பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஏர் இந்தியாவினை தலைமுழுக இந்திய அரசு தயாராகின்றது

உலகெல்லாம் எல்லா தொழிலிலும் அரசியல் போலவே கடும் போட்டி ஏற்பட்டிருக்கின்றன, அதில் விமான போக்குவரத்தும் தப்பவில்லை பட்ஜெட் விமானங்களின் வரவு பெரும் விமான நிறுவண சாம்ராஜ்யங்களையே அசைத்து பார்க்கின்றன, இன்றைய தேதியில் ஓரளவு நிலைத்து நிற்பவை அரபு நாட்டு விமான சேவைகள் காரணம் எண்ணெய் பலம், அதுவும் இல்லை என்றால் அவர்களும் இல்லை முன்பு இந்தியாவில் ஏர் இந்தியா மட்டும் இருந்தது, மகராஜா கம்பீரமாக வலம் வந்தார். பல விமானங்கள் குவிய மகராஜா தடுமாறினார் உள்நாட்டில் ஸ்பைஸ் […]

மொகலாயர்கள் இந்தியாவிற்கு கொடுத்த கொடை பிரியாணி

இந்த மொகலாயர்கள் இந்தியாவில் ஆளும்பொழுது எவ்வளவோ நல்ல விஷயங்களை கொடுத்தார்கள். நிச்சயம் அவர்கள் ரசனையாளர்கள் தாஜ்மகால், செங்கோட்டை போன்ற அழகும் கம்பீரமும் கொண்ட கட்டங்களை அவர்கள்தான் கொடுத்தார்கள் உலகில் சாலமோன் அரசருக்கு பின் மிக ரசனையான வாழ்வு அவர்களுக்கு அரண்மனை முதல் உணவு வரை இருந்திருக்கின்றது. மிக மிக ரசித்து வாழ்ந்தவர்களாகத்தான் மொகலாயர்கள் இருந்திருக்கின்றார்கள் மொகலாயர்கள் இந்தியாவிற்கு கொடுத்த கொடை பிரியாணி அவர்களால் இங்கு கிடைத்ததுதான் பிரியாணி, அதுவும் ஸ்பெஷல் மொகல் பிரியாணி அது ஹைதரபாத் என […]

அட்சய திரிதியியை வாழ்த்துக்கள்

சயம் என்றால் தேய்தல் என்று பொருள், அட்சயம் என்றால் தேயாத, குறையாத என்ற பொருள். பாரதத்தில் பாஞ்சாலியிடமும் மணிமேகலையில் மணிமேகலையிடமும் அப்படி ஒரு அட்சய பாத்திரம் இருந்ததாக சொல்கின்றது குறிப்புகள் அம்மாவசைக்கு அடுத்த மூன்றாம் நாள் திரிதியை, திரி என்றால் மூன்று என பொருள். ஆங்கிலத்திலும் அதுவேதான். இந்த சித்திரை மாத பவுர்ணமி போலவே இந்த பிறை தோன்றும் திரிதியையும் விஷேஷமானது அள்ள அள்ள குறையாத திரிதியை என இந்த அட்சய திரிதியை கொண்டாடபடுகின்றது இந்நாளில் பரசுராமர் […]

இந்திய ராணுவ தளபதிகள் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கின்றது

இந்திய ராணுவ தளபதிகள் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கின்றது இதெல்லாம் சாதரண காலத்தில் நடக்கும் கூட்டம் அல்ல, சிரியாவில் மினி உலகப்போர் தொடங்கியிருக்கும் நிலையில் இந்தியா தன் பாதுகாப்பினை வலுபடுத்த தொடங்கியிருப்பது புரிகின்றது. இந்தியா மட்டும் அல்ல , எல்லா நாடுகளுமே தங்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திகொண்டிருக்கின்றன‌

நிலமை மோசமாகிகொண்டிருக்கின்றது

ஆசிபாவிற்காக இந்தியாவும் இப்பொழுது உலகமும் அழ ஆரம்பித்தாயிற்று ஆயினும் ஒரே ஒரு கேள்வி எழும்புகின்றது காஷ்மீர் மாநில அரசின் முதல்வர் பெண், இன்னும் உணர்வுபூர்வமாக நோக்கினால் இஸ்லாமிய முதல்வர் ஆனால் ஏன் சிபிஐ விசாரணை கோரவில்லை என்பதில் சில சர்ச்சைகள் வருகின்றன. இப்பக்கம் அவர்களை கை காட்டுகின்றார்கள், இவர்கள் அவர்களை குற்றம்சாட்டுகின்றார்கள் இது தேசத்தின் அமைதிக்கும் நிலைதன்மைக்கும் சவால்விடும் விஷயமாக மாறிகொண்டிருகின்றது. நிச்சயம் இக்கொடுமையினை கேட்ட யாரும் கொதித்து எழத்தான் செய்வார்கள் நிலமை மோசமாகிகொண்டிருக்கின்றது இது பெரும் […]

பல்லவர் தமிழரில்லை

பல்லவர் தமிழரில்லை என சொன்னாயா என கேள்விமேல் கேள்விகள். எவனெல்லாம் தமிழகத்தை ஆண்டானோ அவனை எல்லாம் தமிழ்மன்னராக கொண்டாடுவது தமிழர் வழக்கம் பல்லவரையும் அப்படி சேர்த்துவிட்டார்கள் ஒரே ஒரு எடுத்துகாட்டு பாருங்கள் விளங்கும். சோழரின் கல்வெட்டெல்லாம் தமிழில் இருக்க பல்லவர் கால கல்வெட்டெல்லாம் பிராமி மொழியிலே இருக்கும். பிராமி மொழி சமஸ்கிருதத்திற்கு முந்தையது பல்லவர்களின் காலம் எப்பொழுது தொடங்குகின்றது புலிகேசி எனும் மன்னனின் காலமுடிவில் தொடங்குகின்றது வரலாறு முழுக்க அந்த புலிகேசியினை கொடூரமானவன் என்றும், காமெடி முரடனாகவுமே […]

8 வயது குழந்தை அது எனும்பொழுதே நெஞ்சு பதைபதைக்கின்றது

பல இனங்கள் கலந்து வாழும் நகரங்களில் ஒருவிதமான கொடூர மனித மிருகங்கள் உருவாகும். எல்லா இனத்தின் கொடூர குணங்களை மட்டும் பொறுக்கி எடுத்து வரும் அந்த கூட்டம் மகா மகா கொடுமையானதாக இருக்கும் அந்நகரத்து இயல்பும் அவைகளுக்கு சாதகமாகின்றன‌ இது உலகின் எல்லா நகரங்களிலும் இருக்கின்றது என்றாலும் டெல்லியில் உச்சகட்ட மிருகங்கள் சில வாழ்கின்றன என்பது நிர்பயா விவகாரத்திலே தெரிந்தது இப்பொழுது இன்னும் மோசமாயிருக்கின்றது , பிஞ்சு குழந்தைகளை கசக்கி எறிந்திருக்கின்றார்கள் அதுவும் கூட்டாக‌ 8 வயது […]

இந்த ஜோசியர்களை முதலில் சாத்த வேண்டும்

இந்த ஜோசியர்களை முதலில் சாத்த வேண்டும் ஆங்கில புத்தாண்டிற்கு உங்கள் ராசிபலன் இதோ என சில ஆசீகளையும் பல சாபங்களையும் கொடுத்தார்கள் பின் தைபுத்தாண்டு பலன் என ஒன்றை கொடுத்தார்கள் இப்பொழுது விளம்பி ஆண்டு பலன் என இன்னொரு பலனை சொல்கின்றார்கள் ஒரு வருடத்து பலன் என சொல்லிவிட்டு இடையில் மூன்று வகை வருட பலனை சொன்னால் எப்படி? இடையில் குருபெயர்ச்சி, சனிபெயர்ச்சி, கிரகணம், ராகு அது இது என அதற்கொரு ஒஅலன் ஒரு மனிதன் எதனை […]

முதன் முறையாக சென்னையில் இந்தியாவின் மாபெரும் ராணுவ கண்காட்சி

இந்தியாவின் மாபெரும் ராணுவ கண்காட்சி முதன் முறையாக சென்னையில் நடக்கின்றது இந்தியாவின் தயாரிப்புகள் முதல் உலக நாடுகள் எல்லாம் பங்குபெறும் மாபெரும் கண்காட்சி அது, அந்த கவுரவமான நிகழ்வினைத்தான் மோடி தொடங்கி வைக்க வருகின்றார் இங்கு அன்றுதான் கருப்புகொடி காட்டுவோம் என பலர் கிளம்புகின்றார்கள் நிச்சயம் இவர்களை போட்டு சாத்திவிட்டு மோடி கம்பீர நடை நடக்க சில நாழிகை ஆகாது, ஆனால் உலகநாடுகள் எல்லாம் பங்குபெறும் நிகழ்வில் அப்படிபட்ட சலசலபுகளை ஏற்படுத்த மோடி விரும்பவில்லை நிச்சயம் இந்த […]

பாரத பிரதமரை வரவேற்கின்றோம்

இன்றைய இந்தியாவில் ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் அதன் ராணுவபலம் குறைந்ததல்ல, முதல் இடங்களுக்குள் அட்டகாசமாக வருமளவு பலம் கொண்டது இந்திய ராணுவம் ஆனால் அதன் சொந்த ஆயுத தயாரிப்பு என்பது பற்றி உலகநாடுகளிடம் அபிமானம் கிடையாது, 1962க்கு பின் இந்தியா கடும் வேகத்தில் தன் ராணுவத்தை மாற்றியது ஆவடி தொழிற்சாலை, கோவா கொச்சின் கப்பல் கட்டும் தளம், திருச்சி தொழிற்சாலை , பெங்களூர் எச்.ஏ.எல் என பல விஷயங்களை செய்து அதுவும் சொந்த உற்பத்தியினை தொடங்கியது சில […]