பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கைதியினை மீட்டு சென்ற சம்பவம் …

நாங்குனேரி அருகே கிராமமே திரண்டு வந்து காவலர்களை உதைத்து , கைதியினை மீட்டு சென்ற சம்பவம் உறுதியாக நடந்திருக்கின்றது நீர் இல்லா தமிழகத்தில் இப்பொழுது மண்ணுக்கு சண்டை, மண் தகறாறில் ஒருவரை காவல்துறை கைது செய்து அழைத்து சென்றபொழுதுதான் இந்த அதிரடி தாக்குதல் நடைபெற்றிருக்கின்றது அந்த கிராம பெண்கள் வந்து அடித்து உதைத்து இழுத்து சென்றதுதான் ஹைலைட். கோவில்பட்டி வீரலட்சுமி தெரியும் இந்த வீரலட்சுமிகள் குறித்து இனிதான் வரலாறு பேசும். காவல்துறை பெரும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை, […]

அது பொய்யாக இருந்தால் தமிழகத்திற்கு நல்லது

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே ஒரு கிராமம் , காவலர்களை தாக்கி கைதியினை மீட்டுசென்றதாக சில செய்திகள் பரவுகின்றன‌ அது பொய்யாக இருந்தால் தமிழகத்திற்கு நல்லது அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு கெட்டுவிட்டது என்பதற்கு அடையாளமாகும் கதிராமங்கலத்தில் களமிறங்கி அடிக்க இறங்கும் காவல்துறை, மெரீனாவில் ஒரு எல்கேஜி பையன் வந்தாலும் விரட்டும் காவல்துறை இங்கு மட்டும் அமைதி காப்பதன் மர்மம் என்ன என்ற கேள்விகள் எழும் சில காவலர்கள் தாக்கபட்டு கைதிகள் மீட்கபட்டது உண்மையா? […]

மெரீனாவின் அந்த இரட்டை கல்லறை வாசலில் பதிக்க வேண்டிய வரிகள்..

அந்த காலத்திலே அந்த ராமசந்திரனுக்கு ஒரு விபரீத ஆசை வந்திருக்கின்றது, சிவாஜிகணேசன் பராசக்தியில் பைத்தியகாரனாக நடித்தது போல தானும் நடித்தாலென்ன எனும் அபாய ஆசை 1960களில் இவருக்கும் வந்திருக்கின்றது, “கொடுத்து வைத்தவள்” படத்தில் நடித்தும் விட்டார் அதற்கு எதற்கு அய்யா நடிக்க வேண்டும், நடிக்காமல் கேமரா முன் நின்றால் முடிந்தது விஷயம் என யாராவது சொல்லியிருக்கலாம் சகிக்கவில்லை, ரவீந்திர ஜடஜா லாராவின் ஆட்டத்திற்கு ஆசைபட்டது போலவும், அஸ்வின் மாலகம் மார்ஷல் இடத்திற்கு ஆசைபட்டு விளையாடியது போலவும் இருக்கின்றது. […]

புலிகள் ஒரு வழிக்கும் வராதவர்கள்

ஒரு சிலர் கேள்வி கேட்கின்றார்களாம், ஈழபிரச்சினையில் பிரபாகரனுக்கும் ஜெயவர்த்தேனவிற்கும் தானே ஒப்பந்தம் ஏற்பட்டிருக்க வேண்டும்? ராஜிவிற்கும் ஜெயவர்த்தனேவுக்கும் என்ன ஒப்பந்தம் வேண்டி இருக்கின்றது? இவர்களை அப்படியே காதை பிடித்து சிரியா பக்கம் இழுத்து செல்ல வேண்டும், அங்கே அரசுக்கும் அவரை எதிர்த்து ஒரு டஜன் இயக்கங்களுக்கும் சண்டை ஆனால் அமைதிக்கான பேச்சுவார்த்தையினை பேசுவது யார்? சாட்சாத் ரஷ்யாவும் அமெரிக்காவும், சிரிய பிரச்சினைக்கு இவர்கள் ஏன் பேசவேண்டும்? அவர்களும் அடிக்கடி சிரிய அதிபரோடு பேசுவார்களே அன்றி, என்றாவது அரைடஜன் […]

நல்ல மத்திய அரசு இருக்கும்பொழுது இடையில் இந்த மாநில அரசு எதற்கு??

மத்திய அரசு வழங்கும் 500 படகுகள் மீணவர்களுக்கு உதவியாக இருக்கும் : அமைச்சர் ஜெயக்குமார் தமிழகத்தில் எப்பொழுதுமே மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் உண்டு , 1967 வரை அது தமிழகத்தில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது பின்பு வந்த அரசுகள் அதனை மறைத்தன, மத்திய அரசின் நலதிட்டம் ஒன்றுகூட வெளிதெரியாமல் மறைத்து, மாநில அரசே முழுக்க இம்மாநிலத்தை இயக்குவதாக விளம்பரபடுத்தபட்டது இதற்கு திமுக, அதிமுக இரண்டுமே விதிவிலக்கு அல்ல, மத்திய அரசின் நல திட்டங்களை தமிழகத்தில் தெரியவிடுங்கள் என […]

ராஜிவை தாக்கிய அந்த விஜமுனி என்ன ஆனான்?

1987ல் ராஜிவ் காந்தி இதே நாளில் கொழும்பு சென்றிருந்தார், ஈழவிவகாரத்தில் இந்தியா ஒரு தீர்வினை கொடுத்துவிட வேண்டும் என்ற வேகம் அவரிடம் இருந்தது அதற்கு காரணம் அதற்கு முன்பு நடந்த நிகழ்வுகள். புலிகளை நம்புவதற்கில்லை, வடமராட்சியில் சிங்களன் சுற்றி அடித்துகொண்டிருந்தான் , தமிழர்கள் உணவு மருந்து இன்றி சிக்கிகொண்டனர், பெரும் தொகை மக்கள் சாகும் நேரம், புலிகளின் முடிவு நெருங்கிகொண்டிருந்தது, இனி புலிகளால் சிங்களனை வெல்லமுடியாது என்ற உண்மை தெரிந்துகொண்டிருந்தது, ஏராளமான மக்கள் உணவின்றி தவித்தபொழுது, முதலில் […]

புலிகள் மீதான தடையினை நீக்க வேண்டும் : திருமா

ஐரோப்பிய ஒன்றியம் உடனடியாக புலிகள் மீதான தடையினை நீக்க வேண்டும் : திருமா எச்சரிக்கை அதாவது ஐரோப்பிய யூனியனின் உயர்நீதிமன்றம், புலிகள் இனி தாக்குதல் நடத்தும் வாய்ப்பே இல்லாததால் தடையினை விலக்கலாம் என சொல்லியிருக்கின்றது ஆனால் ஐரோப்பிய யூனியன் இதனை ஆய்வுசெய்துவிட்டுத்தான் சொல்லமுடியும் என விஷயத்தை முடித்துகொண்டது, இன்னும் புலிகளுக்கான தடை நீடிக்கின்றது இதில்தான் திருமா ஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரிக்கின்றார் தங்கபதக்கம் படத்தில் வைகை வளவன் எனும் அரசியல்வாதி பாத்திரத்தில் வரும் சோ ராமசாமி, சென்னை கூவம் […]

ஏன் இப்படி சொன்னார் மோடி?

ஒருங்கிணைந்த வளர்ச்சியே கலாமுக்கும், ஜெயலலிதாவுக்குமான உண்மையான அஞ்சலி: பிரதமர் மோடி உரை! நாசமாக போனது மோடியின் வருகை அப்துல் கலாம் வரிசையில் வைக்கபடவேண்டியவரா குற்றவாளி என தீர்ப்பிடபட்ட ஜெயலலிதா? இப்படி உளறத்தான் டெல்லியிலிருந்து வந்தாரா மோடி? ஒரு நாட்டின் பிரதமர் , ஒரு குற்றவாளிக்கு இங்கு சம்பந்தமில்லாமல் ஏன் அஞ்சலி செலுத்தவேண்டும்? அக்கா தமிழிசை, நீங்களாவது இதனை எடுத்து சொல்ல கூடாதா? ஏன் இப்படி சொன்னார் மோடி? அப்துல்கலாம் போன்றவர்கள் பிறந்த தமிழகத்தில்தான் ஜெயலலிதா போன்றவர்கள் இருந்தார்கள் […]

நாட்டிற்கு உழைத்த பெருமகனிற்கு ஒரு மணி மண்டபம் …

நாட்டிற்கு உழைத்த ஒரு பெருமகனிற்கு மணிமண்டபம் திறக்கபடுகின்றது, மோடி கடலடிக்கு சென்றாலும் பின்னாலே செல்லும் எடப்பாடி கடற்கரைக்கு செல்வதில் ஆச்சரியமில்லை ஆனால் அன்று கலாம் மறைந்தபொழுது இந்த அதிமுக தலமை அவரை அவமானபடுத்த்தியது, பழனிச்சாமி என்றொருவர் இருப்பது அப்பொழுது அவர் தொகுதி மக்களுக்கே சரியாக தெரியாது இன்று ஒருவரிடமிருந்து தப்பித்து இன்னொருவருக்கு அடிமையான பழனிச்சாமி முதல்வர் என்றவகையில் கலாமின் மணிமண்டபத்திற்கு சென்றிருக்கின்றார் வாழ்த்துக்கள். இந்த பொறுப்பான எதிர்கட்சி தலைவர், அடுத்த தமிழக முதல்வர் என சொல்லபடுபவர் என்ன […]

காமராஜரின் நாட்டுபற்று… புலிக்கு தடை…

காமராஜரின் நாட்டுபற்று தமிழகத்தை கண்டுகொள்ளா பொறுப்பற்றதனமாக சொல்லபடும் மாநிலத்தில், அப்துல்கலாமின் நாட்டுபற்று ஆர்.எஸ்.எஸ் சார்பு என சொல்லபடுவதில் என்ன ஆச்சரியம்?? அப்துல் கலாம் ஆர்.எஸ்.எஸ் என்றால் காமராஜரும் ஒரு ஆர்.எஸ்.எஸ் என சந்தேகமின்றி சொல்லலாம்.. நாட்டுபற்று என்றால் என்ன? ஆர்.எஸ்.எஸ் என்றால் என்ன என ஒன்றும் தெரியாத ஒரு தலைமுறை இம்மாநிலத்தில் உருவாகிவிட்டதுதான் பெரும் சோகம்… விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்க வேண்டும்: வைகோ, ராமதாஸ், வேல்முருகன், மணியரசன், நெடுமாறன் உள்ளிட்ட கோஷ்டிகள் […]