பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கலைஞர் நிச்சயம் ராஜமவுலிக்கு வழிகாட்டி

இன்று தொழில்நுட்பம் பெரிதாக‌ வளர்ந்திருக்கின்றது, கேமரா முதல் கிராபிக்ஸ் வரையில் வித்தை காட்ட முடிகின்றது , எந்த புத்தகம் ஆனாலும், எந்த விஷயமானாலும் கணிபொறியின் முன் அமர்ந்துவிடுகின்றது சினிமாவினை தொழில்நுட்பத்திலே முடித்துவிடலாம்.. ஆனால் அன்று அப்படி அல்ல, புத்தகங்கள் குறைவு, தொழில்நுட்பமும் இல்லை, காட்சி அமைப்பும் பிரமாதம் இல்லை, படம் என்பது வசனங்களிலே உணர்ச்சி ஊட்டபடவேண்டும் எனும் நிலை எல்லா வித்தைகளையும் “வசனதமிழ்” என்றொரு ஒரு விஷயத்தில் அடக்கி அப்படங்களை வெற்றிபடங்களாக்கிய கலைஞரின் நினைவு இந்த பாகுபலி […]

விணுசக்கரவர்த்தி : நல்ல கலைஞனுக்கு மகத்தான அஞ்சலி..

1980களின் மிக சிறந்த இயக்குநரும், கதாசிரியரும், அதன் பின் 2016 வரை எல்லா பாத்திரங்களிலும் நடிப்பில் ஜொலித்தவருமான விணுசக்கரவர்த்தி காலமாகிவிட்டார் சட்டை இல்லா உடலில் சந்தணம் பூசிகொண்டு வரும் நாட்டாமை பாத்திரம் முதல், அட்டகாசமான மீசையோடு வந்த கமிஷணர் வேடம் வரை அவரை மறக்கமுடியாது இன்னொருகோணத்தில் பார்த்தால் ரஜினிகாந்தோடு இணைந்து பயணித்த நடிகர், 1980களில் இருந்து அவரோடு நடித்தவர், ரஜினியின் சிவாஜி படத்திலும் அவர் இருந்தார், பின் தூக்கபட்டார் ரஜினியின் பெரும் வெற்றிபடங்களில் இவரின் பங்களிப்பும் இருந்தது.. […]

திரையுலகினர் வேலைநிறுத்த்த‌ போராட்டம் : விஷால் அறிவிப்பு

திருட்டு விசிடியினை ஒழிக்காவிட்டால் மே 30முதல் திரையுலகினர் வேலைநிறுத்த்த‌ போராட்டம் : விஷால் அறிவிப்பு அந்த வேலையினை ஒரேடியாக நிறுத்தி தொலைந்தால் என்ன?, ஏன் போராட்டத்திற்கு மட்டும் வேலையினை நிறுத்தவேண்டும் மிஸ்டர் விஷால், கமலஹாசன் இப்பொழுதெல்ல்லாம் உங்கள் அருகிலேதானே இருக்கின்றார், திருட்டு விசிடி சவாலை எதிர்கொள்ள அவரிடம் இல்லாத ஐடியாக்களா? அந்த அனுபவத்தை கொஞ்சம் கேட்டால்தான் என்ன? நீங்கள் கேட்கவே மாட்டீர்கள், கேட்டால் உங்கள் கெத்து என்னாகும்?, எப்படியும் போகட்டும்.. இந்த திருட்டுவிசிடி செய்யும் வேலையினைத்தான் ஜெராக்ஸ் […]

ஹாஜி மஸ்தான் பாத்திரத்தில் ரஜினி நடிக்கின்றார் : செய்தி

மும்பை தாதா ஹாஜி மஸ்தான் பாத்திரத்தில் ரஜினி நடிக்கின்றார் : செய்தி ரஜினியினை அந்த மஸ்தான் வேடத்தில் நடிக்க சிவசேனா + பாஜக கும்பல்கள் விடுமா? அதனை மீறி நடிக்கும் அளவிற்கு ரஜினிகாந்த் அவ்வளவு தைரியசாலியா? முன்பே திப்புசுல்தான் வேட சர்ச்சையில் ரஜினி தப்பிஓடிய வரலாறு உண்டு.. இப்பொழுது யாரேனும் ஒரு காவி உறுமினாலே ரஜினி ஓடிவிடமாட்டாரா?

ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போதும், நான்கு ஹீரோக்கள் எதற்கு??” : ஜோதிகா கேள்வி

“சினிமாவில் இயக்குநர்கள் ஒரு ஹீரோவுக்கு நான்கு ஹீரோயின்கள் வைத்தால் நான்கு காதலிகள் வைத்துக் கொள்வதில் தவறு இல்லை என்று இளைஞர்கள் நினைப்பார்கள். ஒரு ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் போதும், நான்கு ஹீரோக்கள் எதற்கு??” : ஜோதிகா கேள்வி அம்மணி ஏதோ ஒரு சில சூர்யா படங்களால் பாதிக்கபட்டிருப்பது தெரிகின்றது, சிங்கம் வரிசை படமாக இருக்கலாமோ? நேரடியாக கணவனிடம் கேட்க முடியாத விஷயங்களை, இயக்குனர்களிடம் கேட்டு கோபத்தை குறைத்திருக்கலாம் 🙂 என்ன இருந்தாலும் தமிழகத்து மருமகள் அல்லவா? பொங்கிவிட்டார்.

நயனின் டோரா படம் டேராவுக்குள் ……

நயனின் டோரா படம் டேராவுக்குள் அடங்கியதில் விநியோகிஸ்தர்கள் கடும் அப்செட்டில் இருக்கின்றார்களாம், இதனால் அடுத்த படமான “அறம்” படத்தினை வாங்க ஆளில்லையாம் ரஜினி என்றால் சர்ச்சை செய்யலாம், வேறு முண்ணணி நடிகர்கள் என்றால் அடுத்தபடத்திலாவது அள்ளலாம், நயனுக்கு அப்படி என்ன ரசிகர் கூட்டம் ( Babu Rao எல்லாம் கண்ணுக்கு தெரியவில்லை போல) இருக்கின்றது?, ஆக அடுத்தபடம் எப்படியும் போகட்டும், இனி நயன் படத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர்களாக பேசிகொண்டிருந்தார்களாம் இந்த நேரத்தில் டி.ஆரும் […]

சத்தியராஜ் – பாகுபலி 2 : விவகாரம்

சத்யராஜ் முன்பு எப்பொழுதோ கன்னடர்களை காவேரி பிரச்சினையில் திட்டிவிட்டாராம், யார்தான் திட்டவில்லை? உச்சநீதிமன்றம் வரை திட்டத்தான் செய்தது அதனால் இப்பொழுது சத்யராஜ் மன்னிப்பு கேட்டால்தான், பாகுபலியினை கன்னடத்தில் வெளியிட அனுமதிப்பார்களாம், இதை வலியுறுத்தி போராட்டம் வேறு அந்த ஊர் சீமான் பால் தாக்கரே நடத்தபோகின்றாராம் அவருக்கும் வேலை இல்லை, அவருடன் இருக்கும் கும்பலுக்கும் “வேலை” இல்லை, இப்படியான சந்தர்ப்பங்களில் மட்டும் வேலை பார்க்கின்றார்கள் நதிகளும், கலைகளும் எல்லைகள் தாண்டியவை எல்லா மக்களுக்கும் பொதுவான விஷயம் அப்படி சத்தியராஜ் […]

ஆபாச விளம்பர சர்ச்சையில் சிக்கினார் சன்னி லியோன்

ஆபாச விளம்பர சர்ச்சையில் சிக்கினார் சன்னி லியோன் ஆபாச பட‌ நடிகையினை நடிக்க வைத்தால் குணசித்திர பிரதிபலிப்பா கொடுப்பார், அவருக்கு என்ன வருமோ அதனைத்தான் நடிப்பார் இந்த இந்திய கலாச்சாரத்தை காக்கும் இந்திய தாலிபான்களை இந்த விஷயத்தில் எல்லாம் காணமுடியாது, பசுமாட்டுக்கு பொங்குபவர்கள் எல்லாம் இவ்விஷயத்தில் அதுவும் ஒரு “மிலேச்ச நாட்டு கணிகை” விஷயத்திற்கெல்லாம் அமைதி எல்லாம் வாத்சாயணர், ஜெயதேவர் உட்பட இந்து முனிவர்கள் சொன்னதுதான், ஆலய சிற்பங்களிலும் காணபடுவதுதான். அதனால் சன்னியினை கண்டித்து நாடுகடத்தினால் அது […]

“ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி..” திரைப்படம்…

“ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி..” படம் டிவியில் ஓடிகொண்டிருக்கின்றது பாக்யராஜின் நல்ல திரைக்கதை, மனிதர் நிச்சயமாக மகா சுவாரஸ்யமானவர், இல்லாவிட்டால் இம்மாதிரி ரசனையாக கதைகளை சொல்லமுடியாது எல்லாம் சரி, நாயகி மீனா பொம்மையாக இருக்கின்றார், மகாராணிக்குரிய “களை ” மட்டும் மிஸ்ஸிங் இம்மாதிரி கதைகளுக்கு குஷ்பூவினை சேர்த்திருக்கலாம், மகாராணிக்குரிய அழகும், கம்பீரமும், வசீகரமும் அவரை தவிர யாருக்கும் இல்லை அப்படி குஷ்பூ நடித்திருந்தால் இப்படம் இன்னும் மாபெரும் வெற்றி அடைந்திருக்கும்…. பாக்யராஜ் ஏனோ இதனை மறந்துவிட்டார்.

இத்தாலியில் குஷ்பூ…

இன்றைய தேதியில் பெரும் புண்ணியம் செய்திருக்கும் நாடு இத்தாலி, காரணம் குஷ்பூ இத்தாலி சுற்றுபயணத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன‌ இத்தாலிய மக்கள் எல்லோரும் மோனாலிசா உயிர்பெற்று வந்ததாகவோ, அந்த லிசாவின் வம்சத்து பெண்ணாகவோ குஷ்பூவினை பார்த்தவுடன் எண்ணிகொள்வார்கள் என்பது நிச்சயம் அதற்காக குஷ்பூவினை இத்தாலியிலே தங்க சொன்னால் என்ன ஆகும்? அப்படி எல்லாம் நடந்துவிட கூடாது, குஷ்பூ இந்தியா வந்துவிடட்டும் இத்தாலியின் மோனலிசா நடந்த வீதிகளில் இந்தியாவின் மோனாலிசா நடந்து கொண்டிருக்கின்றார்.. அந்த டாவின்சி மட்டும் இல்லை, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications