பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முருகப்பெருமான் ஆலயங்கள் : தீர்த்ததொட்டி விருப்பாச்சி ஆறுமுகனார் ஆலயம், மேகமலை வழிவிடும் முருகப்பெருமான் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : தீர்த்ததொட்டி விருப்பாச்சி ஆறுமுகனார் ஆலயம், மேகமலை வழிவிடும் முருகப்பெருமான் ஆலயம். தேனியில் இருந்து போடி செல்லும் வழியில் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோடாங்கிபட்டி எனும் ஊரில் மலையடியில் அமைந்துள்ள ஆலயம் இந்தத் தீர்த்ததொட்டி விருப்பாச்சி ஆறுமுகனார் ஆலயம். இந்த ஆலயம் புராணக் காலத்திலே உண்டு, அதன் தோற்றம் சப்தகன்னியரிடம் இருந்து வருகின்றது. அசுரர்களை ஒழிக்க சக்திதேவிக்குத் துணையாக வந்த சப்த கன்னியர் ஒரு தவசியினை அறியாமல் கொன்றுவிடுகின்றார்கள். பின், உண்மை அறிந்து […]

முருகப்பெருமான் ஆலயங்கள் : கொளஞ்சியப்பர் ஆலயம் மற்றும் செட்டிக்குளம் முருகன் ஆலயம்.

முருகப்பெருமான் ஆலயங்கள் : கொளஞ்சியப்பர் ஆலயம் மற்றும் செட்டிக்குளம் முருகன் ஆலயம். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே அமைந்திருகும் ஆலயம் கொளஞ்சியப்பர் முருகன் ஆலயம். இதன் வரலாறும் சக்தியும் சிலிர்ப்பானது மகா அதிசயமானது. பொதுவாக சிவாலயங்கள் இருக்குமிடமெல்லாம் அருகில் முருகப்பெருமான் ஆலயங்களும் கட்டாயம் இருக்கும், சில இடங்களில் அருகிலிருக்கும் சில இடங்களில் சற்று தொலைவில் இருக்கும். ஆனால், நிச்சயம் ஏதோ ஒரு வடிவில் இருக்கும். மிகச் சில இடங்களில் இவை பௌத்த சமண இதர மதமாற்ற காலங்களில் […]

திருவிளையாடல் புராணம் 56 : மலையத்துவஜனை அழைத்த படலம் மற்றும் உக்கிர பாண்டியன் திரு அவதாரப் படலம்.

திருவிளையாடல் புராணம் 56 :மலையத்துவஜனை அழைத்த படலம் மற்றும் உக்கிர பாண்டியன் திரு அவதாரப் படலம். ஈசனுடனான தடாதகையின் திருமணம் பெரும் விமரிசையாக நடந்து முடிந்தபின் காஞ்சனமாலை மிகுந்த நிறைவு கொண்டாள். அவள் சமுத்திரங்களிலெல்லாம் நீராட விரும்பினாள், கௌதம முனிவர் அந்த ஆலோசனையினைக் கொடுத்திருந்தார். தடாதகை அதனைச் சிவனிடம் சொல்ல சிவபெருமானோ ஏழு கடல்களையும் மதுரைக்கே அழைத்து வந்தார். இது தனித் திருவிளையாடலாக சொல்லபட்டிருக்கின்றது. நாமும் முன்பே கண்டோம். அந்தக் கடல்கள் மதுரைக்கு வந்து குளம்போல் நின்றபோது […]

திருவிளையாடல் புராணம் 55 :குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் மற்றும் அன்னக்குழியும் வைகையையும் அழைத்த படலம்.

திருவிளையாடல் புராணம் 55 :குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் மற்றும் அன்னக்குழியும் வைகையையும் அழைத்த படலம். தடாதகையுடனான திருமணம் தேவலோகத் திருமணமாக முடிந்து பின் சிவனே தன் அடியார்களுக்காக நடனமாடி, வெள்ளியம்பல நடனமாடி திருக்காட்சி வழங்கியபின்பு எல்லோரும் பந்தி அமர்ந்தார்கள். சிவபெருமானைத் தரிசித்த மகிழ்விலே தேவர்களுக்குப் பசி அடங்கிற்று. முனிவர்களும் அடியார்களும் அதே நிலையில் இருந்தார்கள். பிடி உணவே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது, இதனால் ஏகப்பட்ட உணவுகள் எஞ்சியிருந்தது. இது மணமகள் வீட்டாருக்கு ஒரு கர்வத்தைக் கொடுத்தது. குவித்து […]

திருவிளையாடல் புராணம் 54 : வெள்ளி அம்பல திருக்கூத்து.

திருவிளையாடல் புராணம் 54 : வெள்ளி அம்பல திருக்கூத்து. சோம சுந்தரருக்கும், தடாதகைக்குமான திருமணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது ஆட்டம் பாட்டம் திரும்பும் இடமெல்லாம் நடந்தது, விருந்துக்கும் எல்லோரும் தயாரானார்கள். அப்போது வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் விருந்துக்குத் தயாரானாகள். ஆனால், அவர்கள் இருவரும் சாமானியம் அல்ல. அவர்கள் தில்லையில் ஈசனிடம் வரம்பெற்றவர்கள், அன்றாடம் அவர்கள் ஒருவேளைதான் உண்பார்கள், அந்த ஒருவேளை போஜனமும் ஈசனின் திருநடனத்தைக் கண்டபின்பே நடக்கும். அந்த இருவரும் ஈசனின் திருமணத்தில் கலந்து கொள்ள […]

திருவிளையாடல் புராணம் 53 : தடாதகையினை ஈசன் மணந்த படலம்.

திருவிளையாடல் புராணம் 53 :தடாதகையினை ஈசன் மணந்த படலம். தடாதகைக்குத் திருமண வயது வந்ததும் காஞ்சனமாலை பெரும் பொறுப்புடன் கவலையினையும் சேர்த்துச் சுமக்கத் தொடங்கினாள். மகளுக்கு மணம் செய்துவைப்பது பெற்றோரின் மிக முக்கிய கடமை. அவ்வகையில் மகளின் திருமண பொறுப்பு என்பது பெரும் மனச்சுமை. கணவனுமில்லாக் காஞ்சனமாலை அந்தக் கவலையினைத் தனியே சுமந்தாள். அவள் தன் கவலையினை அந்த ஆலவாயனிடமே முறையிட்டு வணங்கினாள். தன் மகள் தேவியின் அம்சம் என்பதால் அவளுக்கேற்ற கணவனைக் கண்டறிவது கடினம் என […]

திருவிளையாடல் புராணம் 52 : மலையத்துவஜன் பெற்ற மலர்க்கொடி.

திருவிளையாடல் புராணம் 52 : மலையத்துவஜன் பெற்ற மலர்க்கொடி. குலசேகர பாண்டியன் சிவபெருமான் குடியிருக்கும் கடம்பவனத்தை திருத்தி நகரமாக்கி அதனைச் சிவபெருமான் சூடிய நிலவின் மதுரத்தால் புனிதமாக்கி, மதுரை எனும் நகரை உருவாக்கி, பாண்டியரின் தலைநகராக்கி, சீரும் சிறப்புமாகப் பாண்டிய குலத்துக்கு அஸ்திபாரமிட்டுச் சிவனோடு கலந்தபின் அவன் மகன் மலையத்துவஜன் அரசனானான். மலையத்துவஜன் என்பது கயிலாய மலையில் குடியிருக்கும் சிவனின் பெயரன்றி வேறல்ல‌. அவன் தகப்பனைப் போலவே மிகச்சிறந்த சிவபக்தனாக இருந்தான். சோமசுந்தரர் ஆலயத்தில் அனுதினமும் தொழுதபின்பே […]

திருவிளையாடல் புராணம் : 51மதுரம் எனும் அமிர்தம் சிந்திய படலம்

திருவிளையாடல் புராணம் : 51மதுரம் எனும் அமிர்தம் சிந்திய படலம். அப்போது மதுரை எனும் நகரமில்லை, அது கடம்பவனம் எனும் காடாகக் கிடந்தது. மணவூர் என அதற்குக் கிழக்கேதான் மக்கள் குடியிருப்பும் வயல்களும் எல்லாமும் இருந்தன. அந்த மணவூரில் இருந்துதான் பாண்டிய மன்னர்கள் செங்கோல் செலுத்தினார்கள். அதாவது, மதுரையம்பதி எனும் அந்த ஆலவாய்நாதனின் மூர்த்தி யுகங்களைத் தாண்டியது. ஊழிக்காலத்தில் எல்லாம் அழிந்தாலும் அது நிலைத்து நின்றது. ஊழிக்காலத்தில் உயிர்கள் மறைந்து பின் தோன்றும்போது எல்லாம் மாறிவிடும். புதிய […]

திருவிளையாடல் புராணம் 50 : இந்திரன் சுமந்த‌ பிரம்மஹத்தி சாபத்தை போக்கிய படலம்.

திருவிளையாடல் புராணம் 50 : இந்திரன் சுமந்த‌ பிரம்மஹத்தி சாபத்தை போக்கிய படலம். தேவர்களின் அரசனான இந்திரனுக்கு அடிக்கடி அகந்தை ஏற்படுவது இயல்பு. தேவர்கள் இல்லாவிட்டால் இந்த உலகில் இயக்கமில்லை. சந்திர சூரியன், வாயு, வருணன் எனத் தேவர்கள் இருந்து தங்கள் கடமையினை ஆற்றாவிட்டால் எந்த உயிருமில்லை, எதுவுமில்லை. அப்படியான தேவர்களுக்குத் தலைவன் நான் எனும் அகந்தை அவனை ஆட்டிவைத்தது. சுகபோகங்களில் மூழ்கிக் கிடந்த அவனுக்கு இது இன்னும் போதையானது. அப்படி அவன் ஒருநேரம் மிகுந்த செருக்கில் […]

திருவிளையாடல் புராணம் : 49அகத்தியர் சொன்ன திருஆலவாய்ச் சிறப்புகள்.

திருவிளையாடல் புராணம் : 49அகத்தியர் சொன்ன திருஆலவாய்ச் சிறப்புகள். இந்தப் பாகம் மதுரை எனும் மாபெரும் தலத்தின் சிறப்பு பற்றிப் பேசுகின்றது, அதன் சிறப்பைச் சொல்லித்தான் அதன் மாபெரும் கீர்த்தியினைச் சொல்லித்தான் அகத்திய மாமுனிவர் திருவிளையாடல் புராணத்தை போதிக்கின்றார். அவ்வகையில் திருவிளையாடல் புராணம் இங்கிருந்துதான் தொடங்குகின்றது, அந்தப் மாபெரும் புண்ணிய ஷேத்திரத்தின் பெருமையினை அகத்தியப் பெருமான் மொழிகளிலே காணலாம். கைலாய மலையில் சிவபெருமான் பார்வதியுடன் வாழும் திருக்கோவில் முன் ஓர் தடாகம் உண்டு, அதன் பெயர் சிவ […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications