பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அகண்ட பாரதம் அமைக்க தொடங்கிவிட்டார்கள்!

இந்து மக்கள் கட்சியின் தமிழக நிர்வாகிகள் கூடுகின்றார்களாம், அதாவது அந்த ஜி, இந்த ஜி என பல ஜிக்கள் கலந்து கொள்வார்களாம். பல ஜி’க்கள் கலந்து கொள்வதால் இது ஜி’7 உச்சமாநாடு, ஜி20 உலக மாநாடு என நினைத்துவிட கூடாது, இந்த ஜி3 வேறு வகையறா, Gillettine கூட ஜியில் தான் தொடங்கும் அவர்கள் கட்சி, அவர்கள் ஜி3 கூட்டம் அது சிக்கல் இல்லை ஆனால் இந்த காசியானந்தன் என்பவரும் இந்த “ஜி” கூட்டத்தில் கலந்திருப்பதுதான் ஆச்சரியம் […]

தமிழனுக்கு எதிராக தமிழக கட்சிகள் ஆடிய ஆட்டமும் கொஞ்சமல்ல..

காமராஜர் எனும் மகானை முதல்வராக்கியதும் தேசிய கட்சி, அப்துல்கலாம் எனும் மாமனிதனை ஜனாதிபதியாக்கியதும் தேசிய கட்சி காமராஜரை வீழ்த்தியதும் மாநில கட்சிகள், கலாம் மறுபடி ஜனாதிபதியாக முடியாமல் தடுத்ததும் மாநில கட்சிகள் ஒரு தமிழன் பிரதமராக முடியாமல் குழப்பியதும் இதே மாநில கட்சிகள். தமிழனுக்கு எதிராக தமிழக கட்சிகள் ஆடிய ஆட்டமும் கொஞ்சமல்ல.. ஏதும் கேட்டால் இந்தியா தமிழரை வெறுக்கின்றது, நசுக்குகின்றது , இந்திய தேசியம் தமிழருக்கு எதிரானது என ஆயிரம் விளக்கம் என்னதான் விளக்கினாலும் , […]

நமது விசுவாசத்தை சோதிக்கின்றார்களாம்…

குஷ்பூ சில நாட்களாக அமைதியாக இருக்கின்றார், எந்த பிரச்சினையிலும் அவர் கருத்து சொல்லவில்லை, இது எதற்காக என பல அரசியல் நிபுணர்களும், முதிர்ந்த பத்திரிகை வித்தகர்களும் குழம்பி ஒரு சில கருத்துக்களை சொல்கின்றனர் அதில் ஒன்று, இந்த கோஷ்டி சண்டை மிக்க, ஒரு அதிமுக உளவாளியினை தலைவராக வைத்திருக்கும் காங்கிரசிலிருந்து வெளியேறி அவர் பாஜக பக்கம் செல்லலாம் என சிலர் சொல்கின்றனர் உடனே நம்மை நோக்கி கேள்விகள் பாய்கின்றன, “குஷ்பூ பாஜகவிற்கு வந்தால் நீர் பாஜக கட்சியினை […]

ஜெர்மனி பெரியார் சுயமரியாதை மாநாடு வெற்றிபெற வைகோ வாழ்த்து!

ஜெர்மனி பெரியார் சுயமரியாதை மாநாடு வெற்றிபெற வைகோ வாழ்த்து! கடவுள் இல்லை என சொன்ன சோவியத் யூனியனிற்கு பெரியார் செல்ல காரணம் இருந்தது, ஆனால் மிகபெரும் மதநம்பிக்கை கொண்ட ஜெர்மனிக்கு பெரியார் சென்று பகுத்தறிவினை போதிக்க என்ன அவசியம் இருந்தது? ஆனாலும் சென்றிருக்கின்றார், அவர் சென்று 91 வருடம் ஆயிற்றாம், அதனால் விழாவாம் சரி இந்த விழாவில் என்ன பேசுவார்கள் என நினைக்கின்றீர்கள்? அதே தான், “ஏய் பார்ப்பனனே , உனக்கு ஏன் நாங்கள் அடங்க வேண்டும், […]

போராட கிளம்புவோர் மீதெல்ல்லாம் குண்டர் சட்டம் பாய்கிறது

போராட கிளம்புவோர் மீதெல்ல்லாம் குண்டர் சட்டத்தினை பாய்ச்சுகின்றது, பெரும் மிரட்டலான விஷயம் இது கவனியுங்கள், இவர்கள் எதற்காக கிளம்புகின்றார்கள்? பசுமை காக்க, சுற்று சூழல் காக்க, மீத்தேன் என்பது பெரும் பசுமை எதிரி என கிளம்புகின்றார்கள், இவர்களைத்தான் குண்டர் என உள்ளே தள்ளுகின்றது அரசு. ஆக தமிழ்நாடு நாசமாக்கி தீருவது என இந்த ஆட்சி கங்கணம் கட்டி அலைகின்றது, ஆற்றுமண், கடல்மண், மலை என எல்லாம் விழுங்கி இன்னமும் விழுங்கத்தான் வெறியோடு அலைகின்றது இதனை எதிர்ப்பவர்கள் மீது […]

எசமான் ஆட்சியை கலைச்சிராதீங்க….

எசமான், உங்க திட்டங்களுக்கு எதிரா பேசுரவன எல்லாம் குண்டர் சட்டத்தில் உள்ளே போட்டு உங்களுக்கு ரொம்ப விசுவாசமா இருக்கேன், கருணை காட்டுங்க எசமான் ஆட்சியெல்லாம் கலைச்சிராதீங்க…. சே..சே நாங்க என்ன முட்டாளா? தனியா 132 எம்.எல்.ஏ வாங்கி தமிழகத்தில் நாங்க ஆட்சி அமைக்க முடியுமா? நீங்கள் இருக்கும் பொழுது நாங்க ஏன் ரிஸ்க் எடுக்கணும்? அந்த பன்னீரெல்லாம் நம்ம பய, பயப்படாம போங்க. ஆனாலும் நீங்கதான் தமிழ்நாட்டை ஆளுவதாக சிலர் நம்புகின்றார்கள் பார்த்தீர்களா? அதுதான் காமெடி சொல்லுங்கள் […]

கடை என்னுடயது – முதலீடு என்னுடையது- ஆனா வரி 23+30 = 53% வரி : சீமான்

கடை என்னுடயது – முதலீடு என்னுடையது- ஆனா வரி 23+30 = 53% வரி : சீமான் அடேய் எங்கே 23% வரி இருக்கின்றது? எல்லா பொருளுக்குமா கட்டிகொண்டிருக்கின்றோம்?, 53% வரி என எந்த இடத்தில் இந்த அறிவாளி கண்டார்? எந்த வியாபாரி 53% கட்டுவதாக சொன்னான்? எந்த அதிகாரி 53% கட்டு என வியாபாரி கழுத்தை பிடித்தான்? அது என்னடா? கடை என்னுடையது, முதலீடு என்னுடையது? நீ வாழும் நாட்டின் பாதுகாப்பு என்ன? அரசு ஊழியர்களின் […]

கொடநாட்டிலிருந்து தலமைசெயலகம் வரை …

சிறுதாவூர் பங்களா மர்மம், அப்பல்லோ மர்மம், கொடநாடு மர்மம் , கூவத்தூர் மர்மம், பரப்பான அக்ரஹார சிறை மர்மம் என்றேல்லாம் சர்ச்சை வந்தது அதாவது வேறு விவகாரங்கள் ஆனால் தமிழக தலமை செயலகத்திலே மர்மமாம், குட்கா சம்பந்தபட்ட கோப்புகளை காணவில்லையாம். மர்மமான வீட்டு பூசாரியினை ஆலய கருவறையில் விட்டால் அங்கும் மர்ம விஷயங்கள் நடக்கும், தலமை செயலகம அப்படி ஆகிவிட்டது இவர்கள் காலப்ட்ட இடமெல்லாம் இப்படி பல மர்மங்கள் நடக்கும் போல, மாநிலத்தின் தலமை செயலகத்திலே மர்ம […]

எந்த மீடியாவது வாய் திறக்கின்றதா?

ஜிஎஸ்டி என்பது பற்றி சீமானை எல்லாம் பேசவைத்து பார்க்கும் ஊடகங்களில் ரஷ்ய mic 25 விமானம் நல்லதா? இஸ்ரேலிய பிரெஞ்ச் விமானம் நல்லதா? என எவனாவது விளக்குகின்றானா? சீனா வளைக்க நினைக்கும் கோழிகழுத்து மலைப்பகுதி பற்றி எவனாவது, எந்த மீடியாவது வாய் திறக்கின்றதா? கதிராமங்கலம் எரியும் பொழுது, இப்படி அசாமிலும், கோதாவரி படுகையிலும் மீத்தேன் எடுக்கின்றார்கள், அஞ்சவேண்டாம் என நம்பிக்கை கொடுக்கின்றதா? அல்லது அங்கெல்லாம் இப்படி அழிவு அதனால் நமக்கு வேண்டாம் என்றாவது சொல்கின்றதா சுத்தமாக இல்லை, […]

சீமான் என்கிற பொருளாதார மேதை ….

ஜிஎஸ்டி வந்தது கூட சிக்கல் இல்லை, தேசம் சமாளித்து முன் செல்கின்றது, ஆனால் இந்த சீமான் எல்லாம் ஏதோ பொருளாதார மேதை போலவும், பத்துமுறை பொருளாதார பாடத்தில் நோபல் பரிசு பெற்றவர் போலவும் பேசுவதைத்தான் சகிக்க முடியவில்லை இந்த அல்லக்கை கருமாந்திரம் எல்லாம் ஜி.எஸ்டி பற்றி பேச் என்ன தகுதி இருக்கின்றது? என்ன தெரியும் அன்னாருக்கு ஆனாலும் அள்ளி விடுகின்றார் அந்த தந்தி ஊடகம் அந்நாளிலிருந்தே தமிழக சாபக்கேடு, தமிழை கெடுத்ததும் அவர்கள்தான் , சினிமா செய்தியினை […]