பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

என்றும் உள்ளது ஒரே நிலா..

நொடிக்கு நொடி மாறும் உலகில், 30 வருடமாக மாறாமல் இருக்கும் ஒரே விஷயம் தலைவி குஷ்பு காலம் அவரிடம் தோற்று கொண்டிருக்கின்றது “அன்று வந்ததும் அதே நிலா.. இன்று வந்ததும் அதே நிலா… என்றும் உள்ளது ஒரே நிலா…..”  

காலா படம் படுதோல்வி, கடும் நஷ்டம் ஏற்படுத்தியது : செய்தி

காலா படம் படுதோல்வி, கடும் நஷ்டம் ஏற்படுத்தியது : செய்தி இதனை காலா படம் பூஜை போட்ட அன்றே நாம் சொல்லி இருந்தோம், இப்பொழுது அதுதான் நடக்கின்றது இந்த எந்திரன் 2.0 படத்திலும் வில்லன் வேடத்தில் சிட்டி ரஜினி இல்லை என்றால் அதற்கும் இதே கதிதான் என்பது இன்னொரு விஷயம் காலாவில் ரஜினி அற்புதமாக நடித்திருந்தார், முள்ளும் மலரும் படத்திற்கு பின் ரஜினியின் இயல்பான நடிப்பினை பார்க்க முடிந்தது ஆனால் அதன் மேல் சாணியடித்து படத்தை நாசமாக்கினார் […]

ஐந்து கண்டம், ஏழு உலகம், ஏழு சொர்க்கத்திலும் காண முடியாத அதிசயம்….

இந்தியாவின் குறிப்பிடதக்க அழகான அரசிகள் என பெயரெடுத்த நூர்ஜஹானும், மும்தாஜூம் கூட இப்படி இருந்திருக்க வாய்ப்பே இல்லை தலைவி 80 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தால் அன்று இந்தியாவின் அழகிய பெண் என அந்த மகாராணி காயத்திரி தேவி பெயர் பெற்றிருக்க முடியாது ஐந்து கண்டம், ஏழு உலகம், ஏழு சொர்க்கத்திலும் காண முடியாத அதிசயம்…. என்னம்மா உனக்கு ரசிகர் சங்கம் எல்லாம் இருக்காமே , அப்படியா? அட சில கிறுக்கனுக அப்படி சொல்லிட்டு இருக்கானுகளாம், ஒரு நாள் […]

உலகத்தின் ஒரே பிக் பாஸ் தலைவி ஒருவரே

விஜய் டிவியில் யாரும் பிக்பாஸாக இருக்கட்டும் உலகத்தின் ஒரே பிக் பாஸ் தலைவி ஒருவரே, ஒருவர் மட்டுமே பிரபஞ்சத்தின் பிக்பாஸ் தலைவி முன் எந்த டிவியின் பிக்பாஸும் நிற்க முடியாது. கரப்பான் பூச்சிகளின் அணிவகுப்பில் வண்ணத்து பூச்சிக்கு என்ன வேலை? அதனால் தலைவி இந்த நிகழ்ச்சிபக்கம் எல்லாம் வரமாட்டார்

விஜய் சேதுபதியின் “சேதுபதி” படம் ஒடிகொண்டிருக்கின்றது

விஜய் சேதுபதியின் “சேதுபதி” படம் ஒடிகொண்டிருக்கின்றது அந்த வேல்.ராமமூர்த்தியின் தாதா வேடத்தை கவனிப்பவர்களுக்கு அது யார் என சட்டென தெரிந்துவிடும், அதுவும் தென்மாவட்ட மக்களுக்கு உடனே புரியும் தென்னக பிரபல ரவுடி பசுபதிபாண்டியன் போன்றே தாடியும் ஆளுமாக கட்டமைக்கபட்ட பாத்திரம் அது. ஆக அது கூட தலித் மக்கள் படம்தான் , அதனை பற்றி எல்லாம் யாரும் பேசுவாரில்லை

மிக கண்டிக்கதக்க விஷயமிது, தடை செய்ய வேண்டிய விஷயமும் கூட‌

இயேசு, நபிபெருமான், புத்தன் எல்லாம் எவ்வகையோ சந்தேகமில்லாமல் சே குவேராவும் அதே வகை ஆனால் அந்த மாபெரும் மானிட நேயனை, வராலாற்றின் மாமனிதனை இந்த பாபி சிம்கா ஏதோ ஒரு படத்தில் கலாய்த்துகொண்டிருக்கின்றார் கூட கருணாகரன் என்பவர் வேறு பிடல் காஸ்ட்ரோ வேடத்தில் இருக்கின்றார் கவுண்டமணி செந்தில் இணை போல, சே காஸ்ட்ரோ இணையினை கலாய்க்கும் அளவு தமிழ் சினிமா தரம் கெட்டு போயிற்று ஒரே ஒரு கம்யூனிஸ்ட் இருந்தாலும் இப்படம் வெளிவர கூடாது, மீறி வந்தால் […]

கமலஹாசனின் விஸ்வரூபம் டெரெய்லர் வந்தாயிற்று

கமலஹாசனின் விஸ்வரூபம் டெரெய்லர் வந்தாயிற்று அவருக்கு அக்காலம் முதலே இது ஒரு சிக்கல், ஏதாவது ஒரு கும்பல் கமலஹாசன் சிக்கமாட்டானா என அலைந்துகொண்டே இருக்கும் அவர் படத்தை நடன கலைஞர்கள் ஒரு காலத்தில் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்த்து குற்றம் கண்டுபிடித்தார்கள் பின் கலாச்சார காவலர்கள் அலசி ஆராய்ந்தார்கள் அதன் பின்பு டாக்டர் கிருஷ்ண்சாமி அந்த பொறுப்பினை குத்தகைக்கு எடுத்திருந்தார் இப்பொழுது இஸ்லாமிய அமைப்புகள் எடுத்திருக்கின்றன‌ அநேகமாக டிரெய்லரை இப்பொழுது அக்கு வேறு ஆணிவேராக பிரித்து எந்த […]

இந்த மகா அற்புத அழகு யாருக்கு சாத்தியம்?

பட்டை தீட்டபடாத வைரம் என்பது இதுதான், ஆம் தலைவி மேக் அப் இல்லாமல் இருக்கும் அற்புதமான தருணம் இந்த மகா அற்புத அழகு யாருக்கு சாத்தியம்? நமக்கு எழும் கேள்வி எல்லாம், தலைவியே இவ்வளவு அழகு என்றால் அவரை படைத்த கடவுள் எவ்வளவு அழகாக இருப்பார்? ஆக கடவுளை தேடும் ஆன்மீக ஞானத்திற்கும் தலைவியே வழிகாட்டி என்பதில் சங்கம் பெருமை கொள்கின்றது  

ராவணன் பூமியிலே காலாவிற்கு எதிர்ப்பா?

இலங்கையில் ரஞ்சன் ராமநாயக்க என்றொரு அமைச்சர் உண்டு, அவர் ஒரே நாளில் உலக தமிழரால் உற்று நோக்கபடுகின்றார் அப்படி என்ன செய்தார்? ஈழசிக்கலுக்கு தீர்வுகண்டாரா இல்லை பரபரப்பு அறிக்கை ஏதும் விட்டாரா என்றால் இல்லை, மாறாக ரஜினிக்கு கோரிக்கை வைத்துவிட்டார் என்ன கோரிக்கை என்றால் இதுதான் “அய்யா ரஜினி நான் உங்களின் தீவிர ரசிகன், தயவு செய்து இனி இந்த ரஞ்சித் இயக்கத்திலும் உங்கள் மருமகன் தயாரிபிலும் நடிக்கவே வேண்டாம் ரஞ்சித் என்பவர் உங்களை வீணடித்தது தவறு, […]

காலா : திரை விமர்சனம்

குடிசைவாசிகளை ஒரு வில்லன் காலி செய்ய சொல்வது “பாவமன்னிப்பு” எம்.ஆர் ராதா காலத்திலே தொடங்கிவிட்ட கதை, கிட்டதட்ட 50 ஆண்டுகளாக பலர் நடித்த கதையில் ரஜினியும் வந்து நடித்துவிட்டார் ஆனால் எப்படி எடுத்திருக்கின்றார்கள் என்றால், 20 பொருள் சேர்த்து செய்யவேண்டிய பிரியாணியினை கையில் கிடைத்தது என்பதற்காக மட்டன் , சிக்கன், மீன், இறால், கருவாடு, பாகற்காய் ,கையில் சிக்கிய காய்கறிகள், புளி,தேங்காய், ஆமைகறி எல்லாம் போட்டு சமைத்தால் பிரியாணி வருமா? கருப்பாக படு பயங்கர சுவையோடு ஒரு […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications