பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பின்னே எதற்கு உங்களுக்கு வோட்டு?

இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய பதிலடியை தங்களின் மிகபெரிய சாதனையாக சொன்னார் மோடி கவனியுங்கள் மொத்தமாக ஆண்டது 5 வருடம்,அந்த 5ம் வருட முடிவில்தான் இந்த தாக்குதல் நடந்தது ஆக 4.75 வருடம் சும்மா இருதோம் ஒன்றையும் சாதிக்கவில்லை என்கின்றார் மோடி பாகிஸ்தான் மேல் தாக்குதல் நடத்துவதில் என்ன சாதனை என்பதுதான் புரியவில்லை உத்தரவு கொடுத்தால் ராணுவம் அதுவாக தாக்கும், இது எல்லா பிரதமரும் நினைத்தால் செய்ய கூடிய சாதாரண விஷயம், இதில் என்ன சாதனை? […]

ஹேலோ டிரம்ப் ஜி

“ஹேலோ டிரம்ப் ஜி ஐ எம் நாட் டிரம்ப் ஜி, ஐ எம் டொனால்ட் ட்ரம்ப், கால் மி மிஸ்டர் டிரம்ப் அய்யா மன்னிக்கனுமுங்க ,இங்க தேர்தல் நடக்குதுங்க‌ அதுக்கென்ன மேன்? சைனா ஏதும் பிராப்ளம் பண்ணுதா? சொல்லு 4 கப்பல் அங்கதான் சுத்துது இல்லீங்க அய்யா, உங்கள ஜெயிக்க வைக்கிறதுக்கு ரஷ்ய உளவுதுறை ஏதோ செஞ்சிச்சின்னு செய்தி வந்துங்க‌ ஆமா ஆனால் எல்லாம் முடிஞ்சிட்டு ஐ எம் பிரீ நவ் அதாங்க, அப்படி என்னை தோற்கடிக்க […]

குடவோலை முறை

பாரம்பரியம் தமிழர் கலாச்சாரம் என மேடை தோறும் தொண்டை கிழிய கத்தும் சைமானிய இம்சைகள் தேர்தல் என்றால் மட்டும் வெள்ளையன் பாணிக்கு வருகின்றன‌ தமிழன் என்றால் குடவோலை முறைப்படி, சோழர் காலத்தில் நடந்தது போல குடத்துக்குள் ஓலைபோட்டு அல்லவா தேர்தல் நடத்த வேண்டும் மானமுள்ள தமிழ்பிள்ளைகள் அதனைத்தான் செய்ய வேண்டும் பின்பு ஏன் இந்த கூரைபெட்டி (வோட்டு பாக்ஸ்)? அடுத்த தேர்தலுக்காவது அவர்கள் அருண்மொழிதேவனின் குடவோலை முறைக்கு திரும்பட்டும்

இப்போதைக்கு ஓயாது..

ஆளாளுக்கு சண்டை செய்வோம் என வாக்குசாவடி நோக்கி ஓடுகின்றார்கள் இது எல்லோருக்கும் கொடுக்கபடும் வாய்ப்பு, இதில் என்ன சண்டையினை கண்டார்களோ தெரியாது சண்டை செய்வோம் என பாகிஸ்தான் பார்டருக்கோ சீன எல்லைக்கோ அட ராஜபக்சே திருப்பதி வரும்பொழுதோ ஒருவனும் செல்வதாக தெரியவில்லை அவன் வோட்டை அவன் செலுத்துவது எப்படி சண்டை? இதற்கெல்லாம் காரணம் யார் தெரியுமா? கலைஞர் கருணாநிதி “இதோ போர்களம் வா உடன்பிறப்பே, குத்தீட்டி வீசு, கேடயமாய் நில், வாளை சுழற்று எதிரி படையினை நாசமாக்கு, […]

அதிகாரி ‘சஸ்பெண்ட்’

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி ‘சஸ்பெண்ட்’ அதாவது மோடி பயணித்த ஹெலிகாப்டரை பாதுகாப்பு நிமித்தம் ஒரு அதிகாரி சோதித்திருக்கின்றார், “யாரை கேட்டு அதை தொட்டாய்” என சஸ்பென்ட் செய்துவிட்டார்கள் அந்த அதிகாரி தன் கடமையினை செய்தார் ஏழை தாயின் மகனும், மிக பிற்படுத்தபட்ட ஏழை செல்லும் ஹெலிகாப்டரில் என்ன இருக்கிறதென்று இவரை சஸ்பென்ட் செய்தார்கள்? இந்திரா காந்தியின் காரை தூக்கிய கிரண்பேடி இவர்களுக்கு வீராங்கனையாம் ஆனால் மோடி செல்லும் ஹெலிகாப்டரை சோதித்தால் சஸ்பென்டாம்

சுவாரஸ்யம்

தும்பிகள், முன்னாள் தும்பிகள் வரிசையில் சங்கிகளுடன் மல்லுகட்டுவதும் ஜாலியாகத்தான் இருக்கின்றது இந்த மூவரில் தும்பிகளுக்கு எல்லாமே திராவிட சதி, இந்திய சதி, கலைஞர் சதி கூடுதலாக சிங்களமும் உலகமும் சேர்ந்து அவர்களை அடக்க செய்யும் சதி முன்னாள் தும்பிகள் அதாவது திமுகவினர் கொஞ்சம் பரவாயில்லை கொஞ்சம் யோசிப்பார்கள், ஆனால் அவர்களுக்கு எல்லாமே பிராமண சதி, ஆர்.எஸ்.எஸ் சதி இந்த சங்கிகள் இருக்கின்றதே அதுதான் சுவாரஸ்யம் அவர்களுக்கு எல்லாமே கிறிஸ்தவ மிஷினரி மற்றும் போப்பாண்டவர் சதி கூடுதலாக பாகிஸ்தானும் […]

பெரிய வியாழன்

இன்று பெரிய வியாழன் , அதாவது இயேசுபிரான் தான் மரணிக்கபோவதை உணர்ந்து தன் சீடர்களுக்கு பிரியாவிடை கொடுத்த நாள். அன்று தன் கடைசி நாளில் சீடர்களின் கால்களை தானே கழுவினார், அப்படி இன்று கத்தோலிக்க ஆலயங்களிலும் அச்சடங்கு நடக்கும், போப் ஆண்டவரே தன் சீடர்களின் பாதங்களை கழுவுவார் கடைசி பிரியாவிடையினை இயேசு அற்புதமாக செய்தார், விவேகானந்தர் வாழ்வின் கடைசியிலும் இந்த சாயல் உண்டு இந்த பெரிய வியாழன் பொதுவாக கத்தோலிக்க ஆலயங்களிலே சிறப்பு, இந்த பிரிவினைகள் எல்லாம் […]

அந்த விஷயம்தான் நெருடுகின்றது

அந்த விஷயம்தான் நெருடுகின்றது விஸ்வரூபம் பட சர்ச்சையின் பொழுது கையில் காசு இல்லை நடுதெருவில் நிற்கின்றேன் நான் என புலம்பியவர் கமலஹாசன் பெரும் பணம் இருந்தால் மருதநாயகம் படமெடுப்பேன் என சொல்லி திரிந்தவர் நான் ஒரு சினிமா விவசாயி, சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் முதலீடு செய்பவன், விவசாயி போலவே ஆண்டி என பகிரங்கமாக சொன்னவர் அவர் திடீரென இவ்வளவு பணம் இவரிடம் வந்தது எப்படி? டிவிக்களில் இடையில்லாமல் விளம்பரம் செய்ய பலநூறு கோடி வந்த வழி எது? […]

பணமழை கொட்டும் நாள் நெருங்கியாயிற்று

கூடிவந்த தேர்தல் மேகம் பணமழை கொட்டும் நாள் நெருங்கியாயிற்று ஆங்காங்கே சில துளிகள் விழதொடங்கிவிட்டன‌ இன்னும் 12 மணிநேரத்தில் கனத்த பணமழை பெய்யும் என தேர்தல் கமிஷன் நம்புவதால் அது கடும் விழிப்புடன் தயாராக இருக்கின்றது இப்போதைக்கு அதிமுக அமமுக போன்றவைதான் மழை கொடுக்கும் மேகங்கள். பல குளங்களும் ஆறுகளும் ஏன் சிப்பிகள் கூட அவற்றின் துளி நீருக்காக காத்து கொண்டிருக்கின்றது திமுக மேகம் வெற்றி நமக்கே என நம்பிகொண்டு துளி மழையும் இழக்கவில்லை என்கின்றன செய்திகள் […]

இந்தியர் மனநிலையினை மிக சரியாக கணித்திருக்கின்றான் சர்ச்சில்

இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கவே கூடாது என்ற கருத்தில் உறுதியாய் இருந்தார் சர்ச்சில் ஒருவேளை பிரிட்டனை பிடித்தாலும் இந்தியாவுக்கு சுதந்திரமே இல்லை என கூட்டாளிகளிடம் சொல்லிகொண்டிருந்தான் ஹிட்லர் இந்தியாவில் புரட்சி வெடிக்கும் பொதுவுடமை மலரும் என்றெல்லாம் பகல் கனவு காணமாட்டேன், இந்தியாவுக்கு எதுவுமே சரிவராது என்றார் ஜோசப் ஸ்டாலின் இதில் சர்ச்சிலிடம் மட்டும் ஒரு பேட்டியில் ஏன் இந்திய சுதந்திரத்தை மறுக்கின்றீர்கள் என குறிப்பிட்டு கேட்க அவர் பதில் இப்படி சொன்னார் “இந்தியர்களுக்கு தேவை முடியாட்சி, அவர்களுக்கு ஜனநாயகம் […]