பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெமினி கணேசன் : மிக விசித்திரமானவர்

https://youtu.be/moToRGHE204 தோற்றம் : 17-11-1920    ::     மறைவு : 22-03-2005 தியாகராஜ பாகவதர் முதல் எத்தனையோ நடிகர்கள் வந்தார்கள், மிக சிலர் உச்சம் தொட்டார்கள், மிக எச்சரிக்கையாக வாழ்ந்த சிலர் அடையாளமிட்டார்கள் வகையில்லாமல் வாழ்ந்த பலர் அழிந்தே போனார்கள் இவர்களில் மிக விசித்திரமானவர் ஒருவர் உண்டென்றால் நிச்சயம் ஜெமினி கணெசன் கிட்டதட்ட மகாராஜாக்கள் பாணி வாழ்க்கை அவருடையது, எந்த கட்டுப்பாடுகளும் அவருக்கு இருந்ததாக தெரியவில்லை. ஏகபட்ட திருமணம் பல காதல்கள் என ஏராளமான […]

கமலஹாசன் பிறந்த நாள்

தமிழகமும் சினிமாவும் பிரிக்கமுடியாதவை, அதிலும் கடந்த 50 வருடமாக ஒருவரையும் சினிமாவையும் பிரிக்கமுடியாது, தமிழ் சினிமாவை பணம் சம்பாதிக்கும் விஷயமாக அல்லது அரசியலை கைபற்றும் கருவியாக பார்க்காமல், சினிமாவை சினிமாவாக பார்க்கும் ஒரே அபூர்வ‌ கலைஞன் சீனிவாச கமலஹாசன். 6 வயதில் நடிக்கதொடங்கி, அப்போதே அரசிடம் விருதும், மெய்யப்ப‌ செட்டியாரிடம் காரும் வாங்கிவிட்டவர். பின்னர் கொஞ்சகாலம் பெரும் ஜம்பபான்கள் கூட குழந்தையாக நடித்தார். (அவரே வளரும் பருவம்தான்). ஒருவர் கண்ணை உருட்டியே நடிப்பார், இரு கண்களும் ஒவ்வொரு […]

கமலஹாசன் – கௌதமி

களத்தூர் கண்ணமாவில் நடிக்கும்பொழுது கமலஹாசனுக்கு 6 வயது, அவரது நடிப்பில் கவரபட்ட மெய்யப்ப செட்டியார் செல்லமாக, “என்ன வேண்டும்?” என கேட்டார் கமலஹாசன் கைகாட்டியது செட்டியார் காரினை, அதுபோன்ற ஒன்றை அவர் பரிசளித்தும் மகிழ்வித்தார் நடிப்பில் 6 வயதிலே கார்வாங்கிய ஒரே நடிகர் கமலஹாசனே, பின்னாளில் ஏதோ ஒருவிழாவில் சிவாஜிகணேசன் “வாய்யா கோடீஸ்வரா..” என கமலை அழைத்த செய்தியும் உண்டு அப்படிபட்ட கமலஹாசன் கவுதமி சொத்தினை ஆட்டையினை போடும் அவசியம் என்ன? ஆனால் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக […]

வைகைப் புயல் வடிவேலு

https://youtu.be/pdb0VWOb6Bk பிறந்தநாள் வாழ்த்துக்களோடு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து, அப்படியே இழுக்கின்றோம் எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும், எல்லா தமிழர்களின் மனதிலும் ஒரு கிராமத்துக்காரன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான், கிராமத்து சாயல் உறங்கிகொண்டே இருக்கின்றது அதனை சரியான கலைஞர்கள் திரையில் காட்டும்பொழுது அவன் அதனை கொண்டாடுகின்றான். மக்கள் அபிமானம் பெற்ற பெரும் நகைச்சுவை கலைஞரான வடிவேலு அப்படித்தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார். அவர் நகைச்சுவைகாட்சிகள் நடிப்பதை விட்டு 7 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கூட இன்றும் பல டிவி சேனல்கள் […]

நாகேஷ் : நகைச்சுவை சிகரம்

ஒரு நகைச்சுவை நடிகனாக நாகேஷ் சாதித்ததை நாகேஷ் முன்னர் வந்தவர்களும் சரி , பின்னர் வந்தவர்களும் சரி மிஞ்ச முடியாது மின்னல்வேக முக பாவனை, உடல்மொழிமாற்றத்தில் அவர் என்றுமே தனித்து நின்றார் சீரியசான குணசித்திரம், பரிதாப பாத்திரம், நகைச்சுவை கலந்த வில்லத்தனம் என எல்லா வேடங்களிலும் பின்னி எடுத்தவர் நாகேஷ் காமெடி அவரது ஒவ்வொரு அசைவிலும், வார்த்தையிலும் பிறப்பிலே கலந்திருந்தது அழகும் தோற்றபொலிவும் முக்கியமே அல்ல மாறாக உள்ளத்தில் இருந்து வரும் உணர்ச்சியான நடிப்பே பிரதானம் என […]

நாம் எழுதுவதையும் மதித்து சிலர் கவனிக்கின்றார்கள் என்பதே மகிழ்ச்சி…

அந்த தாடிக்குள் ஓளிந்திருக்கிறது, தமிழ்பாடலின் உயிர் நாடி -ஸ்டான்லி ராஜன் – New Tamil Cinema எவ்வளவோ கவிஞர்கள் முட்டிமோதும் திரையுலகம் அது, ஒரு சிலர் முத்திரை பதித்துகொண்டனர், இன்னும் பலர் காத்திருக்கின்றனர், ஆனால் ஏராளமான பாடல்களை… NEWTAMILCINEMA.COM நாம் எழுதுவதையும் மதித்து சிலர் கவனிக்கின்றார்கள் என்பதே மகிழ்ச்சி, அதிலும் சிலர் தங்கள் பத்திரிகைகளில் பிரசரிகின்றனர் எனும்பொழுது அது கூடுகின்றது, நம்மையும் அங்கீகரிக்க தொடங்கி இருக்கின்றார்கள். டி.ராஜேந்தர் பற்றி எழுதியதை நண்பர் அந்தணன் அவர்கள் அவரின் பத்திரிகையிலே […]

டி ஆர் : டி. ராஜேந்திரன்

ti எவ்வளவோ கவிஞர்கள் முட்டிமோதும் திரையுலகம் அது, ஒரு சிலர் முத்திரை பதித்துகொண்டனர், இன்னும் பலர் காத்திருக்கின்றனர், ஆனால் ஏராளமான பாடல்களை தரும் வல்லமையுள்ள ஒருவன் உறங்கி கொண்டிருக்கின்றான் அல்லது ஒதுங்கி கொண்டிருக்கின்றான் அது டி.ராஜேந்தர் தமிழ் இலக்கியத்தை முற்றும் கற்று தேர்ந்தவர் என்பதால் தமிழ் அவருக்கு அழகாக வாய்த்திருக்கின்றது, ஒரு கவிஞனுக்கு தேவை அற்புதமான வர்ணை மற்றும் இலக்கிய நயம், கொஞ்சம் மொழி போதும் அசத்திவிடலாம் அப்படித்தான் அவர் 80களில் அசத்திகொண்டிருந்தார், இன்று கேட்டாலும் அது […]