பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வழக்கம் போல் குழப்புகிறார் கமல்

காவிரிக்காகத் தமிழகம் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கவேண்டும் : கமலஹாசன் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கவேண்டும் என சொன்னாரே அன்றி என்ன செய்யவேண்டும் என சொல்லவில்லை காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் பிரிட்டிஷ் அரச சட்டத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கமாட்டோம், பிரிட்டன் உற்பத்தி பொருளை வாங்கமாட்டோம் , எங்களுக்கு தேவையானதை நாங்களே செய்வோம் என இருந்தது அக்காலமும் அக்கால வாழ்க்கை முறையும் காந்தியின் அழைப்பிற்கு ஒத்துழைத்தன‌ இன்று கோதுமை, கன்னட அரிசி, வடக்கத்திய பாசுமதி பிரியாணி, விமானம், ரயில், சாலை, தொலைபேசி, ஆடைகள் […]

திமுகவின் உண்மை தொண்டன் ஒருநாளும் மாறுவதில்லை

“திமுக என்பது பண்ணையார்கள் கட்சி அல்ல, ஜமீன்தாரிகளின் கோட்டை அல்ல‌ அது பாராரிகளின் இயக்கம், பாட்டாளிகளின் பூபாளம், வாழ வழியற்றவர்கள், உழைக்கும் அடிதட்டு மக்கள் இவர்களை கொண்டதுதான் திமுக எனும் இயக்கம். தங்களை வாழவைக்கும் இயக்கமாகவே அவர்கள் திமுகவினை ஏற்றிருக்கின்றார்கள் அவர்களுக்காகவே கழகமும், கழகத்திற்காகவே அவர்களும் இருக்கின்றார்கள். அவர்களிடம் இருக்கும் சுயமரியாதையும் மான உணர்ச்சியுமே இந்த இயக்கத்தினை இயக்கும் சக்கரம்” ‍அன்று அண்ணா சொன்னவார்த்தை அப்படியே கண்முன் நிற்கின்றது திமுகவின் உண்மை தொண்டன் ஒருநாளும் மாறுவதில்லை சல்யூட் […]

கன்னடத்தான் அட்டகாசம் ஆரம்பித்தாயிற்று

ரஜினி படத்தை விடமாட்டோம், கமல் படத்தை விடமாட்டோம் என கன்னடத்தான் அட்டகாசம் ஆரம்பித்தாயிற்று இங்கோ கன்னடத்து அனுஷ்காவினை தேடி அழைத்து கொண்டிருக்கின்றான் தமிழன். அனுஷ்காவினை விடுங்கள், எவனாவது கர்நாடக பொன்னி வேண்டாம் என்றோ , பெங்களூர் தக்காளி முதலான காய்கறி வேண்டாம் என்றோ, ரோஜா வேண்டாம் என்றோ சொல்லவே இல்லை கன்னடம் ஒழிக என கத்துபவன் எல்லாம் கர்நாடக பொன்னி அரிசிசோறுதான் விழுங்குகின்றானாம் இவர்களை எல்லாம் காவேரி துரோகிகள் என பிடித்து முதலை வாயில் போட வேண்டாமா? […]

ஐபில் கிரிக்கெட்டை காவேரிக்காக தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் : ஜேம்ஸ் வசந்தன்

ஐபில் கிரிக்கெட்டை காவேரிக்காக தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் : ஜேம்ஸ் வசந்தன் இந்த சின்னதிரை டிவி, திரையரங்குகளை எல்லாம் புறக்கணிக்க வேண்டாமா? ஐபில் ஆட்டத்தை மட்டும்தான் புறக்கணிக்க வேண்டுமா? எங்கே துணிவிருந்தால் பேருந்துகள், ரயில்கள், விமான நிலையங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவதை விட அவற்றை புறக்கணியுங்கள் என சொல்லி பாருங்கள் உண்மையில் ரயில், அரசு பேருந்து என எல்லாவற்றையும் மறிப்பதற்கு பதில் புறக்கணித்தால் என்னாகும்? ஆனால் நடக்கும் விஷயமா? புறக்கணிப்பதாக இருந்தால் எல்லாவற்றையும் புறக்கணிக்க சொல்லலாம், அது […]

இவர் மதிமாறனா? மதி இழந்த மாறனா?

கள்ளர் சமுதாய மக்கள் நல்ல நிலையில் இருக்க காமராஜர், அண்ணா, பெரியாரே காரணம் : வே.மதிமாறன். இவர் மதிமாறனா? மதி இழந்த மாறனா? சொந்த சாதியான சிவாஜிகணேசனை மோசமாக தோற்கடிக்கும் அளவிற்கு முக்குலத்தோரின் அபிமானம் ராமசந்திரன் மேல் இருந்தது கள்ளர் நல்ல நிலையில் இருக்க ராமசந்திரனின் முக்குலத்தோர் அபிமானமும், ஜெயாவின் சசிகலா செய்த சாதி தத்தெடுப்பும் முதல் காரணம் முக்குலத்தோரின் பாய்ச்சல் அதன் பின்னே அமோகமாக நிகழ்ந்தது முக்குலத்தோருக்கு இம்மூவருமே முத்துராமலிங்க தேவருக்கு அடுத்து குலசாமிகள், அடுத்த […]

நீ ஒருத்தன் மட்டும்தான் கடைசிவரை என் கூட இருந்திருக்க , தெய்வம்யா நீ

“என் கூட இருந்த எத்தனையோ பேர், நான் வளர்த்துவிட்ட எத்தனையோ பேர் என் முதுகுல குத்தினான்யா.. நீ ஒருத்தன் மட்டும்தான் கடைசிவரை என் கூட இருந்திருக்க , தெய்வம்யா நீ”  · 

“உன்னை பத்தி எனக்கு தெரியாதா?

  “உன்னை பத்தி எனக்கு தெரியாதா? உன்னை பத்தி எனக்கு தெரியாதா?” பிரபாகரனை சீமான் சந்தித்தது 8 நிமிடமே : வைகோ ஒரு விஷயம் மறக்கடிக்கபடுகின்றது, 1991க்கு பின் பிரபாகரன் தமிழகத்திலிருந்து யாரையும் பார்க்க விரும்பவில்லை, ஒரு மாதிரியான மனநிலையில் இருந்தார் 2001 பின்லேடன் விளையாட்டிற்கு பின் உலக பார்வைகள் மாற, தன் மாவீரர் உரையில் இந்தியாவிற்கு நட்புகரம் நீட்டுவோம் என சொல்லிகொண்டிருந்தார், அவர் கையினை நீட்டிகொண்டே இருந்தார் இந்தியா தட்டிவிட்டுகொண்டே இருந்தது ஆண்டன் பாலசிங்கம் சிறுநீரக […]

கலி முற்றிவிட்டது என்பதை இனி நம்பத்தான் வேண்டியிருக்கின்றது

கலி முற்றிவிட்டது என்பதை இனி நம்பத்தான் வேண்டியிருக்கின்றது, இந்த புத்தகத்தினை எழுதிய எழுத்தாளனை நேரில் கண்டிப்பாய் சந்திக்க வேண்டும் நமக்கு முன்பாக அவனே சிரித்துவிடுவான் புத்தக ஆசிரியர் யோகா சித்தராம், பாபா ராம் தேவ் வகையறா போலிருக்கின்றது இந்த புத்தகத்திற்கும் ஒரு பதிப்பகம் அதற்கு பத்திரிகையில் விளம்பரம், இந்த உலகம் அழிந்தால்தான் என்ன? இன்று காவேரி வேண்டும் கன்னடம் ஒழிக, கர்நாடகம் மண்ணாய் போக என கோஷ்மிடுபவன் எல்லாம் இன்னும் இரண்டு நாளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் […]

புலிகளின் கொடியினை திருடினாரா சீமான்?

புலிகளின் கொடியினை திருடினாரா சீமான், பரபரப்பு குற்றசாட்டுகள் இதிலென்ன பரபரப்பு? விஷயம் ஒன்றுமில்லை, ஆங்காங்கே நாம் தமிழர் கொடியினை தமிழகத்தில் கீழே போட்டு மிதிக்கின்றார்கள், முகம் துடைக்கின்றார்கள். இன்னும் எங்கெங்கோ துடைத்து எறிகின்றார்கள். இது நமக்கு பழகிய விஷயம், தேசிய கொடியினையே எது மேல் வண்ணம் எது கீழ்வண்ணம் என்பது அமைச்சர் பெருமக்களுக்கே தெரியாது தேர்தலில் கட்சிகொடி பிடிப்பதும் பின் அதனை கீழே போட்டு மிதிப்பதும் நமது கலாச்சாரம் ஆனால் புலிகள் கொடியினை , ஈழத்தவர் அப்படி […]

உண்ணாவிரத மேடையில் ராமசந்திரனின் கொள்கை விளக்க பாடல்கள்

அதிமுக உண்ணாவிரத மேடையில் ராமசந்திரனின் கொள்கை விளக்க பாடலை ஒலிபரப்பினார்களாம் அது என்ன தமிழ்நாட்டு அரசு பாடலா? ஆனாலும் முதல்வர் இருந்த மேடையில் ராமசந்திரனின் கொள்கை பாடல்கள் ஒலித்தன‌ திடீரென துள்ளுவதோ இளமை, நாணமோ இன்னும் நாணமோ போன்ற உலக தத்துவ பாடல்களும் ஒலியேறியதாம் அந்த மேடையில் பழனிச்சாமி பக்கம் கோகுல இந்திரா இருந்திருக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது எல்லா தத்துவ பாடல்களையும் ஒலிபரப்பிவிட்டு, கோகுல இந்திரா இருந்த மேடையில் “அழகிய தமிழ் மகள் இவள்” பாடலை ஏன் […]