பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழகத்து ஐன்ஸ்டீன் ராமானுஜம்

தமிழகத்து ஐன்ஸ்டீன் கணிதம் எல்லோருக்கும் புரியாது, அதற்கொரு ஞானமும் வரமும் வேண்டும், இன்னும் சாதிக்க வேண்டுமென்றால் தனி திறமை வேண்டும், இவை எல்லாம் அமைந்து உலகில் ஆரியபட்டர், பாஸ்கரருக்கு பின் இந்தியரின் மதிப்பினை உயர்த்தியவர் ராமானுஜம். அவர் காலத்தில் கணித உலகில் சிலர் தத்தி நடை பழகி கொண்டிருந்த பொழுது, அவர் ஒலிம்பிக்கில் ஓடி கொண்டிருந்தார், சில நடிகர்கள் வாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் பொழுதே அவர் ஆஸ்கார் அவார்டுகளை குவித்தது போன்றது ராமானுஜரின் சாதனைகள். ஏழை குடும்பம், கணிதம் […]

புரட்சித்தலைவன் விளாடிமிர் லெனின்

 தோற்றம் : 22-04-1870 :: மறைவு : 21-01-1924 மானிட வராலாற்றில் மக்களே அரசர்களை ஒழிக்கமுடியும் என முதன் முதலில் உலகிற்கு அறைந்து சொல்லிகொடுத்த ஒப்பற்ற தலைவனின் பிறந்த நாள் இன்று பல்லாயிரம் ஆண்டாக தொடர்ந்த அந்த மானிட வரலாற்றினை, அரசர்கள் மட்டுமே ஆளதெரிந்தவர்கள் என்ற பொய்யினை அவன் தான் உடைத்தெறிந்தான் விளாடிமிர் லெனினின் பிறந்தநாள் இன்று, அவன் தான் வரலாற்றாளன், புரட்சியின் தலைமகன் ரஷ்யா ஜார் மன்னர்களின் ஆட்சி அப்படி கொடுமையாய் இருந்தது, பொறுத்துகொண்டிருக்க அவர்கள் […]

அடால்ப் ஹிட்லர்

இந்த நூற்றாண்டின் ஹீரோ மற்றும் வில்லன் யாரென கேட்டால் கண்களை மூடிகொண்டு சொல்லலாம் அவன் அடால்ப் ஹிட்லர் இந்த உலகம் கடந்த 50 ஆண்டுகளில் இவ்வளவு வளர்ச்சிபெற்றிருக்கின்றது என்றால் அதன் மூலகாரணம் அவனே சாதரண சிப்பாய், நல்ல ஓவியனும் கூட முதல் உலகப்போர் ஏன் ஏற்பட்டது என கண் கூடாக கண்டவன், அதாவது கிட்டதட்ட எல்லா ஐரோப்பிய நாடுகளுக்கும் அன்று காலணிகள் இருந்தன ஜெர்மனிக்கு இல்லை வல்லரசு என்றால் வியாபாரம் தான் அடிப்படை, ஜெர்மன் அம்மாதிரியான வியாபாரத்திற்கு […]

லியானர்டோ டா வின்சி பிறந்த நாள்

லியானர்டோ டா வின்சி :  தோற்றம் : 15-04-1452 ::  மறைவு : 02-05-1519 உலகில் எத்தனையோ கலைஞர்கள் வந்தார்கள், தங்கள் கலையில் மட்டும் மிக சரியாக முத்திரை பதித்தார்கள், வெகு சிலரே பல பல கலைகளில் வித்வான்களாக இருந்தனர் அவற்றில் ஒருவர்தான் லியானர்டோ டா வின்சி மனிதர் அப்படி ஒரு வித்தகர், ஒவியம், சிற்பம், கட்டடம், உடற்கூறியல், வானியல் என எல்லா விஷயங்களிலும் பின்னி எடுத்தார் கல்லறை பிணங்களை தோண்டி எடுத்து உடல் கூறியல் மருத்துவம் […]

சுந்தரம்பிள்ளையின் பிறந்தநாள்

அவர் பெயர் சுந்தரம் பிள்ளை, 1855ல் பிறந்தார். கேரளாவில் பிறந்த தமிழர், தமிழை கசடற கற்றவர், பல பட்டங்களை பெற்றவர், பின் நெல்லை கல்லூரி ஒன்றில் பேராசிரியரானார் அக்கல்லூரி பின் இந்து கல்லூரி ஆயிற்று, இன்றும் அக்கல்லூரி நெல்லையில் உண்டு. அதன் பின் திருவனந்தபுரம் கல்லூரியில் தத்துவயியல் ஆசிரியரானார், திறமையானவர் என்பதால் பிரிட்டிஷ் அரசின் பல பட்டங்கள், ராவ் பகதூர் பட்டம் வரை வாங்கினார், திருவிதாங்கூர் அரண்மனை திவானாகவும் இருந்தார் பல படிப்புகள் படித்திருந்தாலும், கல்வெட்டு ஆராய்ச்சிகளில் […]

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் : பிறந்த நாள் இன்று….

 Born: 14 March 1879, Ulm, Germany Died: 18 April 1955, Princeton, New Jersey, United States கடந்த நூற்றாண்டை புரட்டிபோட்ட விஞ்ஞானிகளில் முதன்மையானவர் ஐன்ஸ்டீன் மற்ற விஞ்ஞானிகளை விட இவர் மகா வித்தியாசமானவர், அதாவது விஞ்ஞானிகள் என்றால் ஆய்வகத்தில் அமர்ந்திருக்கவேண்டும் , ஒரு மாதிரி தாடி வைத்திருக்கவேண்டும், எப்பொழுதும் சீரியசாக இருக்கவேண்டும், பிப்பெட் குழாய், வேதிபொருள் அல்லது உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜிஆர் போல இருட்டுக்குள் வியர்வை வழிய வழிய ஏதோ கிறுக்கி […]

ஜாம்ஷெட்ஜி டாடா

தோற்றம் : 3 – 03 – 1839  ::   மறைவு : 19 – 05 – 1904 இந்தியா சாமியார்களின் தேசம், ஒருகாலமும் அங்கு தொழில்துறை மலராது, அவர்களால் அறிவியல் தொழில்களை செய்ய முடியாது என சொல்லிகொண்டிருந்த ஐரோப்பாவிற்கு இந்தியர்களாலும் நவீன தொழில்களை நடத்தமுடியும் என முதன் முதலில் செய்துகாட்டியவர் ஜாம்ஷெட்ஜி டாடா இந்தியாவில் கனரக தொழில் முதல் பல நவீன தொழில்களை முதன் முதலில் தொடங்கியவர் உலக அளவில் இந்தியாவிலும் சிறந்த தொழில் நிறுணங்கள் உண்டு […]

அறிஞர் அண்ணா நினைவு தினம்

  பன்னீர் செல்வம் முதல்வராகவும் , சசிகலா பவுடர் பூசிகொண்டு அடுத்த முதல்வராக தயாராகிகொண்டிருப்பதும் அண்ணாவின் சாதனைகளில் ஒன்று என்பதுதான் இன்றைய அவரின் நினைவு நாளில் கண்முன் நிற்கின்றது. சினிமாவினை அரசியலில் கலக்கவிட்ட அவரின் பெரும் தவறுதான் இன்று தமிழகத்தை சீரழித்து நிற்கின்றது ஆனாலும் அந்த நாளை நினைத்து பார்க்கும்பொழுது கலைஞர் கண்முன் வருகின்றார் அப்பொழுது அவருக்கு 45 வயதுதான், கட்சியில் அவருக்கு முன் பெரும் வரிசை இருந்தது, சீனியாரிட்டிபடி முதல்வராவது என்றால் இன்றும் கலைஞர் தலைவராக […]

விடை பெற்றார் ஒபாமா..

    விடைபெற்றார் ஒபாமா அந்த அமெரிக்காவில் கருப்பர்கள் மனிதர்கள் என்பதற்காக ஆபிரஹாம் லிங்கனையும், கருப்பர்களுக்கு உரிமை வேண்டும் என்பதற்காக மார்ட்டின் லூத்தர் கிங்கினையும் சுட்டு கொன்ற அமெரிக்காவின் முதன் கருப்பு அதிபர் அந்த பெரும் பெருமையினை பெற்றவர் ஒபாமா தனது எட்டு ஆண்டு கால ஆட்சியில் அவர் நன்றாகத்தான் ஆண்டார், அமெரிக்க மக்களுக்கு பெரும் குறையில்லை, ஒபாமா கேர் என இன்சூரன்ஸ் திட்டங்களை கொண்டுவந்தார் பொதுவாக அமெரிக்க அதிபர் பதவி என்பது உலக நாட்டாமை பதவி, […]

நாளை எம்ஜிஆர் பிறந்த நாள் !

நாளை எம்ஜிஆர் பிறந்த நாளை கொண்டாடுபவனே உண்மையான “தமிழின துரோகி” தமிழகத்திற்கு எம்ஜிஆர் ஆற்றியிருக்கும் துரோகம் அப்படியானது, மக்கள் தனக்கு தந்த மகுடத்தில் ஜெயாவிற்கு அறிந்தே பங்குகொடுத்தது அவர். ஜெயாவின் குணம் அறிந்தும், பிடிவாதம் அறிந்தும், ஜெயாவினை கட்சியில் விட்டு தீரா தமிழக சாபத்தை உண்டாக்கியவர் அவர். அந்த பங்குதான் இன்று சசிகலா,பன்னீர் என வந்து நிற்கின்றது தமிழகம் அடிமை மாநிலம் ஆக முதல் காரணகர்த்தா இவரே.. தமிழனின் சகல உரிமைகளும் பறிபோக பார்த்துகொண்டிருந்ததும் , ஒன்றையும் […]