பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இது ஜெயா மகளா?

அவருக்கு இப்பொழுது ஜெயலலிதா யாரென்றே மறந்திருக்கும், அவரிடம் போய் இது ஜெயா மகளா? என கேட்க வேண்டுமாம் பன்னீர் செல்வத்திடம் கேட்பதுதான் கேட்கின்றீர்கள், அப்படியே உங்கள் அம்மா செத்த சில ரகசியம் அவரிடம் உண்டு, வெளியிடுவேன் என சொன்ன அவர் இன்றுவரை வெளியிடவில்லை நீர் பிறந்த ரகசியத்தை விட, உங்கள் அம்மா மறைந்த ரகசியம் தமிழகத்திற்கு முக்கியம் அல்லவா? ஒருவேளை அம்மா ஜெயா என பன்னீர் செல்வம் சொல்லிவிட்டால், உங்கள் அப்பா நீங்கள் சொன்ன சோபன்பாபு என […]

இந்தியா வந்தார் டிரம்ப் மகள் இவாங்கா

இந்தியா வந்தார் டிரம்ப் மகள் இவாங்கா அதாவது அமெரிக்க தொழில்முனைவோர் குழு இந்தியாவில் சுற்றுபயணம் செய்து ஒரு கூட்டம் ஐதரபாத்தில் நடத்துகின்றதாம், அதற்கு இவாங்கா டிரம்ப் தலைவராம், மோடி உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொள்ளும் அந்த கூட்டம் இன்று நடக்கின்றது எத்தனையோ பெரும் பொருளாதார புலிகள், தொழிலதிபர்கள் அமெரிக்காவில் இருக்கும்பொழுது இவாங்கா எப்படி தலைவரானார்? ஆக ஒரு வாரிசு உதயமாகின்றது, அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக இவாங்காவினை அமர்த்த டிரம்ப் கனவு காண ஆரம்பித்தாயிற்று என்பது புரிகின்றது […]

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரிய மனு தள்ளுபடி

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரிய மனு தள்ளுபடி: கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர அனுமதி அதாவது இது ஒப்புகொள்ளும் விஷயமும் அல்ல, தள்ளிவிடும் விஷயமும் அல்ல என குழம்பிவிட்டது பெங்களூர் நீதிமன்றம் அம்ருதா என்பவரும் ஜெயலலிதா குடும்பத்து சாயலில்தான் இருக்கின்றார், ஜெயாவின் மகளாக இருக்க முடியாவிட்டாலும் வேறு வகை தொடர்புகள் இருந்தாலும் இருக்கலாம்,, அதனை தோண்டாதவரை நல்லது ,தோண்டினால் குடும்பம் தாங்காது எப்படியோ தீபா என்பவருக்கு குடுமிபிடி சண்டை போட ஒரு கொண்டை கிடைத்தாயிற்று.  

ஜெயலலிதாவின் மகள் என இளம்பெண் உரிமை கோரி வழக்கு : செய்தி

ஜெயலலிதாவின் மகள் என இளம்பெண் உரிமை கோரி வழக்கு : செய்தி ஜெயா செத்தபின் சிலர் இப்படி கிளம்பினார்கள், இம்முறை இந்த அம்ருதா வந்திருக்கின்றார், டி.என்.ஏ டெஸ்ட்டுக்கு எல்லாம் தயாராக இருக்கின்றாராம் சரி ஒரு வாதத்திற்கு ஜெயா மகள் என வைத்து டி.என்.ஏ டெஸ்ட் செய்தாலும் தந்தை யார்? என்பதற்கு எந்த கல்லறையினை சென்று தோண்டுவது? தாய் ஜெயலலிதா என சொல்லும் நபர், தந்தை யாரென சொல்லவே இல்லை, புராணங்களில் வரும் பிறவி போலிருக்கின்றது, ஆனால் சட்டத்தில் […]

நீங்கள் காங்கிரஸ்காரரோ என்கின்றார் ஒருவர்

அய்யா இலங்கையில் சம உரிமை கொடுத்திருந்தால் ஏன் சண்டை வரபோகின்றது, அதனை நீங்கள் தந்திரமாக மறைக்கின்றீர்கள் , நீங்கள் காங்கிரஸ்காரரோ என்கின்றார் ஒருவர் சிங்கள மக்கள் தொகையில் ஈழதமிழர் 15% முதல் 20% வரை வருவார்கள், வெள்ளையன் ஆண்ட காலத்தில் சிக்கல் இல்லை யாழ்பாணத்தார் படித்தார்கள் நல்ல பதவிக்கு சென்றார்கள் வெள்ளையன் கிளம்பியதும் வோட்டரசியல் அங்கு ஆரம்பமானது, தாழ கிடந்த பெரும்பானை சிங்கள இனத்தை முன்னிறுத்தும் திட்டம் தொடங்கிற்று அது இட ஒதுக்கீடு அது இது என […]

இதெல்லாம் தேர்தலுக்கான மோசடி

வடக்கத்தியர்கள் தமிழரின் பெருமையினை மறைப்பார்கள், அவர்களுக்கு தமிழனை பிடிக்காது , தமிழக பெருமை பிடிக்காது என சொல்லிகொண்டிருந்தவன் எல்லாம் மோடி சோழ அரசை புகழ்ந்ததும் , பாட்டை மாற்றி பாட ஆரம்பித்துவிட்டான் இப்படி. “இதெல்லாம் தேர்தலுக்கான மோசடி”

சீமான் முதல்வராகட்டும் அப்புறம் உங்களுக்கு இருக்குண்ணே…

“அண்ணே பிரபாகரனை விமர்சிங்க, ஆனால் அவர் ஏன் துப்பாக்கி தூக்கினார் தெரியுமா? சிங்களன் அட்டகாசம், அதனை நீங்கள் சொல்லவே இல்லை பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி தூக்கினாரா? வேறு எல்லோரும் வேறு எதனை தூக்கினார்கள்? சும்மா சொல்லாதீங்கண்ணே, பிரபாகரன் மட்டும்தான் துப்பாக்கி எடுத்தார், அவருக்கு மட்டும்தான் தைரியம் இருந்தது, வேற ஒருத்தனும் எடுக்கவே இல்லை இந்த குட்டி மணி, தங்கதுரை? யார்ணே அது வீரப்பன் கூட இருந்தாங்களா? சிவகுமரன்? அவர் யார்ணே சினிமா நடிகரா? இந்த சபாரத்னம், உமா […]

இப்ப ஜெயிக்க முடியலண்ணா எப்பவும் முடியாதுய்யா….

போதையில் பெரும் போதை அதிகார போதை, ஒரு முறை அதை சுவைத்துவிட்டால் விடவே விடாது மனம், மானிட யதார்த்தம் அது கிட்டதட்ட 30 ஆண்டுகள் அதனை சுவைத்து மல்லாக்க கிடந்தவர்கள் ஒரே நாளில் கிளம்பமாட்டார்கள், தங்களால் முடிந்த எல்லா தில்லாலங்கடி வேலைகளை செய்வார்கள், எந்த எல்லைக்கும் செல்வார்கள் அதில் ஒன்றுதான் தினகரன் பாண்டே பேட்டி பதவி இல்லை, பெரும் ரெய்டுகள், சின்னமும் இல்லை பெரும் சறுக்கலில் இருக்கும் தினகரனுக்கு ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம், கூடவே தன் […]

முன்னோர்களை நினைத்து பெருமை கொள்வோம்: பிரதமர் மோடி

இந்தியா உருவாக காரணமாக இருந்த முன்னோர்களை நினைத்து பெருமை கொள்வோம்: பிரதமர் மோடி இன்று அரசியலமைப்பு தினமாம், அதனால் மோடி அதற்காக உழைத்த பெரியவர்களை பற்றி பெருமிதபட்டுகொண்டார், அம்பேத்கர் பெயரினை சொன்ன மோடி, காந்தி நேருவின் பெயர்களை சொல்லவில்லை ஏன் இந்தியா உருவாக காரணமான முன்னோர்களை நினைக்கின்றார் மோடி? அவர் நினைத்த புது இந்தியா பிறக்கவே இல்லை, பிறந்தாலும் உடனே செத்துவிடுகின்றது ஆக இந்தியாவில் பல மாறுதல்களை கொண்டுவந்தவர்கள் எவ்வளவு பொறுப்பும் அர்பணிப்பும் கொண்டவர்களாக இருந்திருகின்றார்கள் என்பது […]

ஏன் இந்த ஈழ ஆதரவாளர்கள் மேல் ஒரு கோபம்?

உங்களுக்கு ஏன் இந்த ஈழ ஆதரவாளர்கள் மேல் ஒரு கோபம்? அவர்களை ஏன் சாடுகின்றீர்கள்? என பலர் கேட்டுகொண்டே இருக்கின்றனர் அவர்களுக்கு சொல்வது ஒன்றுதான் அதோ ஈழத்தில் மாவீரர்கள் கல்லறை என ஒரு பெரும் மைதானத்தை காட்டுகின்றார்கள் அல்லவா?, அப்படி இங்கேயும் அமைக்க வேண்டும் என ஆசைபட்டவர்கள்தான் இவர்கள் புலிகளுக்கு ஆயுதபலம் இருந்தது ஆனால் ஆள்பலம் இல்லை, யாழ்பாணத்தோரோ ஐரோப்பாவிற்கு ஓடிகொண்டிருந்தனர், ஓரளவு கிழக்கு மாகாண போராளிகள் மட்டும் தாக்குபிடித்தனர் கிட்டதட்ட 15 லட்சம் மக்கள் தொகை […]