பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முருகப்பெருமான் ஆலயங்கள் : பூம்பாறை குழந்தை வேலப்பர் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : பூம்பாறை குழந்தை வேலப்பர் ஆலயம். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அண்மித்து மலையில் அமைந்திருக்கும் ஆலயம் இந்தக் குழந்தை வேலப்பர் ஆலயம், பழனி போல இதற்கும் தனித்துவமான வரலாறும் தொன்மையும் உண்டு. இது போகர் எனும் பெரும் முனிவரால் உருவாக்கப்பட்டது, அவர்தான் பழனிமலை முருகனையும் ஸ்தாபித்தார், அப்படிப் பழனிப் போலவே நவபாஷாணத்தால் உருவான சிலை இது. சித்தர்களின் தலைவர் முருகப்பெருமான், சித்தர்கள் வழிபடும் ஞானப்பண்டிதர் அவர்தான். சித்தபரம்பரை என்பது அகத்தியர் தொடங்கிவைத்த குருகுலம், அந்த […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : பாலசுப்ரமணியன் ஆலயம், உத்திரமேரூர்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : பாலசுப்ரமணியன் ஆலயம், உத்திரமேரூர். (இந்த ஆலயத்து வரலாறும், இளையனார் வேலூர் வரலாறும் ஒன்றுபோல் சொல்லப்பட்டாலும், முருகப்பெருமான் தன் வேல் ஊன்றி நின்ற இடம் இதுதான், யுத்தம் நடந்த இடம் இளையனார் வேலூர் என்றாலும் முருகப்பெருமான் வேலூன்றி சிவனை வழிபட்ட இடம் இதுதான்.) சரித்திரத்தில் மட்டுமல்ல தமிழக முருகப்பெருமான் ஆலயங்களில் முக்கியமானது உத்திரமேரூர் பாலசுப்ரமணியன் ஆலயம். இந்த ஆலயம் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உத்திரமேரூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. உத்திரவாகினி எனும் நதி […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : காட்டிநாயனபள்ளி மற்றும் கந்தர் மலை.

முருகப்பெருமான் ஆலயங்கள் : காட்டிநாயனபள்ளி மற்றும் கந்தர் மலை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலயம் இந்த முருகப்பெருமான் ஆலயம். இதன் பழமை போகர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது. சித்தர்களில் முக்கியமானவரான போகர் இந்த மலையில் தவம் செய்தும் மூலிகை ஆராய்ச்சிகள் செய்தும் வந்தார். அப்படியான போகரின் பெயரால் இந்த இடம் போகனபள்ளி என அழைக்கப்பட்டது, போகர் தங்கிய இடம் என அதற்குப் பொருள். அந்தப் போகர் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆலயம் இது, போகர் காலத்தில் இருந்தே […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : காட்டிநாயனபள்ளி மற்றும் கந்தர் மலை.

முருகப்பெருமான் ஆலயங்கள் : தேனி பெரியகுளம் பாலசுப்பிரமணியர் ஆலயம். தேனி மாவட்டம் பெரிய குளத்தில் அமைந்திருக்கும் ஆலயம் இது. இதன் வரலாறும் அங்கு முருகப்பெருமான் குடிகொண்ட காட்சியும் சிலாகிப்பானவை. ஆயிரம் ஆண்டுக்கு முன் தமிழகத்தில் மாபெரும் இராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பினான் இராஜராஜ சோழன். தஞ்சாவூரில் மாபெரும் சிவாலயம் எழுப்பிய அந்த உன்னதமான சிவபக்தனுக்கு எதிரிகளை அடக்கும் அவசியமும் இருந்தது. அவ்வகையில் அவனின் எதிரிகளாகச் சேரர்கள் இருந்தார்கள். மேற்கு மலையின் கணவாய்களில் முக்கியமானதான குமுளி வழி பிரதானமாய் அவர்களுக்கு […]

முருகப்பெருமான் ஆலயம் : வில்வ ஆரண்யம் (வில்வாரணி) நட்சத்திர கிரி.

முருகப்பெருமான் ஆலயம் : வில்வ ஆரண்யம் (வில்வாரணி) நட்சத்திர கிரி. முருகப்பெருமான் எல்லா இடங்களிலும் தன் உருவில்தான் காட்சியளிப்பார். ஆனால் ஒரே ஒரு தலத்தில் மட்டும் சுயம்புவாய் சிவலிங்கத்துடன் காட்சியளிப்பார். அந்த அபூர்வ ஆலயம் இந்த வில்வாரணி மலை எனும் நட்சத்திர கிரி. இதன் அன்றைய பெயர் வில்வ ஆரண்யம், அதாவது வில்வ மரக்காடு என பொருள், அந்த வில்வ ஆரண்யம் என்பதே விவராணி என மருவிற்று இந்த ஆலயத்தின் பெருமை அருணாச்சல புராணம், காஞ்சி புராணம் […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : குன்றக்குடி முருகன் ஆலயம் மற்றும் கோவனூர் முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : குன்றக்குடி முருகன் ஆலயம் மற்றும் கோவனூர் முருகன் ஆலயம். முருகப்பெருமான் ஆலயங்களில் பிரசித்தியானது குன்றக்குடி ஆலயம் திருப்பத்தூர் அருகே சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் மகா தொன்மையானது. “அழகெ றிந்த சந்த்ர முகவ டங்க லந்தஅமுத புஞ்ச இன்சொல் …… மொழியாலேஅடிது வண்ட தண்டை கலிலெ னுஞ்சி லம்பொடணிச தங்கை கொஞ்சு …… நடையாலேசுழியெ றிந்து நெஞ்சு சுழல நஞ்ச ணைந்துதொடுமி ரண்டு கண்க …… ளதனாலேதுணைநெ ருங்கு கொங்கை மருவு […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : தீர்த்ததொட்டி விருப்பாச்சி ஆறுமுகனார் ஆலயம், மேகமலை வழிவிடும் முருகப்பெருமான் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : தீர்த்ததொட்டி விருப்பாச்சி ஆறுமுகனார் ஆலயம், மேகமலை வழிவிடும் முருகப்பெருமான் ஆலயம். தேனியில் இருந்து போடி செல்லும் வழியில் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோடாங்கிபட்டி எனும் ஊரில் மலையடியில் அமைந்துள்ள ஆலயம் இந்தத் தீர்த்ததொட்டி விருப்பாச்சி ஆறுமுகனார் ஆலயம். இந்த ஆலயம் புராணக் காலத்திலே உண்டு, அதன் தோற்றம் சப்தகன்னியரிடம் இருந்து வருகின்றது. அசுரர்களை ஒழிக்க சக்திதேவிக்குத் துணையாக வந்த சப்த கன்னியர் ஒரு தவசியினை அறியாமல் கொன்றுவிடுகின்றார்கள். பின், உண்மை அறிந்து […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : கொளஞ்சியப்பர் ஆலயம் மற்றும் செட்டிக்குளம் முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : கொளஞ்சியப்பர் ஆலயம் மற்றும் செட்டிக்குளம் முருகன் ஆலயம். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே அமைந்திருகும் ஆலயம் கொளஞ்சியப்பர் முருகன் ஆலயம். இதன் வரலாறும் சக்தியும் சிலிர்ப்பானது மகா அதிசயமானது. பொதுவாக சிவாலயங்கள் இருக்குமிடமெல்லாம் அருகில் முருகப்பெருமான் ஆலயங்களும் கட்டாயம் இருக்கும், சில இடங்களில் அருகிலிருக்கும் சில இடங்களில் சற்று தொலைவில் இருக்கும். ஆனால், நிச்சயம் ஏதோ ஒரு வடிவில் இருக்கும். மிகச் சில இடங்களில் இவை பௌத்த சமண இதர மதமாற்ற காலங்களில் […]

திருவிளையாடல் புராணம் 56 : மலையத்துவஜனை அழைத்த படலம் மற்றும் உக்கிர பாண்டியன் திரு அவதாரப் படலம்.

திருவிளையாடல் புராணம் 56 :மலையத்துவஜனை அழைத்த படலம் மற்றும் உக்கிர பாண்டியன் திரு அவதாரப் படலம். ஈசனுடனான தடாதகையின் திருமணம் பெரும் விமரிசையாக நடந்து முடிந்தபின் காஞ்சனமாலை மிகுந்த நிறைவு கொண்டாள். அவள் சமுத்திரங்களிலெல்லாம் நீராட விரும்பினாள், கௌதம முனிவர் அந்த ஆலோசனையினைக் கொடுத்திருந்தார். தடாதகை அதனைச் சிவனிடம் சொல்ல சிவபெருமானோ ஏழு கடல்களையும் மதுரைக்கே அழைத்து வந்தார். இது தனித் திருவிளையாடலாக சொல்லபட்டிருக்கின்றது. நாமும் முன்பே கண்டோம். அந்தக் கடல்கள் மதுரைக்கு வந்து குளம்போல் நின்றபோது […]

திருவிளையாடல் புராணம் 55 :குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் மற்றும் அன்னக்குழியும் வைகையையும் அழைத்த படலம்.

திருவிளையாடல் புராணம் 55 :குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் மற்றும் அன்னக்குழியும் வைகையையும் அழைத்த படலம். தடாதகையுடனான திருமணம் தேவலோகத் திருமணமாக முடிந்து பின் சிவனே தன் அடியார்களுக்காக நடனமாடி, வெள்ளியம்பல நடனமாடி திருக்காட்சி வழங்கியபின்பு எல்லோரும் பந்தி அமர்ந்தார்கள். சிவபெருமானைத் தரிசித்த மகிழ்விலே தேவர்களுக்குப் பசி அடங்கிற்று. முனிவர்களும் அடியார்களும் அதே நிலையில் இருந்தார்கள். பிடி உணவே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது, இதனால் ஏகப்பட்ட உணவுகள் எஞ்சியிருந்தது. இது மணமகள் வீட்டாருக்கு ஒரு கர்வத்தைக் கொடுத்தது. குவித்து […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications