இது நிரந்தர தீர்வு அல்ல
சென்னை மட்டுமல்ல எல்லா ஊரின் நீர்நிலைகளும் அப்படித்தான் அழிந்து கிடக்கின்றன சென்னையின் மக்கள் நெருக்கம் உட்பட பல சிக்கல்களால் சென்னை சிக்கல் வெளிவருகின்றது, மற்ற ஊர்களில் மறைந்து கிடக்கின்றது சென்னை சந்திக்கும் சிக்கலை தமிழகத்தின் ஒவ்வொரு ஊரும் சந்தித்து கொண்டுதான் இருக்கின்றது ஆனால் நிலத்தடி நீரும் இன்னும் சில காரணமும் தாக்குபிடிக்கின்றன இது நிரந்தர தீர்வு அல்ல குளங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் மாபியாக்களாலும் அவர்களின் எச்சி காசுக்கு ஆசைபடும் அதிகாரிகளாலும் வளைக்கபட்டாயிற்று வயல்கள் எல்லாம் வீடுகளாயிற்று, […]