பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திருவிளையாடல் புராணம் 34 : கீரனுக்கு கைதந்து சிவன் கரையேற்றிய படலம்.

திருவிளையாடல் 34 : கீரனுக்கு கைதந்து சிவன் கரையேற்றிய படலம். சிவன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து கீரனை எரிக்க அந்த வெம்மை தாளாமல் நக்கீரர் பொற்றாமரைக் குளத்தில் விழுந்தார் என்பதோடு அந்தத் திருவிளையாடலின் அதாவது தருகிக்குப் பொற்கிழி கொடுத்த படலம் முடியும். அதன் தொடர்ச்சித்தான் இந்தத் திருவிளையாடல். பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்த கீரன் தவித்துப் போய்க்கிடந்தார். அவரால் வெளிவரமுடியவில்லை. குளத்தினைக் கடக்க எழுந்தாலே பெரும் வெப்பம் அவரை வாட்டத் தொடங்கிற்று, இதனால் நீரிலே அமிழ்ந்து கிடந்தார், அவருக்குத் […]

திருவிளையாடல் புராணம் 33 : சிவன் வேடனாக வந்த படலம்

திருவிளையாடல் புராணம் 33 : சிவன் வேடனாக வந்த படலம். அந்நாட்களில் மதுரையினை விக்கிரமபாண்டியன் ஆட்சி செய்துகொண்டிருந்தான். சீரும் சிறப்புமாக மதுரையினை அவன் சைவ பூமியாக சிவனின் பிரதிநிதியாக ஆட்சி செய்து கொண்டிருந்தான். சிவன் சாட்சியாக அவன் ஆட்சி சிறந்திருந்ததால் எல்லாத் தேவதைகளும் நவக்கிரகங்களும் அங்கு எல்லா நலன்களையும் அருளின‌. மக்கள் நல்ல மனத்தெளிவும் நிரம்ப ஆரோக்கியமும் பெற்றிருந்தார்கள். மக்கள் சரியாக இருக்கும் நாடு எப்போதும் பெரும் வாழ்வு வாழும். பழக்கிய யானைகளைக் கட்டுபடுத்துவது எளிது என்பது […]

திருவிளையாடல் புராணம் 32 : கால் மாற்றி ஆடிய படலம்.

திருவிளையாடல் 32 : கால் மாற்றி ஆடிய படலம். அது மதுரையினை விக்ரம பாண்டியனின் மகன் இராஜசேகர பாண்டியன் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். ஆட்சி, போர், நிர்வாகம் தாண்டி நுணுக்கமான‌ கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த அவன் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து கொண்டிருந்தான். அவன் சிவபக்தன். முழு அடியாரான சிவபக்தன் ஆலவாய் நாதனை மிகுந்து போற்றி நின்ற பூரண பக்தன். அப்படியானவன் கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். அந்தக் கலைகளை அவன் போற்றி நிற்க காரணம் சிவனை […]

திருவிளையாடல் புராணம் 31 : கணையில் பெயர் பொறித்த படலம்.

திருவிளையாடல் புராணம் 31 : கணையில் பெயர் பொறித்த படலம். வங்கி சேகரன் மதுரையில் கோட்டைக்கட்டி, சிவனின் நாகம் காட்டிய எல்லைப்படி கோட்டைக்கட்டி பெருவாழ்வு வாழ்ந்தான். ஒரு மன்னன் பெரும் செல்வத்தோடு வாழும் போது எதிரிகள் பெருகுவது இயல்பு. அப்படி பாண்டியனுக்குச் சோழன் விக்ரமன் என்பவன் எழுந்தான். அவனுக்கு மதுரையின் பெரும் செல்வத்தைக் கொள்ளையிட்டுச் செல்வம் கொழிக்கும் நாட்டில் தன் ஆட்சியினை நிறுவும் ஆசை எழுந்தது‌. ஊழிக்காலம் முடிந்து மானுட இனம் புதிதாக எல்லாம் உருவாக்கிய காலத்திலும் […]

மார்கழி சதயம் நீலகண்ட தீட்சிதர் குருபூஜை

மார்கழி சதயம் நீலகண்ட தீட்சிதர் குருபூஜை 25/12/2025 அன்று மார்கழி சதய நட்சத்திர‌ நாள், அந்நாளில் ஒரு மாபெரும் மகானை அவதாரத்தை ஆதிசங்கரர், ராமானுஜர் சாயல் கொண்ட ஞானத் திருவுவரும் ஒன்றை நினைத்து பார்த்து வழிபடவேண்டியது தமிழக இந்துக்களின் தலையாயக் கடமை. மதுரையில் எக்காலமும் மீனாட்சி உண்டு, அவள் ஆட்சி உண்டு எனும் மெய்சிலிர்க்கும் உண்மையும், அவள் காலம் காலமாகத் தன் அடியார்களைக் கொண்டு தன் ஆலயத்தை மீட்டெடுத்துக் கொண்டே இருக்கின்றாள் என்பதற்கு இந்த அவதாரமும் ஒரு […]

பஞ்ச ஆரண்ய தலங்கள் 05 : திருக்கொள்ளம்புதூர் வில்வனேஸ்வரர் ஆலயம்.

பஞ்ச ஆரண்ய தலங்கள் 05 : திருக்கொள்ளம்புதூர் வில்வனேஸ்வரர் ஆலயம். பஞ்ச ஆரண்ய தலங்களில் கடைசி ஆலயம் ஐந்தாம் ஆலயமான திருகொள்ளம்புதூர் வில்வனேஸ்வரர் ஆலயம். இது தஞ்சாவூர் பாபநாசம் பக்கம் கொடராச்சேரி அருகில் முள்ளியாற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்தத தலம் சிவனின் ஐந்து தொழில் தாத்பரியத்தில் ஐந்தாம் தொழிலான அருளல் தொழிலைக் குறிக்கும் ஆலயம். அதாவது, முக்தியினை அருளும் ஆலயம். காசி முக்தி அளிக்கும் தலம் அப்படியே தமிழகத்தில் திருவெண்காடு, திருவையாறு , திருவிடை மருதூர், மயிலாடுதுறை, […]

பஞ்ச ஆரண்ய தலங்கள் 04 : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம்.

பஞ்ச ஆரண்ய தலங்கள் 04 : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம். பாபநாசம் அருகே அமைந்திருக்கும் ஆலங்குடி ஆலயம் பஞ்ச ஆரண்ய தலங்களில் நான்காவதானது. இதன் பழைய பெயர் திருஇரும்பூளை என்பது, கருமை நிறமான பூளை செடிகள் நிறைந்து கிடந்ததால் இது பூளைவனம் எனப்பட்டது. பின்னாளில் சிவன்குடி கொண்ட இடமாததால் திருஇரும்பூளை எனப் பெயர்பெற்றது. இந்த ஆலயத்தின் வரலாறு சிவன் ஆலகால விஷம் உண்டு தேவர்களைக் காத்த அந்தப் புராண காலத்தில் இருந்து துவங்குகின்றது, சிவன் தேவர்களைக் காக்க […]

பஞ்ச ஆரண்ய தலங்கள் 03 : அரித்துவாரமங்கலம் எனும் திருஅரதைப்பெரும்பாழி

பஞ்ச ஆரண்ய தலங்கள் 03 : அரித்துவாரமங்கலம் எனும் திருஅரதைப்பெரும்பாழி பஞ்ச ஆரண்ய ஆலய தலங்களில் அடுத்த ஆலயம் திருஅரதைப்பெரும்பாழி ஆலயம். இது தஞ்சை பாபநாசம் அருகே அமைந்துள்ளது, அதன் இன்றைய பெயர் அரித்துவார மங்கலம். “பைத்தபாம் போடுஅரைக் கோவணம் பாய்புலிமொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடைநித்தமா கந்நட மாடிவெண் ணீறணிபித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே” எனச் சம்பந்த பெருமானால் பாடப்பட்ட தலம் இது, தேவாரம் பாடப்பட்ட 216 ஆம் தலம் இது. இதன் வரலாறு அடிமுடி காணமுடியாதபடி […]

பஞ்ச ஆரண்ய தலம் 02 : அவளிவண‌நல்லூர் சாட்சிநாதர் ஆலயம்.

பஞ்ச ஆரண்ய தலம் 02 ; அவளிவண‌நல்லூர் சாட்சிநாதர் ஆலயம். தேவாரம் பாடப்பட்ட 163 ஆம் தலமான இந்த ஆலயம் தஞ்சாவூர் பாபநாசம் அருகே முதல் ஆரண்ய தலமான திருக்காவூரை அண்மித்து அமைந்துள்ளது இந்தத் தலம். “பதிக இன்இசை பாடிப்போய், பிறபதி பலவும்நதிஅ ணிந்தவர் கோயில்கள் நண்ணியே வணங்கி,மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்றுள்அதிர்சி லம்புஅடி யார்மகிழ் அவளிவ ணல்லூர்” எனச் சம்பந்த பெருமான் பாடிய தலம் இது, இந்தத் தலத்தின் தொன்மை யுகங்களைத் தாண்டியது. பாதிரி […]

பஞ்ச ஆரண்ய தலங்கள் 01 : திருக்காவூர்.

பஞ்ச ஆரண்ய தலங்கள் 01 : திருக்காவூர் “முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவேமத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே” எனச் சம்பந்தர் தேவாரத்தில் பாடித் தொழுத தலம் இது. ஆரண்யம் என்றால் காவல் நிறைந்த காடு எனப் பொருள், காவல் அமைப்பு என்றும் அர்த்தமாகும். வேதாரண்யம் நைமிசாரண்யம் எனும் பெயரால் அப்படி அமைந்தவை, அப்படி இந்த ஐந்து ஆலயங்களும் முன்பு காடாக இருந்து பின் தலமாக உருவானவை. பஞ்ச ஆரண்ய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications