பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தன்னலமில்லா போராளி சே குவேரா

தன்னலமில்லா போராளி இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது, அதாவது கலைஞரின் வசனத்தில் சொல்வதென்றால் “அந்த பொதுநலத்திலே சுயநலமும் கலந்திருக்கின்றது” மறுக்க முடியாது. ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட […]

காயிதே மில்லத்

சுதந்திரத்திற்கு போராடிய பல தலைவர்களை நெல்லை கொடுத்தது, பல அற்புதமான சிந்தனையாளர்களை, தலைவர்களை நெல்லை கொடுத்தது அவர்களில் ஒருவர்தான் காயிதே மில்லத், இயற்பெயர் இஸ்மாயில், உருது சொல்லில் வழிகாட்டி என பொருள்படும் காயிதே மில்லத் எனும் பெயரில் அழைக்கபட்டார் காந்தியின் ஒத்துழையாமை இயக்கம்தான் அவரின் அரசியல் வாழ்வின் தொடக்கம், பின்பு ஜின்னாவின் கட்சியில் இருந்தார், இஸ்லாமிய உரிமைகளை காக்கும் குரலைத்தான் எழுப்பினார், ஆனால் ஜின்னா பாகிஸ்தான் கேட்கும் பொழுது காயிதே மில்லத்தின் எண்ணத்தில் மாறுதல் ஏற்பட்டது ஜின்னாவின் […]

எல்லா தலைவர்களும், எல்லா துறையினரும் கலைஞரை வாழ்த்துகின்றனர்

எல்லா தலைவர்களும், எல்லா துறையினரும் கலைஞரை வாழ்த்துகின்றனர் ஆனால் இந்த தமிழக துறையினரிடமிருந்து ஒரு சத்தமும் இல்லை, இதே கும்பல் முன்பு கலைஞர் ஆட்சியில் இருக்கும்பொழுது அவருக்கு எத்தனை விழா நடத்தியது? அடிப்படையில் கலைஞர் சினிமாக்காரர், கலைஞரின் வெற்றி ஒவ்வொரு சினிமா கலைஞனும் தன் வெற்றியாக கொண்டாட வேண்டிய வெற்றி கூத்தாடிகள் என்றும் கணிய கூட்டம் என்றழைக்கபட்ட அந்த துறையினை கலைத்துறை என மாற்றியதே கலைஞர்தான். தமிழகத்தில் அந்த துறைக்கு கலைஞரால்தான் பெரும் பெயர் கிடைத்தது சந்தேகமே […]

பீத்தோவன் என்றொரு இசைகலைஞன் இருந்தான்

உலக புகழ்பெற்ற பீத்தோவன் என்றொரு இசைகலைஞன் இருந்தான், சிம்பொனி உலகில் அவனே தலைமகன். பல சிம்பொனி இசையமைத்திருந்தான் பிரஞ்சு புரட்சி, நெப்போலியன் காலங்களில் இசையால் ஐரோப்பாவினை ஆட்டிவைத்த கலைஞன் அவன் அவனுக்கு ஒரு விபரீத நோய் தாக்கியது, ஆம் அவனின் இசையினை அவனாலே கேட்கமுடியாமல் போனது, குறிப்புகளை உருவாக்கி இசைப்பான், அது அழகான இசையாகும் ஒரு சிம்பொனியினை அவன் இசைத்தபொழுது கூட்டம் கைதட்டி ஆர்பரித்தது, பெரும் ஆரவாரம். அவனால் பார்க்க முடிந்ததே அன்றி, அவனால் கேட்க முடியவில்லை […]

சிறியன சிந்தியாத நேரு

சிறியன சிந்தியாத நேரு அவர் பெரும் பணக்கார குடும்பத்தின் வாரிசு, உயர் கல்வியும், படோகரமான வாழ்வும் என அவர் வாழ்ந்த விதம் எந்த அரசனுக்கும் குறைவானதல்ல, ஆனால் ஜாலியன் வாலாபாக் படுகொலையும், காந்தியின் ஈர்ப்பும் அவரை போராட்ட களத்திற்கு இழுத்துவந்தன. 9 ஆண்டுகள் சிறைவாசம் ( காமாரஜர் நேரு போன்றவர்கள் எல்லாம் சிறையில் இருந்தவர்கள், யாரேனும் “பாம்புகள் பல்லிகள் நடுவினிலே” என பாடியிருப்பார்கள்), சொந்த பேரனை கூட முதல் முறையாக,சாலையோரத்தில் கூட்டத்தில் ஒருகைகுழந்தையாக காவல்துறை வேனில் இருந்து […]

பன்மொழி புலவர் க.அப்பாத்துரை

கடந்த நூற்றாண்டில் தமிழுக்கு பாடுபட்டது பலர், ஏராளமானோர் உண்டு மறைமலை அடிகள், உ.வேசா என வரிசை பெரிது தமிழனின் ஆராய்ச்சிக்கும் பாடுபட்டவர் பலர், தமிழனின் பழமை என்ன? மற்ற மொழிகளில் தமிழின் தொடர்பு என்ன? மற்ற கலாச்சாரங்களுடன் தமிழ் கலாச்சாரம் எப்படி ஒத்துவருகின்றது?, தமிழன் எப்படி மூத்தகுடி? அவன் எங்கிருந்திருக்கலாம் என ஆராய்ச்சி செய்தவர் வெகு சிலர் அவர்கள் தான் கடல்கொண்ட தென்னாடு, கபாட புரம் என ஆராய்ச்சியினை செய்தனர், பலமொழிகள் கற்று எல்லா மொழிகளிலும் ஆதாரம் […]

அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ்

உலகத்தை புரட்டி போட்டவர்களில் அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ், உலகம் கண்ட வரலாற்று மனிதர்களில் அவருக்கான இடம் எக்காலமும் அழியாதது அவர் ஒரு யூதர், இயேசு நாதரின் உறவு வம்சமோ என்னமோ, தன்னலம் மறந்து மற்றவர்களுக்காக கவலைபட்ட யூதர், யூதருக்கே உரிய அறிவு அவரிடமும் இருந்தது, மிக சிறந்த அறிவாளி அதனை விட முக்கியம் அவரின் எழுத்துக்கள் அவரின் பட்டமும், பதவியும், அறிவும், வாதமும் அவருக்கு பெரும் புகழை கொடுத்தன, வாதத்தில் அன்று அவரை வெல்வார் யாருமில்லை […]

இன்று திப்பு சுல்தானின் நினைவுநாள்

இன்று திப்பு சுல்தானின் நினைவு நாள். இந்தியாவில் முதன் முதலில் பிரிட்டிசார் முடிசூட்டிகொண்ட இடம் கல்கத்தா, அங்கிருந்தேதான் படை நகர்த்தலை தொடங்கினார்கள். எந்த இடத்திலும் அவர்கள் பெரிதாக திணறியதாக சரித்திரம் இல்லை, அசால்ட்டாக அடித்துவிட்டு, முன்னேறிகொண்டிருந்தார்கள், வடக்கே பெரும் எதிர்ப்புகள் அவர்களுக்கு அன்று இல்லை. அடிக்கவேண்டும், மிரட்டவேண்டும் அல்லது லஞ்சம் கொடுக்கவேண்டும் அவ்வளவுதான், கம்பெனி கொடி பறக்கும். இந்தியாவில் அவர்கள் சந்தித்த ஒரு பெரும் சவால் மாவீரன் ஹைதர் அலியும், அவரின் மகன் மைசூர் சிங்கம் திப்புசுல்தானும், […]

முப்பாட்டன் உ.வே.சாமிநாதய்யர்

முப்பாட்டன் உ.வே.சாமிநாதய்யர். பொதுவாக தமிழக ஓட்டுபொறுக்கும் அரசியல்வாதிகளால் ஒரு பலமான கருத்து பரப்பபடும், கடந்த 60 ஆண்டுகால அரசியலில் அது பெரும் கோஷம். எல்லோருக்கும் தெரிந்ததுதான், பிராமணர்கள் தமிழர்களின் எதிரிகள். பிராமணர்கள தமிழை அழிக்கநினைப்பார்கள். தமிழ் வாழ்க, பிராமணன் ஒழிக. தமிழ் என்ற வார்த்தை தமிழர்,திராவிடர் என்றெல்லாம் மாறி ஒலிக்கும். இப்படிஎல்லாம் கோஷம் எழுப்புபவர்கள் தமிழுக்கு என்ன செய்தார்கள் என நாம் கேட்க கூடாது, கேட்டால் கல்தோன்றி என தொடங்கி, பாவேந்தர் பாடலில் வந்து ஈழம் சென்று […]

தியாராய செட்டி (எ) பிட்டி தியாகராயர்

தமிழகத்தில் திராவிட குரல்கள் முதலில் 1900களிலே கேட்க தொடங்கின, அது பிரமணர் அல்லாதோர் சங்கம் என்றே தொடங்கபட்டது, அதில் பல சிந்தனையாளர்கள் இருந்தனர், பின் அது நீதிகட்சி என பயணித்தது அந்த நீதிகட்சியினை அக்காலத்தில் தொடங்கியர்களில் ஒருவர்தான் தியாராய செட்டி அல்லது பிட்டி தியாகராயர், வழக்கறிஞர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர். நடேச முதலியார், டி.எம் நாயர் ஆகியோருடன் சேர்ந்து 1916ல் நீதிகட்சியினை தொடங்கினார் மற்ற சாதி மக்களின் உரிமைகளுக்காக முதலில் குரல் கொடுத்தது நீதிகட்சிதான், அது […]