பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

செத்த முப்பாட்டன் சேரன் பரம்பரை என கிளம்பிவிட்டால் என்ன செய்வது?

“தம்பிகள் யாரும் அவசரத்துல மானங்கெட்ட எடியூரப்பா, குமாரசாமி தரும் எச்சி காவேரி நமக்கு வேண்டாம் , நாம் மானமுள்ள தமிழர், எதிரி வீட்டு நீர் அருந்தாமல் செத்த முப்பாட்டன் சேரன் பரம்பரை என கிளம்பிவிட்டால் என்ன செய்வது? சிங்களிடமே கூட்டு சேர்ந்து பல விஷயங்களை செய்தவன் பிரபாகரன் என எப்படி புரியவைப்பது?”  

பாஜகவிற்கு கன்னடத்தில் பல இடங்களில் டெப்பாசிட் போனது , பலர் மகிழ்ச்சி

பாஜகவிற்கு கன்னடத்தில் பல இடங்களில் டெப்பாசிட் போனது , பலர் மகிழ்ச்சி இதில் என்ன ஆச்சரியம்? ஆர்.கே நகரில் கூட திமுகவிற்கு டெப்பாசிட் போனது தமிழகத்தில் சில தொகுதிகளில் சில கட்சிகளுக்கு வேட்பாளராக நிற்க கூட ஆட்களில்லை அதில் எல்லா கட்சியும் அடக்கம் இதில் கன்னடத்தில் பாஜகவிற்கு டெப்பாசிட் போனதில் என்ன மகிழ்ச்சி? இங்கே தமிழகத்தில் மொத்த தொகுதியிலும் கூட்டணி இன்றி தனித்து போட்டியிடும் தைரியம் யாருக்கு இருக்கின்றது வைகோ, சைமன், விஜயகாந்த் என சிலர் அதை […]

இஸ்லாமிய நண்பர்களுக்கு ரமலான் நோன்பு தொடங்கும் தின வாழ்த்துக்கள்

எல்லா இஸ்லாமிய நண்பர்களுக்கும் ரமலான் நோன்பு தொடங்கும் இன்றைய தினம் வாழ்த்துக்கள் தங்களின் மத கடமையினை அவர்கள் மிக அணுக்கமாக கடைபிடித்து நிறைவேற்றி வல்ல இறைவனின் அருளை பெறட்டும் அவர்கள் பிரார்த்தனையில் நாமும், நமது பிரார்த்தனையில் அவர்களும்  இணையட்டும் வல்ல இறைவன் எல்லோரையும் ஆசீர்வதிக்கட்டும்

இந்திரா கட்சியினை உடைத்தால் அது நாட்டுநலம், சாகசம்

இந்திரா கட்சியினை உடைத்தால் அது நாட்டுநலம், சாகசம் ராஜிவ் அதிமுகவினை உடைக்க நினைத்தால் அதுவும் அரசியல் நகர்வு கருணாநிதி பல ஆட்டங்களை செய்தால் அது தந்திரம், எல்லா கட்சியிலும் ஸ்லீப்பர் செல் வைத்து ஆடினால் அது சாணக்கியதனம் தாமாகாவினையும், விஜயகாந்தினையும் அதிமுகவும் திமுகவும் சேர்ந்து முடக்கினால் அது ராஜதந்திர நகர்வு சசிகலா கட்சி நடத்தினால் அது தைரியம், திமுகவினை வைகோவால் பிளந்தால் அது அரசியல் தந்திரம் அதே மதிமுகவினை கலைஞர் காலி செய்தால் அது ராஜதந்திரம் அதிமுகவில் […]

காவேரியினை பறிகொடுத்தது யார்

காவேரி விவகாரத்தில் ஓரளவு நியாயத்துடன் கொஞ்சம் குழப்பத்துடன் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது அதாவது காவேரி வாரியம் அமைக்கபடுமாம், அது டெல்லியில்தான் இயங்குமாம். இரு மாநிலங்களும் அதனை கேட்காமல் புது அணை கட்ட கூடாதாம் நீர் பகிர்வினை இதுதான் பார்த்துகொள்ளுமாம் இந்த முடிவினை அரசிதழில் அச்சடிப்பார்களா என்பது பற்றி உரிய தகவல் இல்லை ஆனால் இவர்களை தாண்டி மத்திய அரசுக்கு அதிகாரமில்லை, என்ன நடந்தாலும் வாரியமே பொறுப்பு என உச்சநீதிமன்றம் துண்டை உதறி தோளில் போட்டுவிட்டு கிளம்பிற்று இதெல்லாம் சரி, […]

எஸ்விசேகர் வீட்டுமேல கல்லெறிந்த விவகாரத்தில்….

எஸ்விசேகர் வீட்டுமேல கல்லெறிந்த விவகாரத்தில் சிபிஐக்கு மாற்றக்கோரி பொதுநலவழக்கு எங்கே? நிர்மலா தேவி விவகாரத்திற்கு சிபிஐ விசாரணை கோரட்டும் பார்க்கலாம் ஜெயா மர்மத்திலே அப்படி ஒரு கோரிக்கை வரவில்லை எஸ்வீசேகர் வீட்டுமேல் யார் கல்லெறிந்திருப்பார் என்றால் அவரே எறிந்திருப்பார், காரணம் அந்த பத்திரிகையாளர் பற்றிய பதிவு அவரின் சுயசாதிக்கே இழுக்கு மனிதர் அப்படி வகையறா, அதனால் அவரே அவர் வீட்டில் கல்வீசி இருக்க வாய்ப்பு அதிகம், இதற்கா சிபிஐ? வேண்டுமானால் யாருடைய பாதுகாவலில் சேகர் தலைமறைவாய் இருகின்றார் […]

வஜுபாய் ருதபாய் வாலா, கர்நாடக கவர்னர்

இந்த கன்னட தேர்தல் முடிவு அந்த நபரை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துவிட்டது, அவர் யார்? அவருக்கு இருந்த வலி என்ன? என்பதை இந்த‌ தேர்தல் முடிவு மூலம் உலகிற்கு தெரிய வாய்ப்பு வந்துவிட்டது அவர் பெயர் வஜுபாய் ருதபாய் வாலா, கர்நாடக கவர்னர் இப்பொழுது அவர் கன்னட கவர்னர், ஆனால் முன்பு யார்? என்பதற்கு நாம் 22 வருடம் முன்னோக்கி செல்ல வேண்டும் அது 1996ம் வருடம் அப்பொழுது திராவிட தமிழன் மூப்பனார் பிரதமராக விடாமல் திராவிட கன்னடர் […]

கர்நாடகா வோட்டும் வேட்டும்

“தகப்பன்னா தேவகவுடா மாதிரி இருக்கணும் மகனே, எனக்கு அப்படி அப்பா வாய்க்கவில்லை ஆமாம்பா, சோனியாகாந்தி கூட ராகுலுக்கு வழிவிட்டுவிட்டார்கள் , எனக்கும் அப்படி வாய்க்கவில்லை” “அப்பா, நீங்க கொஞ்சநாளைக்கு தேவகவுடா வீட்டுக்கு போய் டியூசன் படிங்கப்பா.., இந்த காடுவெட்டி எல்லாம் நம்பிகொண்டிருந்தால் வேலைக்கே ஆகாது”   “பாருங்க தமிழ்நாட்டில் 117 எம்.எல்.ஏக்களை ஒரு பைசா செலவில்லாமல் வாங்கி ஆட்சி செய்கின்றோம் ஆனால் இந்த கன்னடத்தில் 10 எம்.எல்.ஏ வாங்க முடியல்லை. இங்கேயும் ஒரு பழனிச்சாமி கும்பல் கிடைச்சிருந்தா, […]

திரிசங்கு சொர்க்கத்தில் கன்னட தேர்தல் முடிவுகள்

நாம் முன்பே சொன்னது போல திரிசங்கு சொர்க்கத்தில் முடிந்திருக்கின்றது கன்னட தேர்தல், யாருக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை இந்த இடத்தில் காங்கிரஸ் பெருந்தன்மையான மற்றும் தந்திரமான நகர்வினை மேற்கொண்டது, சட்டென குமாரசாமிக்கு நிபந்தனையற்ற ஆதரவினை கொடுத்துவிட்டது மதவாதத்தை எதிர்ப்பதே எங்கள் இலக்கு எனும் கொள்கை ரீதியாக விட்டுகொடுத்து தன் பெருந்தன்மையினை நிருபித்திருக்கின்றார் ராகுல் அதே நேரம் இந்த குமாரசாமி என்பவரும் சொல்லிகொள்ளும் தகுதி கொண்டவர் அல்ல, ஒரு மாதிரி ஆசாமி தங்களுக்கு முழு மெஜாரிட்டி கொடுக்காத மக்கள் […]

தமிழகம் பெரியார் பூமி , இங்கு பாஜக நுழைய முடியாதாம்

தமிழகம் பெரியார் பூமி அதனால் இங்கு பாஜக நுழையமுடியாது என்றெல்லாம் சொல்லி கொண்டிருக்கின்றார்கள். எந்த சித்தாந்தையும் தாங்கி நடத்த நல்ல வாரிசு தலைவர்கள் வேண்டும் லெனினுக்கு பின் ஸ்டாலின் அப்படி தாங்கினார், அதன் பின் வந்த தலைவர்கள் உருப்படி இல்லை சோவியத் சிதைந்தது ஆனால் மாவோவிற்கு பின் இன்று ஜின்பெங்க் வந்து தாங்கியதில் சீனா நீடிக்கின்றது இங்கு பெரியாரின் அரசியல்வாரிசாக அண்ணா வந்தார், அவரை தொடர்ந்து கலைஞர் வந்தார் அதன் பின் எங்கிருக்கின்றார்கள் நல்ல தலைவர்கள்? அப்பக்கம் […]