பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திராவிட குரல் செல்வனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

அக்கால கட்டத்தில் அப்படி ஒரு குரலை தேடிகொண்டிருந்தார்கள், சீர்காழி போல வெண்கல குரலும் அல்லாமல், ஸ்ரீனிவாஸ் போல புல்லாங்குழல் குரலும் அல்லாமல் இடைபட்ட குரலை தேடிகொண்டிருந்தார்கள் அக்காலம் ராமசந்திரன், சிவாஜி கணேசன் போன்றோர் உச்சத்தில் இருந்தாலும் சில இளைஞர்கள் வந்துகொண்டிருந்த காலமது, அவர்களுக்காக தேடிகொண்டிருந்தார்கள். அப்பக்கமோ அந்த இளைஞன் பொறியில் படிப்பினை பாதியில் விட்டுவிட்டு பட்டபடிப்பில் ஓப்பேற்றிகொண்டே இசைகுழுக்களில் பாடிகொண்டிருந்தான். மிக திறமையான பாடகன் அன்றே சுசீலாவோடு சில மேடைகளில் பாடும் அளவு திறமை இருந்தது திரையுலகின் […]

காலா நிச்சயம் ஓடாது என்பது வேறு விஷயம்….

ரஜினியினை நிலை குலைய வைக்க வேண்டும், அவர் அரசியல் பக்கமே வராமல் அடித்துவிரட்ட வேண்டும் என்றொரு கும்பல் கிளம்பி இருப்பது தெரிகின்றது கன்னடத்தில் காலா படத்திற்கு வரவேற்பு இருந்தால்தான் ஆபத்து, கன்னடர்கள் எதிர்ப்பது நல்ல விஷயம். அப்படியே அங்கிருந்து இங்கு வந்த எல்லா நடிகர்களையும் விரட்டி வாட்டாள் நாகராஜ் கழுத்தை பிடியுங்கள் என அனுப்பினால் விஷயம் தீரும் ஆனால் வெளிநாட்டில் ரஜினி படத்திற்கு தடை என சில கிளம்பி இருகின்றன, யாரென்று பார்த்தால் ஈழதமிழர்கள் அதாவது ரஜினி […]

இங்கிவளை யாம் பெறவே என்ன தவம் செய்தோமோ…

ஒலிம்பிக் சின்னத்தில் 5 கண்டங்களை இணைக்கும் விதமாக 5 வளையங்கள் இருக்கும் அப்படி ஆசியா, ஐரோப்பா எனும் இரு கண்டங்கள் என்னால் இணைகின்றன என்பதை தலையில் இரு வளையங்களுடன் ஐரோப்பாவில் தலைவி குறிப்பாக உணர்த்திய தருணம் இங்கிவளை யாம் பெறவே என்ன தவம் செய்துவிட்டது சங்கம்  

புரட்சி வசனங்களை அணல் தெறிக்க பேசுகின்றார் தலைவி

கலைஞரின் பிறந்தநாளையொட்டி சிறப்பு திரைப்படங்களில் பொன்னார் சங்கர் ஓடிகொண்டிருக்கின்றது அற்புதமான படம், மாபெரும் வெற்றியினை அது பெறாமல் போனதில் தியாகராஜனுக்கும் அவர் மகனுக்கும் மட்டுமே பங்கு, வேறு எல்லாம் கிளாசிக் வகை படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விஷயம் தலைவி குஷ்பு, அந்த தாமரை பாத்திரத்தில் அப்படி ஜொலித்திருந்தார் அரசிக்கு ஏற்ற கம்பீரம், கலையாடும் முகம், ராணி முகத்திற்கேற்ற கருணையான பாவம் அட அட அட அக்கால மங்கம்மா, ருத்திரமா எல்லாரும் இப்படித்தான் இருந்திருப்பர் என சொல்ல வைக்கும் […]

சங்கம் அதன் கடமையில் இருந்து தவறுவதே இல்லை

ஐரோப்பிய சுற்றுபயணத்தில் இருக்கும் தலைவியின் சார்பாக தமிழக தலைமகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சங்கம் அதன் கடமையில் இருந்து தவறுவதே இல்லை தலைவி சார்பாக சங்கம் தன் மனபூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துகொள்வதில் பெருமை அடைகின்றது

மணிரத்னத்திற்கு இன்று பிறந்த நாள், அவருக்கு வாழ்த்துக்கள்

சினிமாவின் வெற்றி என்பது கதை சொல்லும் விதத்தில் இருக்கின்றது, பார்வையாளனை அப்படியே 2.5 மணிநேரம் கட்டி போடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல, அவ்வளவு சுவாரஸ்யமாக கொண்டு செல்ல வேண்டும் , ரசிகனை ஒன்ற வைக்க வேண்டும் படம் முடியும்பொழுது சோகமோ ஆனந்தமோ சில சொட்டு கண்ணீர் வரவேண்டும், மனம் கனக்க வேண்டும். அப்படிபட்ட படம்தான் வெல்லும் படத்திற்கு இயக்குநர்தான் எல்லாம் என்பதால் அவர் நிரம்ப படித்தவராக, மிக பெரும் கலை உள்ளம் கொண்டவாரக இருத்தல் வேண்டும், […]

அக்குடும்பம் ஒரு இசைகுடும்பம்

இளையராஜாவின் பிறந்தநாளில் டிவி முதல் ரேடியோ வரை அவரின் பாடல்களே ஓடுகின்றன, அற்புதமான பாடல்கள் இளையராஜா பற்றி குறிப்பிடும்பொழுது அவரின் சகோதர் கங்கை அமரனை குறிப்பிடாமல் இருக்க முடியாது, நிச்சயம் இளையராஜாவில் அவர் பாதி அவரில்லாமல் இளையராஜா முழுமை அடைய முடியாது, ஆனால் சூரிய வெளிச்சத்தில் நிலா தெரியாது என்பது போல கங்கை அமரன் வெளிச்சம் பெறவில்லை வரதராஜன், பாஸ்கர் போன்ற மற்ற சகோதரர்களும் இசைகலைஞர்கள் ஆனால் பெரிதும் வெளிதெரியவில்லை (இளையராஜாவின் சரிவு கங்கை அமரன் பிரிந்தபின்னே […]

இளைய ராஜா 75

1970கள் வரை தமிழக இசை குறிப்பாக திரைஇசை கர்நாடக சங்கீதத்திலேதான் சிக்கி இருந்தது, அதாவது கர்நாடக இசைவடிவிலேதான் பாடல்களும்,பிண்ணனி இசை எல்லாமே அமைந்திருக்கும், தவறென்று சொல்லுவதற்கில்லை. காரணம் இசை என்பது இப்படித்தான் இருக்கவேண்டும் என்பது அக்காலம் வகுத்திருந்த விதி. 1975களில் இந்திதிணிப்பு தமிழகத்தில் தடுக்கபட்டிருந்தாலும், இந்திபாடல்கள் தாக்கம் ஆரம்பமானது, பெரியாரும் இல்லை,அண்ணாவுமில்லை. இந்தியை எதிர்த்தார்களே தவிர, இந்தி இசை வரவேற்பினை பெற்றகாலம். அப்பொழுதுதான் மக்களின் இசையாக, தமிழரின் ஆதி இசையின் பிரதிபலிப்பாக, உண்மையான கிராமத்து பண்ணாக அறிமுகமானார் […]

சேலைகட்டிய மோனலிசா

சேலைகட்டிய மோனலிசா இப்படித்தான் இருந்திருப்பாள் என பிரான்ஸ் உறுதிபடுத்திகொள்கின்றது ஷேக்ஸ்பியர் கண்ட டெஸ்டிமோனா இப்படித்தான் இருந்திருப்பாள் என ஐரோப்பா கண்ணால் கண்டு ஆச்சரியபட்டு கொண்டிருக்கின்றது… மானிட சாதியின் மாபெரும் கவுரவம் தலைவி…      

வையகத்து வைரச்சிலையே வாழ்க…

பிரான்சின் வெறும் கண்ணாடி மாளிகை முன் இந்தியாவின் முழு வைரசிலை கோஹினூர் வைரத்தைவிடவும் மிக பெரும் வைரம் இந்தியாவில் இருந்திருக்கின்றது என்பதை பிரான்ஸ் இப்பொழுதுதான் உணர்ந்திருக்கின்றது அச்சிலை முன் , அவர்களின் புகழ்பெற்ற கண்ணாடி மாளிகையின் பெருமை அவர்கள் மனதளவில் நொறுங்கிவிட்டது வையகத்து வைரச்சிலை வாழ்க…  

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications