பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

புரட்டாசி மாதம்

புரட்டாசி மாதம் புனிதமானது, அது விஷ்ணு வழிபாட்டுக்கு மிகச் சிறந்த மாதம், மார்கழி போலவே அப்போது சொல்லவேண்டிய மந்திரங்களும், வழிபாடுகளும் உண்டு. அதனில் முக்கியமானது விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களைச் சொல்லும் “விஷ்ணு சஹஸ்ர நாமம்” பாடும் பெரும் வழிபாடு. அது இந்துக்களின் வழமையாய் இருந்தது, இன்றும் உண்டு, என்றும் தொடரவும் வேண்டும். இந்த வழிபாடு மகாபாரத காலத்திற்கு முன்பே இருந்தது, யார் இதனை தொகுத்தார்கள்? யார் இதனை பாடி பகவான் நாமத்தை பாடலாக, ஸ்லோகமாக தந்தார்கள் என்பதற்கு […]

சனாதன தர்மம் / ஹிந்து மதம்

சனாதன தர்மம் என்றால் மாறாதது நிலையானதுமான தர்மம் எனப் பொருள்,  இதன் பொருள் ஆழமானது. இது பற்றிய கொஞ்சம் ஆழமான புரிதல் அவசியம், இது பற்றி தெரிய ஸ்ருதி ஸ்மிருதி எனும் இரு தத்துவங்களுக்கான புரிதலும் அவசியம். ஸ்ருதி என்பது மாறாதது; ஸ்ம்ருதி என்பது மாற கூடியது. அதாவது காலத்துக்கும் மாறாதது ஸ்ருதி, காலம்தோறும் மாறிவருவது ஸ்ம்ருதி. இந்த பிரபஞ்சமும்,  பூமி ,  சூரியன்,  மழை, வெயில்,  உயிர்கள்,  மரம் செடிகொடிகள்,  மானிட உடல், வாழ்வு, வாழ்வின் […]

வரலெட்சுமி நோன்பு / வ்ரதம்

இந்து பெண்களின் மிக முக்கிய நோன்புகளில் ஒன்று வரலெட்சுமி விரதம். அது இன்று அனுசரிக்கப்படுகின்றது. உலகிலே பெண்களுக்கு உரிமை கொடுத்து, அவர்கள் தனித்துவமும் மகத்துவமும் பேண பல வழிகளை செய்த ஒரே ஒரு மதம் இந்துமதம். வேறு எங்கும் அப்படி ஒரு ஏற்பாட்டை பார்க்க முடியாது. இந்துமதம் அந்த சிறப்பை ஞானமாக செய்தது, பெண்கள் தனியாக கூடி வழிபடவும் கொண்டாடவும் அது பல பண்டிகைகளை செய்தது, முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே கொண்டாடி வழிபடும் அளவு அது […]

கருட பஞ்சமி

இந்துக்களின் அடையாளங்களெல்லாம் ஞான குறியீடுகள், ஒவ்வொரு அடையாளமும் பெரும் ஞானத்தை குறிப்பது. நாகசதுர்த்தியும், கருடபஞ்சமியும் அப்படியானதே. இந்துக்களின் பெரும் அடையாளம் நாகம், அதுவும் படமெடுக்கும் நாகம். அது சிவனின் கழுத்தில் இருக்கும் முருகனின் காலடியில் கிடக்கும், விநாயகரின் இடுப்பில் கொடியாய் கிடக்கும், அப்படியே ஆயிரம் தலைகளுடன் பரந்தாமனுக்கு படுக்கையாய் சுருண்டிருக்கும். அதே நேரம் தெய்வங்களின் வாகனங்கள் என ஒவ்வொன்றை அடையாளப்படுத்தியது இந்துமதம், சிவனுக்கு காளையும், முருகனுக்கு மயிலும், பரந்தாமனுக்கு கருடன் என்றும் அது சொன்னது. தெய்வங்களுக்கு ஏன் […]

நாக சதுர்த்தி : 02

இந்திய ஆன்மீக லவுகீக‌ வாழ்வில் பசுக்கள் எப்படி முக்கியமோ, பசுக்கள் எப்படி கொண்டாடப்பட்டதோ, எப்படி வழிபாடு செய்யப்பட்டதோ அதன் அடுத்த இடத்தில் நாகங்கள் இருந்தன‌. நாக வழிபாடு என்பது இந்துமதத்தின் பெரும் அடையாளமாக இருந்தது, உலகம் முழுக்க இருந்த இந்துமதம் இந்துஸ்தானில் சுருங்கிய பின் அது இங்கே பிரதானமானது, சீனா போன்ற நாடுகளில் அது அடையாளமானது. பாம்பு நடனம் என அவர்கள் ஆடி தொடங்கும் புத்தாண்டு அவர்களின் வழிபாட்டு நிகழ்வு அன்றி வேறல்ல‌. இந்துமதம் நாகத்தை பிரதானமாக்கியது, […]

நாக சதுர்த்தி : 01

இந்துக்களைப் போல பிரபஞ்ச அசைவுகளை கவனித்தவர்கள் யாருமில்லை. மானிடரைத் தாண்டி எல்லா லோகங்களையும் அதன் இயக்கங்களையும் அங்கு வாழும் சக்திமிக்க வடிவங்களையும் தங்கள் ஞானத்தால் உணர்ந்தவர்கள் இந்து ரிஷிகள். தாங்கள் உணர்ந்ததை வேதமாக, உபநிஷமாக, புராணமாக எழுதிவைத்தார்கள், அத்தோடு அவர்கள் தங்கள் பணி முடிந்ததென விலகவில்லை. மானிடர்மேல் மிக மிக அன்புகொண்ட அவர்கள் இப்பூமியில் மானிடர் நலமாக வாழ பல இதர உலக சக்திகளின் உதவி அவசியம் என்பதை உணர்ந்து, அந்த சக்திகளின் ஆசியினை எப்படி மானுடன் […]

வேத வியாசர்

““இங்கிருப்பதே எங்கும் இருக்கும்… இங்கில்லாதது எங்கும் இல்லை” என்பதுதான் சனாதான தர்மத்தினை விளக்கும் ஒரே வரி, அந்த அளவு எல்லாம் கொண்டது இந்த தர்மம் அதன் இயல்பில் இன்று வியாச பவுர்ணிமா கொண்டாடபடுகின்றது குரு பூர்ணிமா அன்று வியாசரை ஏன் கொண்டாட வேண்டும் என்றால் ஒவ்வொரு இந்துஸ்தானியும் அந்த மூலரிஷியினை ஏன் வணங்கி பணியவேண்டும் என்றால், ஏன் அந்த பவுர்ணமியினை வியாச பவுர்ணமி என தேசம் காலம் காலமாக கொண்டாடுகின்றது என்றால் அந்த காரணங்கள் வலுவானவை இந்துமதத்தின் […]

03. அமர்நீதி நாயனார்

“அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்” சுந்தரமூர்த்தி நாயனார் மெல்லிய இதழ்களோடு கூடிய மெல்லிய முல்லை மலர் மாலையைச் சூடிய அமர்நீதி நாயனார்க்கு அடியேன் என்கின்றார் சுந்தரமூர்த்தி நாயனார் யார் இந்த அமர்நீதி? அக்கால‌ சோழவளநாடு எல்லா வகையிலும் செழிப்பாய் இருந்தது, காவேரி நிலத்தை இருபோகம் விளையச் செய்து விளைச்சலில் பலன் கொடுத்தது, இன்னொரு வகையிலும் சோழநாட்டுக்குப் பணம் கொட்டியது . அது வியாபார சமூகத்தின் உழைப்பு. அன்று எந்த நாட்டிலும் இல்லாத செல்வம் சோழநாட்டில் கொட்டிக் கிடக்க […]

சாவித்திரி – காரடையான் நோன்பு

அந்த பாரததித்தில் அசுபதி என்றொரு மன்னன் இருந்தான், அவனுக்கு வாரிசு என ஒரு மகள் இருந்தாள், அழகிலும் அறிவிலும் சிறந்தவளான அவளுக்கு புனிதமான பெயரான சாவித்திரி எனும் பெயர் சூட்டினான், ஆம் சரஸ்வதியின் இன்னொரு பெயர் சாவித்திரி, எது உன்னதமும் உயர்ந்ததும் ஆசீர்வாதமுமானதோ அதற்கு சூட்டும் பெயர் சாவித்திரி அந்த சாவித்திரிக்கு திருமண வயதும் வந்தது, அக்கால இந்து சம்பிரதாயம் பெண்கள் தன் கணவனை தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் அளித்தது, தன் பாதுகாவலர் ஆலோசகரான பெரியவரகள் சூழ […]

ஸ்ரீ அன்னை

இந்துமதம் சொல்வதெல்லாம் உண்மை என்பதும், அது சொல்லும் முன் ஜென்மம், கர்மா என்பதெல்லாம் முழுக்க நிஜம் என்றும் உலகுக்கு நிரூபிக்கவே சில பிறப்புகள் வருகின்றன‌ உரிய நேரத்தில் உரிய தொடர்புகள் கிடைக்கும்பொழுது அவை அந்த உண்மையினை பட்டவர்த்தனமாக சொல்கின்றன, எந்த பகுத்தறிவாளனும் பெரும் விஞ்ஞானியும் கூட அதனை மறுக்கமுடியாதபடி அவை விஸ்வரூப சாட்சியாய் நிற்கின்றன‌ காலம் காலமாக நடப்பது இந்த பிரபஞ்சத்தின் விளையாட்டு பகவானின் அருளாட்சி இது, அது இந்துமதத்துக்கு சோதனை வரும்பொழுதெல்லாம் அடிக்கடி நடக்கும் திருவிளையாட்டு. […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications