பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உலகம் பதை பதைப்பில் இருக்கின்றது

ஆறுமுறை அணுகுண்டு வெடிப்பினை தொடர்ந்து, நீண்ட தூர ஏவுகனை சோதனையிலும் முழுவெற்றி பெற்றது வடகொரியா ஆனானபட்ட ஹிட்லரையே சமாளித்த அமெரிக்காவிற்கு வடகொரியா பெரும் சிக்கலாக உருவெடுத்திருக்கின்றது, இனி இன்னும் பொருளாதார தடைகளை இறுக்குவார்கள் ஏற்கனவே ஒவ்வொரு பொருளாதார தடையின்பொழுதும் ஒரு ஏவுகனை + ஒரு அணுகுண்டு என சோதித்து வெறுப்பேற்றுவது வடகொரிய ஸ்டைல் இப்பொழுது புதிய தடைவேறு என்ன ஆயுதம் சோதனை செய்யபோகின்றார்களோ அல்லது எத்தனை நாள் பொறுப்பது என ஜப்பானை போட்டு அடிக்க போகின்றார்களோ என்னவோ, […]

ஜப்பான் சாமி … ஹரியானா சாமி …

முன்பு ஜப்பானில் ஒரு ஆசாமி சாமியாக இருந்தார், அவர் பெயர் ஷோகா ஆஷகரா. நான் தான் சிவன், இயேசு மற்றும் புத்தனின் மொத்த கலவை என சொல்லி போதித்தார், அவரின் அட்டகாசங்கள் ஏராளம், காமெடிகள் பெரும் சுவாரஸ்யம், அதனை எல்லாம் எழுதினால் பல நாட்கள் ஆகும். அதனால் சுருக்கமாக சொல்லிவிடலாம். நானே கடவுள் என கஞ்சா கலந்து அவர் கொடுத்த தீர்த்தத்தில் மயங்கி கிடந்தனர் சீடர்கள். கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமானார் பின் ஓம் ஷிரிங்யோ எனும் ஆசிரமத்தை […]

செப்டம்பர் 11 2001

2001 செப்டம்பர் 11 வழக்கம்போலத்தான் அமெரிக்காவில் விடிந்தது, அந்த 19 பேரும் காலை எழுந்து குளித்து பிரார்த்தித்து, டை எல்லாம் கட்டி ஏதோ பன்னாட்டு நிர்வாக கூட்டத்திற்கு செல்வது போலத்தான் சென்றார்கள், தமிழக பஸ்டாண்ட் மினிபஸ் போல அடிக்கடி பறக்கும் அமெரிக்க விமானங்களில் ஏறிகொண்டார்கள், காலை 8.30 மணிக்கு 4 விமானங்களில் குளறுபடி ஆரம்பித்தது, விமான நிலைய கட்டுபாட்டு அறையுடன் தகவல் அறுந்தது, திடீரென் 9 மணிவாக்கில் உலக வர்த்தக மைய கட்டத்தின் உச்சியில் தீ எழும்பியது […]

புளோரிடா அரசு என்ன பழனிச்சாமி அரசா?

எடப்பாடி அரசினை மிரட்டும் டெல்லி போல அமெரிக்காவினை மிரட்டிகொண்டிருக்கின்றது இர்மா சூறாவளி. சில ரெய்டுகளை நடத்தி , அதிமுகவினை மிரட்டி வைத்திருப்பது போல ஏற்கனவே கரீபியன் தீவுகளில் வெறியாட்டம் ஆடிவிட்டு அது அமெரிக்கா பக்கம் நகர்கின்றது. புளோரிடா அரசு என்ன பழனிச்சாமி அரசா? அது மிக முன்னெச்செரிக்கையாக ஏராளமான மக்களை இடம் கடத்திவிட்டது, இன்னும் ஏராளமான மக்களுக்கு கடும் முன் தயாரிப்புகளை செய்திருக்கின்றது திக் திக் என நகர்கின்றது அவர்கள் நிமிடங்கள் உலகில் எத்தனையோ நாடுகளில் அரசியல் […]

மோடி “புதிய மியன்மார்” பிறக்க வைத்துவிட்டார்

“மியன்மாரில் நடப்பது இனபடுகொலை அல்ல, அவர்கள் தீவிரவாதிகள். அவர்கள் மேல் நடத்தபடும் நடவடிக்கையினை உலகம் மிகைபடுத்துகின்றது” : ஆங்சன் சூகி உலக இஸ்லாமிய நாடுகள் எல்லாம் ரொஹிங்கியா விவகாரத்தை கையில் எடுத்து கண்டிக்க தொடங்கிவிட்டன, இஸ்லாமிய நாடுகளில் ஓரளவு வலுவான நாடான (பாகிஸ்தானை விடுங்கள், அது ஒரு அடிமை) துருக்கி அதிபர் போனில் சூகியிடம் கண்டிக்கும்பொழுதுதான் அம்மணி இப்படி பேசியிருக்கின்றார். எந்த ஆங்க்சன் சூகி? பர்மாவில் மக்களாட்சி வேண்டும் என போராடி, பல வருடங்கள் சிறையிலிருந்து பெரும் […]

மியன்மாரின் ரோஹிங்யா விவகாரம்

மியன்மாரின் ரோஹிங்யா விவகாரம் பற்றி எரிகின்றது, பெரும் கொடூரமான தாக்குதல்களும் விரட்டல்களும் அந்த மக்கள் மேல் நிகழ்த்தபடுகின்றன‌ மகா கொடூரமாக அவர்கள் குடியுரிமையற்றவர்கள் என சொல்லி திமிராக நிற்கின்றது மியன்மார் அரசு. இந்த உலகில் இதனை கண்டித்து ஒரு குரல் கேட்கின்றதா இல்லை, கேட்கவும் கேட்காது. இதுதான் உலக யதார்த்தம் நேற்று மியன்மார் சென்ற மோடி கூட ஒரு மூச்சும் அது பற்றிவிடவில்லை, மிக சமத்தாக சுற்றிவிட்டு வந்துவிட்டார். உள்நாட்டிலே இஸ்லாமியரின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காத மோடி, […]

ஹைட்ரஜன் குண்டினை சோதித்தது வடகொரியா

ஹைட்ரஜன் குண்டினை சோதித்தது வடகொரியா, 6ம் முறையாக சோதித்து அதிர்ச்சி கொடுத்தது வடகொரியா அமெரிக்கா ஏராளமான பொருளாதார தடைகளை விதிக்க விதிக்க புதுவித குண்டுகளை பரிசோதித்து அமெரிக்காவிற்கு பதில் மிரட்டல் கொடுத்துகொண்டே இருக்கின்றது அது. டேய் மவன, சண்டைக்கு வாடா, வாடா வந்து பாருடா என அமெரிக்காவினை அழைத்துகொண்டே இருக்கின்றது வடகொரியா. மொத்த வடகொரியாவினை அழிப்பதை விட ஒற்றை மனிதனை அழித்தால் போதும் என்ற ரீதியில் அமெரிக்காவின் நகர்வு இருக்கின்றது. நான் அழிந்தால் அமெரிக்காவில் ஒரு பகுதியினை […]

நாளை மலேசிய சுதந்திர தினம்

நாளை மலேசிய சுதந்திர தினம்,வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட நாடு தயாராகி விட்டது. அக்காலத்தில் இருந்தே எல்லா கிழக்காசிய நாடுபோல இங்கும் தமிழர் தொடர்பு இருந்திருக்கது, மலைநாடு என்ற பெயர் மலேயா ஆனது என்பார்கள், ஆனால் பின்னாளில் பர்மா போல மிக நெருக்கமான தொடர்பு இல்லை. காரணம் பர்மீய நிலம் நெல்லுக்கு உகந்தது, ஆறுகள் அதற்கு பெரும் உதவி. அதனால் செட்டியார்கள் கவனம் அங்கேதான் குவிந்தது. இந்தியா போலவே மலேயாவிற்கு போர்த்துகீசியர் முதலில் வந்தனர், தொடர்ந்து டச்சுக்காரன் அதன் […]

“ரொகிங்கியா” ஒழிக்கபடும் ஓர் இனம்.

“ரொகிங்கியா” ஒழிக்கபடும் ஓர் இனம். அன்பிற்கும் அறத்திற்கும் உலகின் அடையாளமாய் ஜொலித்தது புத்தமதம், அசோகர் போன்ற பெரும் அரசர்களையே அது உள்வாங்கிற்று, இந்தியாவின் அம்பேத்கார் போன்ற மேதைகள் கூட விரும்பி ஏற்ற கொள்கை அல்லது மார்க்கம் அது. எந்தபுனிதமான மதமும் அரசியல் எனும் ஆதிக்கசக்திக்கு அடித்தளமானால் என்னென்ன விபரீத, மனிதகுல அழிவுகள் தோன்றும் என்பதற்கு வரலாறுமுழுக்க சுவடுகள் கிடக்கின்றன, இன்றளவும் மேற்காசியா அப்படித்தான் எரிந்துகொண்டிருக்கின்றது. மற்ற மதங்களை விட பொறுமையின் அடையாளமான புத்தமத நாடுகள் என தம்மை […]

சீன இந்திய படைகள் வாபஸ் , சர்ச்சை ஓய்ந்தது : செய்தி

எல்லையில் சீன இந்திய படைகள் வாபஸ் , சர்ச்சை ஓய்ந்தது : செய்தி எதற்காக சர்ச்சை வந்தது? சீனா சாலை அமைத்ததற்காக, ஆனால் அச்சாலை என்ன ஆனது என இரண்டு பயலுமே சொல்லவில்லை சாலை அமைந்து இந்தியா பின்வாங்கினால் சீனாவின் வெற்றி, சாலையினை தடுத்துவிட்டு சீனாவினை விரட்டியிருந்தால் அது இந்தியாவின் வெற்றி ஆனால் டெல்லியும் சத்தமில்லை, பீஜிங்கும் மகா அமைதி இரு நாடுகளும் சும்மா அல்ல, இரண்டுமே சவுண்ட் பார்ட்டி. சீன அரசின் ஊடகமாகன ஷிங் வா […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications