பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன் நினைவு நாள்

வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன். முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் அவர் இருவருக்கே பொருந்தும். குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் செய்யுள் அமைத்தவர். இன்றும் மலேசிய சிங்கப்பூர் நாடுகளை காணுங்கள், உங்கள் காதில் “அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடகண்டேனே..” பாடல் தானாக ஒலிக்கும். அரசியலநிலைய பாருங்கள் “ஊதுபத்திக்கும் பீடிகளுக்கும் பேதம் புரியல” எனும் வரிகள் காதில் மோதும்.ஒட்டுமொத்த […]

கட்டபொம்மனுக்கு வீர வணக்கம்

ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் தமிழர்களை எழுப்பி இந்திய சுதந்திரபோராட்டத்தில் தமிழக பங்களிப்பு பற்றி கேட்டால் கூட முக்கால் தூக்கத்திலே கட்டபொம்மனை பற்றி சொல்வார்கள், தமிழக வரலாற்றில் ஏக்கர் கணக்கில் இடம்பிடித்து பெரும்புகழ் அடைந்தவர் கட்டபொம்மன், அவரை அறியாமல் ஒரு மாணவன் பெயில் கூட ஆகிருக்கமுடியாது. கட்டபொம்மன் காலத்திற்கு சற்றுமுன் நாயக்க அரசு ஆற்காடு நவாப்பிற்கு கைமாறிற்று, மொத்த தமிழக பகுதிக்கும் நவாப் தான் முதல்வர். ஆனால் பாளையக்காரர் எனப்படும் குறுநிலமன்னர்கள் அப்படியே நாயக்கர்களாய் இருந்தார்கள், அப்படி மதுரை அரசின் […]

இன்று கலாமிற்கு பிறந்த நாள்

நாம் காந்தியினை கண்டதில்லை, காமராஜரை கண்டதில்லை, அப்படி விஞ்ஞானி ஜஹாங்கீர் பாபாவினையும் கண்டதில்லை, ஆனால் கலாமினை கண்டிருக்கின்றோம், அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பதற்காக பெருமைபடுகின்றோம் இன்று கலாமிற்கு பிறந்த நாள். ஆரியபட்டரின் மறுபிறப்பாக நம்மிடம் அவதரித்த கலாமின் பிறந்தநாள். அய்யா கலாம் அவர்களே, அக்னி நாயகனே , பிரித்வி கொடுத்த பிதாமகனே உங்களுக்கு அஞ்சலில் செலுத்துமுன் இங்கு சில சில்வண்டுகள் கலாம் தமிழகத்திற்கு என்ன செய்தார் என புலம்பிகொண்டிருக்கின்றன. உங்கள் சார்பாக சில கேள்விகளை கேட்டுவிட்டு வந்துவிடுகின்றோம் […]

சகோதரி நிவேதிதா நினைவு தினம்

அந்த பெண்மணி அயர்லாந்துக்காரர் 1867ல் பிறந்தவர் , பெயர் மார்கரெட் , தகப்பன் பெரும் கிறிஸ்தவபோதகர். பைபிளின் அனைத்து ஆகமங்களும் கூடவே அல்லேலூயாவும் ஊட்டி ஊற்றி வளர்க்கபட்டவர் அவர் அக்கால போதகர்கள் கல்விபணியும் செய்வார்கள், அப்படி மார்கரட்டும் ஆசிரியரானார், ஆனால் உள்மனது ஆன்மீகத்தை தேடிகொண்டே இருந்தது. கிறிஸ்தவம் அவரின் கேள்விகளுக்கு நிறைவான பதிலை கொடுக்க முடியவில்லை கிறிஸ்து நமக்காக ரத்தம் சிந்தினார் என்றால் என்றோ செத்துபோன ஒருவர் எனக்கெப்படி பாடுபட முடியும் என பதில்கேட்டும் அளவிற்கு அவரின் […]

தீரபெண்மணி வேலுநாச்சியார்

சுதந்திர போராட்டத்தில் அந்த பெண்மணி அபூர்வமானவர்ள், தமிழச்சிகளுக்குரிய வீரம் அவளிடம் குவிந்திருந்தது அவள் வெள்ளையனை எதிர்த்து வெற்றிமேல் வெற்றிபெற்ற பொழுது இந்த ஜான்சிராணி எல்லாம் பிறந்திருக்கவேயில்லை ஜோன் ஆப் ஆர்க், ராணி மங்கம்மா போன்ற தீரபெண்மணி வரிசையில் வந்தவர் அந்த வேலுநாச்சியார். அவளுக்கு 10 மொழிகள் பேச தெரிந்திருந்தது, நிர்வாகத்திலும் வீரத்திலும் பெரும் நுணுக்கம் கொண்டிருந்தார். வாள்வீச்சு முதல் எல்லா கலைகளும் அவளுக்கு அத்துபடி. இந்திய சுதந்திரபோராட்டத்தில் முதல் பெண் போராளி அவளே. அவளின் போராட்ட வாழ்வு […]

இன்று பக்தவச்சலம் பிறந்த நாள்

இன்று பக்தவச்சலம் பிறந்த நாள் சுதந்திர போராட்ட தியாகி , காமராஜருக்கு அடுத்து பதவிக்கு வந்தவர் என பெரும் அடையாளம் அவருக்கு உண்டு ஒரு விஷயம் உறுதியாக சொல்லமுடியும் திமுக வளர மிக உதவியவர்கள் இரண்டுபேர் ஒருவர் குமாரசாமி ராஜா (அப்படி ஒரு முதல்வர் இருந்தார்) இன்னொருவர் இந்த பக்தவச்சலம் குமாரசாமிராஜா எடுத்த நடவடிக்கைகளை எதிர்த்து திமுக நடத்திய ரத்தகளறி போராட்டமே மக்களை திமுகபால் இழுத்தது, குமாரசாமி அமைதியாக இருந்தால் திமுக பெரும் பிம்பம் காட்டியிருக்காது. பின்பு […]

சே குவேரா : 50 வது நினைவு தினம்

இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது, அதாவது கலைஞரின் வசனத்தில் சொல்வதென்றால் “அந்த பொதுநலத்திலே சுயநலமும் கலந்திருக்கின்றது” மறுக்க முடியாது. ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர் […]

அற்புத மனிதர் வள்ளலார் பிறந்த நாள்.

தமிழகத்தில் எப்பொழுதாவது அற்புதமான மகான்கள் தோன்றுவார்கள், அப்படி தோன்றிய அற்புத மனிதர் வள்ளலார் தத்துவத்தில் அவர் புத்தர், போதனையில் இயேசு கிறிஸ்து, வாழ்க்கையில் அவர் விவேகானந்தர், பசித்தவருக்கு உணவழிப்பதில் அவர் குருநாணக் என எல்லோர் கலவையும் அந்த மகானிடம் இருந்தது சுருக்கமாக சொன்னால் எல்லா மதத்தின் மிக உயர்ந்த கருத்துக்களும் கலந்து பிறந்த அவதாரம் அவர் இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. உலகின் எல்லா […]

திருப்பூர் குமரன் பிறந்த நாள்

அது வெள்ளையன் சைமன் கமிஷன் எனும் கமிஷனை அமைத்திருந்த 1928ம் ஆண்டு காலம், வெள்ளையன் கமிஷன் என்பது இன்று தமிழக அரசு அமைக்கும் கமிஷனை போன்றதுதான் அன்று இருந்த கொந்தளிப்பை அடக்க இம்மாதிரி கமிஷன்களை வெள்ளையன் அமைப்பான், அப்படி அன்று வந்தது சைமன் கமிஷன் , அதாவது அந்த கமிஷனின் தலைவர் பெயர் ஜாண் சைமன் (நாம் தமிழரின் கமிஷன் சைமன் வேறு) இதனை எதிர்த்து நாடெங்கும் போராட்டம் நடந்தது, ஒருங்கிணைந்த இந்தியாவில் பஞ்சாப் சிங்கம் லாலா […]