பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பெர்முடா மர்ம முக்கோண கடலின் மர்மம் விடுவிப்பு

பெர்முடா மர்ம முக்கோண கடலின் மர்மம் விடுவிப்பு : செய்தி நன்றாக படித்து பார்த்தால் ஒரு மர்மமும் விடுபடவில்லை, வழக்கமாக வரும் அனுமானங்களில் ஒன்று வந்திருக்கின்றது. 100001 வது அனுமானகமாக, அதாவது அறுங்கோண வடிவில் மேகங்கள் வருவதால் அப்பகுதியில் மர்ம சக்தி நிலவுகின்றதாம். சரி உலகில் எங்கும் இல்லா வகையில் அங்குமட்டும் அறுங்கோணம் எப்படி வருகின்றது, இதுவரை காணாமல் போன கப்பல்கள் எங்கு சென்றன, இன்னொரு ஆளில்லா விமானத்தை அனுப்பி சோதிக்கலாம் அல்லவா? என்றல்லாம் நாம் கேட்க […]

வாழ்த்துக்கள் புட்டீன்…

 ரஷ்ய தேர்தலில் புடின் அபரிமிதமான வெற்றியினை மறுபடியும் பெற்றிருக்கின்றார். வெற்றி எப்படி என்றால், எதிர்கட்ட்சி முடக்கபட்டது. களத்தில் நின்ற ஒரே பிரபலம் புட்டின். மொத்தம் பதிவான வாக்குகளே 40% கீழ்தான். அதாவது எப்படியும் புட்டீன் தான். தோற்றாலும் அவர் எப்படியும் வந்துவிடுவார், எதற்காக ரிஸ்க்? என மக்கள் ஒதுங்கிகொண்டார்கள். ஆனால் புடீன் ஆட்சியும் மோசம் இல்லை, உலக அரங்கில் 1980க்கு பின் ரஷ்யாவினை உயர்த்தினார், ஈரான் போர் தடுக்கபட்டதும் அவராலே, சிரியா இன்னும் வீழாமல் இருப்பதும் அவராலே. […]

மலேசிய சுதந்திர தினம் : 31 ஆகஸ்ட்

நாளை மலேசிய சுதந்திர தினம்,வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட நாடு விட்டது. ஆசிய காலணிகள் எல்லாம் விடுதலைபெற்றபோது அவர்களும் பெற்றார்கள், அதாவது இரண்டாம் உலகப்போர் முடிந்து இந்தியா போன்ற யானைகளை அவிழ்த்துவிட்ட வெள்ளையன் , மலேசியா போன்ற கன்றுகுட்டிகளையும் சுதந்திரமாக விட்டான் மலேசியா வெள்ளையன் காலத்தில் தன்னை உருமாற்றிகொண்ட நாடு, வளர்ந்துகொண்டே இருந்தார்கள், இந்தியா அளவு பெரும் சுதந்திர போராட்டம் நடந்ததாக சொல்லமுடியாது, ஆனால் மலேசிய நலன்களை பெற அவர்கள் தவறியதே இல்லை, அதற்காக கட்சிகளும் சங்கங்களும் இருந்தன. […]