பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பேராசிரியை நிர்மலாதேவியிடம் மூன்றரை மணி நேரம் குரல் பரிசோதனை

பேராசிரியை நிர்மலாதேவியிடம் மூன்றரை மணி நேரம் குரல் பரிசோதனை எந்த பிரபலத்திற்காக அம்மாணவியரை மூளை சலைவை செய்தார் என்ற விசாரணையினை நடத்துங்கள் என்றால் குரல் அவருடையதா? என விசாரிக்கின்றார்களாம் குரல் அவருடையது என தெரியாமலா கைது செய்து அடைத்தார்கள்? இதனிடையே ஆளுநரும் ஒரு கமிஷன் போட்டு விசாரித்து அந்த அறிக்கையினை அவரே வாங்கியும் கொண்டார் அந்த அறிக்கையும் வராது, நிர்மலா யாருக்காக இந்த அந்தபுர தோழி வேலைபார்த்தார் என்ற தகவலும் வெளிவராது வரும் செய்தி எல்லாம் இவர்தான் […]

விஷயம் வள்ளியூர் பகுதியில் சர்ச்சையாகின்றது

வள்ளியூரில் இருசக்கர வாகனத்தில் வந்திருக்கின்றார் விவசாயி, காவலர் அவர் குடித்திருக்கின்றாரா என சோதித்திருக்கின்றனர். இதில் ஏதோ சர்ச்சை நடந்த அவமானத்தில் அவர் நான் குடிக்கவில்லை பூச்சிகொல்லி மருந்து வாங்கவே வந்தேன் என அதனை எடுத்து காட்டி குடித்தும் விட்டார் குடிக்காதவரை குடித்ததாக போலிசார் அடித்ததில் அவர் பூச்சிமருந்தை குடித்துவிட்டு இறந்திருக்கின்றார் என்ற சர்ச்சை வலுக்கின்றது அதுவும் போலிசார் முன்னிலையிலே குடித்திருக்கின்றார், அவர்களும் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றார்கள், ஆபத்தான நிலையில் அவர் மேல் மருத்துவனைக்கு கொண்டுசெல்லபட்டு இறந்திருக்கின்றார் […]

பாபு ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நேற்று முளைத்த காளானான நயன் தாராவிற்கு சங்கம் தொடங்கி, குஷ்பு சங்கம் எனும் ஆலமரத்தோடு மோதி தோற்றுவிட்டு ஆஸ்திரேலியாவிற்கே ஓடிவிட்ட Babu Rao என்பவருக்கு இன்று பிறந்த நாள் நயன் பக்தி தவிர அவரிடம் ஒரு குறையும் காணமுடியாது. மிக அருமையான நண்பர். நயந்தாராவும் காதலும் போல, நண்பரும் ஆசிர்வாதங்களும் இணைந்து வாழ வாழ்த்துவோம்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்….

பெரியவர் Ramamoorthy Vanamamalai Nanguneri அவர்களுக்கு இன்று பிறந்தநாள் முகநூலில் எமக்கு நண்பர்கள் பல உண்டு எனினும், நம் மீது தனி நட்பு கொண்டவர் இந்த பெரியவர். எம் பதிவுகளை நான் ஒரு பொருட்டாக எடுத்துகொள்வது கிடையாது, மனதில் தோன்றுவதை எழுதி வைத்துவிட்டால் மறுபடி வாசிப்பது கூட இல்லை நம் பதிவுகள் எல்லாம் குப்பை என்ற நம்பிக்கை எப்பொழுதும் உண்டு நேரமின்மை, அவசரமாக பதிவிட்டுவிட்டு வேறுவேலைகளுக்கு செல்லுதல், இதனை பாதுகாத்து என்ன ஆக போகின்றது எனும் அலட்சியம் என பல […]

நெல்லை டூ நாகர்கோவிலுக்கு நடத்துனர் இல்லாத பேருந்து அறிமுகம் : செய்தி

இந்த விஜய் ரசிகர்கள் அளவிற்கு எச்.ராசா கூட பெரியாரை கேவல படுத்தியதில்லை   நெல்லை டூ நாகர்கோவிலுக்கு நடத்துனர் இல்லாத பேருந்து அறிமுகம் : செய்தி அங்கே எல்லா பேருந்தும் ஏறும்படி இல்லாமல், சில பஸ்கள் சீட் இல்லாமல் , கண்ணாடி இல்லாமல், சிலது கூரையே இல்லாமலும் ஓடிகொண்டிருக்கின்றது இதில் இனி நடத்துனரும் இருக்கமாட்டார் என்பதில் என்ன ஆச்சரியம் சென்னையில் வழிப்பறி சம்பங்கள் கட்டுகடங்காமல் செல்கின்றன என்பது அச்சமூட்டும் விஷயம், உளவுதுறையின் மாபெரும் தோல்வி இது சில […]

ஒரு தேவதை பெயர் கூகிள், இன்னொரு தேவதை பெயர் யூடியூப்

பச்சிளங்குழந்தையினை பராமரிப்பது எப்படி என்பதை இரு தேவதைகள் விளக்கி கொண்டிருக்கின்றார்கள், இப்போதைக்கு சங்கம் அவர்களின் பாதார விந்தங்களில்தான் விழுந்து கிடக்கின்றது ஒரு தேவதை பெயர் கூகிள், இன்னொரு தேவதை பெயர் யூடியூப் தவம் எல்லாம் இருக்க வேண்டியதில்லை, பட்டனை தட்டினால் வந்து நிற்கின்றார்கள், அவ்வளவு நல்லவர்கள் எது பற்றி கேட்டாலும் இருவரிடமும் பதில் இருக்கின்றது பெரியவர்களை அனுபவசாலிகள் என உலகம் சொல்லும், ஆயிரம் பேரின் அனுபவத்தை கவனித்து கருத்துக்களை சொல்பவன் ஞானி எனப்படுவான் ஞானிகளுக்கும் ஞானியாக பல்லாயிரகணக்கான […]

மிஷலுக்கு தம்பி பிறந்திருக்கின்றான்

மிஷலுக்கு தம்பி பிறந்திருக்கின்றான் ,  அமாவாசையில் ஒரு முழுநிலவு உதித்திருக்கின்றது. தாயும் சேயும் நலம் புனித அந்தோணியாரின் நாள் அன்று அவரை தவிர ஏதும் அறியா பக்தனுக்கு அவர் நற்செய்தியும் பெரும் வரமும் கொடுத்திருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல, அவர் அப்படித்தான் “நன்மை செய்யும் மனம் கொண்டது,  நன்றி எனும் குணம் கொண்டது எங்கள் இல்லம் என்னும் பெயரை கண்ணன் வளர்ப்பான்” என்ற கவியரசரின் வரிகளோடு அவனை நோக்கி கொண்டிருக்கின்றேன்

முகநூல் மணிமேகலை Devi Somasundaram-க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நிச்சயமாக அவர் திராவிட அரக்கி. உண்மையான திராவிட கொள்கை என்றால் என்ன என்பதை அவரை தவிர யாரிடமும் படிக்க முடியாது மிக தெளிவான கருத்துக்கள், தெளிந்த நியாயங்கள், குழப்பமில்லா விவாதங்கள், ஆணித்தரமான எடுத்துகாட்டுக்கள் என அவரின் பதிவுகள் சுவாரஸ்யமானவை கொஞ்ச நேரம் பேசினால் நம்மையும் பெரியாரிஸ்ட் ஆக்கிவிடுவார் என்ற பயத்தில் அவரிடம் அதிகம் பேசுவதில்லை. சில நேரம் அந்த ஐடி பெரியாரின் உண்மை தொண்டனான ஆனைமுத்து ஐயாவின் மறைமுக ஐடியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் இருந்ததுண்டு ஆனால் […]

நிபா எனும் வைரஸ்

இந்த நிபா எனும் வைரஸ் கேரளாவில் பரவ ஆரம்பித்து சிலரை கொன்ற விஷயம் உலக அளவில் எதிரொலிக்க ஆரம்பித்தாயிற்று, இவ்வகை காய்ச்சலுக்கு மருந்து இன்னும் இல்லை என்பதுதான் பதற்றத்திற்கு காரணம் பல நாடுகள் கொச்சிக்கு விமானம் அனுப்புவதை தடுக்கலாமா? கொச்சி கப்பல்களை அவசரமாக கிளப்பலாமா என யோசிக்கின்றன‌ இந்த நிபா என்பது வவ்வால்களிடமிருந்து பரவும் வைரஸ். அதற்காக வவ்வால் வந்து ஒவ்வொருவருக்கும் பரப்பாது. எங்கோ உருவாகும் கிருமிகள் சில மனிதர்களிடம் விஸ்வரூபமெடுத்து கொலையாளி ஆகின்றன‌ வவ்வால்கள் எச்சில்படிந்த […]

பெரியம்மை (small pox) , சின்னம்மை (chicken pox)

பெரியம்மை (small pox) , சின்னம்மை (chicken pox) என பல நோய்கள் அக்கால உலகில் இருந்தது. இன்று மத ,சாதி கலவரங்களுக்கு இருக்கும் பயம் அன்று அந்த நோய்க்கு இருந்தது வந்துவிட்டால் சில விக்கெட்டுகளை அல்ல, சுனாமி போல வாரி சுருட்டிவிட்டு செல்லும் இந்நோய்க்கு பின்னர் மருந்து கண்டுபிடிக்கபட்டது, இதே நாளில் கண்டுபிடிக்கபட்டதால் இந்நாள் பெரியம்மை எதிர்ப்பு நாளாக கருதபடுகின்றது மருந்து கண்டுபிடித்தவர் எட்வர்ட் ஜென்னர் என்பவர், அதன் பின் யாரும் அந்நோயால் சாகவில்லை. ஆனால் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications