பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மோடிக்கு முஷாரப் பாராட்டு

மோடிக்கு முஷாரப் பாராட்டு : செய்தி அட பரிதாபமே, அன்று இந்திராவினை சூனியக்காரி, கிழவி என்றெல்லாம் கொதித்து சொன்ன ஜியா உல்ஹக்கின் வார்த்தையில் தெரிந்தது இந்திய பயம், இந்திய வெறுப்பு அவர்கள் திட்டினால் இந்தியா சரியான திசையில் செல்கிறது என பொருள், வாழ்த்தினால் நாம் நாசமாகிகொண்டிருக்கின்றோம் என பொருள். இன்று மோடியின் நடவடிக்கை, பெரும் அர்த்தமுள்ளாதாக இருந்து அது இந்தியாவின் எதிர்காலத்தினை மாற்றும் திட்டமாக இருந்தால் நிச்சயம் முன்னாள் ராணுவ ஜெனரல் இப்படி சொல்லமாட்டான் வாஜ்பாய் காலத்தில் […]

டொனால்ட் ட்ரம்ப் -அதிபதியான கதை (காணொளிகள்)

தங்கத்தால் ஆன சொந்த மாளிகை உட்பட 50 ஆயிரம் கோடி சொத்துக்கு சொந்தக்காரர் அமெரிக்க அதிபராகும் டொனால்ட் டிரம்ப் அந்த நாட்டில் பணம் சம்பாதித்துவிட்டு ஆட்சிக்கு வருகின்றார்கள், இங்கு ஒன்றுமில்லாமல் ஆட்சிக்கு வந்து டிரம்ப் அளவிற்கு சேர்த்துவிடுகின்றார்கள் அமெரிக்க நிலை அப்படி, நமது தலையெழுத்து இப்படி. https://youtu.be/5HuaZkA-ci8 டொனால்ட் ட் ரம்ப்  : சுய விவரம் https://youtu.be/0FdCOpUbKR0 Making of a President Part 1: Donald Trump’s New York City Childhood https://youtu.be/yKSEMUSrsF4 Making […]

எழில் மிகு மலேசியா

குறிஞ்சி, நெய்தல் என இரு நிலங்களை மட்டும் கொண்டது மலேசியா, பாலை எல்லாம் வாய்ப்பே இல்லை, முல்லை குறிஞ்சியோடு கலந்தே விட்டது, மருதம் தாய்லாந்தினை ஒட்டிய எல்லையில் கொஞ்சம்போல உண்டு. உணவு, உறைவிடம் உட்பட எல்லாமே இலவசம் சுற்றிபார்க்க வருகின்றாயா? என அழைத்தால் செவ்வாய்கிரகத்திற்கே செல்ல தயாராக இருக்கும்பொழுது, இந்த மலைக்காட்டிற்கு கிளம்பமாட்டோமா? அப்படி கிளம்பியாயிற்று, சென்ற இடம் அழகான மலையும் காடுகளும் நிரம்பிய பகுதி, இறைவன் பசுமை ஆடை உடுத்தி தவமிருக்கும் பகுதி. அவ்வப்போது பல […]

ட்ரம்புக்கு வாழ்த்து : ஐ.எஸ், அல்கொய்தா

டிரம்பை வாழ்த்தி செய்தி தெரிவித்தனர் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகள் அதாவது முன்பு புஷ் ஈராக்கினை போட்டு அடித்தாராம் , உடனே மக்கள் எல்லாம் தீவிரவாதிகளை ஆதரித்தார்களாம், இனி டிரம்பும் அதே போல மேற்காசியாவில் அட்டகாசம் செய்வாராம் உடனே இவர்கள் இயக்கம் இன்னும் வளருமாம் அதனால் நன்றி தெரிவிக்கின்றார்களாம் வருங்காலத்தில் ராஜபக்சே இலங்கையில் ஆட்சிக்கு வந்தால், இப்படி சீமான், வைகோ போன்றோர் வாழ்த்து சொல்லும் நிலை வரலாம், மனிதர் இல்லாததால் இவர்களுக்கு மார்க்கெட் ரொம்ப டல்… அது […]

டொனால்ட் ட்ரம்ப் வெற்றி : எதிர்ப்பு, ஆர்பாட்டம்…

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ட்ரம்ப் தெரிவுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல நகரங்களில் பெரும் ஆர்ப்பாட்டம், மிக தீவிரமான எதிர்ப்பால் அமெரிக்காவில் பரபரப்பு இவர்கள் தான் ஜனநாயக வாதிகளாம், தேர்தல் நடந்திருக்கின்றது, ஒருவர் பெருவாரி மக்களால் தேர்வுசெய்யபட்டுவிட்டார், இதன் பின் பொறுக்கமுடியாத மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி அழிச்சாட்டியம் செய்கின்றனர் மூத்த மக்கள் வாய்பொத்தி தலையில் அடித்துகொண்டு மூலையில் அமர்ந்தாகிவிட்டது தலைமுறைகள் எப்படி எல்லாம் மாறிகொண்டிருக்கின்றன என்பதற்கு இது பெரும் எடுத்துகாட்டு பெண் பித்தர், அதிகம் பேசுபவர், இனவெறியன் என்றெல்லாம் பெரும் […]

ரஷ்ய புரட்சி தலைவனும், தமிழக புரட்சி தலைவனும்!

முதலில் கடவுளாலும் பின் மன்னர்களாலும் ஆளபட்டு வந்த உலகில் நம்மை நாமே ஆண்டால் என்ன? என்ற குரல்கள் எழும்ப தொடங்கின‌ ரோம் அரசில் இருந்த சென்ட் சபையே இன்றைய மக்களாட்சியின் முன்னோடி, முதன் முதலில் 16ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் மக்கள் தான் பாராளுமன்ற ஆட்சி வேண்டும், மன்னராட்சி வேண்டாம் என சொல்லி மக்களாட்சி அமைத்தனர், அது செல்லுபடியாகவில்லை மன்னர் மறுபடி கொண்டுவரபட்டார் பின் 17ம் நூற்றாண்டில் நெதர்லாந்திலும் அதே கலவரம் வெடித்து அடங்கியது, அதன் பின் குரல் […]

எரித்திரியாவில் ஒரு ஆண் குறைந்தது 2 பெண்களை திருமணம் செய்ய வேண்டும்

எரித்திரியாவில் ஒரு ஆண் குறைந்தது 2 பெண்களை திருமணம் செய்ய வேண்டும், அவ்வாறு திருமணம் செய்யாவிட்டால் அவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும் : எரித்திரிய அரசு எச்சரிக்கை அந்நாட்டில் மக்கள் தொகை குறைந்துவிட்டதாம், மக்கள் தொகையினை அதிகரிக்க அரசு இந்த கட்டாய சட்டத்தில் இறங்கியிருக்கின்றது,. நமது நாட்டில் 2 குழந்தைகளுக்கு மேல் பெறாதே என்கிறது நமது அரசு. அவர்கள் அரசு “குறைந்தது” இரு மனைவிகளை வைத்து மக்கட் செல்வத்தை பெருக்கு என சொல்லிகொண்டிருக்கின்றது. இலவச வயகரா கொடுக்கும் […]

ஓபாமா ஆட்சி எப்படி முடிந்தது என பல அலசல் நடக்கின்றது….

பிரிட்டனிடம் இருந்து போராடி சுதந்திரம் பெற்ற நாடு அமெரிக்கா, மற்ற நாடுகளை போல அது ஒரே கலாச்சாரம் கொண்டதல்ல மாறாக குடியேற்ற நாடு. அதனால் அதற்கான கலாச்சாரத்தை அவர்களாக உருவாக்கினார்கள். எப்படி? எல்லாவற்றிலும் பிரிட்டனை கிண்டல் செய்தார்கள். அது ஆங்கில வழக்கிலும் இன்றுவரை எதிரொலிக்கின்றது. அவர்கள் பஸ் ஸ்ட்டாண்ட் என்றால் இவர்கள் பஸ் ஸ்டேசன் என்பார்கள், அவர்கள் பியுயல் என்றால் இவர்கள் கேஸ் என்பார்கள், அவர்கள் லைன் என்றால் இவர்கள் கியூ என்பார்கள். அவர்கள் பிரதமர் என்றால் […]

மலேசிய தீபாவளி..

மலேசிய தீபாவளி வழக்கம் போல கோலாகலம், கட்டணத்தில் வாங்கும் இந்திய‌ டிவி சேனல்களை கூட சில நாட்களுக்கு அரசு இலவசமாக கொடுத்திருக்கின்றது. அரசு தொலைகாட்சியில் இந்திபடங்களும் கூடவே லிங்கா, சிவாஜி என இம்சைகள். கபாலி ஏன் போடவில்லை என கேட்டால் நிலை மகா சிக்கல் ஆகிவிடும், அது வரவும் வாய்ப்பே இல்லை. ஒரு சேனலில் நெடுநாளைக்கு பின் விசுவின் நிகழ்ச்சி பார்க்க முடிந்தது, அவர் குரலே கிட்டதட்ட பாக்யராஜ் போல மாறி இருந்தது தெரிந்தது, எப்படி இருந்த […]

மலேசியாவில் தீபாவளி…

மலேசியாவில் தீபாவளி  : மக்கள் எண்ணங்கள், வாழ்த்துக்கள் : காணொளி தீபாவளி நெருங்கிவிட்டது, இந்தியாவின் நம்பர் 1 கொண்டாட்டம் அது, தமிழகத்திலும் தயாரிப்புகள் தீவிரமாக இருக்கலாம் அதிமுகவினரை தவிர. மலேசியாவில் தீபாவளிக்கு தேசிய விடுமுறை, இந்தியர்கள் கொண்டாடும் பண்டிகை என்பதால் தமிழ், தெலுங்கு, சீக்கிய, மலையாள மக்கள் கலந்த இந்திய சமூகத்திற்கு அப்படி அங்கீகாரம் அளித்திருக்கின்றார்கள். இதில் தமிழ் சமூகம் பெரிய எண்ணிக்கை அதனால் தீபாவளி தயாரிப்பிற்கு பின்னி எடுக்கின்றது. பொதுவாக குறைந்தது 1 வாரம் கொண்டாடுவார்கள், […]