பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பொதுமக்களின் நலன் பலிகொடுக்கபடுகின்றது..

உலகெல்லாம் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் குறையாது, ஆனால் உலக சந்தையில் விலை கூடினால் உடனே இங்கு பெட்ரோல் விலையினை கூட்டுவார்கள் எரிபொருள் என்றால் கச்சா எண்ணெய் வகையறா மட்டுமல்ல, இந்த நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு சமாச்சாரங்களும் வரும் பல நாடுகளின் பொருளாதார மந்தம் சில நாடுகள் மின்சார பேட்டரி உபயோகத்திற்கு மாறுதல் என பல காரணங்களால் இந்த நிலக்கரியும் இயற்கை எரிவாயுவும் தேடுவாரற்று கிடக்கின்றது கடும் விலை வீழ்ச்சி இந்தியாவின் அணல்மின் நிலையங்கள் […]

பாஜகவில் ஆளாளுக்கு பிரச்சாரம் செய்யலாம் போல‌

பாஜகவில் ஆளாளுக்கு பிரச்சாரம் செய்யலாம் போல‌ முன்பு அழகிரியும் எச்.ராசாவும் இருந்த படத்தை போட்டு யாரோ பிரச்சாரம் செய்திருகின்றார்கள், கூடவே அழகிரி ராசாவுக்கு ஆதரவு என மகிழ்வோடு சொல்லியிருக்கின்றார்கள் அலடித்து புரண்டு ஓடிவந்த அழகிரி இது பழைய படம், தான் அவர்களுக்கு ஆதரவில்லை என சொல்லிவிட்டார் இது பெரும் அவமானம் என்றாலும் பாஜக கோஷ்டி கலங்குவதாக தெரியவில்லை அது அதன் போக்கில் ஜாலியாக இருக்கின்றது அடுத்து அத்வாணியும் கலைஞரும், வாஜ்பாயும் முரசொலிமாறனும் இருக்கும் “அந்த நாள் ஞாபக” […]

பெண்ணாதிக்க சமூகம் இது..

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தார் என நிர்மலாதேவி படாதபாடு படும் தமிழகத்தில் அதே வகையில் ஒரு அம்மணி சிக்கியிருக்கின்றார் ஆனால் பரபரப்பில்லை பள்ளி ஆசிரியை ஒருவர் வட மாவட்டம் ஒன்றில் பள்ளி மாணவர்களை ஆம் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்ததாக விஷயம் விஸ்வரூபமாகின்றது அவரை பணி நீக்கம் மற்றும் போக்சோ சட்டப்படி தன்டிக்க இருப்பதாக செய்திகள் வந்தது ஆனால் உறுதியில்லை ஆக ஆண் மாணவர்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பில்லை என்பது உறுதியாகின்றது இதுபற்றி எல்லாம் யாராவது பேசுவார்களா? கொடிபிடிப்பார்களா […]

தமிழக அரசும் இதை பின்பற்றலாம்

வெயில் கொடுமை தொடங்கிவிட்ட நிலையில் இந்தியாவிற்கு ஒரிசா அரசு வழிகாட்டுகின்றது இப்பொழுதெல்லாம் ஒரு மாநில அரசு மிக சிறப்பாக நடக்கின்றது என்றால் அது ஒடிசா அரசுதான் ஆம், உலக அளவிலான ஹாக்கி போட்டியினை அது நடத்திகாட்டியவிதம் அவ்வளவு அழகானது, வியந்து பார்க்கபட்டது அது போக ஏக நல்ல விஷயங்கள் இப்பொழுது வெயில் கொடுமையிலிருந்து மாணவர்களை காக்க அதிரடி திட்டங்களுக்கு வந்துவிட்டார்கள் பள்ளி காலையே தொடங்கி 11.00 மணிக்குள் முடியுமாம், வெயிலில் மாணவர்களை விடவே கூடாதாம் மீறி வெயிலில் […]

எப்படிபட்ட பல்டி பார்த்தீர்களா?

கொஞ்சநாளாக வடுக வந்தேறி எனும் பிரசித்திபெற்ற அங்கிளாரின் முழக்கம் காணாமல் போனதிலும் அர்த்தம் இருந்திருக்கின்றது விஷயம் படுகாமெடியானது அதாவது இந்த காளிமுத்து அதாவது சைமனின் மாமனாருக்கு இரு மனைவிகள் முதலாம் மனைவி நிர்மலா, அவர் தேவர் சாதி ஆனால் அதைவிட கிறிஸ்தவ வெறியர். இந்த காளிமுத்துவின் பகுத்தறிவு நிர்மலாவிடம் மண்டியிட்டது விளைவு புனிதா, டேவிட் அண்ணாதுரை, செந்தமிழ் சாம்ராஜ்,தென்றல் வேதமணி, ரோஸ்லின் கிரேஸ் திராவிடமும் கிறிஸ்தவமும் இணைந்த கால்டுவெல் கனவு கண்ட பெயர்கள் குடும்பம் இப்படி இருக்க […]

நெல்லை திமுகவுக்கு இனி சவால்…

நெல்லையில் தினகரன் அணி வேட்பாளர் மாற்றபட்டிருகின்றார், அவரை ஓசூருக்கு மாற்றிவிட்டார்களாம் வெல்லத்தானே சோதனை, தோற்பதற்கு எந்த தொகுதி வேண்டியிருக்கின்றது என அந்த வேட்பாளரும் ஓசூருக்கு பெட்டி கட்டி கிளம்பிவிட்டார் அடித்த போஸ்டரும், பேனரும்தான் வீண் என்கின்றார்கள் இப்பொழுது புதிய வேட்பாளர் யார் தெரியுமா? மைக்கேல் ராயப்பன் அன்னார் பல விஷயங்களில் வெளிதெரிந்தவர், முதலில் விஜயகாந்த் கட்சியில் இருந்து வென்ற அவர் பின்பு அதிமுகவுக்கு மாறினார், விஜயகாந்தின் முதல் எதிரி இவர்தான் பின்னர் அன்பானவன் அடங்காதவன் படம் எடுத்து […]

Where are you?

ஏம்பா திருமா, அந்த பானை சின்னத்தால் தலையினை மூடி இருக்கின்றீரா? கொஞ்சம் கழற்றும் ஜெகத்ரட்சகன் கோஷ்டி இலங்கையில் 28 ஆயிரம் கோடி முதலீடு செய்கின்றதாமே தெரியுமா? ஏகபட்ட இலங்கை இருப்பதால் உங்களுக்கு புரியும்படி சொல்கின்றோம், இந்த இனபடுகொலை எல்லாம் நடந்ததே நீர் கூட ரஜினி போக கூடாது என்றெல்லாம் சொன்னீரே அந்த இலங்கை மிஸ்டர் எட்டுகட்டை வைகோ கேட்டுச்சா? அந்த தமிழர் ரத்தம் படிந்த இலங்கையில் திமுக கட்சி உறுப்பினர் 28 ஆயிரம் கோடி முதலீடு செய்கின்றாராம் […]

எதிர்பார்ப்பு

ராமநாதபுரம் எப்பொழுதும் ஆன்மீகமும் தேசியமும் மிக்கோரின் கோட்டையாகவே இருந்தது ஏகபட்ட சாட்சிகள் உண்டெனினும் விவேகானந்தரை இந்துமத பிரதிநியாக அமெரிக்காவுக்கு அனுப்பிய ராமநாதபுர மன்னரான சேதுபதியும் தேசியமும் தெய்வீகமும் எம் கண்கள் என வாழ்ந்த பசும்பொன் சிங்கமும் அதில் குறிப்பிடதக்கவர்கள் அந்த வழியில் மிகபெரும் தேசியவாதியாக நயினார் நாகேந்திரன் என்பவரை ராமநாதபுரம் உருவாக்குமா என்பதுதான் தென் தமிழக எதிர்பார்ப்பு…

வாரிசு அரசியல்

மாநில கட்சிகள் ஏன் வாரிசு அரசியலில் மாட்டிகொள்கின்றன? விஷயம் ஒன்றுமில்லை தேசிய கட்சி நாட்டு நலனை நிறுத்தும், நாடே பிராதனம் நாட்டு முன்னேற்றமும் பாதுகாவலுமே நலம் என கொள்கை கொண்டிருக்கும் மாநில கட்சிகள் சுயநலமானவை, இந்தியர் என்ற நிலையிலிருந்து நாம், நமது மொழி நமது மொழி என அவர்கள் வட்டம் சுருங்குகின்றது அது அதன் பின் தன்வீடு தன் குடும்பம் என இன்னும் சுருங்குகின்றது எந்த சுயநலத்தில் மாநில கட்சி கொடிபிடிக்கின்றார்களோ அதே சுயநலத்தில் ரகசியமாக குடும்ப […]

அபயம் அளிக்கும் அரசியல்

பாகிஸ்தானில் இம்ரான்கான் வென்றபின் பல கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த ஆசை ஊற்றெடுக்கின்றது இப்பொழுது அப்படி சிக்கி அந்த வெள்ளத்தில் அடித்து செல்லபட்டிருப்பவர் கவுதம் கம்பீர் அன்னார் கொஞ்ச நாளாகவே நாட்டுபற்று பொங்கி பேசிகொண்டிருந்தார், இப்பொழுது பாஜகவில் இணைந்தே விட்டார் எல்லாவற்றிற்கும் காரணம் இந்த இம்ரான் கானும் எம்பியாகிவிட்ட சச்சின் டென்டுல்கரும் ஆக ரிட்டயர்டு நடிகர்களுக்கு அபயம் அளித்த அரசியல் இனி ரிட்டயர்டு கிரிக்கெட்டர்களுக்கும் இடமளிக்க தொடங்கிவிட்டது