பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சேரனை நினைத்தால், நல்லதோர் வீணை செய்தே……

தமிழ்திரையுலகின் தனிபெரும் இயக்குனர் சேரன், யதார்த்தமும் தன்னம்பிக்கையும் விதைக்கும் மிக சில இயக்குனர்களில் அவரும் ஒருவர் இயக்குநர் இமயம், இயக்குநர் சிகரம்,இயக்குநர் சமுத்திரம் , இயக்குநர் எவரெஸ்ட்,இயக்குனர் அணுகுண்டு என்றெல்லாம் பெயர் பெறவேண்டிய மனிதர் பிக்பாஸில் புரண்டு கொண்டிருப்பது காலத்தின் கோலம்.. மக்களின் நாடிதுடிப்பறிந்து சினிமா எடுத்து ஜெயித்தவர், சினிமாவில் சம்பாதித்து பணத்தை நிறுத்துவது எப்படி என்பதில் சறுக்கிவிட்டார் போல‌ சேரனை நினைத்தால், நல்லதோர் வீணை செய்தே…… ஒரு சிங்கம் சில ஆட்டுகுட்டிகளுடன் சரிக்கு சரியாக கலந்திருப்பதை […]

அமித்ஷாவின் 370 சட்டபிரிவு பற்றிய அறிவிப்பு

அமித்ஷாவின் 370 சட்டபிரிவு பற்றிய அறிவிப்பு, காஷ்மீரில் பெருமளவில் குவிக்கபடும் இந்திய படைகள். அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அறிவித்திருக்கும் சலுகைகள் இதெல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் எதுவும் சரியாக நடப்பதாக தெரியவில்லை இந்தியர்கள் தங்கள் தேசபற்றை காட்டும் நேரம் நெருங்கிகொண்டிருக்கின்றது

நிச்சயம் இது பெரும் குழப்பத்துக்கே இட்டு செல்லும்

எங்கள் ஆட்சியில் காஷ்மீர் தீவிரவாதத்திலிருந்து விடுவிக்கபட்ட பகுதி என்றார்கள், அதையும் மீறி குண்டு வெடித்தபொழுது எல்லை தாண்டி தாக்கியாயிற்று என்றார்கள் இப்பொழுது பாகிஸ்தானும் சரி அவர்களின் சகலபாடி தீவிரவாதிகளும் சரி எல்லாம் கட்டாந்தரையில் மல்லாக்க படுத்தாயிற்று, சில துண்டுபீடி குடித்தபடி பழம் நினைவுகளில் மூழ்கி கிடக்கின்றன‌ பாகிஸ்தானே தள்ளாடி கிடக்கும் நிலையில் காஷ்மீரில் எந்த பெரும் கலவரங்களுக்கும் வாய்ப்பே இல்லை இந்நிலையில் ஏன் படை குவிக்க வேண்டும்? புது புது பரபரப்புகளை உருவாக்க வேண்டும்? பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் […]

Unconditional Love

Unconditional Love என ஆளாளுக்கு பேசிகொண்டிருக்கின்றார்கள் Unconditional Love எனும் வார்த்தையினை முதலில் தமிழகத்தில் சொன்னவர் யார் தெரியுமா? சாட்சாத் அந்த ஜெயலலிதா நிபந்தனையற்ற அன்பு (unconditional love) என்பதை என் வாழ்வில் நான் கண்டதே இல்லை என அவர் ஒரு பேட்டியில் சொன்னபொழுது அதை கேட்டவர்கள் மனம் கலங்கித்தான் போனது கடைசி வரை அப்படி ஒரு அன்பினை அவர் அனுபவிக்காமல் அனாதையாய் மரித்தது அவரின் கர்மா அல்லது விதி தமிழக மக்கள் தன்னை நிபந்தனையின்றி அன்பு செய்கின்றார்கள் […]

நிபந்தனையற்ற அன்பினை கொண்டிருந்தவன் யார் தெரியுமா?

உண்மையில் வரலாற்றில் நிபந்தனையற்ற அன்பினை கொண்டிருந்தவன் யார் தெரியுமா? ராவணன், அவனேதான் அவனுக்கு இன்னொரு பக்கம் இருந்தது கம்பனின் ராமாயணம் மூல பிரதியான வால்மிகி ராமாயணத்தில் இருந்து மாறுபட்டது, விருப்பமில்லா பெண்ணை தொட்டால் தலை வெடித்துவிடும் என்பதும், பூமியோடு சீதையினை கவர்ந்து சென்றான் என்பதும் கம்பனின் சொந்த சரக்கு தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்ப அதை மாற்றிகொண்டான் கம்பன் அந்த வால்மிகி வரலாற்றின்படி ராவணனுக்கு சீதையின் போதையினை ஏற்றியவள் சூர்ப்பநகை அதில் மதிமயங்கிய ராவணன் சீதையினை தூக்கி வருகின்றான் […]

தாவீதும் Unconditional Love என்பதில் உறுதியாக இருந்திருக்கலாம்

“பிறர் தாரத்தை விரும்பாதிருப்பாய்” என்கின்றது பைபிள், கடவுள் கொடுத்த 10 கட்டளைகளில் அதுவும் ஒன்று. அதுவும் சாவுக்குரிய பாவங்களில் ஒன்று பைபிளின் மிக பிரமாதமான அரசன் தாவீது, இன்றுவரை யூதர்களின் கனவு அரசன் அவனே. இந்துக்களுக்கு ராமனும் கண்ணனும் போல யூதர்களுக்கு தாவீது தாவீது போர், வீரம், ஆட்சி, இசை என சகலகலா வல்லவன். பைபிளின் சங்கீதங்கள் எனப்படும் பாடல் அவன் கொடுத்ததே இன்றும் உலக அமைதியினை நிர்ணயிக்கும் ஜெருசலேம் நகரை அவனே முதலில் பிடித்து யூதருக்கு […]

மிக மிக கடைந்தெடுத்த பொய்

தமிழ் 2500 ஆண்டுக்கு உட்பட்ட வரலாறு கொண்டது என்பதெல்லாம் ஏற்றுகொள்ள முடியாது பூம்புகார் கடலில் மூழ்கியே சில ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம், அப்பொழுதே தமிழ் இருந்திருக்கின்றது. சோழனின் அரசில் ஐரோப்பியரும் அரேபியரும் தூதராக இருந்தனர் அதைவிட ஆழமாக நோக்கலாம் தமிழின் முதல் சங்கம் கடல் கொண்ட கபாடபுரத்தில் இருந்திருகின்றது லெமூரியாவும் அட்லாண்டிஸ் கண்டமும் கடலில் மூழ்கிய காலங்களே பழமையானவை, அப்பொழுதே தமிழ் பேசபட்டிருகின்றது இவை எல்லாம் மிக தொன்மையான காலங்கள், அட தொன்மையினை விடுங்கள் பழங்காலத்துக்கு வாருங்கள் […]

உலகுக்கே தெரிந்த உண்மை அயோத்திக்கும் அயோத்தி மன்னனுக்கும் தெரியாமல் போனது சோகம்..

ராவணனுக்கு விருப்பமில்லா பொண்ணை தொட்டால் தலை வெடித்துவிடும் எனும் சாபம் உண்டு எல்லோருக்கும் அந்த சாபம் தெரிந்திருகின்றது, இன்று உள்ளவர்கள் வரை தெரிந்திருக்கின்றது வால்மீகிக்கும் கம்பனுக்கும் தெரிந்திருக்கின்றது துரதிருஷ்டவசமாக விஸ்வாமித்திரர், ராமர், அனுமர் உட்பட பலருக்கும் அயோத்தி மக்களுக்கும் தெரியவில்லை ராவணன் கூடவே இருந்த விபீஷ்ணனுக்கும் தெரியவில்லை, தெரிந்தாலும் அவனும் ராமனிடம் சொல்லவில்லை, பழனிச்சாமி போல நாற்காலி கிடைத்தால் போதுமென இருந்துவிட்டான் ராவணனுக்கு அப்படி ஒரு சாபம் இருப்பது அயோத்திக்கு தெரிந்தால் ஏன் வீண் சந்தேகம்? ஏன் […]

கன்னட நிலமை போல ஆகிகிடக்கின்றது இஸ்ரேலிய பாராளுமன்றம்

கன்னட நிலமை போல ஆகிகிடக்கின்றது இஸ்ரேலிய பாராளுமன்றம் செப்டம்பர் மாதம் மறுபடியும் தேர்தல் என அறிவித்துவிட்டார்கள், அந்த நேதன்யாகு கடும் பிரச்சாரத்தில் இறங்கியிருக்கின்றார் அதில் டிரம்ப், புட்டீன் மற்றும் மோடியுடன் அவர் இருக்கும் பேனர்கள் இஸ்ரேலில் களைகட்டுகின்றன‌ இது மோடிக்கான வெற்றி என இங்கிருப்பவர்கள் சொல்லலாம் சொல்லட்டும் ஆனால் நுட்பமான விஷயம் என்ன தெரியுமா? நீவீர் எம்மை பின் தொடர்பவர்கள் என்றால் டிரம்ப், மோடி, புட்டீன் என இந்த மூவரையும் ஏன் இஸ்ரேல் பெரிதாக்குகின்றது என்பது நொடியில் […]

நெல்லை செழிக்கட்டும் அவரும் வரலாற்றில் நிற்கட்டும்

பாராளுமன்றத்தில் பலர் கன்னிபேச்சு என தொடங்கி பேசிகொண்டிருக்கின்றார்கள், நெல்லைக்காரன் என்ற முறையில் அந்த பகுதியின் எம்பி ஞானதிரவியத்தின் பேச்சிக்கு எதிர்பார்ப்பு இருந்தது தேசத்தின் சபையில் நெல்லை மக்களின் குரலாக அறியபடுபவர் என்ன பேசினார் என கவனித்தோம் மனிதர் அணுகழிவு மையம் உட்பட இதர சிக்கல் பற்றி பேசவில்லை. பேசியும் ஒன்றும் ஆகாது என்பது அவருக்கும் தெரியும் எல்லோருகும் தெரியும் இதனால் சில குறிப்பிட்ட சிக்கல்களை தொட்டு பேசினார், தாமிரபரணி கரையினை குஜராத் நதிகளை போல பலபடுத்தவேண்டும் என […]