பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நமது தேசத்தின் பெரும் வீரமிக்க அடையாளம்

நிச்சயமாக அவர் ஒரு ஒப்பற்ற போராளி, காலத்தை மிக நுட்பமாக கணித்து விடுதலை போராட்டத்தை மாற்றியவர், அவரது திட்டம் மட்டும் வெற்றிபெற்றிருக்குமானால் இன்று இந்தியாவின் தலைவிதி மாறி இருக்கும், ஆனால் ஜப்பானின் அணுகுண்டு தாக்குதலும், ஹிட்லரை வீழ்த்திய ரஷ்ய செஞ்சேனையின் மாபெரும் வெற்றியும் அவரது தலைவிதியினை மாற்றிற்று அந்தகாலத்திலே கலெக்டருக்கு படித்தவர், ஆனால் பட்டத்தினை தூக்கி எறிந்து விட்டு காங்கிரசில் புகுந்தார். வெள்ளையன் மனதினை மட்டும் அடி, அஹிம்சையால் ஆழ்மனதினை தொடலாம் எனும் காந்தீய இந்திய ஞான […]

வாஜ்பாய் இந்தியராக வாழ்ந்தார், உயர்ந்தார்

வாஜ்பாய் இந்தியராக வாழ்ந்தார், உயர்ந்தார் மாநில எல்லைகளை தாண்டி இந்தியராய் வாழ்ந்த அவரை , இனம் மொழி என குறுகிய வட்டத்தில் சிக்கி கொண்ட சிலர் விமர்சிக்கின்றார்கள் ஏதோ தமிழகத்தில் சாதி கலவரம் வந்ததே இல்லை என்பது போலவும் , சில மத கலவரங்கள் உருவாகவே இல்லை என்பதும் அவர்கள் நிலைப்பாடு முதுகுளத்தூர் கலவரத்தை அடக்க பாடுபட்டவர் காமராஜர், முத்துராமலிங்கம் என்பவரை உள்ளே போடுங்கள் என சொன்னவர் பெரியார் அப்பொழுதெல்லாம் வேறு திராவிட சிங்கங்கள் எதுவும் வாய்திறக்கவே […]

வாஜ்பாய் நம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார்

இந்தியாவின் பெருமித அடையாளங்களில் ஒருவரான வாஜ்பாய் நம்மிடமிருந்து விடைபெற்றுவிட்டார் அவருக்கும் கலைஞர் போலவே பெரும் சரித்திரம் உண்டு, காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் எல்லாம் கலந்துகொண்டு தண்டனை பெற்றவர் ஆனால் தேசபிரிவினை அவர் மனதை பெரிதும் பாதித்த நிகழ்வு, உன்மையான தேசாபிமானிகளுக்கு அது வலி அந்த வலி வாஜ்பாய்க்கும் இருந்தது நேருவின் காலங்களில் வாஜ்பாய் தன் கடமையினை ஜனசங்கத்தில் இருந்து செய்துகொண்டே இருந்தார், நாட்டுக்கான குரல் அவரிடம் இருந்து வந்துகொண்டே இருந்தது நேரு மதித்த ஜனசங்க தலைவர்களில் […]

அரவிந்த கோஷ் பிறந்த நாள்

அவர் பெயர் அரவிந்த கோஷ், வங்காளாத்துக்காரர். முதலில் நல்ல படிப்பாளி லண்டன் எல்லாம் சென்று படித்தார் பின் சுதந்திர போராட்டத்தில் குதித்தார், வங்க பிரிவினை காலங்கள் அவரின் போராட்டத்திற்கு அணல் சேர்த்தன, ஆனால் வெள்ளையரின் கடும் கட்டுபாடுகள் அவருக்கு தடையிட்டன‌ ஒரு வழக்கில் சிக்கி சிறையில் இருந்தபொழுதான் ஆன்மீகபக்கம் திரும்பினார், ஆன்மீகவாதி ஆனார் வங்கத்தில் அவருக்கு கட்டுபாடுகள் அதிகம் என்பதால் அருகிருந்த சந்திரநாகூருக்கு தப்பினார், அது பிரென்ஞ் பகுதி அங்கு தங்கி இருந்தபொழுதுதான் ஆன்மீகத்தை முழுக்க தழுவி […]

ஓசாமா பின்லேடன்

அவர் பெரும் பணக்காரர் வெளிநாட்டில் படித்தவர் ஆனால் பெரும் இஸ்லாமிய மார்க்கவாதி 1930களில் இருந்தே அரபுலகில் நடக்கும் அனைத்து குழப்பங்களுக்கும் சந்தேகமே இல்லாமல் அமெரிக்கா மட்டும் காரணம் என்பதை 1980களில் ஆப்கனில் உணர்ந்தவர் அதுவரை தான் உண்டு தன் தொழில் உண்டு மார்க்கம் உண்டு என சவுதியில் இருந்தவர்தான், என்று ஆப்கனில் ரஷ்யா வந்தவுடன் உலக முஸ்லீம்களே ஒன்றுபடுவீர் என்ற அமெரிக்கா அழைத்ததோ அதற்கு முன்பாகவே ஆப்கன் சென்றவர் அவருக்கு ஒரு கனவு இருந்தது, இஸ்லாமியர்கள் எங்கெல்லாம் […]

நவீனகால அஸ்வத்தாமன்களும் , அழிந்த ஹிரோஷிமாவும்

அணு என்பதற்கு அக்கால பாரதமே அனுமானம் சொல்லியிருந்தது, பெரும் அழிவு ஆயுதங்கள் சாத்தியம் என்பதனை மகாபாரதம் படிப்போரின் கண்முன்னே காட்டிற்று. சாதரண தர்ப்பை புல்லினை அஸ்வத்தாமன் பெரும் அழிவாக்கும் பிரம்மாஸ்திரமாக மாற்றினான் என்கிறது அது, இந்நாளில் அப்படி யுரேனியம் எனும் மணல் கட்டியிலிருந்து உருவாக்கபடுவதுதான் அணுகுண்டு அணுவின் இயக்கமே சிவனின் இயக்கம் என கண்டவர்கள் தமிழர்கள், நடராஜரின் சிலை தத்துவம் அதனைத்தான் குறிக்கின்றது, திருமூலர் அப்படியே அணுவின் வடிவத்தையே சிவனாக சொன்னார், ஏதோ மூட நம்பிக்கையாளன், இந்துஸ்தான் […]

36 வயதிலே மறைந்த மர்லின் மன்றோவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

அவள் வாழ்வு ஏராளமான திருப்பங்களும் மர்மங்களும் ஆச்சரியங்களும் நிரம்பியது, 36 வயதுவரை மட்டுமே வாழ்ந்தாலும் உலகில் அவளுக்கென ஒரு அடையாளம் அமைந்தது 16 வயதுவரை அவளை போல் வறுமையில் வாடியவரில்லை, அவ்வளவு துன்பம். பொறுப்பற்ற தந்தை சுயநல குடும்பம் என்றிருந்த வீட்டில் சிறுவயதிலே வெளியேறினாள் சினிமா முதலில் அவளை விரட்டியது, நிர்வாண மாடலாக போஸ் கொடுத்தாலும் பத்தோடு பதினொன்று என விரட்டபட்டாள் வாடகை கொடுக்க வழியின்றி தெருவிலும், உண்ண வழியின்றி ரோட்டோரோடத்திலும் அவள் தவித்த நாட்கள் உண்டு […]

மாவீரன் தீரன் சின்னமலை : வீர வணக்கமும், அஞ்சலிகளும்

அவர் பெயர் தீர்த்தகிரி, எல்லா பயிற்சிகளையும் முடித்து பெரும் வீரரானார், முதலில் வேட்டைக்காரர்தான் ஆனால் நல்ல மனதும் இருந்தது சில ஏழைகளுக்கு உதவ அவரிடம் பணம் இல்லை, அப்பொழுது மைசூர் சாம்ராஜ்யம் திண்டுக்கல் வரை பரவியிருந்தது, அந்த வரிப்பணம் செல்லும் பாதையில் வந்து வீரர்களிடம் பணம் பறித்து, சிவன் மலைக்கும் சென்னிமலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்தான் என சொல் என பொடரியில் அடித்து விரட்டு அந்த ஏழைகளுக்கு உதவினார். பின் வரியினை வெள்ளையன் பறிக்கவந்தபொழுதும் பெரும் […]

இன்று ஆல்பர்ட் துரையப்பா கொல்லபட்ட நாள்

துரையப்பா எனும் தமிழரை கொன்றதிலிருந்து பிரபாகரனின் அட்டகாசம் தொடங்கியது. அவர் பெயர் ஆல்பர்ட் துரையப்பா. தமிழர் யாழ்பாண நகர மேயராக இருந்தவர். அவர் செய்த தவறு யாழ்நகரை முன்னேற்ற முயன்றது அதற்காக சிங்களனுடன் சமரசமாக சென்றது இது துரையப்பாவின் அரசியல் தமிழ் எதிரிகளுக்கு பிடிக்கவில்லை , இளைஞரை தூண்டிவிட்டார்கள், குறிப்பாக உலக தமிழ்மாநாடும் அதில் நடந்த துப்பாக்கி சூடும் விவகாரமானது அங்கு நடந்த விவகாரம் வேறு, இப்பொழுது சைமன் போல அப்பொழுது ஜெகநாதன் என்றொரு சவுடால் பார்ட்டி […]

இன்று கலாமிற்கு நினைவு நாள்

நாம் காந்தியினை கண்டதில்லை, காமராஜரை கண்டதில்லை, சாஸ்திரியினை கண்டதில்லை அப்படி விஞ்ஞானி ஜஹாங்கீர் பாபாவினையும் கண்டதில்லை, ஆனால் கலாமினை கண்டிருக்கின்றோம், அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதற்காக பெருமைபடுகின்றோம் இன்று கலாமிற்கு நினைவு நாள். ஆரியபட்டரின் மறுபிறப்பாக நம்மிடம் அவதரித்த கலாமின் நினைவு நாள். அய்யா கலாம் அவர்களே, அக்னி நாயகனே , பிரித்வி கொடுத்த பிதாமகனே உங்களுக்கு அஞ்சலில் செலுத்துமுன் இங்கு சில சில்வண்டுகள் கலாம் தமிழகத்திற்கு என்ன செய்தார் என புலம்பிகொண்டிருக்கின்றன. உங்கள் சார்பாக சில […]