பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

“கருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டார்” : ராமதாஸ் மகிழ்ச்சி

“கருணாநிதி என்னை அடையாளம் கண்டுகொண்டார்” : ராமதாஸ் மகிழ்ச்சி கலைஞரை சந்தித்து நலம் விசாரிக்க‌ ராமதாஸ் சென்றிருக்கின்றார், அதனை தொடர்ந்து இப்படி பேசியிருக்கின்றார். கலைஞர் பிறவி அரசியல்வாதி அய்யா, யாரை கண்டுகொள்ள வேண்டும் என்பது அவருக்கு தெரியாதா? இதனை நாகரீக சந்திப்பாக எடுத்துகொள்ள வேண்டும், ஏனென்றால் வானமும் பூமியும் உள்ளவரை திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை என சபதம் செய்திருக்கின்றார் மருத்துவர் அய்யா மிஸ்டர் விஜயகாந்த், நீங்க எப்போ கலைஞரை சந்திக்க போறேள்???

செந்தமிழர் சீமான் கேக் வெட்டியபொழுது …

பழந்தமிழர் முறைப்படி, முப்பாட்டன் வழிப்படி, செந்தமிழர் சீமான் கேக் வெட்டியபொழுது எடுக்கபட்ட படம். அன்னார் தமிழர் முறைப்படி வேட்டி கட்டி மேல்சட்டை இல்ல்லாமல் சந்தணம் பூசி நிற்பதை நீங்கள் கவனித்தே ஆகவேண்டும் இந்த டெல்லி அல்ட்ராசிட்டிகளுக்கு சொல்லிகொள்வதெல்லாம் இதுதான், தயவு செய்து திமுகவினை எதிர்க்க உருப்படியான ஆட்களை தயார் செய்யுங்கள் இம்மாதிரி காமெடியனகளை எல்லாம் அனுப்பாதீர்கள் இவர் எல்லாம் திமுகவின் எதிரி என சொல்லபடுவதை, திமுககாரன் அல்லாத எம்மாலே சகிக்க முடியவில்லை என்றால், திமுகவினர் நிலை எப்படி […]

கலைஞர் வீட்டு திருமணம்

கலைஞர் வீட்டு திருமணம் என எல்லா பத்திரிகையும் கலைஞரை காட்டுகின்றன, விக்ரமை காட்டுகின்றன‌ மணமக்களை காட்டுகின்றன, யாரெல்லாமோ வாழ்த்தினார்கள் என காட்டுகின்றன‌ ஆனால் அந்த மு.க முத்துவினை ஒரு பத்திரிகையும் காட்டவில்லை, அவர்தான் மணமகனின் தாத்தா கலைஞரின் மூத்த மகனுக்கு இப்படி ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டது கால கோலம் தன் கொள்கைபடி தன் மகனை வளர்க்க நினைத்து அவன் வாழ்வை தொலைத்தார் காந்தி கலைஞரும் அதே தவறினை செய்திருக்கின்றார் குழந்தைகளை அவரவர் இயல்பில் வளரவிடவேண்டும் என்ற உண்மையினை […]

மும்பையில் இருந்து ஒரு முழு நிலா

“மும்பையில் இருந்து ஒரு முழு நிலா” என்றொரு புத்தகம் எழுத சங்கம் முடிவெடுத்திருக்கின்றது விரைவில் எழுதி முடிக்கபட்டு வெளியிடபடும், இது சம்பந்தமாக தலைவியின் உதவியாளர், சமையல்காரர், நேற்று பேட்டியெடுத்த கார்த்திகை செல்வன் வரை நிறைய பேரை சந்திக்க வேண்டியிருக்கின்றது பெரும் சுவாரஸ்ய வரலாறு தலைவி , அதனால் பல பாகங்களாக கூட புத்தகம் வெளிவரலாம் தலைவி பெருமை எழுத இந்த உலகத்தின் மொத்த ஏடுகளும் போதாது, மொத்த கணிணி மெம்மரியும் தாங்காது  

தினதந்திக்கு பவள விழாவாம் …

தினதந்திக்கு பவள விழாவாம் அதன் சிறப்புகள், அது பாமரனையும் படிக்க வைத்தது, அது வாசிக்க வைத்தது என்றெல்லாம் பலபேர் கிளம்புவார்கள் எமக்கு தெரிந்தது இதுதான் தமிழ் சுத்தமாக கெட்டுபோக அந்த பத்திரிகை ஒரு காரணம், நாட்டுபற்று பற்றியெல்லாம் அதில் அதிகம் இருக்காது மாறாக எது இருக்க கூடாதோ அது நிரம்பி இருக்கும். “அழகி” எனும் அற்புத தமிழ்வார்த்தையினை உவ்வே வார்த்தையாக்கியதும் , இன்னும் பல தமிழ்வார்த்தைகளை சமூகம் அருவெறுப்பாக பார்க்க வைத்ததும் அதன் தமிழ்தொண்டு தமிழகத்தில் சினிமா […]

எனக்கு அரசியல் வராது என சொன்னார் அஜித்குமார்

எனக்கு அரசியல் வராது என சொன்னார் அஜித்குமார், ரசிகர்கள் தெரிவிப்பு அதானே, அரசியல் என்றால் நன்றாக நடிக்க வேண்டும், உணர்ச்சி பொங்க பேச வேண்டும் நடிக்கவே தெரியாத, பேசவும் சரியாக தெரியாத‌ தனக்கு அரசியல் சரிபட்டு வராது என அஜித் உணர்ந்து கொண்டதில் ஆச்சரியமில்லை 21,783 கோடியில், 111 அதிநவீன ஹெலிகாப்டர்களை இந்தியா வாங்கும் : நிர்மலா சீத்தாராமன் ஆக மேக் இன் இந்தியா திட்டமெல்லாம் சும்மா கண் துடைப்புதான், அப்படித்தானே மேடம்?  

இலுமினாட்டி ஆராய்ச்சி கும்பலின் அழிச்சாட்டியம் தாளவில்லை

இந்த இலுமினாட்டி ஆராய்ச்சி கும்பலின் அழிச்சாட்டியம் தாளவில்லை அதாவது இந்த டெங்கு என்பது இலுமினாட்டி தமிழகத்தில் பரப்பிவிட்ட விஷயமாம், அதற்கு முன் அப்படி நோயே இல்லையாம். நோய்பரப்பிவிட்டு சம்பாதிக்க இலுமினாட்டிகள் கிளம்பிவிட்டார்களாம் இந்த கம்முனாட்டிகள் எங்கிருந்துதான் யோசிக்குமோ தெரியாது. மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து நோய்களும் தோன்றின, மானிட இனம் வளர வளர நோய்களும் வளர்ந்தன மருத்துவமும் வளர்ந்தது, அது தொடர்கின்றது தமிழகத்தில் முன்பெல்லாம் ஏகபட்ட கொள்ளை நோய்கள் மிரட்டியிருக்கின்றன‌ காலரா, மலேரியா என வரும் கொள்ளை […]

கலைஞரின் செயலாளர் சன்முகநாதனின் பேட்டி

கலைஞரின் செயலாளர் சன்முகநாதனின் பேட்டி ஒன்று தி இந்து பத்திரிகையில் வந்திருக்கின்றது கலைஞருக்கு நிழலாக இருந்தவர் சன்முகநாதன், கலைஞர் சொல்ல சொல்ல எழுதியவர் அவர், கலைஞர் இருக்குமிடமெல்லாம் அவர் இருந்தார் எத்தனையோ சிக்கலான காலங்கள் வந்தபொழுதெல்லாம் அவர் வாய் திறக்கவில்லை, கலைஞரோடு இருக்கின்றார் என்ற காரணத்திற்காக அவர் எதிர்கொண்ட சிக்கல் கொஞ்சமல்ல‌ அப்பொழுதெல்லாம் வாய் திறக்கா சன்முகநாதன், கலைஞர் அமைதியான இக்காலங்களில் வாய்திறக்கின்றார் உறுதியாக சொல்லலாம் கலைஞரின் மனம் அறிந்தவர்களில் முரசொலிமாறன் போல அவரும் ஒருவர் அந்த […]

குஷ்பூ மிக அட்டகாசமாக புதிய தலைமுறைக்கு பேட்டி

குஷ்பூ மிக அட்டகாசமாக புதிய தலைமுறை டிவியில் பேசிகொண்டிருக்கின்றார் தொகுப்பாளரின் எந்த கேள்வியும் அவருக்கு சிக்கல் இல்லை, சில இடங்களில் அவர் பெண்சிங்கமாக உறுமும்பொழுது கேள்வி கேட்பவர் முகம் இருள்வதை காணமுடிகின்றது “நிலத்தில் யாருக்கும் அஞ்சாத திமிர்ந்த ஞானச் செருக்கு” என்ற பாரதியின் வரிகளுக்கு முழு வடிவமாய் தெரிகின்றார் புதிய தலைமுறையில் குஷ்பூ கார்த்திகை செல்வனின் கேள்விகளுக்கு கார்த்திகை மழையாக பதிலை கொட்டும் தலைவியின் தைரியத்தையும் அறிவினையும் பார்க்கவே அவ்வளவு ஆனந்தம். என்ன தவம் செய்துவிட்டது தமிழகம்? […]

அமெரிக்காவை விட கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

“மிஸ்டர் டிரம்ப் அமெரிக்காவினை இந்த அமைச்சர் எப்படி கேவலபடுத்துகின்றார் பார்த்தீர்களா? இப்படி யாராவது அமெரிக்காவினை அசிங்கபடுத்தியிருக்கின்றார்களா? எங்களுக்கென்னவோ நீங்கள் பதவிக்கு வந்தபின்புதான் இவர்கள் இப்படி எல்லாம் பேசுகின்றார்கள் என தோன்றுகின்றது எவ்வளவு பெரும் அமெரிக்க அவமானமிது? உடனே பின்லேடனை தூக்கிய ஸ்டைலில் வந்து இவர்களை தூக்கிகொண்டு செல்லுமாறு உங்கள் சீல் படைக்கு உத்தரவிடுங்கள் இல்லாவிட்டால் டிரம்பினை விட நல்லாட்சியினை பழனிச்சாமி கொடுக்கின்றார் என்ற அளவு பேசுவார்கள், அதனை கேட்டு உங்களுக்கு மாரடைப்பு வரலாம், வடகொரிய அதிபர் எல்லாம் […]