பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாட்டில் ஒரு செய்தியினையும் நம்ப முடியவில்லை

நாட்டில் ஒரு செய்தியினையும் நம்ப முடியவில்லை, நான் நீங்கள் யார்? என ரஜினியினை கேட்கவே இல்லை என்கின்றான் சம்பந்தபட்டவன் பின் எங்கிருந்து இவ்வளவு வீடியோக்களும் அவசர செய்திகளும் வந்தன? உண்மை வாசலை தாண்டுமுன் பொய் ஊரை சுற்றிவிடும் என்பார்கள், நிலமை அப்படித்தான் இருக்கின்றது. துப்பாக்கி சூடு நடந்து ஸ்டெர்லைட்டும் மூடபட்டபின்னால் காவல்துறையினை சிலர் தாக்கிய கொடூர வீடியோக்கள் வருகின்றன‌ காவல்துறையினர் கொடூரமாக தாக்கபட்டிருக்கின்றனர் என்பது தெரிகின்றது எது உண்மை? எது பொய் என குழம்பினால் ஒரு மண்ணும் […]

இந்திராவிற்கு எதிராக மல்லுகட்டிய பெரும் வீரன்

இந்திராவிற்கு எதிராக மல்லுகட்டிய பெரும் வீரன் என வரலாறு சொன்னது அமைதிபடை, சிங்களபடை நடுவே துப்பாக்கி ஏந்தி கடல் கடந்தவன் நான் ராஜிவ் கொலையிலே நான் குற்றம்சாட்டபட்டேன், கலைஞரை கொலை செய்ய முயன்றேன் என என்னை கட்சியினை விட்டு விரட்டினார்கள் ராஜிவ் கொலை நடந்த பின் சிபிஐ விசாரணையில் அகப்படாமல் புலிகள் தமிழகத்தில் சயனைடு கடித்தபொழுது என்னிடம் சொல்லாமல் வீரசாவு அடைந்ததில்லை, அப்படி ஒரு மாபெரும் கொலை தளபதியாக இருந்தேன் இப்படி எல்லாம் பெரும் வீரனான என்னை […]

போராடிய பொதுமக்களை ரஜினி சமூக விரோதிகள் என சொல்லவே இல்லை : தமிழிசை

பட்டம் மேல் இந்தியா என எழுதி இருகின்றேன், என் ஆட்சியில் உயர்ந்திருக்கின்றது இந்தியான்னு நீங்க சொல்லணும் சரியா? அதை எங்க ஆட்கள் ஊரெல்லாம் சொல்லி சந்தோஷபடுவாங்க‌..” (பெட்ரோல் விலை உட்பட ஆயிரம் பிரச்சினை இருக்கும்பொழுது இவர் பட்டம் விட்டு விளையாடிகொண்டிருக்கின்றார் இந்தியா எரியும்பொழுது மோடி பட்டம் விட்டார் என இனி வரிகளை மாற்றிகொள்ளலாம்) போராடிய பொதுமக்களை ரஜினி சமூக விரோதிகள் என சொல்லவே இல்லை : தமிழிசை ரஜினிக்காக ரஜினி ரசிகர்கள் முட்டுகொடுப்பது நியாயம், சம்பந்தமே இல்லாமல் […]

ஓட்டம் பிடித்ததால் சென்னையில் பரபரப்பு

தங்கையை பெண் பார்க்க வந்தவர் திருமணமான அவரது அக்காவுடன் ஓட்டம் பிடித்ததால் சென்னையில் பரபரப்பு கே.பாலசந்தருக்கு கூட தோன்றாத சிந்தனை எல்லாம் இப்போது உள்ளவர்களுக்கு தோன்றுகின்றது அக்கா செட் ஆகிவிட்டார், தங்கையுடன் திருமணம் நிச்சயமாகிவிட்டது, பின் எதற்கு அக்காவினை கூட்டி கொண்டு தனியே ஓட வேண்டும்? சுத்த விவஸ்தை கெட்ட மனிதராக இருப்பான் போலிருக்கின்றது…  

திருமுருகன் போன்ற பல திடீர் , குபீர் போராளிகளை எல்லாம் காணவே இல்லை

ஸ்டெர்லைட் போராட்டம் 13 உயிர்பலியோடு முடிந்திருக்க கூடாது என்பதுதான் சோகம், நிச்சயம் அப்பலி நடந்திருக்க கூடாது எனினும் இப்பொழுது ஸ்டெர்லைட் மூடபட்டாயிற்று அந்த அப்பாவிகள் 13 பேரும் ஸ்டெர்லைட்டை மட்டும் மூடப்பட சாகவில்லை, ஒரு சில முகங்களை அடையாளம் காட்டிவிட்டு செத்திருக்கின்றார்கள் அதனால் விழித்துகொண்ட உளவுதுறை மிக அட்டகாசமாக புள்ளிகளை குறி வைத்து கொடுக்கின்றது, அரசு தூக்குகின்றது வேல்முருகனை உள்ளே போட்டிருப்பதும், நாம் தமிழர் தும்பிகளை போட்டு சாத்த ஆரம்பித்திருப்பதும் இம்மாநிலத்தில் செய்யவேண்டிய விஷயங்கள் மக்கள் போராட்டம் […]

பிரபாகரன் அழிவுக்குரிய மனிதனே அன்றி ஆக்கத்திற்குரியவர் அல்ல‌

பிரபாகரன் வழி என்றால் இதுதான். கொல், தீவை, உடை, வெடி, குத்து, அழி அப்படி எதையாவது அழித்துகொண்டே இரு என்பதுதான் பிரபாகரன் சித்தாந்தம் அந்த பிரபாகரன் அழிவுக்குரிய மனிதனே அன்றி ஆக்கத்திற்குரியவர் அல்ல‌ முழு வன்முறையாளனை, நாட்டின் பிரதமரை கொன்ற அந்நிய நாட்டு தீவிரவாதி படம் தூக்கி அலையும் கும்பல் இப்படி செய்யாவிட்டால்தான் ஆச்சரியம் ஒவ்வொரு புலி சாகும்பொழுது அல்லது சிக்கும்பொழுது அவனுக்கு மாவீரன், மாமனிதன், தேசபற்றாளன், வீரபுலி என்றெல்லாம் பட்டம் கொடுப்பது புலி வழக்கம் இப்பொழுது […]

ஸ்டெர்லைட் மூடபட்டதில் இருவருக்குமே உள்ளூர வருத்தம் போல…

ஸ்டெர்லைட்டை தொடங்கிவைத்தது ஜெயலலிதா :ஸ்டாலின் ஸ்டெர்லைட் விரிவாக்க நிலம் வழங்கியது ஸ்டாலின் : பழனிச்சாமி ஸ்டெர்லைட் பற்றி என்னோடு விவாதிக்க தயாரா : ஸ்டாலின் மிஸ்டர் பொறுப்புக்களா? ஸ்டெர்லைட்டை வளர்த்து அதில் பலன் பெற்றதில் நீங்கள் இருவருமே உண்டு, சந்தேகமே இல்லை ஜெயா, கலைஞர் ஆட்சியில் ஸ்டெர்லைட் செயல்பட்டுகொண்டுதான் இருந்தது, மறுக்க முடியாது ஆக இரண்டுபேரும் ஸ்டெர்லைட்டில் மாபெரும் குற்றவாளிகள், இது உலகிற்கே தெரியும் இப்பொழுது ஆலையினை மூடிவிட்ட பின் இந்த கும்மாங்குத்து ஏன்? தமிழகத்தில் வேறு […]

கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா? ரஜினியினை ஏன் விமர்சின்றாய்?

கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாமா? ரஜினியினை ஏன் விமர்சின்றாய்? ஆள்வோர் எல்லாம் தூத்துகுடிக்கு சென்றால் இவ்வளவு நாள் எங்கு சென்றீர்கள்? என கேட்காத கேள்விகள் ரஜினி நோக்கி எழுகின்றன என்றால் அது அவரை கண்டு கட்சிகளும் இன்னும் சிலரும் அடையும் அச்சம் அதை ஏன் சொல்ல மறுக்கின்றாய் என ஏகபட்ட கேள்விகள் நாம் சொல்லும் விளக்கம் இதுதான் சைமனும், பாரதிராஜாவும் ரஜினி கன்னடர் எனும்பொழுது அதை மறுத்து ரஜினி நம்மில் ஒருவர், அவர் அரசியலுக்கு வர முழு தகுதி […]

போராளிக்கு சினிமாவில் என்ன வேலை?

  போராளிக்கு சினிமாவில் என்ன வேலை? சினிமாவில் புரட்சி பேசி சம்பாதித்துவிட்டு அதன் பின் இங்கு வரவேண்டும் அப்படித்தானே?, அன்னார் சமூக போராட்டம் போராடித்தான் ரஜினி பட வாய்ப்பினை பெற்றார் என நம்பிகொள்ளுங்கள் பா.ரஞ்சித்தின் சாதியினை விட கலைஞரின் சாதி சமூகத்தில் பன்மடங்கு கீழானது ரஞ்சித்தின் காலா படம் வென்று புரட்சி செய்ய வேண்டுமாம், ஆனால் ஆ.ராசா போல ஏகபட்ட தலித்துக்கள் இருக்கும் திமுக தேர்தலில் வெற்றிபெற கூடாதாம் ரஞ்சித் போராளியாம், கலைஞர் துரோகியாம் எப்பேர்பட்ட உயர்ந்த […]

பொய்யினை களைய தோல்வியினை கூட ஏற்றது பாஜக

“அது ஒண்ணுமில்ல, வோட்டு மெஷின்ல நாம தில்லுமுல்லு பண்ணி ஜெயிக்கிறோம்னு ஒரு பேச்சு இருக்கு அதை பொய்யாக்க உபி இடைதேர்தலில் தோற்றிருக்கின்றோம், அவ்வளவுதான் இதை உடனே தமிழிசையிடம் சொல்லுங்கள், அதன் பின் பக்தாள் கூட்டம் உலகெல்லாம் பரப்பிவிடும் பொய்யினை களைய தோல்வியினை கூட ஏற்றது பாஜகன்னு அடிச்சி விடுவோம், நம்ம வேலையே இப்படி ஏராகூடமா பொய் சொல்றதுது தானே, கட்சி அதுலதான ஓடிட்டு இருக்கு”