பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அத்தை எப்போ சாவாள், சாவிகொத்து எப்போ கைக்கு வரும்?

ஜோதிடர் அறிவுரையால் முதல்வர் கனவு: மாதவனுடன் தீபா மீண்டும் திருமணமா? : செய்தி அதாவது தமிழகத்திற்கு கிட்டதட்ட 50 ஆண்டுகாலம் உழைத்துவிட்டு, பல தியாகங்கள் செய்த தீபா என்பவர் நான் ஏன் இன்னும் முதலமைச்சராக முடியவில்லை என்ற விரக்தியில் ஜோதிடரை அணுகினாராம் அந்த ஜோதிடரோ, உங்கள் மக்கட் பணியில் ஒரு குறைவுமில்லை, மணாளனை பிரிந்த ஜாதக தோஷமே காரணம். அதனால் ஜெயா சமாதி முன் திருமணம் மட்டும் செய்தால் தோஷம் தீரும். நீர் நிச்ச்சயம் முதல்வராவாய் என […]

பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது : யஷ்வந்த் சின்கா

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டியால் தான் இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது : யஷ்வந்த் சின்கா சொல்லியிருப்பவர் யார்? பாஜகவின் மூத்த தலைவர். ஒரு பக்கம் புதிய “இந்தியா பிறந்திருக்கின்றது” என மோடி சொல்ல, இன்னொரு பக்கம் இவரோ, நன்றாக‌ இருந்த “இந்தியா செத்து கொண்டிருக்கின்றது” என சொல்லிகொண்டிருக்கின்றார். பாஜகவின் மூத்த தலைவரே தங்கள் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருப்பதை ஒப்புகொள்கின்றார். எல்லா அரசும் தேர்தல் நெருங்கும் நேரத்தில், “இது எங்கள் சாதனை எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு […]

மரண அரசியல்…

ஜெயா சாவு விசாரணை எனும் சர்ச்சையினை கிளப்பிவிட்டதில் நீட்டும் மறைந்தது, அனிதாவும் மறைந்தாள், டெங்கும் மறைந்தது இன்னும் என்னவெல்லாமோ மறைந்தன‌ ஆக செத்தும் கெடுக்கின்றார் ஜெயலலிதா.. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது இதுவேதான்.  ஜெ., மரணம்: 3 மாதத்தில் விசாரணை அறிக்கை சமர்பிக்க தமிழக அரசு உத்தரவு! பாஸ்தீனம் மீதான படுகொலைகளை இஸ்ரேலே விசாரிக்கும் , முள்ளிவாய்க்கால் சர்ச்சைகளை சிங்கள அரசே விசாரிக்கும் என்பது போன்ற வரிசையில் ஜெயலலிதா மரணத்தை தமிழக […]

சர்ச்சை மறுபடியும் பெரிதாக வெடிக்கின்றது…

இந்த ஜெயலலிதா எப்படி இறந்தார் என்ற சர்ச்சை மறுபடியும் பெரிதாக வெடிக்கின்றது. ஆளாளுக்கு ஒன்றை சொல்லிகொண்டிருக்கின்றார்கள். ஒருவர் பார்த்தேன் என்கின்றார், இன்னொருவர் பார்த்தவனை பார்த்தேன் என்கின்றார் ஜெயாவின் காலை காணவில்லை, இன்னும் எதனை எல்லாமோ காணவில்லை என்றொரு கும்பல் சொல்லிகொண்டிருக்கின்றது. ஜெயா உடல்நிலை ஒன்றும் அதற்கு முன்பு அவ்வளவு நன்றாக இல்லை 2015களிலே அவர் நடக்கும்பொழுதே தடுமாறினார். பல கூட்டங்களை வீடியோ கான்பெரன்ஸ் முறையில்தான் நடத்தினார் அவர் நெடுநாள்கள் காணாமல் போக, கலைஞரே ஜெயாவிற்கு என்ன ஆயிற்று […]

ஜெ சிகிச்சை பெற்ற போது உடன் இருந்தவர்கள் யார்? : தமிழிசை

எச்.ராஜா மணி விழா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து டெங்கு உட்பட பல பிரச்சினைகளில் தமிழகம் சிக்கி தவிக்கும்பொழுது பொறுப்பான பதவியிலிருக்கும் முதல்வர், துணை முதல்வர், எதிர்கட்சி தலைவர் எல்லாம் எங்கு அணிவகுத்திருக்கின்றார்கள்? ஸ்டாலினை பார்த்து பன்னீர் சிரித்தார் என்பதையே தாங்க முடியாத சசிகலா, இவர்கள் மூன்றுபேரும் சேர்ந்து சிரிப்பதை கண்டால் எப்படி மயங்கிவிழுவாரோ? ஆக எச்.ராசா மணிவிழாவிற்கு வந்தாயிற்று, அடுத்து எங்கே? அது சங்கராச்சாரி விழாவாக இருந்தால் கூட இனி ஆச்சரியம் ஏதுமில்லை. […]

அம்மணி நீங்கள் ஒரு மருத்துவர்…

“நாட்டுமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை, வெளிநாடுகளில் ஒவ்வொருவருக்கும் ரூ.15லட்சம் போடும் அளவிற்கு கறுப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது அதனை மீட்டு வருவோம் என்றே பிரதமர் மோடி கூறினார்” : தமிழிசை அப்படியே இருக்கட்டும் அக்கா, அந்த மொத்த கருப்பு பணத்தையும் மீட்டாரா இல்லையா? மக்கள் அவர் சொன்னதை நம்பி வாக்களித்தார்கள்? அவர் செய்திருக்க வேண்டுமா இல்லையா? இவ்வளவிற்கு அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்துகொண்டே இருக்கின்றார், பணம் தான் வரவில்லை. வெளிநாட்டு பணத்தை மீட்பேன் என […]

கலைஞர் நலமுடன் இருக்கின்றாரா?

கலைஞர் நலமுடன் இருக்கின்றார் எஎன சொன்னால் போதாதா? இந்த படத்தை பார்த்தால் தோன்றுவது என்ன? உண்மையான திமுகவினர் , கலைஞர் விரும்பிகள் நிச்சயம் இப்படத்தை விரும்புவதில்லை.  

மிஸ்டர் உதயகுமார், சொல்ல முடியுமா?

இந்த மனிதருக்கு கவலை என்ன கண்டீர்களா? தமிழக முதல்வருக்கு தனிமனித ஒழுக்கம் மகா முக்கியமாம், நல்லது. ஆனால் ஜெயா இருக்கும் வரை அதை பற்றி ஒரு வார்த்தை பேசாமல், இப்பொழுது கமலஹாசன் வரும்பொழுது அது நாற்றம் என சொல்வது எப்படி? அதற்கு முன்பு என்ன மணம் வீசியதா? இன்றைய பிரான்ஸ் அதிபர் தன்னை விட வயதில் மிக‌ மூத்த பெண்ணை திருமணம் செய்திருக்கின்றார். அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மனைவிகள் ஏராளம். ஆனானபட்ட நெப்போலியன் முதல் கென்னடி வரை […]

சென்னையில் டெங்கு பரவுகின்றது

பண்டிகைக்கால சிறப்புப் பேருந்துகள் குறித்த விவரங்கள் – விஜயபாஸ்கர் வெளியீடு சென்னையில் டெங்கு பரவுகின்றது, 4 பேர் உயிரிழந்திருக்கின்றார்கள், இன்னும் எத்தனை பேர் பாதிக்கபட்டிருக்கின்றார்களோ தெரியாது அரசு அதில் என்ன நடவடிக்கை எடுத்தது? எப்படி டெங்கினை தடுக்கின்றது என்பது பற்றி ஒரு அறிவிப்புமில்லை. டெங்கு என்பது மருந்தேயில்லாத நோய். தொடக்கத்தில் கட்டுபடுத்தலாம், முற்றிவிட்டால் அவ்வளவுதான். அப்படி மகா சிக்கலான நிலையில் சென்னை இருக்க, அமைச்சர் தீபாளிக்கு பஸ் விட்டுகொண்டிருக்கின்றார் ஒருவேளை டெங்கு பரவாமல் இருக்க சென்னையினை விட்டு […]

ராமசந்திரனுக்காவது ஒரு படம் வந்தது, ஜெயாவிற்கு அதுவுமில்லை

எம்ஜிஆர் சாகும்பொழுது பல சர்ச்சைகள் வந்தன, பல வதந்தியும் வந்தது. அதில் ஒன்று ராமசந்திரனுக்கு மோரில் விஷம் வைத்தார் ஜாணகி என முதல் சர்ச்சை வந்தது, கிளப்பிவிட்டது யாரென்றால் சாட்சாத் ஜெயலலிதாதான். இன்னொரு வதந்தி தமாஷானாது, அதாவது ராமசந்திரன சிகிச்சை முடிந்து அமெரிக்காவிலே தங்கிவிட்டு, தன்னை போல இருந்த ஒருவனை தமிழகத்திற்கு அனுப்பி தன் கட்சி நிலவரத்தை அறிந்ததாகவும், அவனை இவர்கள் கொன்றுவிட்டதாகவும் ஒரு வதந்தி. அப்படியானால் ஒரிஜினல் ராமசந்திரன் எங்கே? இங்கு வந்தால் கொன்றுவிடுவார்கள் என்று […]