பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மிக பரபரப்பாக பிரிட்டன் தேர்தல்

உலகம் மிக பரபரப்பாக பிரிட்டன் தேர்தல் முடிவினை எதிர்பார்க்கின்றது, பிரிட்டன் ஐரோப்பிய யூனியலில் இருந்து வெளியேறுதல், ஸ்காட்லாந்து சர்ச்சை, அதிகரிக்கும் தீவிரவாதம் என‌ இன்னும் பல விவகாரங்களின் அளவுகோலாக இது பார்க்கபடுகின்றது முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன, பிரதமர் தெரசா மே க்கு பாதகமாகவே முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன, கிட்டதட்ட தொங்கு பாராளுமன்றத்தை நோக்கி முடிவுகள் செல்கின்றன, ஜெர்மி கோர்பினுக்கும் வாய்ப்பு இருக்கலாம் என்கின்றார்கள் பிரான்ஸில் ஏற்பட்டிருக்கும் எழுச்சி போன்று, பிரிட்டானியா மக்கள் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது, விரைவில் முழு முடிவும் […]

தீவிரவாத தாக்குதல் ஈரானிலும் தொடங்கிவிட்டது

தீவிரவாத தாக்குதல் ஈரானிலும் தொடங்கிவிட்டது, ஈரானிய பாராளுமன்றம் சிறைபிடிக்கபட்டதாகவும், ஷியாக்களின் ஒப்பற்ற தலைவர் கோமேனியின் கல்லறையில் சண்டை நடப்பதாகவும் செய்திகள் ஈரான் ஷியா மீது ஐஎஸ் போன்ற சன்னி பிரிவு இயக்கங்கள் பெரும் வெறுப்பில் இருந்தது உண்மை, ஈரானும் ஐஎஸ் இயக்கத்திற்கு எதிரான போரில் இருந்தது இவ்விஷயம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்துகின்றது, இன்னும் முழு நிலவரம் தெரியவில்லை ஒரு வகையான முரட்டு நாடு ஈரான், இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என கணிக்கமுடியாது, ஆனால் நிச்சயம் சுமூகமாக […]

வளைகுடா ஒற்றுமை அவசியம்

வளைகுடா ஒற்றுமை அவசியம்: சவுதி அரேபியா மன்னரிடம் தொலைபேசியில் வலியுறுத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் அல்லது எடப்பாடிக்கும் ஆதரவு, தினகரனுக்கும் ஆதரவு என்பது இதுதான் வளைகுடா நாடுகள் ஒற்றுமை இல்லாமல் இருக்க காரணமே அன்னாரின் திருவிளையாடல்தான், சமீபத்தில் இவர் சென்று சவுதிக்கு தருவதாக சொன்ன ஆயுதங்களும், அதனை தொடர்ந்து ஈரானுக்கும் கத்தாருக்கும் எழுந்த அச்சமே இந்நிலைக்கு காரணம் இதில் அந்நாடுகள் ஒற்றுமையுடன் இருக்க டிரம்ப் கோருகின்றாராம் இரு நாடுகளிலும் அமெரிக்க ராணுவம் […]

உலகின் அதி அற்புதமான நகரங்களுள் ஒன்று ஜெருசலேம்

உலகின் அதி அற்புதமான நகரங்களுள் ஒன்று ஜெருசலேம், மிக பழமையும், மிக புதுமையும் கொண்டு இன்றைய உலகில் ஒரு மிக விசித்திரமான நகரம் அது அதனை விட மகா முக்கியம், யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களுக்கு அதுதான் புண்ணியஸ்தலம் அது முதலில் ஆபிராகம் தன் மகனை பலியிட்ட இடம் என்பது யூதரின் நம்பிக்கை, அந்த சம்பவம் நடந்து ஆபிரகாம் சந்ததி எகிப்தில் அடிமையாகி திரும்பும் பொழுது அது ஜெபூசியர் எனும் இனத்தின் கையில் இருந்தது இஸ்ரேலிய மாமன்னன் […]

கத்தாரில் நடப்பது போருக்கான அறிகுறி அல்ல

கத்தாரில் நடப்பது போருக்கான அறிகுறி அல்ல, மாறாக அடிக்கடி நடக்கும் ஒரு அரசியல் விளையாட்டு தற்காலிக தொழில்முடக்கம் ஏற்படலாமேயன்றி, பெரும் போர் மூள வாய்ப்பில்லை, உலககோப்பை கால்பந்து உட்பட பெரும் பொறுப்புக்களை சுமக்கும் கத்தார் நிச்சயம் போரில் ஈடுபட வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம் ஈரான் மீதே தாக்குதல்கள் ஒத்திபோடபட்ட நிலையில், போர் எல்லாம் மூளாது இப்படி விமானம் வரக்கூடாது, தூதர் வரக்கூடாது என பணக்கார அரசியல் விளையாட்டு நடக்கும் கொஞ்சநாளில் எல்லாம் சரியாகும் ஈரானுடன் உறவு வைக்கும் […]

கத்தாருக்கு ஆபத்து இப்பொழுது வந்திருக்கின்றது

எண்ணெயும், இஸ்ரேலும் இருக்கும் வரை அரேபியாவில் அமைதி இல்லை, இந்த இரண்டும் இல்லை என்றாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவர்களுக்குள் அடித்துகொண்டுதான் இருக்கபோகின்றார்கள் ஆனாலும் இப்போதைய குழப்பத்திற்கு காரணம் இஸ்ரேலும், எண்ணெய்க்காக அமெரிக்கா செய்யும் அரசியலும் என்பது சொல்லி தெரியும் விஷயம் அல்ல‌ இஸ்ரேல் என்றாலே முன்பு எல்லா நாடுகளும் ஒன்று சேர்ந்து யுத்தம் செய்யும், வெற்றியா தோல்வியா என்பது தாண்டி அவர்கள் ஒன்று சேர்ந்தது அப்படித்தான், இஸ்ரேலுக்கு ஆகாதவர் என்றால் அழைத்து ஆராதித்தார்கள் ஜோர்டான், […]

ஐ.எஸ் இயக்கம் தன் கொடும்கரங்களை பிலிப்பைன்ஸிலும் தொடங்கிவிட்டது

சிரியாவினையும் ஈராக்கையும் அழிக்கும் ஐ.எஸ் இயக்கம் தன் கொடும்கரங்களை பிலிப்பைன்ஸிலும் தொடங்கிவிட்டது பிலிப்பைன்ஸ் என்பது தீவுகள் நாடு, அப்படி ஒரு தீவு மவாரி, பிலிப்பைன்ஸில் கிறிஸ்தவர்கள் போல இஸ்லாமியரும் அதிகம், இத்தீவு இஸ்லாமிய மக்கள் பகுதி புரூனே, இந்தோனேசியாவினை அண்டிய பகுதி என்பதால் அங்கும் இஸ்லாமியர் அதிகம் அங்குதான் இந்த படுபாதகம் நடைபெற்றிருக்கின்றது, ஒரு மசூதியில் அந்த தீவிரவாதபடை ஐஎஸ் கொடியினை ஏற்றியிருக்கின்றது, அதனை தொடர்ந்து சண்டை மனித கேடயம் என பயங்கர அட்டகாசம் இதுவரை 103 […]

படத்தில் சுவரோடு முட்டிகொண்டிருப்பது யார்? சாட்சாத் டிரம்ப்தான்

படத்தில் சுவரோடு முட்டிகொண்டிருப்பது யார்? சாட்சாத் டிரம்ப்தான் இஸ்ரேலிய ஜெருசலேமில் பழைய சாலமோன் ஆலய சுவர் உண்டு, யூதர்களின் பெரும் அடையாளமான அது அழிக்கபட்டு ஒரு சுவர்தான் மிஞ்சியிருக்கின்றது, யூதர்கள் எல்லாம் அதனை தொட்டு அழுவார்கள் மற்றவர்கள் சென்று அழவும் யூதர்கள் தடுப்பதில்லை அப்படி நேற்று ஜெருசலேம் சென்ற டிரம்ப் அந்த சுவரில் யூதமுறைபடி தொப்பி வைத்து அழுதிருக்கின்றார் எல்லோரும் எதற்கு அழுவார்களோ தெரியாது, டிரம்ப் இப்படி அழுதிருக்கலாம் “இந்த வறுமைபட்ட‌ வடகொரியாவினை அடிக்க முடியவில்லை, சிரியாவினை […]

இங்கிலாந்தில் தற்கொலை தாக்குதல் : 20 பேர் பலி

இங்கிலாந்தில் தற்கொலை தாக்குதல் 20 பேர் பலி, சற்றுமுன் சம்பவம் தீவிரவாதம் எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை லண்டன் உணரும் தருணமிது உலகின் எல்லா தீவிரவாத இயக்கங்களும் முன்பு அடைக்கலமானது லண்டனில்தான், அவர்கள் போராளிகள் என லண்டனும் சேர்த்துகொள்ளும் காலிஸ்தான் தீவிரவாதிகள் முதல் புலிகளின் கிட்டு, பாலசிங்கம் எல்லாம் அடைகலமானது அங்குதான். அங்கிருந்துதான் உலகெல்லாம் தீவிரவாதத்திற்கு கட்டளைகள் பறந்தன, தங்கள் நாட்டில் பிரச்சினை செய்யாமல் அடுத்த நாட்டில் செய்வதை லண்டனும் ரசித்தது உலகில் தீவிரவாதம் வெகு வேகமாக […]

உலகிலே இப்பொழுது பரிதாபமான நபர் டிரம்ப்

உலகிலே இப்பொழுது பரிதாபமான நபர் டிரம்ப், அவர் நினைத்தபடி ஒன்றுமே நடக்கவில்லை வடகொரியாவினை தாக்க அமெரிக்காவால் முடியவில்லை, பலவகை சிக்கல்கள், அடித்துவிடலாம் ஆனால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கலாம் என்பதால் எல்லோருக்கும் தயக்கம் வடகொரியாவினை பற்றி அமெரிக்காவிற்கு கிடைத்த அறிக்கைகள் அப்படி என்கின்றார்கள், யுத்தம் தொடங்கினால் அமெரிக்கா பெரும் விளைவினை சந்திக்கலாம் எனும் எச்சரிக்கை அதில் இருந்தது.. அமெரிக்கா பின்வாங்கியது பெரும் அவமானம்தான், என்ன செய்ய? சொல்லமுடியாத அவமானம் அது. டிரம்ப் கையினை பிசைந்து நிற்கும் நேரம் சரி […]