சரஸ்வதி அந்தாதி : 09
சரஸ்வதி அந்தாதி : 09 “பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமாமேவும் கலைகள் விதிப்பா ளிடம்விதி யின்முதியநாவும் பகர்ந்ததொல் வேதங்கள் நான்கும் நறுங்கமலப்பூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே” இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து வரும். “பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா(ய்)மேவும் கலைகள் விதிப்பாள் இடம் விதியின் முதியநாவும் பகர்ந்த தொல் வேதங்கள் நான்கும் நறுகமலபூவும் திருப்பதம் பூவால் அணிபவர் புந்தியுமே” முதல்வரி “பாவும் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா(ய்)” என வரும், இது யாப்பிலக்கண அம்சங்கள். […]