பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

காவேரி (ஐப்பசி) துலா ஸ்நானம்

சூரியன் துலாம் ராசிக்கு வரும் மாதம் ஐப்பசி மாதம் என்பதால் அது துலா மாதம் என்றே அழைக்கபடும். அந்த மாதத்தில் காவேரியில் நீராடுதல் என்பது பெரும் பலன்களைத் தரும் என்பது இந்துக்களின் ஐதீகம். ஆடிப் புதுவெள்ளம் போலவே ஐப்பசி காவேரியும் மகத்துவமானது. காவேரி தெட்சண கங்கை அதாவது தென்னக கங்கை என அழைக்கப்படும் ஆறு. அதற்கு பொன்னி, விதிசம்பூதை, கல்யாணி, சாமதாயினி, கல்யாண திருத்தரூபி, உலாபமுத்ரா, சுவாசாஸ்யாமா, கும்பசம்பவ வல்லபை, விண்டுமாயை, கோனிமாதா, தக்கனபதசாவணி எனப் பல […]

ஐப்பசி பவுர்ணமி – அன்னாபிஷேகம்

“சோறு கண்ட இடம் சொர்க்கம்” என்றால் சோற்றினை சிவலிங்கத்துக்கு படைப்பதை காண்பது. அதைக் கண்டால் சொர்க்கம் கிடைக்கும் என ஒரு விளக்கம் வருகின்றதே, அது சரியானதா? என ஒரு சிலர் கேட்பதால் நாம் நம்மால் இயன்ற அளவு அதைச் சொல்ல விளைகின்றோம். இதில் ஏதேனும் தவறு இருப்பின் இது அடியேனின் தவறல்ல. சில ஞானியரின் குறிப்புகளில் இருந்துதான் தருகின்றோம். சோறு என்றால் அது ஒரு பொருள் அல்ல, சோறு என்பது ஒரு நிலை. அதாவது பக்குவப்பட்ட நிலை. […]

ராஜராஜ சோழன்

25 / 10 / 2023 சிவன் தன் அடியாரை தேர்ந்தெடுத்துக் கொண்டால் அவனை விடமாட்டார்.  அவன் எங்கிருந்தாலும் என்ன நிலையில் இருந்தாலும் அப்படித்தான் தேடி வந்து ஆட்கொள்வார். சுந்தமூர்த்தி நாயனாரை அப்படித்தான் மணமேடையில் ஆட்கொண்டார், சமணராக அப்பர் சுவாமிகளை ஆட்கொண்டார், இன்னும் யார் யாரையெல்லாமோ எதிர்பாரா நேரம் ஆட்கொள்வார். தான் ஒருவனை குறித்துவிட்டால் எத்தனை பிறவிகள் என்றாலும் அவனை விடாமல் பிடித்து கொள்வார், தன் அன்புகுரியவன் என்னென்ன இந்த உலகத்துக்கு தன்மூலம் செய்யவேண்டுமோ அதை சரியாக […]

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் – அம்மா

20 / 10 / 2023 “நா(யே)னையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்துநீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்?தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே.“ என்ற வரிகளுக்கு அபிராமி பட்டருக்கு பின் சாட்சியாக வாழ்ந்த ஆத்மா அது. சிவந்து கனிந்த ஆத்மா அது. செவ்வானத்தில் ஜொலித்தக் கொண்டிருந்த விண்மீன் ஒன்று வீழ்ந்துவிட்டது. செந்நிற பூங்கொத்தில் இருந்து பக்தித்தேன் வழங்கிய மலர் ஒன்று காலத்தால் வாடி வீழ்ந்துவிட்டது. செந்தாமரையாய் நின்று தேவியினைத் தாங்கி நின்ற […]

கைசிக ஏகாதசி

ஏகாதசிகளில் வைகுண்ட ஏகாதசி போல சிறப்பானது கைசிக ஏகாதசி, அந்த கைசிக அல்லது கைசிகேய ஏகாதசி அழகான வரலாற்றை கொண்டதுஅதுதான் தென்முனையில் இருக்கும் நெல்லை சீமையின் முக்கிய திவ்யதேசமான திருக்குறுங்குடி ஸ்தலத்தையும் அதனை அடுத்த நம்பிமலையில் இருக்கும் நம்பி ஆலயத்த்தின் மகா சிறப்பையும் போதிக்கின்றதுஅவ்வகையில் இன்றைய நாள் நெல்லை மாவட்டம் நம்பிமலையில் இருக்கும் நம்பியாண்டவருக்கானதுதமிழகத்தின் அழகான இடங்களில் அந்த நம்பிமலையும் ஒன்று, மிக மிக தொன்மையான காலத்திலே நம்பிக்கு அந்த மலையில் நம்பி தீர்த்தம் அருகே அருவிகரையில் […]

தேவி மஹாத்மியம் : 12 / 13 (இறுதி பகுதி)

(தேவி மஹாத்மியத்தை படித்து அதில் சொல்லபட்ட துதிகளால் அதாவது வானோரும், தேவர்களும் எப்படி தன்னை கொண்டாடி துதித்தார்களோ அப்படி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும், என்னென்ன ஐஸ்வர்யமெல்லாம் கைகூடும் என்பதை அன்னை தானே சொல்கின்றாள். விஜயதசமியில் இந்த வார்த்தைகளை, அன்னை தேவியே நமக்கு தந்த வார்த்தைகளை தியானித்து வழிபட்டு அவளிடம் வரம்பெற்று கொள்ளுதல் அவசியம்.) இந்த தியானத்தோடு தொடங்கலாம். “கத்தி, கேடயம் ஏந்தி சேவை செய்யும் எண்ணற்ற பெண்களால் சூழப்பட்டு, சக்கரம், கதை, கத்தி, கேடயம், அம்பு, […]

தேவி மஹாத்மியம் : 11 / 13 – தேவீ ஸ்துதி

(அசுர கூட்டம் ஒழிக்கபட்டு தேவி பெரும் வெற்றிபெற்ற அந்த நாள், அந்த பத்தாம் நாள் விஜய தசமி. தேவியின் மாஹாத்மியம் அந்த விஜயதசமி காட்சிகளையும் சொல்கின்றது. தேவர்கள் தேவியினை போற்றியது போல நாமும் போற்றி இந்நாளில் வழிபடலாம்) “ஸர்வமங்கல-மாங்கல்யே சிவே ஸர்வார்த்த-ஸாதிகே | சரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே” எல்லா மங்களங்களிலும் மங்களப் பொருளாய் விளங்குபவளே! எல்லா நன்மைகளையும் அளிப்பவளே ! எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்விப்பவளே! சரணடைதற் குரியவளே! மூன்று கண்களை யுடையவளே! நாராயணீ […]

தேவி மாஹாத்மியம் : 10 / 13 – சும்ப நிசும்ப வதம்

த்யானம் – தேவி துதி “ஓம். முக்கண் உடையவளும், சாம்பல் நிறமான பந்தூக புஷ்பத்தின் நிறத்துடன், உருக்கிய தங்கமாய் ஜொலிப்பவளும், கைகளில் பாசம், அங்குசம், புஷ்பபானம் கொண்டு அபய முத்திரையுடன், அந்த அர்த்தநாரீஸ்வரரின் பாதியாகவும், மூன்று கண்களுடன் பிறை சந்திரனையே தன் ஆபரணமாக்கி கொண்ட என் தாயை இரவு பகலுமாக எந்நேரமும் போற்றி வணங்குகிறேன். ஓம். தீயில் சுடப்பட்ட பசும்பொன்னாய் மிளிர்ந்து, சூரியன், சந்திரன், அக்னி ஆகிய தேவர்களையே தன் முக்கண்களாய் கொண்டு, அழகிய கரங்களில் பாசம், […]

தேவி மாஹாத்மியம் : 09 / 13 – ரக்த பீஜ வதம்

த்யானம் – தேவி துதி “செந்நிற மேனி கொண்டு அலை அலையாய் கருணை பொழியும் ப்ரகாசத்துடன் கூடிய மிக அழகான கண்களைக்கொண்டு, கையில் பாசம், அங்குசம், வில், மலர் அம்புகளை ஏந்தி, தன் கிரணங்களாலேயே அனைவரையும் கவர்ந்து, அனிமா, மகிமா போன்ற அஷ்டமா ஸித்திகளை தன்னுள் நிறுத்தி என்னுள் நிறைந்த பைரவியை நான் வணங்குகிறேன்” சண்டனுங் கொல்லப்பட்டு முண்டனும் வீழ்த்தப் பட்டு, சைனியமும் வெகுவாக நாசமாக்கப்பட்டபின் பிரதாபம் மிக்க அசுர ராஜனான சும்பன் கோபத்தால் மதிகெட்டு, அசுரர் […]

தேவி மஹாத்மியம் : 08 / 13 – சண்ட முண்ட வதம்

த்யானம் – தேவி துதி “சிரசில் பிறை சந்திரனை சூடியவளும், நெற்றியில் கலை நுட்பத்துடன் கூடிய திலகம் அணிந்தவளும் மென்மையான மதத்துடன் கூடிய புன்சிரிப்பு தவழும் அழகிய முகம் உடையவளும், உடலோடு ஒட்டிய சிவந்த நிற பட்டாடை, ஆம்பல் பூமாலை தரித்தவளும், கையில் சங்கு பாத்திரத்துடன், தாமரையின் மீது காலை பதித்தபடி கிளிகளின் இனிய மொழியை கேட்டவாறே கைகளால் வீணையை வாசித்துக் கொண்டு, நவரத்தின சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் அம்ருதமயமான ராஜமாதங்கியை நான் த்யானிக்கிறேன்.” அங்ஙனம் கட்டளையிடப்பட்ட சண்டமுண்டர்கள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications