறுக்க முடியவில்லை, மெதுவாக சொன்னான் “எங்கள் சினிமா கதைகளில் பல அட்டகாசம் இருக்கலாம், ஆனால் ஹீரோ என்றால் உயரமும் உடற்கட்டும் வேண்டும், முகத்தில் ஒரு தேஜஸ் வேண்டும் ராமராவ் […]

கடும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவரலாம்

நெல்லை மேயர் கொலையில் திமுக உறுப்பினரான மதுரை சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைது செய்யபட்டிருப்பது கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது உமா மகேஸ்வரியும் சீனியம்மாளும் தாழ்த்தபட்ட பிரிவினர் என்பதால், ஏதோ அரசியல் தொடர்பான விவகாரத்தில் இக்கொலை நடந்திருக்கலாம் என்ற நோக்கில் விசாரணை செல்கின்றது கடும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவரலாம் முக ஸ்டாலின் கோரியபடி குற்றவாளிகளை கைதுசெய்துவிட்டோம் என எடப்பாடி கோஷ்டி விரைவில் அறிக்கைவிடலாம்

வியாபாரம் தவிர எதுவும் தெரியா நாடு அமெரிக்கா

வியாபாரம் தவிர எதுவும் தெரியா நாடு அமெரிக்கா, அவர்கள் வல்லரசாய் நிற்பதும் உலக ஆதிக்கத்தில் கொடிகட்டி பறப்பதும் அந்த வியாபாரம் ஒன்றாலே 1950களுக்கு பின் உலகின் பல நாடுகள் தோளில் கை போட்டு கொண்டு பெரும் சலுகைகளை அளித்து வியாபாரம் செய்தது அமெரிக்கா கம்யூனிச எதிர்ப்பு , எதிரி நாடுகள் ஒழிப்பு என அந்த திருப்பணியினை செவ்வனே செய்தது இப்பொழுது உலக செல்வங்களை எல்லாம் தன் பக்கம் திருப்பும் காரியத்தை டிரம்ப் என்பவர் மூலமாக அந்நாடு செய்கின்றது. […]

இன்னொரு “ரஷ்ய புரட்சி” நடக்கலாம்

புட்டீனையும் அவரின் சர்வாதிகார ஆட்சியினையும் எதிர்த்து ரஷ்யாவில் ஆர்பாட்டங்கள் தொடங்கிவிட்டன, பெருமளவு கூட்டமும் அதற்கு வருகின்றது ஆனால் புட்டீனோ அவர்போக்கில் ராணுவ பயிற்சி நடக்கும் இடங்களில் நீர்மூழ்கி கப்பலில் சுற்றிகொண்டிருக்கின்றார் விஷயம் சீரியசானால் இன்னொரு “ரஷ்ய புரட்சி” நடக்கலாம்

தனுஷ் இளைய சூப்பர் ஸ்டார்

தனுஷ் இளைய சூப்பர் ஸ்டார் பட்டத்தோடு இனி அழைக்கபடுவார் உதயநிதி தளபதி என அழைக்கபடும் பொழுது தனுஷ் அடுத்த சூப்பர்ஸ்டார் என அழைக்கபடாமல் போனால்தான் ஆச்சரியம் தனுஷ் ரஜினியின் சூப்பர்ஸ்டார் பட்டத்துக்கு மட்டும் வாரிசா இல்லை மொத்த சொத்துக்கும் ஒரே வாரிசா என்பதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஆளாளுக்கு வாரிசுகள் வந்து பட்டங்களை தக்க வைக்கின்றன‌ தலைவி குஷ்பு வீட்டில் அப்படியாரும் இல்லாததால் சங்கம் சோகமாகின்றது இந்த அண்ணா, சாஸ்திரி, காந்தி, ராஜாஜி […]