பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

234 தொகுதிக்கும் வேட்பாளர் கிடைப்பார்களா?

முதலில் 234 தொகுதிக்கும் வேட்பாளர் கிடைப்பார்களா?, தேர்தலில் டெப்பாசிட் கிடைக்குமா என ஆண்டவர் பார்க்கட்டும் ஆன்மீக ஆபத்தை பின்னால் பார்க்கலாம். ஏதோ இவர் தேர்தலில் வென்று முதல்வராகும் நேரத்தில் இருப்பது போலவும், தசாவதாரம் ஸ்டைலில் சிலையினை தூக்கி கடலில் போட போவது போலவும், தமிழகம் அய்யா வேண்டாம் என அலறுவது போலவும் பேசிகொண்டிருக்கின்றார். பெரியார் சிலைக்கு தமிழகம் பொங்கினால் சாமி சிலைகளை இடிக்க தயாராயிற்று என்றா பொருள் ஆணடவரே? இதெல்லாம் அரசியல் கணக்கா? உருப்படுமா?  

ராசா புண்ணியத்தில கேட்பாரற்று கிடந்த பெரியார் சிலைகள் புது பொலிவு பெற்றது…

ராசா புண்ணியத்தில் இதுவரை கேட்பாரற்று கிடந்த பெரியார் சிலைகள் எல்லாம் ஒரே இரவில் புதுபொலிவு பெற்று, மாலை சூடி அழகாக காட்சி அளிக்கின்றது என்கின்றார்கள். எவ்வளவு பெரும் உதவி செய்திருகின்றார் மனிதர், அடுத்த வருட பெரியார் விருது நிச்சயம் அவருக்குத்தான் இன்னொரு பக்கம் அந்த கோஷ்டி திருவள்ளுவர், கவிஞர் வாலி படத்தை எல்லாம் அடித்துகொண்டு “பெரியார் ஒழிக” என சொல்லிகொண்டிருக்கின்றதாம் அவர்களுக்கு வெண் தாடி வைத்த எல்லோரும் பெரியாராக தெரிகின்றார்கள் அய்யோ பாவம் , பெரியார் கொள்கைகள் […]

பாண்டே எச்.ராசாவின் அட்மினாக இருந்தாரா?

என்னது பாண்டே எச்.ராசாவின் அட்மினாக இருந்தாரா? இது என்னடா புது சோதனை? நேற்று ராசா எல்லாம் என் அட்மினால் வந்த சிக்கல் என்றார், இன்று பாண்டே நீக்கபட்டிருக்கின்றார். ஆக ஏதோ நடக்கின்றது இந்த ராசா சர்மா, பாண்டே எல்லாம் தமிழர்கள் அல்ல, மாறாக வடநாட்டவர்கள் இங்கே பிறந்து வளர்ந்தவர்கள். பூர்வீக குடிகள் இல்லை இந்துத்வா கொள்கையின்றி இவர்கள் இங்கு நிலைக்க முடியாது என்பதால் ரகசிய இழை ஓடியிருக்கலாம் என்கின்றன செய்திகள் ஆக ராசாவிற்கு எழுந்த எதிர்ப்பில் பாண்டே […]

ஹெச்.ராஜாவின் காட்டுமிராண்டித்தனம்! ரஜினிகாந்த் காட்டம்

ஹெச்.ராஜாவின் காட்டுமிராண்டித்தனம்! ரஜினிகாந்த் காட்டம் ஏன் இரு நாள் கழித்து காட்டம்? இன்னும் 2 வாரம் கழித்து காட்டம் காட்டினால் என்ன? மேலிடத்தில் இவர் உத்தரவு வாங்கிவிட்டு ராசாவினை கண்டிக்க இரு நாள் ஆகியிருக்கின்றது. முன்பு பெங்களூரில் திருவள்ளுவர் சிலையினை திறக்க கூடாது என கன்னடர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள், அப்பொழுதெல்லாம் இவருக்கு காட்டம் இல்லை ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை ரஜினி, கமல் நிரப்ப முடியாது – நடிகை கவுதமி சில முறை முதலமைச்சராகவும், ஒருமுறை […]

பெரியார் சிலைக்கே பொங்கிட்டானுக‌

பெரியார் சிலைக்கே பொங்கிட்டானுக‌ மகாவீரர் ஜெயந்தி அன்று “திருஞானசம்பந்தர் காலத்தில் சமணர்களை கழுவேற்றியது போல இந்துமதத்திற்கு எதிரானவர்களை கழுவெற்ற வேண்டும்” என “வாழ்த்து” சொல்லலாம் என்றிருந்தேன் இனி எங்கிருந்து சொல்ல? நம்மை இப்பொழுதே கழுவெற்ற தேடுகின்றார்கள்

சந்திரபாபு மறக்க முடியாத கலைஞன்

கடந்த 70 வருட தமிழ்சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள், இன்னும் வருவார்கள். ஆனால் முத்திரை பதித்தவர்கள் அல்லது வழிகாட்டிகள், பல முயற்சிகளை மாற்றங்களை கொடுத்தவர்கள் மிக குறைவு. தனித்து நின்ற அந்த அடையாளங்களில் அவரும் ஒருவர். அதாவது தமிழ்சினிமா நடக்க கற்றுகொண்டிருந்த காலத்திலே அதனை ஒலிம்பிக்கில் ஓடவைக்கும் கனவில் இருந்தார் ஒருவர், தமிழ்சினிமா லாரியில் தட்டுதடுமாறி பயணித்தபொழுது அவரோ ராக்கெட்டில் ஏற்றும் முயற்சியில் இருந்தார். அவர் ஜே.பி சந்திரபாபு அல்லது ஜோசப் பனிமயதாஸ் ரோட்ரிக்கஸ் சந்திரபாபு. தூத்துகுடியில் […]

சிலை இடிப்புக்கு பிரதமர் கண்டனம்…

நாடு முழுக்க சிலை இடிக்க கிளம்பி இருப்பவர்களை பிரதமர் மோடி கண்டித்திருப்பது வாழ்த்துகுரியது ஆனால் அதற்கு காரணமானவர்களை கட்சியினை விட்டு கொஞ்ச காலமாவது நீக்கி தண்டிக்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது லெனின் , பெரியார், அம்பேத்கர் என நாடு முழுக்க சமத்துவம் பேசியவர் சிலையினை தகர்க்க ஒரு கும்பல் கிளம்பி அழிச்சாட்டியம் செய்கின்றது இதனை பிரதமரே கண்டித்திருக்கின்றார், ஆனால் செய்தவர்கள் , தூண்டியவர்கள் அவர்கள் கட்சிக்காரர்கள் என்பதை மறக்கின்றார் பிரதமராக மோடியின் அறிவிப்புக்கு வாழ்த்துக்கள், ஆனால் கட்சி தலைவராக […]

பெரியார் ஒரு சமூக‌ புரட்சி சகாப்தம்

கால சூழலுக்கு தக்கவாறே அறிஞர்கள் தோன்றுவார்கள், அக்கால சூழ்நிலைக்கு தக்க அறிவுரைகளை அல்லது போராட்டங்களை நடத்துவார்கள். இயேசு கிறிஸ்து இன்று போதித்துகொண்டிருந்தால் நிச்சயம் யூத மதத்தின் காட்டுமிராண்டிதனத்தை சாடமாட்டார், அவர்கள் அதிலிருந்து நிறைய‌ மீண்டு வந்தாயிற்று . ஆனால் பாலஸ்தீன் மீதான அதன் கொடூரத்தை நிச்சயம் அவர் சாடுவார். புத்தர் இன்றுவந்தால் மாட்டுகறி தின்னவேண்டாம் எனும் கூட்டத்திலா சேர்வார்? தீண்டாமை போன்ற பாகுபாடுகளை நிச்சயம் கண்டிப்பார், இலங்கையில் அட்டகாசம் செய்யும் புத்தமத்தை நிச்சயம் கலைத்தே விட்டு அவர்களை […]

சசிகலா நீதிபதி முன் ஆஜராகவில்லை

தமிழகத்தில் எதெல்லாமோ விவாதிக்கபடுகின்றது, ஆனால் ஒரு விஷயத்தை எந்த ஊடகமும் எழுதவில்லை ஜெயலலிதா என்றொருவர் முன்பு முதல்வராக இருந்தார் பலருக்கு நினைவிருக்கலாம், அவர் அப்பல்லோவில் சிலமாதம் இருந்து இறந்தும் போனார் அது மர்ம மரணம் என அவரை அடக்கம் செய்தபின்புதான் பலர் சொன்னார்கள், அதுவும் பதவி இழந்தபின்புதான் பன்னீர் செல்வம் என்பவருக்கும் சந்தேகம் வந்தது, இவ்வளவிற்கும் ஜெயா அப்பல்லோவில் இருந்தபோது அவர்தான் முதல்வர் அந்த ஜெயாவின் மரணத்தை விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி என்பவரை நியமித்தார்கள், அவரும் ஒவ்வொருவராக […]

பெரியார் என்னதான் செய்தார்….

நீ தாழ்த்தபட்டவன் , உன்னை ஆலயத்தினுள் அனுமதித்தால் ஆலயம் தீட்டாகும், கோவில் நிழலில் கூட உன் கால் படகூடாது என விரட்டபட்ட காலத்தில்தான் பெரியார் போரட வந்தார் கடவுளின் பெயரால் மனிதனை அனுமதிக்கா ஆலயத்தின் உள்ளிருப்பது கடவுளாக இருக்கமுடியுமா? என கேட்டார் இந்த எளிய பாமர மக்கள் நுழையா ஆலயம் எதற்கு? கோவில் எதற்கு? என்ற ஆத்திரத்தின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலே அது சாமி அல்ல, கல் என்றார் சில சிலை உடைப்பு போராட்டம் என மண்ணினால் செய்யபட்ட […]