பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கவிஞர் காமராசன் மறைந்துவிட்டார்

கவிஞர் காமராசன் மறைந்துவிட்டார் நல்ல கவிஞர் அந்த ராமசந்திரன் கண்ணதாசனுடன் பிணக்கான காலங்களில் தன்னருகே வைத்துகொண்டு கண்ணதாசனுக்கெதிராக கொம்பு சீவினார், கண்ணதாசனின் இடம் வேறு என்பதால் ஒன்றுமில்லை காமராசனின் தமிழ்பற்றை அதிமுக பற்றாக மாற்றி வைத்திருந்தார் ராமசந்திரன், நிச்சயமாக காமராசன் அபார கவிஞன் , வார்த்தைகள் விளையாடும் அதனை தனக்கு சாதகமாக திருப்பினார் ராமசந்திரன், அந்த பிடி இல்லையென்றால் இன்னும் பல அற்புத‌ பாடல்களை காமராசன் கொடுத்திருப்பார் காமராசனில் கரைந்து போன காலங்களும் எமக்கு இருந்தன‌ பின்பு […]

பா.ராகவனின் எழுத்துக்கள்…

கலைஞரின் எழுத்து வேறுரகம், கண்ணதாசன், சுஜாதாவிற்கு பின் ஒருவரின் எழுத்தினை கையெடுத்து வணங்கவேண்டுமென்றால் அது பா.ராகவனின் எழுத்துக்களையே மனிதர் அப்படி ஒரு ஞானம் பெற்றிருக்கின்றார், ஒரு நல்ல கிறிஸ்தவ போதகன் அல்லது கிறிஸ்தவன் தமிழகத்தில் இருப்பானானால் நிலமெல்லாம் ரத்தம் என்ற புத்தகம் எழுதியதற்காக அவருக்கு விழா நடத்தி கொண்டாடியிருப்பான் உறுதியாக சொல்லலாம், பைபிளின் மறுபிரதி அது, பைபிளின் தொடர்ச்சி அது இன்னும் ஏராளமான உலகம், வரலாறு, பக்தி, அரசியல், சமையல் என எல்லா பக்கங்களும் மின்னும் வைடுரியம் […]

வார்த்தை சித்தர் வலம்புரி ஜான்..

வலம்புரி ஜாணின் நூல் ஒன்றினை வாசித்தேன், அற்புதமாக எழுதுகின்றார், பெரும் அழகான வார்த்தைகள், வார்த்தை சித்தர் எனும் பட்டம் அவருக்கு பொருந்த கூடியது ஆனால் அவரின் எழுத்து வார்த்தைகளை தாண்டி அனுமானம் இப்படித்தான் முடிகின்றது மிக சிறுபான்மையான இனத்தின் அறிவாளியான அவரை கலைஞர் கைதூக்கி விட்டிருக்கின்றார், எம்பியாகவும் கலைஞர் உயர்த்த முயன்றார்..உயர்த்தினார் ஆனால் சில சர்ச்சைகளில் கலைஞரை விட்டு, செய்நன்றி கொன்றுவிட்டு எம்ஜிஆருடன் ஐக்கியமாகின்றார், அவரும் இவருக்கு இதழ் எல்லாம் தொடங்கி கொடுக்கின்றார், அதிமுகவின் பிரதான நபராகின்றார் […]

காலச்சுவடு என்றொரு பத்திரிகை இருக்கின்றது…

காலச்சுவடு என்றொரு பத்திரிகை இருக்கின்றது, முழுக்க முழுக்க அறிவாளிகள் மட்டும் எழுதும் பத்திரிகை என சொல்லிகொள்ளும், தமிழில்தான் எழுதுவார்கள் நமக்கெல்லாம் புரியாது காலசுவடா? காலாவதியான காலணியா? என்று கடந்து செல்லவேண்டிய விஷயம் அது. உலக விஷயமோ, பொருளாதாரமோ, வரலாறோ அல்லது உலகிற்கு தேவையான விஷயமோ , செய்திகளோ அல்லது குறைந்தபட்சம் சிரிக்க கூட விஷயம் இல்லா பத்திரிகை அது அறிவாளிகள் எல்லாம் தங்கள் கற்பனையினை கொட்டியிருப்பார்கள், புரிந்துகொண்டால் நாம் புத்திசாலியாம், நமக்கெல்லாம் ஒரு மண்ணும் புரியாது, சமூகத்திற்கு […]

Mugil Sivaன் “பயண சரித்திரம்”

Mugil Sivaன் “பயண சரித்திரம்” வாசித்துகொண்டிருக்கின்றேன், சும்மா சொல்ல கூடாது மனிதர் அபார உழைப்பினை கொட்டியிருக்கின்றார், ஏராளமான புத்தங்களை வாசித்தாலொழிய அது சாத்தியமில்லை பாகுபலி I பாணியில் இந்த புத்தகத்தை முடித்திருப்பதுதான் பெரும் விஷயம், ஆம் இந்த புத்தகத்தில் உலகை மாற்றிய வாஸ்கோடமாகா, மெகல்லன், கொலம்பஸ், அமெரிக்கோ வெஸ்புகி பற்றி ஒன்றுமே இல்லை, அடுத்த பகுதியில்தான் சொல்வாராம்.. கட்டபாவின் செயலுக்கு இரு வருடம் காத்திருந்தது போல மனிதரின் அடுத்த புத்தகத்திற்கு பரிதவிப்போடு காத்திருக்க வேண்டியிருக்கின்றது, இப்போதைக்கு சரித்திர […]

சுஜாதா எழுதவே அவதரித்த நாள் இன்று ….

பணத்திற்கும், புகழுக்கும் எழுதாமல் தன் ஆத்ம திருப்திக்காக இறுதிவரை எழுதிகொண்டிருந்தார் சுஜாதா, அதனால்தான் அவரால் பெரும் புகழ் பெற முடிந்தது, அவரது எழுத்துக்களில் ஆன்மா இருந்தது. அவரை தேடித்தான் பத்திரிகையும், சினிமாவும் வந்ததே தவிர, அவர் யாரையும் தேடி சென்றதாக செய்திகள் இல்லை நான் ஒரு எழுத்து மலைக்காடு, யார் வேண்டுமானாலும் எதனை வேண்டுமானாலும் எடுத்து செல்லுங்கள் என்ற வகையில் அவர் வாழ்வு இருந்திருக்கின்றது சங்க இலக்கியம், ஆங்கில இலக்கியம், விஞஞானம் முதல் விண்வெளி வரை எல்லா […]

உலக புத்தக விழா

உலக புத்தக விழாவாம், தலை சிறந்த புத்தகங்களை எல்லோரும் வரிசைபடுத்துகின்றார்கள் எனக்கு தெரிந்து மிக சிறந்த தத்துவ புத்தகங்களில் பைபிளின் சீராக் ஆகமும், திருக்குறளும் என்றுமே நம்பர் 1. அர்த்த சாஸ்திரம் இன்னும் சூப்பர் அலெக்ஸ்டாண்டர் காலத்து குறிப்புகளை, ரோமர் காலத்து குறிப்புகளை எழுதிய அந்த அறிஞர்களின் புத்தகங்கள் அற்புதமானவை இந்தியாவினை தேடிவந்த யுவான் சுவாங், மார்க்கோ போலோ முதல் வாஸ்கோடகாமா வரை எழுதிய புத்தகங்கள் பெரும் விஷயம் போதிக்கும் மானிடத்தை வாழ வைக்கும் மகா முக்கிய […]

“தோள் கண்டார் தோளே கண்டார்” என்ற கம்பனின் வரி பிரசித்தியானது

ராம நவமியில் ராமயாணம் பற்றி சொன்னால் கேள்வியாக கேட்டுகொண்டிருக்கின்றார்கள் நல்லது நாம் முழுக்க படித்தது கம்பராமாயணம், ஓரளவு படித்தது வால்மீகி மற்றவை எல்லாம் கண்ணில் படவே இல்லை கம்பராமாயணம் படித்தால் ராமன் கதையினை விட நெஞ்சில் தங்குவது கம்பனின் தமிழ், அவனது உருவகமும் கற்பனையும் கம்பன் ஏன் மிக பெரும் கவிஞன் என சொல்லபடுகின்றான் என்றால் அதற்காகத்தான், எப்படி அவனால் கற்பனையில் அவ்வளவு நுட்பமாக அன்றே ஒரு பேரழகு பெண்ணை சொல்ல முடிந்தது?? ஒரே ஒரு சாத்தியம்தான் […]

ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடியாது

சங்கரரும், ராமனுஜரும், விவேகானந்தரும், ரமண மகரிஷியும், கிருபானந்தவாரியார் போன்றவர்கள் இந்துமதத்தை பரப்பியது எல்லாம் சுத்த வேஸ்ட் இந்து மதம் என்பது ஜக்கி ஸ்டைலிலும், நித்தி ஸ்டைலிலும் பரப்பபட வேண்டும் என்கின்றார் ஜெயமோகன் மனிதருக்கு முற்றிவிட்டது என்பதை தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை கிறிஸ்தவ ஊழியங்கள் அப்படி நடக்கும்பொழுது, எங்களை போன்றவர்கள் இப்படித்தான் கிளம்புவோம் என சொல்ல வருகின்றார் அந்த கோஷ்டிகளை எப்படி கிறிஸ்தவர்கள் என உண்மை கிறிஸ்தவர்கள் ஒரு காலமும் ஒப்புகொள்ள போவதில்லையோ அப்படி ஜக்கியினையும் நல்ல இந்துக்கள் […]

எழுத்தாளர் சுஜாதா : நினைவு நாள்

தோற்றம் : 03-03-1935  :: மறைவு:  27-02- 2008 ஜனரஞ்சகமான எழுத்து என்றால் என்ன? அதனை தமிழில் எழுதுவது எப்படி என தமிழகம் அறிந்துகொள்ளட்டும்..” என‌ உலகிற்கு சொல்ல , இறைவன் அனுப்பிய எழுத்தாளன் சுஜாதா ரங்கராஜன் நினைவு நாள் இன்று உலகின் எந்த துறையினை எடுத்தாலும் அதன் அடி ஆழம் வரை எழுதும் அறிவு அவருக்கு இருந்தது ஆன்மீகம் முதல் விஞ்ஞானம் வரை, சங்க இலக்கியம் முதல் விண்வெளி வரை, கண மருத்துவம் முதல் கணிணி […]