பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

செருப்பு வீச்சாம்

பழனிச்சாமி மேல் செருப்பு வீச்சாம், உடனே எதிர்கட்சிகளுக்கு கொண்டாட்டம் இங்கு எந்த அரசியல்வாதி அடிபடவில்லை? கலைஞர் மேல் கொலைமுயற்சி உண்டு, ஜெயா சட்டமன்றத்திலே அடிவாங்கினார் ஆனானபட்ட மூப்பனாரும் , சிதம்பரமும் தாக்கபட்ட சம்பபங்கள் நடந்தன‌ செருப்பு எறிதலும், அழுகிய தக்காளிகளை எறிதலும் தமிழக கலாச்சாரங்கள் அந்த கலாச்சார பெருமையினை பழனிசாமியும் பெற்றிருக்கின்றார் டெல்லியில் ஒரு கூட்டத்தில் ப.சிதம்பரம் மேல் செருப்பு வீசபட்டபொழுது கண்டித்தவனெல்லாம் இப்பொழுது பழனிச்சாமி மேல் வீசபடும்பொழுது சிரித்துகொள்கின்றான் என்ன இருந்தாலும் இது கண்டிக்கதக்கது..

ஏதாவது புரியுமா? புரியாது

கேரளாவில் ராகுல்காந்தியினை எதிர்க்கும் கம்யூனிஸ்டுகள் தமிழகத்தில் அவர்களுடன் கைகோர்த்து நிற்கின்றனர் ஏதாவது புரியுமா? புரியாது இனி கேரளாவில் கம்யூனிஸ்டுகளை திட்டி தீர்க்கும் ராகுல் அங்கிருந்து 50 கிமீ கடந்து வந்து இங்கு தமிழக கம்யூனிஸ்டுகளுக்காக வாக்கு கேட்பார் 50 கிமீ தூரத்திற்குள்தான் ராகுலிடம் எவ்வளவு மாற்றங்கள்? உண்மையான கம்யூனிஸ்டுகள் என்றால் GobackRahul என்றுதானே சொல்லவேண்டும்?, ஆனால் சொல்லமாட்டார்கள்.

தேர்தல் துளிகள் 01/04/2019(1)

“காச எடுத்து வீசு கழுத பாடும் பாட்டு ஆசை வார்த்தை காட்டு அட உனக்கும் கூட வோட்டு..” சனாதான தர்மத்தை திருமா வேரறுத்த அந்த தருணம்… தூத்துகுடியில் துப்பாக்கி சூடு நடந்தபொழுது தாமதமாக அறிந்தேன் என பழனிச்சாமி சொன்னால் தவறாம் ஆனால் பிரபாகரனின் அம்மா வந்தபொழுது நாளிதழ் மூலமே தெரிந்துகொண்டேன் என கலைஞர் சொன்னது நிஜமாம் திருமா சிதம்பரம் கோவிலுக்கு வலிய சென்று பல்லிளித்திருக்கின்றார் உடனே முட்டு கொடுப்பவர்கள் இதோ பார் தலித் புரட்சி யாவரும் சமம் […]

அய்யர்கள் பிஸி

நடப்பது நாட்டுக்கான தேர்தல், இந்த நாடு அடுத்த 5 ஆண்டு எப்படி ஆளபட போகின்றது என்பதை நிர்ணயிக்கும் மகா முக்கிய தேர்தல் இந்த தேர்தலில் தமிழ்நாட்டின் சந்து பொந்தில் நின்று கொன்டு திராவிடம், பகுத்தறிவு இன்னபிற விஷயங்களை பேசுவது சரியல்ல, அதெல்லாம் மாநில விவகாரம் தேசத்திற்கு எது தேவையோ அதை இம்மாநிலம் செய்யட்டும் ஒருவிஷயம் கவனிக்கின்றோம் இந்த தேர்தலில் யார் பிசி என்றால் அய்யர்கள், தேர்தல் கமிஷனை விட அவர்கள்தான் பிசி எல்லா அரசியல்வாதியும் அவர்களிடம் கைகுலுக்குகின்றார்கள் […]

மாணவிகள் பீர் குடித்த செய்தி

மாணவிகள் பீர் குடித்த செய்தி பரவுகின்றது, இதெல்லாம் எல்லா நாடுகளிலும் சாதாரண விஷயம் குடிக்காதே என இந்து மதமும் சொன்னதில்லை, யூத கிறிஸ்தவ மதமும் சொன்னதில்லை கீழ்திசை நாடுகளின் தத்துவமும் சொல்லவில்லை கிறிஸ்தவ வழிபாட்டிலும் கொண்டாட்டத்திலும் ஒயினுக்கு தனி இடமே உண்டு சாராயமும் கள்ளும் படைக்கபடா படையல் கிராம தெய்வ வழிபாட்டில் இல்லவே இல்லை ஒவ்வொரு இனமும் ஒரு பானத்தை தேடியிருக்கின்றது, இங்கு பனையில் தேடியிருக்கின்றார்கள் , அரேபியாவில் திராட்சை பழத்தில் தேடியிருக்கின்றார்கள், ரஷ்யர்கள் உருளை கிழங்கில் […]

அவனே அயோக்கியன்

கிறிஸ்தவர்கள் ரத்தசாட்சியாக சாவது ஒன்றும் புதிதல்ல‌ அவர்கள் ஜெருசலேமில் செத்தார்கள், சிரியாவில் செத்தார்கள், துருக்கியில் செத்தார்கள் அதுவும் டயொகிளிசியவும், நீரோவும் அவர்களை கொடுமைபடுத்தி கொன்றவிதம் ஹிட்லர் அவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டும் 2000 வருட கிறிஸ்தவ வரலாறு முழுக்க ரத்தமே சுவடாக கிடக்கின்றது தமிழகத்தை எடுத்தாலும் அதுவே, தோமையார் பரங்கிமலை வரவில்லைதான் ஆனால் ஒரு கிறிஸ்தவன் அங்கே கொல்லபட்டிருக்கின்றான் ராமநாதபுரத்தில் அருளாந்தர் எனும் துறவி தலைவெட்டபட்டு கொல்லபட்டிருக்கின்றார் ஆரல்வாய்மொழியில் தேவசகாயம் பிள்ளை என்பவர் வரலாறு மணியாய் ஒலித்து […]

கிரகாம் ஸ்டெயின்ஸ் படம்

கிரகாம் ஸ்டெயின்ஸ் கதையினை படமாக எடுத்துவிட்டார்கள், அது இனி திரையிடபடுமாம் தேர்தலுக்கு முன்பா பின்பா என தெரியவில்லை இது எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியாது, தமிழகத்தில் நிகழா படுகொலைகள் இல்லை அதெல்லாம் பல படங்களில் வரத்தான் செய்கின்றது தா.கிருட்டினன் கொலையினை அந்த சுப்பிரமணியபுரம் படத்தை விட இன்னொரு படம் சொல்லிவிட முடியாது இவ்வளவுக்கும் அப்படம் வரும்பொழுது திமுக ஆட்சியில்தான் இருந்தது ஒரு தடையுமில்லை, சத்தமுமில்லை தர்மபுரி பேருந்து எரிப்பு கூட தமண்ணா நடித்த படத்தில் வந்தது […]

எமக்கு மகிழ்ச்சியே

நாலு பேர் வாழ்த்துகின்றார்கள் என்பதற்காக பச்சை பொய்களையும் எழுத முடியாது, நாலு பேர் கண்டிக்கின்றார்கள் என்பதற்காக உண்மையினையும் எம்மால் சொல்லாமல் இருக்க முடியாது அதை எதிர்பார்த்து இவ்விடம் வரவேண்டாம் எது மனதை தொடும் உண்மையோ அதை சொல்லிகொண்டே இருப்போம் பூமியில் கூட பருவநிலை மாறும், சந்திரன் கூட தேய்ந்து வளரும், சூரியன் கூட இரவில் மறையும் இது இயற்கையின் நியதி, அப்படியே எல்லா விஷயங்களிலும் உண்மையும் இருக்கும் அதன் மறுபக்கமும் இருக்கும் நாம் அந்த ரகம், இயற்கையான […]

ஆனந்தரங்கம் பிள்ளை

17ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் பெரும் போர் ஐரோப்பியரால் நிகழ்த்தபட்டன, காரணம் அவர்களா என்றால் இல்லை இங்கிருந்த சிற்றரசர்கள் வாரிசு சண்டையில் அவர்கள் உதவியினை கேட்க ராபர்ட் கிளைவும் டுப்ளெவும் ஆளுக்கொரு பக்கம் குதித்தனர் உண்மையில் டெல்லி மொகலாய அரசு அன்று பலமாக இருந்தது, இந்த சிற்றரசர்கள் கப்பம் கட்டிகொண்டுதான் இருந்தார்கள் யார் உரிமையாக‌ கப்பம் கட்டுவோம் என்பதில்தான் சண்டை, அதற்குத்தான் போர். முதலில் கிளைவும் டுப்ளெவும் ஆற்காடு நவாபின் வாரிசுகளுக்கு ஆதரவாக மோதினாலும், ஒரு கட்டத்தில் நவாபினை […]

எது தேவை

இந்திய விஞ்ஞானிகள் அறிக்கைபடியும் உலக பத்திரிகைகள் தந்திருக்கும் தரவின் படியுமே எழுதுகின்றோம் இந்தியா செய்திருக்கும் இந்த செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகனை சோதனைக்கு DRDO 2012லே அனுமதி கேட்டது ஆனால் அப்போதிருந்த காங்கிரஸ் அரசு அதற்கு மறுத்தது, ஏனென்றால் அதற்கு முன்பிருந்தே பல சிக்கல்களை அது சர்வதேச அளவில் சந்தித்தது உதாரணம் அணு ஆயுத பரவல் உட்பட பல நெருக்கடிகள் இருந்தன, ஜெயா கூட சீறினார் நினைவிருக்கின்றதா? ஆம் இந்த ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்டால் இந்தியா இனி அணு […]