பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

என்.எஸ். கிருஷ்ணன் காமெடி ஒன்று உண்டு

என்.எஸ். கிருஷ்ணன் காமெடி ஒன்று உண்டு அவர் தெருவில் நடந்துசெல்வார், ஒரு சிறுவன் கல்லை தூக்கி எறிவான். தலையினை தடவிகொண்டு அந்த சிறுவனை அழைத்து 10 பைசா கொடுப்பார் கலைவாணர் கொடுத்துவிட்டு சொல்வார், ” எனக்கும் என் நண்பருக்கும் குறிபார்த்து எறிபவனை ரொம்ப பிடிக்கும், என் நண்பர் அடுத்துவருவார் சரியாக எரியவேண்டும் , உன் எறி பிடித்திருந்தால் அவரும் உனக்கு காசு தருவார்” என சொல்லிவிட்டு சென்றுவிடுவார் அச்சிறுவனும் பின்னால் வரும் மாமிச மலை மீது பெரிய […]

உபியில் ஜெர்மனி சுற்றுபயணி மீது தாக்குதல்

உபியில் ஜெர்மனி சுற்றுபயணி மீது தாக்குதல் அந்த உபி என்ன நினைத்துகொண்டிருக்கின்றது என்பது விளக்கபட வேண்டும், யோகி முதல்வரானால் அது இந்து ராஜ்ய நாடாகிவிடுமா? அப்படியும் வெளிநாட்டு சுற்றுபயணிகளை தாக்குவது என்ன நியாயம்? சமீபத்தில்தான் சுவிஸ் தம்பதியினை தாக்கினார்கள், அதற்குள் இப்பொழுது ஜெர்மன் பயணி தாக்கபட்டிருக்கின்றார் இனி என்னாகும், கமல் சொன்னதைத்தான் ஐரோப்பாவும் சொல்லும், வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது இது தொடர்ந்தால் இந்தியாவில் “இந்து பயங்கரவாதிகள்” தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதால் ஐரோப்பியர்கள் அங்கு செல்ல வேண்டாம் […]

கார்ட்டூனிஸ்ட் பாலா கார்ட்டூன் கொஞ்சம் ஓவர்தான்

கார்ட்டூனிஸ்ட் பாலா அந்த கார்ட்டூனை எல்லை மீறித்தான் வரைந்திருந்தார், அது கொஞ்சம் ஓவர்தான் ஆனால் சில எச்சரிக்கைகளை கொடுத்துவிட்டு கைது செய்திருக்கலாம். கலெக்டர், எஸ்பி, முதல்வரை கேலிசித்திரம் மூலம் அசிங்கபடுத்திவிட்டார் என அவரை கைது செய்தார்களாம் சைமன் கோஷ்டிகள் இந்த தேசத்தை பேசி பேசி செய்யும் அவமானம் கொஞ்சமல்ல, சிலர் சீனாவே வந்து தமிழ்தேசியம் அமைத்து தா என்றளவில் பகிரங்கமாக பேசிகொண்டிருந்தார்கள் கார்ட்டூனிஸ்ட் பாலாவிற்கு ஒரு நீதி, இவர்களுக்கு ஒரு நீதியா? ஒரு கலெக்டர், ஒரு எஸ்பி […]

அட்டகாசமாக நகர்கின்றது அரசு

சென்னையில் சில இடங்களை தவிர சிக்கல் இல்லை என்கின்றன செய்திகள், அரசின் மீது பெரும் குற்றசாட்டு இல்லை ஆச்சரியமாக அது உண்மை, இந்த அரசு அனுபவமே இல்லாதவர்களால் இயக்கபட்டாலும் அரசு இயந்திரம் அட்டகாசமாக இயங்கத்தான் செய்கின்றது மத்திய அரசின் ஒத்துழைப்பு இருக்கின்றது, தமிழக அரசு அதன் வழிகாட்டலில் சிக்கல் இல்லாமல் இயங்குகின்றது. ஒரு சிக்கல் இல்லை, ஒரு இடத்திலும் பழனிச்சாமி அரசு திணறியதாக தெரியவில்லை. அட்டகாசமாக நகர்கின்றது அரசு. அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் எதுவும் நடந்ததாக […]

ஆறு, குளங்களை கடவுளாக நினைத்து காக்க வேண்டும் : கமலஹாசன்

ஆறு, குளங்களை கடவுளாக நினைத்து காக்க வேண்டும் : கமலஹாசன் கங்கை நதிக்கு ஆரத்தி எடுக்கும் விழா நேற்று வாரனாசியில் நடந்தது : இன்னொரு செய்தி ஆக இரு கோஷ்டியும் ஒன்றாகத்தானே பேசிகொண்டிருக்கின்றீர்கள், பின் ஏன் அவர் மீது வழக்கு? இங்கு ஏறகுறைய தினமும் மழை பெய்கின்றது, சில நேரம் அடைமழை கொட்டுகின்றது (தமிழகம் போல விடுமுறை விடுகின்றார்களா என்றால் இல்லை, மழை அவர்களை பாதிப்பதே இல்லை அந்த அளவுக்கு வடிகால் வசதிகள் வைத்திருக்கின்றார்கள்) என்ன நாடு […]

ஏன் இப்படி சறுக்கினார் ஸ்டாலின்?

அரசியலில் சில விஷயங்கள் மகா முக்கியம், 24 மணிநேரமும் மக்களால் ரகசியமாக மனதிற்குள் கண்காணிக்கபடுபவர்கள் தலைவர்கள் கலைஞர் அதில் மகா வித்தகர், புள்ளிவிவரம் இல்லாமலோ 100% உறுதியான தகவல் இல்லாமல் பேசவே மாட்டார், அது புராணமோ, இலக்கியமோ, வரலாறோ எதுவோ, மிக சரியாக இருப்பார், சொன்ன வார்த்தையினை, ஏற்றுகொண்ட நிகழ்ச்சியினை உரிய காரணமின்றி அவர் மறுத்தவர் அல்ல‌ தன் தந்தை மறைந்த செய்தியும், முதல் மனைவி இறந்த செய்தியும் அவருக்கு அவர் பேசிகொண்டிருந்த மேடையில்தான் சொல்லபட்ட்டது, அப்ப்பொழுதும் […]

சார்ஜா சுல்தான் திராவிட கழகத்திற்கு நெருக்கமானவர் : முக ஸ்டாலின் பேச்சு

சார்ஜா சுல்தான் திராவிட கழகத்திற்கு நெருக்கமானவர் : முக ஸ்டாலின் பேச்சு அதாவது ஸ்டாலின் துபாய்க்கு சென்றிருக்கின்றார், அங்கு நடந்த புத்தக திருவிழாவினை கண்டிருக்கின்றார், அங்கு வந்த சார்ஜா சுல்தானை பார்த்து இப்படி பேசியிருக்கின்றார் தன் இனம், மொழி காக்கும் யாரும் திராவிட இயக்கத்திற்கு நெருக்கமானவர்கள், அப்படி சார்ஜா சுல்தானும் நெருக்கமானவர் என சொல்லியிருக்கின்றார் ஸ்டாலின் இது சோ.ராமசாமி போன்றவர்கள் இருந்தால் எப்படி கலாய்க்க கூடிய விஷயம் தெரியுமா? இப்படித்தான் “ஆக தீவிர இஸ்லாமிய மதத்தை கொண்டாடும் […]

கேரள முதல்வர் சிறந்த கம்யூனிஸ்ட் : அமெரிக்க பத்திரிகை புகழாரம்

கேரள முதல்வர் சிறந்த கம்யூனிஸ்ட் அமெரிக்க பத்திரிகை புகழாரம் : தோழர்கள் சிலிர்ப்பு கம்யூனிஸ்டுகளை என்று அமெரிக்கா பாராட்டியது? காலடியில் இருந்த கியூப கம்யூனிஸ்ட் காஸ்ட்ரோவினை 500 முறை கொல்லமுயன்றது, சேகுவாராவினை கொன்றே போட்டது. ஆப்கனில் சோவியத் நிறுவமுயன்ற கம்யூனிசத்தை பின்லேடன் மூலம் ஒழித்தது, ஈழத்து பத்மநாபாவினை புலிகள் மூலம் சாய்த்தது. என்று கம்யூனிஸ்டுகள் அவர்களுக்கு விருப்பமானவர்களாக இருந்தார்கள்? உலகில் எத்தனையோ கம்யூனிஸ்டுகள் இருந்தும் எல்லோர் மேலும் வெறுப்பை கொட்டிய அமெரிக்க பத்திரிகைகள் இந்த பிரணாய் விஜயனை […]

கவுரி கொலை நிச்சயம் கண்டிக்கதக்கது

கவுரி கொலை நிச்சயம் கண்டிக்கதக்கது, ஆனால் மாநில ஆட்சியாளர் யாரென்றால் நிச்சயம் காங்கிரஸ் கன்னட காங்கிரஸ் அரசில் இந்த அராஜகம் நடக்கின்றது என யாரும் சொல்லவில்லை, மாறாக மோடியின் இந்தியாவில் அட்டகாசம் என எழுதுகின்றார்கள் பின் எதற்கு மாநில அரசு? அதற்கொரு முதல்வர்? கல்புர்கி கொலையிலே மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் கவுரி கொல்லபட்டிருப்பாரா? நிச்சயம் இல்லை ஆக அம்மாநில அரசு மீதும் சில குற்றசாட்டு உண்டு அதை பற்றி யாரும் பேசவில்லை பிரகாஷ்ராஜூம் பேசவில்லை, […]

பிரகாஷ் ராஜ் என்பருக்கு திடீர் நாட்டுபற்று பொங்கிறது….

இந்த பிரகாஷ் ராஜ் என்பருக்கு திடீர் நாட்டுபற்று பொங்கியிருகின்றது, மனிதர் என்னவெல்லாமோ பேசுகின்றார் இதுவரை எங்கிருந்தார் என்றால் தெரியாது, ஆனால் மோடிக்கு எதிராக கொடி பிடிக்கின்றாராம் மோடி மீது ஏராளமான நடிகர்கள் பொங்குகின்றனர், எதிலிருந்து பொங்குகின்றனர் என்றால் மிக சரியாக மோடி பணமதிப்பு நடவடிக்கை எடுத்ததிலிருந்து, கருப்பு பணங்களை ஒழிக்க சில நடடிக்கை எடுக்க தொடங்கியதிலிருந்து இதிலிருந்து என்ன தெரிகின்றது? கருப்பு பணத்தில் சினிமா இயங்கியதும், இவர்கள் குவித்ததும், இன்று அதற்கு ஆபத்து வந்தவுடன் இவர்கள் கத்துவதும் […]