பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இலங்கை குண்டுவெடிப்பு சொல்வது இதுதான்

இலங்கை குண்டுவெடிப்பு சொல்வது இதுதான் ஒரு நாட்டில் ஆயிரம் சிக்கல் இருக்கலாம் ஆனால் அந்நிய நாட்டினை உள்ளே விட்டால் என்னாகும் என்றால் இப்படித்தான் அவர்களிடம் சிக்குவது எளிது, மீள்வது கடினம் இலங்கையினை இந்த நுட்பத்தில் சிக்க வைத்திருந்தது இந்தியா தன் ராணுவ முகாம் ஆசை பிரேமதாசா + ஆண்டன் பாலசிங்கம் கூட்டணியால் நடக்கவில்லை என்றாலும் அதன் கணக்கு வேறாய் இருந்தது என்னதான் புலிகளால் இந்தியாவுக்கு பெரும் நஷ்டம் எனினும் கடிநாய் என்றாலும் அது நமக்கு ஒருவிதமான காவல் […]

அது எந்த நாடு?

கொழும்பு குண்டுவெடிப்பு விசாரணை தகவல்கள் வர தொடங்கிவிட்டன, 30 பேரை கைது செய்திருக்கும் அந்நாடு கடும் விசாரணையில் இருக்கின்றது, கைது செய்யபட்டோர் விவரம் இன்னும் வெளியிடபடவில்லை கைது செய்யபட்டவர்கள் பற்றி முழு விவரம் தெரியாவிட்டாலும் இலங்கை அரசு சில விஷயங்களை கோடிட்டு காட்டுகின்றது அதாவது நாட்டில் அடிப்படைவாத இயக்கம் மேல் தடை உத்தரவு அமல்படுத்தபடும் என்கின்றது இலங்கை அரசு இஸ்லாம் பவுத்தம் என பல அடிப்படை வாத கும்பல் அங்கு உண்டு என்பது வேறு விஷயம் இதனால் […]

மானிட குலத்திற்கே மாபெரும் அவமானம் இவர்கள்

உலகம் அலறி கிடக்கின்றது , இலங்கை அழுது அழுது நொந்து கொண்டிருக்கின்றது இந்த மிக சோகமான நேரத்திலும் மத ரீதியாக மிக கேவலமாக ஒரு பிரபல பத்திரிகை நடந்து கொள்வது நாகரீகம் அல்ல‌ தினமலர் தன் தரத்தை மிக மோசமாக தாழ்த்திகொள்ளும் நேரமிது கொஞ்சமும் மனிதாபிமானமின்றி லட்சகணக்கானோர் அழும் நேரம் மதத்தை சீண்டும் இந்த போக்கு ஐ.எஸ் இயக்கத்தைவிட காட்டுமிராண்டிதனமாது மானிட குலத்திற்கே மாபெரும் அவமானம் இவர்கள்

பேசிய பேச்சு கொஞ்சமா?

கொழும்பு குண்டுவெடிப்பு தொடர்பாக கடும் விசாரணை தொடங்கிவிட்டது இலங்கை அரசுக்கு யார் யார் எதிரிகள் என பெரும் பட்டியல் தயாராகி சம்பந்தபட்ட நாடுகளுக்கு விளக்கம் கேட்டு அனுப்பபட்டாயிற்று இதில் வைகோ சைமன் பெயர் எல்லாம் நிச்சயம் உண்டு அதிலும் சிங்கள பெண்களை கற்பழிப்பேன் என்றும் ஒரு சிங்களவனை விடமாட்டேன் என்றும், மொத்த இலங்கையினையும் பிடிப்பேன் எனவும் சைமன் கர்ஜித்த வீடியோ எல்லாம் பெரும் ஆதாரம் விரைவில் அவர் மேலும் ரகசிய விசாரணை நடக்கலாம் என்கின்றார்கள் பாவம் தமிழக […]

சிறப்பான தரமான சம்பவங்கள் இனிதான் நடக்கலாம்

தான் ஆடாவிட்டாலும் உலகெல்லாம் இருக்கும் ஈழதமிழருக்கு சதை ஆடுகின்றது கொழும்பில் தாக்குதல் என்பது தங்கள் சொந்த நாட்டு தாக்குதல் என்பதால் கூடுதலாக துடிக்கின்றார்கள், அலறுகின்றார்கள் அப்படித்தான் இருக்க வேண்டும் அதுதான் சரி ஆனால் இதை எல்லாம் காணும் தும்பிகளுக்கும் அவர்களின் தலைவன் குளவிக்கும் கண்கள் சிவந்து வயிறு எரிகின்றது லட்சகணக்கான தமிழரை கொல்ல உத்தரவு பிறப்பித்த கொழும்பு எரியும் பொழுது அழுபவன் எப்படி தமிழனாக இருக்க முடியும்? என தும்பிகளில் சிலது கத்த ஆரம்பித்துவிட்டது அவர்கள் அப்படித்தான் […]

இது மாபெரும் தேசவிரோதம்

ஒரு ரகசிய ஆய்வு செய்தி உலகெல்லாம் பரவுகின்றது மோடி சுற்றிய நாடுகளில் அதானி சில ஒப்பந்தகளை பெறுகின்றார், குஜராத்திய வணிகர்கள் பல பயன்களை அடைகின்றனர் நிலக்கரி சுரங்கம், துறைமுகம் , விமான நிலைய பணி என ஏதோ ஒன்று ஒரு நாட்டில் மோடி கால்வைத்தபின் அவர்களுக்கு கிடைக்கின்றது அதற்கு பிரதிபலனாக அந்த நாட்டு பொருட்களுக்கு இங்கு வரிவிலக்கு வழங்கபடுகின்றது புரிகின்றதா? குஜராத்திய புள்ளிகள் வெளிநாடுகளில் குவிக்கும் பெரும் பணத்துக்கு ஈடாக இங்கு இந்நாட்டுக்கு வரவேண்டிய வரிபணம் விட்டுகொடுக்கபடுகின்றது […]

பொய் சொல்வதில் நோபல் பரிசு

“கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, அண்டை நாடான, பாகிஸ்தானை எச்சரித்தோம். அதனால் தான், நம் விமானப் படை விமானி, அபிநந்தன் விடுவிக்கப்பட்டார்,” குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பொய் சொல்வதில் நோபல் பரிசு என ஒன்று இருந்தால் அது நிச்சயம் இவருக்குத்தான் அந்த பரபரப்பான நேரங்களை உன்னிப்பாக கவனித்தவர்களுக்கு சில விஷயம் புரியும் அபினந்தன் கைது செய்யபட்டார், ஆனால் ஒரு கைதி எப்படி நடத்தபட வேண்டுமோ அப்படி நடத்தபடுகின்றார் என வீடியோ […]

இந்த அரைகிறுக்கனை ஏன் வறுத்தெடுக்கின்றோம்?

இந்த அரைகிறுக்கனை ஏன் வறுத்தெடுக்கின்றோம் என்றால் இதனால்தான் உயிர்த்த இயேசு இரண்டாயிரம் வருடம் கழித்து இப்பொழுதுதான் ரத்தம் சிந்துகின்றாராம் அட பைத்தியகாரா? ரோமரும் யூதரும் தொடக்கத்தில் இயேசு சிலை மேல் சிந்திய ரத்தம் என்ன? 400 ஆண்டுகாலம் கிறிஸ்தவர் ரத்தம் ரோமில் எப்படி எல்லாம் இந்த சொரூபம் மேல் சிந்தபட்டது அடுத்து வந்த சிலுவைபோர் காலங்களில் ரத்தத்திலே இச்சிலை மூழ்கி இருந்தது ஒன்றா இரண்டா? ஆக்டேவியன் சீசர் காலத்தில் தெளிக்கபட்ட ரத்தம் , டயோகிசியஸ், நீரோ என […]

ஒப்பற்ற தலைவனின் பிறந்த நாள் இன்று

மானிட வராலாற்றில் மக்களே அரசர்களை ஒழிக்கமுடியும் என முதன் முதலில் உலகிற்கு அறைந்து சொல்லிகொடுத்த ஒப்பற்ற தலைவனின் பிறந்த நாள் இன்று பல்லாயிரம் ஆண்டாக தொடர்ந்த அந்த மானிட வரலாற்றினை, அரசர்கள் மட்டுமே ஆளதெரிந்தவர்கள் என்ற பொய்யினை அவன் தான் உடைத்தெறிந்தான் விளாடிமிர் லெனினின் பிறந்தநாள் இன்று, அவன் தான் வரலாற்றாளன், புரட்சியின் தலைமகன் ரஷ்யா ஜார் மன்னர்களின் ஆட்சி அப்படி கொடுமையாய் இருந்தது, பொறுத்துகொண்டிருக்க அவர்கள் என்ன தமிழக மக்களா? தமிழர்கள் போல் இருந்தால் எப்படி […]

அது திட்டமிட்ட தாக்குதல் சந்தேகமில்லை

அது எப்படி இலங்கையில் தன் சொந்த நாட்டில் மாபெரும் பாதகம் செய்ய சிலர் துணை போவார்கள், இதெல்லாம் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதல் அதை ஒப்புகொள் என்கின்றனர் சிலர் அது திட்டமிட்ட தாக்குதல் சந்தேகமில்லை ஆனால் சொந்த நாடு என்றும் பாராமல் சொந்த தமிழினம் என்றும் பாராமல் இலங்கையில் ஏராளமானோரை கொன்று குவித்தான் பிரபாகரன் அவனை போல இன்னும் ஏராளமான தேசவிரோதிகள் அங்கு இருக்கலாம் சொந்த பிரதமர் எனவும் பாராமல் ராஜிவினை கொல்ல துணைபோன இந்த நளினி பேரரிவாளன் […]