பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஏன் இந்த இரட்டை வேடம்?

“கருத்துகளைச் சொல்லக்கூடச் சுதந்திரம் இல்லையென்கிற போது, எனக்குத் தோன்றுகிறது – நாம் ஒரு ஜனநாயகத்தில்தான் இருக்கிறோமா?” : கொளரி லங்கேஷ் அஞ்சலி நிகழ்ச்சியில் திருமாவளவன் உருக்கம் மிஸ்டர் திருமா, கொஞ்சம் காலத்தை பின்னோக்கி பாருங்கள் முன்பு குஷ்பூ ஏதோ விஷயத்திற்கு தன் கருத்தை சொல்லிவிட்டார் என்பதர்காக எப்படி எல்லாம் குதித்தீர்கள்?, அம்பேத்கர் கல்லறைக்கும் பெரியாரின் புத்தக அறைக்கும் எப்படி எல்லாம் உருண்டீர்கள் நினைவிருக்கின்றதா? குஷ்பூ மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் முழங்காலில் நிற்க வேண்டும் என்றேல்லாம் குதித்து […]

முன்னாள் ராணுவ மேஜர் ஷியோனன் சிங் யாழ்பாணத்தில் பேட்டி

மிக உக்கிரமான தாக்குதலில் உயிர்தப்பிய ஒருவரை 30 ஆண்டுகள் கழித்து அந்த இடத்திற்கு அழைத்து சென்றால் எப்படி இருக்கும் , அப்படி ஒரு நினைவில் பேட்டி கொடுத்திருக்கின்றார் முன்னாள் ராணுவ மேஜர் ஷியோனன் சிங் அதாவது 1987ல் இலங்கைக்கு என்ற அமைதிபடை மேஜர் அவர், 32 மாதம் அங்கிருந்திருக்கின்றார். சமீபத்தில் யாழ்பாணம் சென்று பேட்டி கொடுத்திருக்கின்றார் இந்த இடத்திற்கு உயிரோடு வருவேன் என நினைக்கவேயில்லை என்று அவரின் பேட்டி தொடங்குகின்றது. அவர் பேட்டியின் சுருக்கம் இதுதான் “இந்திய […]

நடராஜன் என்ன நாட்டு தியாகியா?

மறுபடியும் தான் ஒரு அவசர குடுக்கை என நிரூபித்திருக்கின்றார் சசிகலா 15 நாள் பரோல் எதற்கு? கணவனை நலம் விசாரிக்க 3 நாள் போதாதா என கேட்கமாட்டார்களா? கொஞ்சம் அவசரபடாமல் இருந்திருந்தால் நிச்சயம் சிறைக்கோலம் உடனே கிட்டியிருக்காது, முதலமைச்சராக அவர் காட்டிய அவசரமே அவரின் சிக்கலுக்க்கு காரணம் அது இருக்கட்டும் அம்மணிக்கு எதற்கு பரோல்? ஒரு பர்தாவினை மாட்டிவிட்டு கிளம்பிவிட வேண்டியதுதானே? நடராஜன் உறுப்பு மாற்ற சிகிச்சைக்கு தமிழக அரசு ஒத்துழைகவில்லை : சீமான் ஆக்ரோஷம் ஏம்பா […]

எங்கே சென்றுவிட்டார் தமிழிசை, கமல்?

இந்திய பொருளாதர தடுமாற்றம், தாஜ்மகால் சிக்கல், சசிகலா பரோல் மறுப்பு என பல சர்ச்சைகள் சூழ்ந்துள்ள நிலையில் தமிழிசையினை காணவில்லை ஸ்டாலின் செல்லும் காரில் 4 வீல்தான் இருக்கிறது, வங்க கடலுக்கு அப்பால் தாமரை உதிக்கும் என்றெல்லாம் சொல்லிகொண்டிருந்த அம்மணியினை காணவில்லை எங்கே சென்றுவிட்டார்? ஏதும் மாறுவேடத்தில் திமுக கூட்டங்களில் கலந்து குறிப்பெடுக்கின்றாரோ?   முன்பொரு காலத்தில் முகலாயர் சர்ச்சை வந்தபொழுது, முகலாயர்கள் அந்நியர்கள் அல்ல, இத்தேசத்திற்கு மங்கா அடையாளம் வழங்கிய இந்தியர்கள் என சொன்ன கமலஹாசன் […]

பராமரிப்பின்றி கிடக்கின்றது கம்பன் சமாதி : செய்தி

நாட்டரசன் கோட்டை அருகே பராமரிப்பின்றி கிடக்கின்றது கம்பன் சமாதி : செய்தி வள்ளுவனுக்கும், இளங்கோவிற்கு பின் தமிழுக்கு அழியா காப்பியம் கொடுத்தவன் கம்பன், தமிழ்தாய்க்கு அவன் சூட்டிய மகுடம் அது. ஆனால் அந்தோ பரிதாபம் அவன் சமாதி தேடுவாரற்று கிடக்கின்றது. தமிழ், தமிழர் என் 60 ஆண்டுகாலம் ஆண்டவர்கள் ஆட்சியில் அந்த ஆதிதமிழனுக்கொரு அங்கீகாரமில்லை ராமசந்திரனுக்கும், ஜெயலலிதாவிற்கும் மணிமண்டபம் கட்டும் தமிழகத்தில் தமிழ்தாயின் தலைமகனுக்கோர் இடமில்லை அவன் அப்படி என்ன செய்துவிட்டான்? ஆம், ராமனின் கதையினை அழகு […]

அவர் மா.பொ.சியா? ம.போ.சியா?

பத்மநாபா கொல்லபட்டபொழுது சென்னையில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பிரபாகரனை மிக மிக வன்மையாக சாடியவர் ம.பொ.சி ஒருகாலமும் பிரபாகரனால் ஈழம் அமையாது எனவும், அந்நாட்டை பிரபாகரன் சுடுகாடு ஆக்குவார் எனவும் சொன்னது அவர்தான் அதற்கும் மேலாக சொன்னார், “தமிழக இளைஞர்கள் இந்த பாசிச புலிகளிடம் மிக மிக கவனமாக இருக்கவேண்டும், இவர்களால் பலர் வாழ்வை தொலைக்க நேரிடும் ஜாக்கிரதை” அவர் சொன்னதையும் கேளாமல் வாழ்வை தொலைத்தவர்கள்தான் ராஜிவ்கொலை கேமரா ஹரிபாபு, இப்போது பரோலில் வந்த பேரரிவாளன், நளினி […]

காந்தி கொள்கைகளை பின்பற்றுவதால் தமிழகம் அமைதியாக உள்ளது : பன்னீர் செல்வம்

காந்தி கொள்கைகளை பின்பற்றுவதால் தமிழகம் அமைதியாக உள்ளது : பன்னீர் செல்வம் எவ்வளவு அருமையான வார்த்தைகள், அட பன்னீரும் இப்பொழுதெல்லாம் உண்மை பேசுகின்றார். பின்னே? அவரை முதல்வராகவும், இவரை துணை முதல்வராகவும் தமிழகம் மிக பெரும் சகிப்புதன்மையுன் பொறுத்துகொண்டிருக்கின்றது என்றால் அது காந்தி காட்டிய “அஹிம்சை” வழியாக அன்றி எதுவாக இருக்க முடியும்? சத்தியசோதனை  

தமிழகம் விழித்துகொள்ளட்டும், டெங்குவிலிருந்து விடுதலை பெறட்டும்

டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகின்றதாம், அரசினை முழுமையாக சாட முடியாது. இதில் மக்கள் விழிப்புணர்வும் மகா அவசியம். காய்ச்சலில் டெங்கி மற்ற காய்ச்சலை விட கொடூரமானது, இதன் அபாயம் என்னவென்றால் இது முற்றிவிட்டால் மருந்தே இல்லை டெங்கு உடலை பாதிப்பது எப்படியென்றால் ரத்தத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையினை குறைக்கும், அது குறைய குறைய உடல் நலம் பாதிக்கும் கடைசி கட்டத்தில் ரத்தம் கசிய எமன் தோன்றும் நேரம் வந்துவிடும். கடுமையான குறையாத காய்ச்சல், வாந்தி , தலைவலி […]

தினகரனை கைது செய்ய தனிப்படை அமைப்பு

மத்திய மாநில அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கியதால் தினகரன் மீது நடவடிக்கை , கைது செய்ய தனிபடை அமைப்பு : செய்தி என்னது துண்டு பிரசுரம் கொடுத்ததற்கு கைதா? இந்த சைமன், கவுதமன் எல்லாம் எவ்வளவு பகிரங்கமாக பேசிகொண்டிருக்கின்றார்கள். அதுவும் கவுதமன் பொதுசபையிலே தெற்கே காஷ்மீர் உருவாகும் என பேசியிருக்கின்றான் அங்கிள் சைமன் அந்நியநாட்டு தீவிரவாதி படத்தையே பிடித்துகொண்டிருக்கின்றார், காஷ்மீரின் யாசிக் மாலிக்கை எல்லாம் அழைத்துவந்து இந்தியா சிதறும் என்றெல்லாம் மிரட்டியிருக்கின்றார். இவர்கள் மீது எல்லாம் […]

நோபல் அறிவிப்புகள் வர தொடங்கிவிட்டன

நோபல் அறிவிப்புகள் வர தொடங்கிவிட்டன, ஜெயலலிதாவிற்கு நோபல் வேண்டும், ஆஸ்கர் வேண்டும், புலிட்சர் வேண்டும் இன்னும் உலகில் உள்ள அத்தனை விருதும் வேண்டும் என கேட்ட அதிமுககாரன் ஒருவனிடமிருந்தும் சத்தமே இல்லை. ஜெயாவிற்கு நோபல் இல்லை என்றால் இந்த உலகை அழித்துவிடுவோம், வடகொரிய அதிபரிடம் அணுகுண்டு கடன் வாங்கி வீசுவோம் என கிளம்புவார்கள் என எதிர்பார்த்தால் சத்தமே இல்லை.