பஞ்ச மயானத் தலங்கள் : கச்சி மயானம் 02 / 06
முதல் மயானத் தலம் – காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் காஞ்சிபுரத்தின் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் அமைந்த்ருக்கும் ஒரு மகா முக்கிய சன்னதிதான் முதல் மயானத் தலம். இது காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் உட்புறத்தில் கொடிமரத்திற்கு வலப்புறம் மேற்கு நோக்கி தனி சந்நிதியாக அமைந்துள்ளது. இக்கோயில் மூலத்தானத்தின் மூலவராக, கச்சி மயானேசுவரர் எழுந்தருளி அருள் புரிகின்றார். இவருக்கு மயான லிங்கேசுவரர் எனும் மற்றொரு பெயருமுண்டு இந்த தலத்துக்கும் ஒரு புராணம் உண்டு, அதை பார்க்குமுன் இந்த பஞ்ச மயான தலங்களின் […]