பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அதெல்லாம் ஆண்டவன் கொடுக்கும் வரம்

இசை என்பது பிராமணரின் அடையாளம் என்பது கச்சேரி மேடை தாண்டி சினிமா வரை இருந்தது அது எங்கள் குல சொத்து என கொண்டாடியதை முதலில் உடைத்து போட்டவர் இளையராஜா அவரையும் முதலில் விட்டார்களா? இது இசையே இல்லை, சாவுக்குத்து மேளம் என்றெல்லாம் விரட்டினார்கள். ஆனால் நின்று சாதித்தார் இளையராஜா (ஆனால் உண்மையான காட்டு அடியினை கொடுக்கும் அனிருத் என்பவர் மேல் சர்ச்சை வராது, காரணம் அவாள் எல்லாம் வேறு வகை) இளையராஜாவின் வரவுக்கு பின்பு பிராமணர் அல்லா […]

நினைத்து பார்க்கவே நடுக்கம் வரும் காட்சிகள் அவை

சுதந்திரம் வாங்கி மக்களாட்சி வந்து கிட்டதட்ட 73 ஆண்டுகள் ஆகின்றது இன்றைக்கு கூட, அதுவும் வெளிநாட்டில் பணியாற்றும் பிராமண பெண் இன்னொரு இனத்துக்காரனை திருமணம் செய்யும் நிலையில் அவள் தாய்க்கு எவ்வளவு மிரட்டல்? இன்றே அதாவது மாறிவிட்ட காலங்களிலே இவ்வளவு மிரட்டல் என்றால் பாரதியார் எவ்வளவு அவமானபடுத்தபட்டிருப்பார்? பாரதிக்கு முந்தின காலங்கள் எப்படி இருந்திருக்கும்? நினைத்து பார்க்கவே நடுக்கம் வரும் காட்சிகள் அவை பட்டமரத்திற்கே இந்தபாடு என்றால் பச்சை மரம் என்னபாடு பட்டிருக்கும்? என் அருமை பாரதியே, […]

அவர் பேசுவதும் நாம் சாடுவதும் உள்வீட்டு சண்டை

ரஞ்சித் ராஜராஜ சோழனை பற்றி சொன்னது தமிழக பிரச்சினை இதற்காக இலங்கை தமிழன் எல்லாம் பொங்குவதை ஏற்க முடியாது இதெல்லாம் நாம் தமிழர், தொப்புள்கொடி, 7 தமிழர் என எங்கோ திசை திருப்பும் முயற்சி ரஞ்சித் தமிழக தமிழர், அவர் பேசுவதும் நாம் சாடுவதும் உள்வீட்டு சண்டை இதை கேள்வி கேட்க கடல் கடந்த எந்த பயலுக்கும் உரிமை இல்லை, அதை தரவும் முடியாது. ராஜ ராஜ சோழன் தமிழக தமிழ் மன்னன், அவனை சீண்டியதும் தமிழன் […]

அரசியல் ஞானம் என்பது அதுதான்

தங்க தமிழ்செல்வனுக்கும் டிடிவி தினகரனுக்குமான மோதல் பட்டவர்த்தனமாக தெரிந்தாயிற்று இனி என்னாகும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை எல்லா பலங்களும் விழ்ந்து நின்ற துரியோதணன் நிலையில் தனியாக நிற்கின்றார் டிடிவி தினகரன். ஒரு 5 வருடத்திற்கு முன்னால் கூட தங்களுக்கு இப்படி ஒரு நிலை வரும் என சசிகலாவோ, தினகரனோ எதிர்பார்த்திருக்க முடியாது நன்றி என்பதும், விசுவாசம் என்பதும் கொஞ்சமும் எதிர்பார்க்கமுடியாத இடம் அரசியல் யார் எப்பொழுது முதுகில் குத்துவார்கள் என்பது தெரியாது, அன்றிலிருந்து அதாவது ஜூலியஸ் சீசர் […]

எது “பொட்டைதனமான அரசியல்”?

எது “பொட்டைதனமான அரசியல்”? தாய்குலங்களின் வாக்குக்காக அம்மா அம்மா என அன்றொருவர் அலறிகொண்டிருந்த அந்த அரசியல்.. இரு பெண்களை முன்னிறுத்தி பின்னிருந்து நடராசன் என்பவர் 25 ஆண்டுகளாக செய்த அந்த அரசியல் எல்லா சர்ச்சையிலும் மகா ரகசியமாக திமுகவினை முன்னிறுத்திவிட்டு பின்னால் பதுங்கிகொண்டு ஒன்றுமே தெரியா கன்னிபோல வலம் வந்த அந்த அரசியல்.. ஒரு கொள்கையுமில்லா கட்சியாக, திட்டமே இல்லா ஆட்சியாக வலம் வந்த அந்த அரசியல்.. “பொட்டதனமான அரசியல்” என்பது அவர்களுக்கு புதிதே அல்ல.. இதில் […]

போர் ஆமாம் போர்..

நாம் தமிழர் தும்பிகள், திராவிட இம்சைகளை அடுத்து அடுத்த சுற்று சண்டை சங்கிகளோடு தொடங்கிவிட்டது.. போர் ஆமாம் போர்.. ஒரு மனிதனுக்குத்தான் எவ்வளவு சோதனை? எங்கிருந்துதான் இந்த வயலில் மட்டும் இவ்வளவு களைகள் முளைக்கின்றன என தெரியவில்லை, இங்கு மட்டும் களைகளாக பெருகிகொண்டே இருக்கின்றன‌ என்ன செய்வது? களைகள் பலவகை ஒவ்வொன்றும் ஒருவகை. திருவையாறும் அந்த “கரை நாடக” இசையும் பிராமணருக்கு மட்டுமானது அல்ல, அல்லவே அல்ல. அதற்கு முன்பே அந்த இசை இருந்தது, நாயக்க மன்னர்களின் […]

விழித்துவிட்டார்கள் என்பது தெரிகின்றது

சவுதி அரேபியா புதிய திட்டத்தை அறிவித்திருப்பது உலக அரங்கில் சலசலப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது மற்ற நாடுகளை போல் அல்லாமல் எண்ணெய் ஆசியில் ஒரே இரவில் பணக்கார நாடு எனும் அந்தஸ்தை எட்டியது சவுதி உலகின் மிகபெரும் எண்ணெய் வளநாடு என்ற போதிலும் பணக்கார நிலையினை தக்கவைக்க அதற்கு இன்னும் வலுவான நிதி தேவை பல வகைகளில் அது தன் வருமானத்தை அதிகரித்தது, குறிப்பாக அந்நிய நாட்டு தொழிலாளர்களையும் தொழிலதிபர்களையும் அது குறிவைத்தது நேற்று அந்நிய நாட்டவர் 1.5 கோடி […]

மைக்கேல் ஜாக்சன்

அது தெருவோரமாக ஆடிகொண்டிருந்த கருப்பர் இசை குடும்பம், அந்த குடும்பத்தின் 7ம் பிள்ளை ஜாக்சன் அந்த சகோதரர்கள் நடத்திய இசைகுழுவில் நடனமாடி தன் வாழ்வினை தொடக்கினார் அவர் மின்னல் வேக அசைவுகளும் , சவால் நிறைந்த ஆட்டங்களும் அவருக்கு தனி புகழ் தேடிகொடுத்தன‌ பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த ‘பாப்’ புதிய நடனத்தை அவர் படைத்தார் சொந்தமாக பாடல், இசை என […]

இவை எல்லாம் நாட்டுக்கு நல்ல அறிகுறி அல்ல‌

வடக்கே இஸ்லாமியருக்கு எதிரான சில வன்முறைகள் தொடங்கிவிட்டதாக தெரிகின்றது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் இஸ்லாமிய மதராசாக்களை நோக்கி சில விரும்பதகாத சம்பவங்கள் நடப்பதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன‌ இவை எல்லாம் நாட்டுக்கு நல்ல அறிகுறி அல்ல‌ ஆச்சரியமாக எதிர்கட்சிகளான முலாயம் சிங், மாயாவதி ராகுல் என யாரும் இதை எல்லாம் கண்டிக்கவில்லை என்பதுதான் மகா சோகம் இவைகளை ஆரம்பத்திலே கிள்ளிவிடுவது நல்லது, இன்னொரு பெரும் சிக்கலில் நாடு வீழ்ந்தால் பாகிஸ்தான் போல இந்தியா நிலையும் பாதாளத்தில் […]

பார்வதிபுரம் குப்பைகளை விட அமேசானில் ஒன்றும் அதிகம் அல்ல..

அந்த இம்சை பிடித்த மழைபாடல், வெண்முரசு இம்சைகளை விட அமேசானில் ஒன்றும் குப்பைகள் சேரவில்லை விஷ்ணுபுர வாசக சதுர ஜால்ராக்கள் , மகாகவி தேவதச்சன் கவிதைகள் போன்றவற்றைவிட அந்த அமேசானில் குப்பைகள் இல்லை இவர் சொல்வதுதான் இலக்கியம், இவர் சொல்வதுதான் கவிதை, இவர் சொல்வதுதான் பாரதம், இவர் சொல்வதுதான் குப்பை அழிச்சாட்டியத்தின் உச்சத்திற்கு சென்றுகொண்டிருக்கின்றார் ஜெயமோகன் அந்த சிங்கப்பூர் சூரியகலாவும், அந்த மாவுகடைக்காரனும் நிச்சயம் இந்த ஆண்டின் பத்ம‌ஸ்ரீ விருதுக்கு தகுதியானவர்கள் ஏன் பரம்வீர்சக்ரா எனும் வீரதீரத்திற்கான […]