பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

படத்தில் என்ன செய்கின்றார்கள் தெரிகின்றதா?

படத்தில் என்ன செய்கின்றார்கள் தெரிகின்றதா? ரன்சம்வேர் வைரசிலிருந்து பாதுகாக்க ரஷ்ய உச்ச மதகுரு கம்பியூட்டர் சர்வர்களுக்கு எல்லாம் புனித நீர் தெளிக்கின்றாராம் ரஷ்ய புரட்சிக்கு முன்பு இப்படித்தான் அங்கு நிலை இருந்தது, மத குருமார்கள் சட்டமே உச்சமாக இருந்தது, லெனினும் ஸ்டாலினும் அதனை தகர்த்துதான் 1917ல் கம்யூனிச ரஷ்யா அமைத்தார்கள் தேவாலயம் எல்லாம் நூலகமாக, உணவகமாக மாற்றபட்டன, சாமியார்கள் எல்லாம் வேலைக்காரர் ஆக்கபட்டார்கள். விண்வெளி வரை சென்று தேடியும் கடவுளை காணவில்லை என்றார்கள் ரஷ்யர்கள் அடுத்த 100 […]

சீனா, ஐரோப்பாவை இணைக்கும் பட்டு சாலை

அக்காலமுதலே தன்னை உலகோடு தன்னை சாலை மூலம் இணைத்து கொள்ள துடித்த நாடு சீனா, பட்டும் தேயிலையிலும் ஐரோப்பா கொண்டு செல்ல பட்டு சாலையே அமைத்திருந்தது அந்த சாலையின் சில பிரிவுகள் மூலம் அன்றே உலகெல்லாம் தொடர்புகொண்டிருந்தது சீனா, பின் உலகாண்ட மங்கோலியர்கள் அதனை செம்மைபடுத்தி டோல்கேட் எல்லாம் அமைத்து வசூலித்தார்கள் மங்கோலியர் காலத்திற்கு பின் அடங்கி கிடந்த சைனா, மாவோ காலத்தில் விழித்துகொண்டு இப்பொழுது பழம் பெருமையினை மீட்க வல்லரசு கனவில் அலைகின்றது உலகெல்லாம் சாலை, […]

பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் இந்தியா வந்துள்ளார்

பாலஸ்தீன அதிபர் முகம்மது அப்பாஸ் இந்தியா வந்துள்ளார். அவரை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். சமீபத்திய செய்திகளில் கவனிக்கவேண்டிய செய்தி இதுதான், இந்திய பாலஸ்தீன உறவுகள் அப்படியானவை இஸ்ரேல் என்ற நாட்டை இந்தியா நெடுங்காலம் அங்கீகரிக்கவே இல்லை, பாடபுத்தகங்களில் கூட பாலஸ்தீனில் இயேசு பிறந்தார், பாலஸ்தீன ஜெருசலேம் மசூதி என்றுதான் வார்த்தைகள் இருந்தன‌ இன்று இந்தியாவில் பாலஸ்தீன் நாடு எனும் வார்த்தை கேட்க முடியுமா? எல்லா இஸ்ரேல் என மாறிற்று? […]

உலகம் முழுக்க கணிணிகள் ஊடுருவும் வைரசால் பாதிப்பு

உலகம் முழுக்க கணிணிகள் ஊடுருவும் வைரசால் பாதிப்பு, கணிணிகளை காப்பாற்ற‌ உலக நாடுகள் தீவிர நடவடிக்கை ஆண்டவா இந்த செய்தி தமிழக அமைச்சர்கள் கண்ணில் படாமல் போகட்டும், இந்த வைரஸ் விஷயம் அவர்களுக்கு தெரிந்தால் , படு பயங்கர நடவடிக்கையில் இறங்குவார்கள் ஆம்,லேப்டாப்பிற்கு எல்லாம் தடுப்பூசி போட்டு மாத்திரை கொடுக்கும் வேலையில் இறங்கி விடுவார்கள். இதனை கூட பொறுத்துகொள்ளலாம், ஆனால் இந்த உலகளாவிய கம்பியூட்டர் சிக்கலுக்கு காரணம் கலைஞரும் அவரின் ஆட்சியும்தான் என ஒரு கும்பல் வருமல்லவா? […]

உலகம் முழுவதும் இணைய தாக்குதல்

உலகம் முழுவதும் இணைய தாக்குதல் தீவிரமாகின்றது, இங்கிலாந்தில் தொடங்கிய தாக்குதல் உலகெல்லாம் பரவியிருக்கின்றது இது விசித்திரமான தாக்குதல், பொதுவாக தகவல்களை திருட ஊடுருவுவார்கள் அல்லது குழப்ப ஊடுருவார்கள் இம்முறை விசித்திரமான விஷயம், அதாவது கம்பியூட்டர்கள் முடக்கபட்டு இவ்வளவு பணம் கொடுங்கள் உங்களை அனுமதிக்கின்றோம் எனும் மிரட்டல், சில விஷயங்களுக்கு 300 டாலர் வரை கொடுத்து அமெரிக்காவில் கம்பியூட்டரை திறந்திருக்கின்றார்களாம் திருடன் என்பவன் இனி கழுத்தில் கத்தி வைப்பவன் அல்ல, மாறிவிட்ட காலங்களில் இருந்த இடத்தில் இருந்துகொண்டே கொள்ளையடிக்க […]

திரிகோணமலை துறைமுகத்தை யார் கையில் வைத்திருப்பது ?

அது கிட்டதட்ட 50 ஆண்டுகால பிரச்சினை , இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தை யார் கையில் வைத்திருப்பது எனும் பிரச்சினை காரணம் அதன் தன்மை அப்படி, மிக சிறந்த இயற்கை துறைமுகம், அதில் மட்டும் ஒரு ராணுவ தளம் அமைந்துவிட்டால் கிழக்காசியா முழுக்க நின்று ஆடலாம், அப்படியான இடம் அது இப்படியான இடத்திற்கு மசால் வடையினை தேடிவரும் எலிபோல அமெரிக்கா வராமல் இருக்குமா? அது காலூன்ற சுற்றி சுற்றி வந்தது. அது வந்தது சோவியத் முகாமிற்கு எரிச்சல் குறிப்பாக […]

வடகொரியாவில் எப்போது தீபாவளி தொடங்கும்

ஈரானும் வடகொரியாவும் ரகசிய தொடர்பில் உள்ளது : அமெரிக்கா அறிக்கை. வடகொரியாவினை அடிக்க தயாராகும் பொழுதே ஈரானை இழுத்துவிட்டு தொடங்குவதன் பெயர்தான் ராஜதந்திரம். ஆனால் வடகொரியா பாகிஸ்தானோடும் கொஞ்சம் தொடர்பில் உள்ள நாடு, அதையும் மறைப்பதன் பெயர்தான் இன்னொரு ராஜதந்திரம் இவர்கள் இப்படி ராஜதந்திரமாக சொல்லிகொண்டிருக்க, என்னை விஷவாயு குண்டு வீசி கொல்ல அமெரிக்கா சதி என முந்திகொண்டு ராஜதந்திர நகர்வு எடுக்கின்றார் வட கொரிய அதிபர் கிம் இந்த ராஜதந்திரங்கள் எல்லாம் எதில் முடியபோகின்றதோ தெரியவில்லை. […]

வடகொரியா செய்யுமா என்றால் சிரமம்

அதிமுகவினை அடக்க வேண்டுமென்றால் இரட்டை இலையினை முடக்கவேண்டும், பாஜகவினை முடக்க வேண்டுமென்றால் பாபர் மசூதி கட்டவேண்டும், வன்னியரை பிரித்துவிட்டால் ராமதாஸ் மட்டை , பிரபாகரனின் நெருங்கிய புலி கிடைத்துவிட்டால் சீமானை ஓட அடிக்கலாம் இப்படி பல தந்திரங்கள் உலகில் உண்டு அப்படி அமெரிக்காவினை யுத்தத்தில் வெல்ல ஒரு எளிய வழி அவர்களின் செயற்கை கோள்களை அழிப்பது அமெரிக்க எல்லா ஆயுதங்களும் பெரும்பாலும் செயற்கை கோள்களை நம்பியே இருப்பவை, அவைகளை அடித்துவிட்டால் அமெரிக்கா ஜெயா இல்லா அதிமுக‌ இதனை […]

உண்மையில் வடகொரியாவில் நடப்பது என்ன?

பொதுவாக பத்திரிகைகளுக்கு சமூக பொறுப்பும் நாட்டுபற்றும் வேண்டும், தமிழக பத்திரிகைகளுக்கு சுத்தமாக இரண்டும் இல்லை, சரி உலக செய்திகளிலாவது உண்மை சொல்லலாம் அல்லவா? அதுவும் இல்லை வடகொரிய அதிபரை பற்றி விமர்சனங்களை அள்ளிவிடுகின்றார்கள், அதுவும் பெரும் பொய்களை, உண்மை தன்மையினை வரலாற்றை மறைத்து அள்ளிவிடுகின்றார்கள் அதில் ஆனந்த விகடனும் சிக்கியிருக்கின்றது, என்னமோ தெரியவில்லை பாரம்பரியமிக்க அந்த பத்திரிகை சில அனுபவமில்லா நிரூபர்களை எழுதசொல்லி அபத்தத்தில் சிக்குகின்றது ஒரு மனிதனை அடிக்கும் முன்னால் அவனின் பிம்பத்தை அடித்து நொறுக்குவது […]

உலகில் பல நாடுகளிடம் அணுகுண்டு உள்ளது

உலகில் பல நாடுகளிடம் அணுகுண்டு இருக்கின்றது, ஏவுகனையும் இருக்கின்றது, அவற்றை வைத்துகொண்டு அவை எல்லாம் மிரட்டும் தொணி தாளமுடியவில்லை இஸ்ரேல், ஈரான், வடகொரியா எல்லாம் அந்த வகை. எதும் அண்டை நாடுகளோடு சிக்கல் என்றால் அவர்கள் சீற்றம் அப்படி இருக்கும் அணு பலம், ஏவுகனை பலம் கொண்டு ஒவ்வொரு நாடும் அண்டை நாடுகளை எல்லாம் ஆட்டி வைக்கின்றது, எல்லா ஆயுத அரசுகளும் அப்படித்தான் இந்த உலகில் மட்டுமல்ல, அண்ட சராசரத்திலே அணுகுண்டை வைத்து கொண்டு ஒரு நாடு […]