பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கோமதியின் சாதனை பெரிது

நிச்சயம் பி.டி உஷாவின் சாதனையினை விட கோமதியின் சாதனை பெரிது பி.டி உஷா பெற முடியாத இடத்தினை கோமதி அடைந்துவிட்டார், உரிய பயிற்சிகள் கிடைக்கும் பட்சத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கிலும் அவரால் ஆச்சரியங்களை நிகழ்த்த முடியும் ஆனாலும் இந்திய ஊடக நிலை மற்றும் அரசியல் நிலையினை கவனியுங்கள் தோற்றுபோன பிடி உஷாவுக்கும் அஞ்சு ஜார்ஜுக்கும் கிடைத்த வரவேற்பு வெற்றிபெற்ற கோமதிக்கு இல்லை ஏன் என்றால் இப்படித்தான் இங்கு தமிழருக்கு டெல்லியில் லாபி செய்ய நல்ல தலமையும் இல்லை அவர்களுக்காக […]

இது கிறிஸ்துவத்துக்கு சோகமான மாதம்

இது கிறிஸ்துவத்துக்கு சோகமான மாதம் பாரிசில் புகழும் பாரம்பரியமும் கொண்ட மாதா கோவில் எரிந்தது, இயேசு மேல் அறையபட்ட ஆணி, அவர் தலையின் முட்கிரீடம் உட்பட்ட பல புனித பொருட்கள் அங்குதான் இருந்தன‌ அவை காப்பாற்றபட்டன ஆனால் அந்த ஆலயம் பெரும் பழுதுபட்டது அந்த சோகம் தீர்வதற்குள் இலங்கையில் அந்தோணியார் ஆலயமும், செபஸ்தியார் ஆலயமும் நொறுக்கபட்டன‌ இது கிறிஸ்தவ வரலாற்றில் வழிநெடுக நடப்பதுதான் நொறுக்கபடுவதும் ஒழிக்கபடுவதும் அதிலிருந்து கிறிஸ்தவம் தளைத்து வருவதும் ஒன்றும் புதிதல்ல‌ காரணம் இயேசுவின் […]

சமூக ஊடகத்துக்கான வெற்றி

தினமலர் பத்திரிகை ஏசப்பா எனும் எகத்தாளத்துக்கு மன்னிப்பு கேட்டிருப்பதும் சிவகார்த்திகேயனின் வாக்கு தேவை ஏற்படின் கணக்கில் எடுக்கபடாது என தேர்தல் அதிகாரி சொல்லியிருப்பதும் சமூக ஊடகத்துக்கான வெற்றி மாபெரும் வெற்றி ஆனால் சிவகார்த்திகேயன் யாருக்கு வாக்களித்தார் என்பதை எப்படி கண்டறிவார்கள் என்பதுதான் சந்தேகம்.. அப்படியானால் யாரெல்லாம் யாருக்கு வாக்களித்தார் எனும் ரகசியம் கண்காணிக்கபடுகின்றதா? இல்லை சிவகார்த்திகேயன் யாருக்கு வாக்களித்தேன் என இவரிடம் சொன்னாரா? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இப்படி சொல்லியிருப்பது பெரும் அதிர்ச்சியினை […]

விஷயம் சாதாரணம் அல்ல‌

இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொடுத்த எச்சரிக்கை மிக சரி எளிதில் கட்டுபடுத்தமுடியா அளவு அங்கு சதிகார கும்பல் ஆழ ஊடுருவியிருக்கின்றது, பெரும் சிரமத்தில் இருக்கின்றது சிங்கள பாதுகாப்பு அமைப்பு புலிகள் போல ஆள் , அம்பாரை, சேனை என இருந்தால் சமாளிப்பது எளிது, இம்மாதிரி கொடூர தீவிரவாதிகளை அடக்குவது சிரமம் அதில் அனுபவமில்லா இலங்கை தடுமாறுகின்றது அமெரிக்கா எச்சரித்தபடியே தொடர்ந்து வெடிகுண்டுகள் சிக்குகின்றன, இன்னும் நடமாடும் வாகன வெடிகுண்டுகள் சிக்கவில்லை மோட்டார் சைக்கிளில் மனித வெடிகுண்டுகள் சவால் […]

ஜார்ஜ் உக்ளோ போப்

அவர் பெயர் ஜார்ஜ் உக்ளோ போப், கனடாநாட்டுக்காரர். பெயர்தான் போப் தவிர போப்பாண்டவர் அல்ல‌ பிரிவினை கிறிஸ்தவ வழி 1839ல் தன் 20ம் வயதிலே கிறிஸ்துவினை போதிக்க இந்தியா வந்தார். அதை சொல்வதில் தயக்கமே இல்லை. அவர் கிறிஸ்துவத்தை போதிக்கவே வந்தார் அந்நாட்களில் ஐரோப்பியர் மனநிலை அப்படி இருந்தது, இந்திய சூழலும் இங்கிருந்த பல வர்க்க வேறுபாடும் சாதியும் அவர்களை “இந்து தேச மாது சிரோ மணிகளை விந்தை ஒளிக்குள் வரவழைப்போம்” என உற்சாகமாக பாட வைத்தது […]

சம்மனசுகள் செத்துகிடப்பது போல் கிடக்கின்றது அந்த தளிர்கள்

எத்தனையோ பேரழிவுகளையும் போர் காலங்களையும் கொத்து கொத்தான பலிகளையும் பார்த்தாலும் கொழும்பு தாக்குதல் கண்ணுக்குள்ளே நிற்கின்றது 40 குழந்தைகள் ஆலயத்துள் கொல்லபட்டிருக்கின்றார்கள் குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள் என சொன்ன இயேசுவின் ஆலயம், கையில் குழந்தையோடு அந்தோணியார் சொரூபம் இருக்கும் அந்த ஆலயம் கொல்லவரும் புலியும் கொத்தவரும் பாம்பும் கூட அந்த மொட்டுக்களை கண்டால் மனமிரங்கி திரும்பியிருக்கும் அந்த சண்டாளருக்கு அந்த இரக்கமுமில்லை அந்த குழந்தைகளை கண்டபின்பாவது திரும்பியிருக்க வேண்டாமா? இரக்கமற்ற அரக்கர்களின் வெறியேறிய கொடூரர்களிடம் அதை எல்லாம் […]

கிரிக்கெட் மாஸ்டருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்றாலும் மிக நிதானமும், ஒரு வித மதிநுட்பமும் வேண்டும் இது மதியால் ஜெயிக்கும் நாடு அதனால்தான் செஸ் விளையாட்டில் ஆனந்த் போல கிரிக்கெட்டில் சிலர் அடையாளமிட்டார்கள் அதில் சச்சின் டென்டுல்கர் மகா முக்கியமானவர். கபில்தேவால் திரும்பி பார்க்க வைத்த இந்திய கிரிக்கெட் அணியினை அப்படியே நிறுத்தி கவனத்தை தக்க வைத்தவர் உலக அளவில் இந்திய கிரிக்கெட்டின் மிக பெரும் அடையாளமாகி, கிரிக்கெட் மேதை பிராட்மேனின் வாரிசாகவே அறியபட்டவர் சச்சினால் வளர்ந்த தலைமுறை அவரை […]

நம்மிடம் முகவரி எல்லாம் கேட்டார்கள்

இப்படித்தான் முன்பும் நம்மிடம் முகவரி எல்லாம் கேட்டார்கள் நாமும் தைரியமாக “இதுதாண்டா அட்ரஸ் வந்து பாருடா” என சொல்லிவிட்டோம் No.8, Hospital Road,, Sinna Porur, CIT Nagar, Chennai, Tamil Nadu 600116, India தும்பிகளும் படு ஆக்ரோஷமாக சென்றன, போக போக மிரட்டல் வேறு “வந்துட்டே இருக்கோம்டா, உன் வீடு மட்டுமில்ல தெருவே இருக்காதுடா, தமிழின துரோகி இருடா.. ” என சொல்லிகொண்டே இருந்தார்கள் அங்கு சென்ற பின்புதான் அது அவர்கள் கட்சியின் அலுவலகம் […]

இது ஆபத்தானது

சில நாட்களாக பொன்பரப்பி தமிழரசனை பெரும் தியாகி போலவும் பெரும் தலித் போராளி போலவும் சிலர் கொண்டாடிகொண்டிருக்கின்றார்கள் இது ஆபத்தானது அவன் ஒரு புலிபினாமி, புலிகளின் ஈழத்து அடாவடியினை தமிழர் அமைப்பு பெயரில் இங்கு அரங்கேற்றியவன் 1980களில் தமிழக அமைதிக்கு சவால்விட்டவன், சில பல குண்டுவெடிப்ப்பு இன்னபிற சர்ச்சைகளில் சிக்கியவன் சாதி ஒழிப்பு , தலித் அமைப்பு, தமிழர் அமைப்பு என்ற போர்வையில் ஒளிந்திருந்த தேசவிரோதி உச்சமாக ஈழத்து புலிகள் ஸ்டைலில் பொன்பரப்பி வங்கியினை கொள்ளையிட முயன்றபொழுது […]

ஏன் தேவையின்றி பரபரப்புக்காக எழுதுகின்றாய்?

கிறிஸ்தவ ஆலய குறிவைப்பும் தகர்ப்பும் சரி, இந்த இந்திய தூதரகம் மேல் பொட்டுவெடி கூட இல்லையே, பின் ஏன் தேவையின்றி பரபரப்புக்காக எழுதுகின்றாய் என கேட்ட்கின்றனர் சிலர் அவர்கள் எல்லாம் ஆண்டி இன்டியன்ஸ் இந்த இலங்கை குண்டுவெடிப்பு விசாரணை எப்படி தொடங்கியது என்றால் இப்படித்தான், அதாவது உலகில் எல்லாவற்றிற்கும் அதிர்ஷ்டமும் வேண்டும் அப்படி தீவிரவாத தாக்குதலுக்கும் அதிர்ஷ்டம் வேண்டும் என்ன துரதிருஷ்டம் என்றால் சின்னமன் ஹோட்டல், சங்ரிலா ஹோட்டல் போல தாஜ் சமுத்திரா ஹோட்டலிலும் மனித வெடிகுண்டு […]