பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜூன்மாதம் இறுதி விசாரணை

ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க போவது யார் , ஜூன்மாதம் இறுதி விசாரணை : செய்தி அம்மணியின் சட்டவிரோத சொத்துகுவிப்புக்கும் முறையற்ற வகையில் சேர்த்தற்கும் அந்த போயஸ் கார்டன் வீட்டின் ஒரு பகுதி தவிர இதர சொத்துக்கள் எல்லாம் அரசுக்கே செல்லவேண்டும் ஐதரபாத் திராட்சை தோட்டமும் போயஸ் கார்டனின் ஒரு பகுதியுமே அவர் அரசியலுக்கு வரும் முன் இருந்த சொத்து அதன் பின்பு குவித்ததெல்லாம் முறையான வருமானம் அல்லவே அல்ல.. பல நாடுகளில் அரசியல் கொள்ளையர் முதல் பல […]

சிந்தித்து பார்க்கவேண்டிய நேரமிது

இலங்கையில் வசிக்கும் மூவினங்களில் இஸ்லாமிய சமூகமே பொருளாதாரத்தில் சிறந்தது அதை அடுத்து ஈழதமிழர் அதை அடுத்தே சிங்களர் இந்த அடிப்படையில்தான் இஸ்லாமியரை இருவரும் சேர்ந்து அடித்ததும் பின் புலிகள் இஸ்லாமியரை அடித்ததும் அப்படி வசதியான குலம் அது, இப்பொழுதும் தற்கொலை தாக்குதலை செய்திருப்பது அந்த கோடீஸ்வர கும்பல் என்றுதான் செய்திகள் வருகின்றன‌ பணம் கொழுத்த அக்குடும்பம் மார்க்கத்தில் கடுமையாக இறங்கியிருக்கின்றது அது தவறல்ல அது வெறியாகி போனதுதான் தவறு அவர்கள்தான் முன்னின்று 3 பேர் நடத்தியிருக்கின்றார்கள் இந்த […]

நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்

இலங்கையில் இஸ்லாமிய கொடூரர் தாக்கினாலும் இஸ்லாமியரான அமைச்சர் ரவூப் ­ஹக்கீம் என்பவர் பொறுப்பான பேச்சுக்களை பேசுகின்றார் இதற்காக அந்த சமுதாயமே வெட்கமும் வேதனையும்படுவதாக தெரிவிக்கும் அவர், இதை ஏன் முன் கூட்டியே தடுக்கவில்லை என வருத்தமும் தெரிவிக்கின்றார் முதலில் நாம் இலங்கையர், மதம் என்பது அரசாங்கம் கொடுத்திருக்கும் வழிபாட்டு உரிமை, அதை நாட்டுக்கு எதிராக பயன்படுத்த கூடாது எனும் பண்பான பேச்சுக்கள் அவரிடம் இருந்து வருகின்றன‌ ஆம் அரசாங்கம் கொடுத்திருக்கும் மத உரிமையினை நாட்டுக்கு எதிராக பயன்படுத்துவது […]

இலங்கையில் வெடிகுண்டு ஆலை

இலங்கையில் வெடிகுண்டு ஆலை ஒன்று கண்டறியபட்டுள்ளது அதில் பாகிஸ்தானியரும் இந்தியரும் கைது செய்யபட்டிருப்பதுதான் கடும் அதிர்ச்சி இவர்கள் என்ன மதம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை அந்த இந்தியர்கள் யாரென இன்னும் தகவல் வெளியிடபடவில்லை எளிதில் வராது விஷயம் இதுதான் இலங்கையில் பயிற்சிபெறும் தீவிரவாதிகளில் இந்தியரும் இருக்கின்றனர், இவர்கள் இந்தியாவுக்கு பெரும் மிரட்டல் இன்னும் எவ்வளவு இந்தியர் பாகிஸ்தானியரோடு இணைந்து அங்கு சுற்றுகின்றார்களோ தெரியாது, இந்தியா மிக கவனமாக கையாளவேண்டிய சிக்கல் இது

மார்கோனி

அது வரை உலகம் கம்பி வழியாகத்தான் தகவல் தொடர்பு கொண்டிருந்தது, கம்பி இல்லா தகவல் தொடர்பு சாத்தியமில்லை என சொல்லிகொண்டிருந்தது முதன் முதலில் கம்பி இல்லா தொடர்பு சாத்தியம் என சொன்னவர் பிரிட்டிஷ் இந்தியாவின் ஜெகதீஷ் சந்திரபோஸ், இப்பொழுது அவர் வாழ்ந்த டாக்கா வங்கதேசத்திற்கு சென்றுவிட்டது அவர் பல்துறை கில்லாடி, அப்பொழுதே இயற்பியல் துறையில் லண்டனில் பணியாற்றினார் தகவல் தொடர்பு கம்பி இல்லாமல் சாத்தியம் என சொல்லி சில கருவிகளையும் அமைத்தார், அவரின் ஆய்வு முடிவு ஆராய்ச்சி […]

ஒருவித காணசகிக்கா விளம்பரம்

இந்திய பத்திரிகைகளும் உலக மீடியாக்களும் காத்து கொண்டிருக்க ஒரு நடிகனை பிடித்து மோடி தன்னிலை விளக்கம் கொடுப்பது ஒருவித நாடகமாகவே தோன்றுகின்றது முரண்பாட்டின் மொத்த உருவம் அந்த பேட்டி, கொஞ்சமும் தேவை இல்லா விஷயம் ஒருவித காணசகிக்கா விளம்பரம் ராணுவ வீரனாக முயன்றேன், துறவியாக முயன்றேன் என ஏக பிதற்றல்கள் ஒரு இடத்திலும் மக்களுக்காக வாழமுயன்றேன் என சொல்லவே இல்லை அன்னை பணத்தில் வாழ்கின்றேன் என்பதெல்லாம் உச்சகட்ட ஓவர் நடிப்பு நிறைய படம் பார்ப்பாராம், அது சென்ட்ரலுக்கு […]

அவமான ஆத்திரத்தின் உச்சியில் இருக்கும் மைத்ரிபால சேனா

அவமான ஆத்திரத்தின் உச்சியில் இருக்கும் மைத்ரிபால சேனா உடனே ராணுவம் மற்றும் காவல்துறையின் உயரதிகாரிகள் ராஜினாமா செய்துவிட்டு ஓட வேண்டும் என கர்ஜிக்கின்றார் ரனில் அமெரிக்க கூட்டு, மைக் பாம்பியோவின் எச்சரிக்கை எல்லாம் அவரை சந்தேகம் கொள்ள வைக்கின்றன, தனக்கு எதிராக சதி நடப்பதாக நம்புகின்றார் அல்லது சீனா நம்ப சொல்கின்றது. சில பதவிகளில் இருப்போரை அவரால் டிஸ்மிஸ் செய்யமுடியாது என்பதால் இம்மிரட்டல் ஆனால் இலங்கை அதிகாரிகளோ நாம் தமிழர் ஆடியோ போல் பதிலளிக்கின்றனர் “ஏன் அவரு […]

இலங்கையில் காட்சிகள் வேகமாக மாறுகின்றன‌

இலங்கையில் காட்சிகள் வேகமாக மாறுகின்றன‌ “தேங்யூ ஐ.எஸ் தேங்யூ” என சொல்லிகொண்டே காட்சிக்குள் ஓடிவருகின்றது அமெரிக்கா, டிரம்ப் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு போன் செய்து “2001க்கு பின் அமெரிக்கா காணும் பெரும் அழிவு இது, இனி நாம் இணைந்த கைகள்” என சொல்லிவிட்டார் சொல்லிவிட்டு சும்மா சென்றாலும் பரவாயில்லை எப்.பி.ஐ எனப்படும் தன்நாட்டு பாதுகாப்பு அமைப்பையும் விசாரணைக்கு அனுப்பிவிட்டார் இதுதான் ஆச்சரியம், ஏன் இந்த வல்லமைமிக்க எப்.பி.ஐயினை அனுப்பவேண்டும் என்றால் விஷயம் வேறொன்றுமல்ல இனி வலுவாக இலங்கையில் […]

தேசத்து தங்க மகள்களுக்கு வாழ்த்துக்கள்

மறுபடியும் ஒரு தங்க பதக்கத்தை கத்தாரில் கைபற்றி கொடுத்திருக்கின்றது பெண்கள் அணி இம்முறை பெற்று கொடுத்திருப்பவர் சித்ரா, அட்டகாசமாக முதலிடத்தை பிடித்திருக்கின்றார் அம்மணி பாலக்காட்டு தமிழர் என அறியபட்டாலும் கேரளவாசியாகிவிட்டார் நம் இந்திய சகோதரி பிடி உஷாவின் வாரிசாக சில ஆண்டுகளாக அறியபட்டவர், அது பொய்க்கவில்லை கோமதியும், சித்ராவும் சீன வீராங்கனைகளை பின்னுக்கு தள்ளி தங்கம் வென்றிருப்பது சாதரண விஷயம் அல்ல‌ நிச்சயம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம் காத்திருக்கின்றது தேசத்து தங்க மகள்களுக்கு வாழ்த்துக்கள்..

அந்த உறவுகள் மறுபடி துளிர்க்கின்றன‌

வட கொரியா அதிபர் ரஷியா வந்தார் – புதினுடன் நாளை முக்கிய பேச்சுவார்த்தை அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை முறிந்த நிலையில் மறுபடியும் ராக்கெட் அது இது என பழைய பாட்சா பாயாக மாறிவிட்டார் வடகொரிய அதிபர் வடகொரியா அமெரிக்காவுக்கு கடும் சவால்விட தொடங்கிய காலத்திற்கு பின் புட்டீனை சந்திக்கின்றார் வடகொரிய வெள்ளை தக்காளி நாளை இருவரும் ஒன்றாக படமெடுத்து சிரிப்பார்கள் அதை பார்த்து சீன அதிபர் வாழ்த்துவார் தன் வழக்கமான ஸ்டைலான நடு விரலை உயர்த்தி கத்தி […]