பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்ய முடிவு

அந்த செய்தி விஸ்வரூபமாகின்றது அதாகபட்டது, தமிழகத்தில் மணற்கொள்ளை உலகறிந்தது. எல்லா ஆறுகளும் சுரண்டபட்டாயிற்று, இனி சுரண்ட வழியே இல்லை இனி மணல் வேண்டுமென்றால் சில அரசியல்வாதிகள் மண்டையினைத்தான் உடைக்க வேண்டும், அதுவும் களிமண் இருக்குமே தவிர, கட்டடம் கட்ட கூடிய மண் இருக்காது. இந்நிலையில்தான் மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்ய கட்டடம் கட்டுவோர் முடிவெடுத்தனர், முதற்கட்டமாக 50 ஆயிரம் டன் மணல் தூத்துகுடிக்கு வந்திருக்கின்றது தமிழக மணல் விலையில் இது பாதி என்பது குறிப்பிடதக்கது இதனால் […]

பதிவிடுகின்றேன் என சொல்லி எல்லா இடத்திலும் வம்பிழுத்தாயிற்று

பதிவிடுகின்றேன் என சொல்லி எல்லா இடத்திலும் வம்பிழுத்தாயிற்று, இப்பொழுது கூட “கமுதி பஸ்ஸ்டாண்ட்டுக்கு வாடா..” என புறா விடு தூது எல்லாம் அனுப்புகின்றார்கள் நாதக, திக, திமுக ஸ்டாலின் அணி, அதிமுக எல்லா அணி, பக்தாள், தலித் சங்கம், பிராமணாள் சங்கம் , தமிழிசை கோஷ்டி என ஒரு இடம் பாக்கியில்லாமல் பகை வந்தாயிற்று. பிரிவினை கிறிஸ்தவர், இஸ்லாமியர், சில இந்துக்கள் எல்லாம் ஓன்றாக அடிக்க வரும் அற்புத காட்சியெல்லாம் தெரிகின்றது. இதில் அஜித், விஜய், ராமசந்திரன் […]

சென்னையில் மழை தொடங்கிவிட்டது

சென்னையில் மழை தொடங்கிவிட்டது, மக்கள் குழுக்களாக பிரிந்து ஒருவேளை பெருவெள்ளம் வந்துவிட்டால் எதிர்கொள்வது எப்படி என கிளம்பிவிட்டார்கள் ஒரு தலைவன் இருந்து நடத்துவதாக தெரியவில்லை, மாறாக மக்கள் குழுக்களாக அதனை செய்கின்றார்கள், 2015 வெள்ள அனுபவ எச்சரிக்கை அவர்களை அதனை செய்ய வைக்கின்றது உண்மையில் மகா ஆச்சரியமான விஷயம் இது, இந்நகரத்து யதார்த்தத்தை புரிந்துகொண்டார்கள், நமக்கு நாமே என கிளம்பிவிட்டார்கள் மனிதநேயம், திட்டமிடல், தங்களை தற்காத்து கொள்ளும் துணிச்சல், மத இனங்களை கடந்து இயற்கை சீற்றத்தில் எப்படி […]

இந்தியா வந்தார் இத்தாலி பிரதமர் இன்னும் பிற…

இந்தியா வந்தார் இத்தாலி பிரதமர், இந்தியா இத்தாலி இடையே 6 ஒப்பந்தம் கையெழுத்தானது இதனையே காங்கிரஸ் அரசு செய்தால் எல்லாம் இத்தாலி மாபியா சோனியா அட்டகாசம், இந்தியாவினை இத்தாலிக்கு வித்தாயிற்று, அது எப்படி இத்தாலியுடன் 6 ஒப்பந்தம்? என குதிப்பார்கள் இது ஊழல், இந்தியாவினை இத்தாலிக்கு விற்கும் செயல், இது இத்தாலிகாரி சோனியாவின் திட்டம் என்றெல்லாம் கதறுவார்கள் இதோ பாஜக அரசு அதனையே செய்கின்றது , ஏதும் ஒரு சத்தம் வருமா? ஒரு முணகல் வருமா? வராது […]

பேய் என பெய்யட்டும் மழை

கமலஹாசன் தேவர் மகன் என்றாலோ, சண்டியர் என படம் எடுத்தால் குதிக்கும் கிருஷ்ணசாமியினை தேவர் ஜெயந்தி அல்ட்ராசிட்டிகளில் காணவே முடியாது மிஸ்டர் கி.சாமி? தமிழகத்தில் இருக்கின்றீரா இல்லையா? ஸ்பெக்ட்ரம் தீர்ப்பு வர உள்ளது, திமுக ஒரு ஊழல் கட்சி : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்னும் வராத தீர்ப்பை விடுங்கள், வந்த தீர்ப்பு உங்கள் கட்சி தலைவி ஜெயலலிதா குற்றவாளி என்றும், நீங்கள் கும்பிட்ட சசிகலா அடுத்த குற்றவாளி என்றும் சொல்லிவிட்டதே அய்யா.. தீர்பளிக்கபட்ட அதிமுக ஊழக் […]

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் அதனை விட மகா முக்கியமான விஷயம் திருச்சி விமான நிலையத்திற்கு சந்தண கடத்தல் வீரப்பன் பெயரையோ அல்லது பூலன் தேவி பெயரையோ சூட்டுவது காரணம், அப்படிபட்ட மகா கொள்ளைகாரர்கள் அங்குதான் இருக்கின்றார்கள், மிக பெரும் கொள்ளைகள் அங்குதான் நடக்கின்றன.  

அமலா பால் , பொன்னார் , வீரமணி

வரி ஏய்ப்பில் சிக்கினார் நடிகை அமலா பால் அதாவது அம்மணிக்கு பென்ஸ்கார் வாங்க ஆசை, ஆனால் நேரடியாக வாங்கினால் வரி அது இது என கறந்துவிடுவார்கள் என அஞ்சிய அவர் புதுச்சேரியில் ஒரு போலி முகவரி மூலம் கார் வாங்கியிருக்கின்றார் இதனால் கேரள அரசின் வருமானம் குறைந்துவிட்டதாம், நிலமை சிக்கலாகின்றது அம்மணி மீது புகார் நிரூபிக்கபட்டால் சிறைதான் என்ன செய்வது? இதற்குத்தான் ஏதாவது ஒரு கட்சியில் இருக்க வேண்டும் என்பது, இருந்தால் அரசியல் பழிவாங்கல் என சொல்லி […]

காஷ்மீர் விவகாரம்

அரசியல் செய்ய ஆயிரம் காரணம் தேடலாம், ஆனால் சில விஷயங்களை வைத்து அரசியல் செய்ய கூடாது, அதனை சோதித்து பார்ப்பதே தவறு காஷ்மீருக்கு தன்னாட்சி என காங்கிரஸ் சொல்லியிருப்பது கண்டிக்கதக்கது. நம்மோடு இணையும்பொழுது என்ன ஒப்பந்தம் போடபட்டதோ அந்த சிறப்பு அந்தஸ்து இன்னும் தொடர்கின்றது, இன்னும் எவ்வளவோ சலுகைகள் கொடுக்கபட்டு கொண்டுதான் இருக்கின்றது. பல மாநிலம் இருக்கும் நாடு இது, எல்லா மாநிலத்திலும் ஒரு சில அதிருப்தி குரல்கள் கேட்டுகொண்டுதான் இருக்கும். காஷ்மீருக்கு தன்னாட்சி என்றால் மறுநிமிடம் […]

எண்ணூர் பகுதிகளில் கமலஹாசன் ஆய்வு

எண்ணூர் பகுதிகளில் கமலஹாசன் ஆய்வு மனிதர் களத்தில் இறங்கிவிட்டாராம், இப்படி எல்லா இடங்களையும் ஆய்வு செய்வாரம். வடசென்னைக்கு இதனால் பெரும் ஆபத்து என யாரோ சொன்னதால் அன்னார் வந்துவிட்டார் அப்படியே இந்த கூடங்குளம் அணுவுலை பக்கம் எப்பொழுது வரபோகின்றீர்கள் மிஸ்டர் கமலஹாசன்?

விவசாயம் வீழ்ச்சியடைந்ததால்…

விவசாயம் வீழ்ச்சியடைந்ததால் உலகெல்லாம் விவசாய பொருட்களின் விலை அதிகரிக்கதான் செய்கின்றது வருங்காலத்தில் இரண்டே வாய்ப்புதான், ஒன்று விவசாயம் செய்ய வேண்டும், அல்லது வாங்கும் சம்பளத்தை அப்படியே உணவிற்கு செலவழிக்க வேண்டும் அதுவும் தரமான உணவென்றால் கடன்வாங்கி செலவழிக்க வேண்டும் விவசாய வீழ்ச்சியும், வியாபார உலகமும் அந்நிலைக்கு கொண்டுவந்தாயிற்று. விவசாயியும் வாழவில்லை, வாங்குபவனும் உச்சவிலை கொடுக்கின்றான் என்றால் அதுதான் முதலாளித்துவம் ஜப்பான் போன்ற நாடுகள் இதனை வேறுவிதமாக சமாளிக்கின்றன, அதாவது யாராயிருந்தாலும் கட்டாயம் சிலமணி நேரம் விவசாய வேலை […]