அவர் செல்லும் இடமெல்லாம் சிறக்கட்டும்
காசிமேடு காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசன் என்பவர் மிக சிறப்பாக பணியாற்றியிருகின்றார், போதை பொருள் ஒழிப்பு, பாதுகாப்பு இன்னும் பல நற்காரியங்களை செய்ததால் சாமி படத்து விக்ரம் அல்லது சிங்கம் சூர்யா போல அவருக்கு நற்பெயர் இருந்தது அவரை பணிமாற்றம் செய்திருகின்றார்கள் ஆனால் காசிமேடு பகுதியே திரண்டுவந்து அவர் செல்ல கூடாது என போராடியிருக்கின்றது, குறிப்பாக பெண்கள் அலையாக திரண்டு அழுது ஆர்பரித்து அவரை செல்ல கூடாது என தடுத்திருக்கின்றார்கள். அம்மக்களின் உணர்வுகளை எம்மால் புரிந்து கொள்ளமுடிகின்றது. […]