பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

மவுனாலா அபுல் கலாம் ஆசாத்

இந்த தேசத்தின் பெரும் அடையாளம் அப்துல் கலாம், அப்படியே இன்னொரு கலாமும் இங்கு உண்டு. இருவருமே கல்வியின் அடையாளங்கள். இருவருமே நாட்டுபற்று மிக்க இந்தியர்கள் அந்த பெரிய கலாமின் பெயர் அபுல் கலாம். சுதந்திர போராளி, வெள்ளையனுக்கு நான் அடிமை இல்லை என சொல்லி ஆசாத் அதாவது சுதந்திரமானவன் என்ற பெயரை தன்னோடு சேர்த்து அபுல் கலாம் ஆசாத் ஆனார். மவுனாலா ஆசாத் என்றும் அறியபடுவார். மவுலானா என்றால் மதபெரியவர் என பொருள். மிக சிறுவயதிலே போராட […]

சிறியன சிந்தியாத நேரு

சிறியன சிந்தியாத நேரு நேரு என்ற வார்த்தைக்கு கால்வாய் என்று பொருள். ஆரம்ப காலங்களில் நேரு குடும்பத்தினரின் மூதாதையர்கள் தங்கியிருந்த வீடு கால்வாய் ஓரத்தில் தான் இருந்திருக்கிறது. கால்வாயை குறிக்கும் நஹர் என்ற சொல்லே காலப்போக்கில் நேரு என்று உருமாறியிருக்கிறது. நேரு குடும்பத்தில் பின் பெயராக கவுல் என்றே சேர்த்து வந்தனர். நேரு என்ற பெயர் பிரபலமானதும் கவுலை விடுத்து நேரு என்ற பெயரை தங்கள் பெயர்களோடு சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தனர். பின்னாளில் இந்திரா நேரு, ராஜிவ் […]

இன்று திப்புவின் பிறந்தநாள்

இந்தியாவில் முதன் முதலில் பிரிட்டிசார் முடிசூட்டிகொண்ட இடம் கல்கத்தா, அங்கிருந்தேதான் படை நகர்த்தலை தொடங்கினார்கள். எந்த இடத்திலும் அவர்கள் பெரிதாக திணறியதாக சரித்திரம் இல்லை, அசால்ட்டாக அடித்துவிட்டு, முன்னேறிகொண்டிருந்தார்கள், வடக்கே பெரும் எதிர்ப்புகள் அவர்களுக்கு அன்று இல்லை. அடிக்கவேண்டும், மிரட்டவேண்டும் அல்லது லஞ்சம் கொடுக்கவேண்டும் அவ்வளவுதான், கம்பெனி கொடி பறக்கும். இந்தியாவில் அவர்கள் சந்தித்த ஒரு பெரும் சவால் மாவீரன் ஹைதர் அலியும், அவரின் மகன் மைசூர் சிங்கம் திப்புசுல்தானும், உண்மையில் ஹைதர் அலி சாதாரண பணியாளர்தான், […]

சந்திர சேகர வெங்கட் ராமன்

தமிழகத்தில் பிறந்த எத்தனையோ விஞ்ஞானிகள் உண்டு, அவர்கள் எல்லாம் வெள்ளையனால் கொண்டாடபட்டார்கள். சீனிவாச ராமானுஜம் போலவே , சொல்லபோனால் அவரை விட அதிகமாகவே கொண்டாடபட்ட தமிழர் சி.வி ராமன் திருச்சி திருவானைக்காவலில் பிரிட்டிஷ் இந்தியாவில் அவர் பிறந்தார். காவேரிகரை கொடுத்த அபூர்வ மனிதரில் அவரும் ஒருவர் சந்திர சேகர வெங்கட் ராமன் இயற்பியலில் அவர் மேதை. சென்னை விசாகபட்டினம் என படித்தவர்தான் ஆனால் விஞ்ஞானம் அவருக்கு இயல்பாய் வந்தது பெரும் ஆராய்ச்சி முடிவுகளை அவர் வெளியிட்டபொழுது உலகம் […]

கரியப்பாவிற்கு பாரத ரத்னா வழங்கபட வேண்டும்

கரியப்பாவிற்கு பாரத ரத்னா வழங்கபட வேண்டும் ; ராணுவ தளபதி கோரிக்கை இந்திய ராணுவத்தில் மிக சிறந்த ஜெனரல்களாக கருதபடுபவர்கள் கரியப்பாவும், மானெக்ஷாவும். இருவர்தான் இன்றளவும் பீல்டு மார்ஷல் என்ற தகுதியினை பெற்றவர்கள், வேறு யாரும் பெறவில்லை அந்த பெரும் பெருமையினை பெற்ற கரிப்பாவினை, பல போர்களில் நாட்டினை காப்பாற்றிய அந்த மாவீரன் கரியப்பாவிற்கு பாரத ரத்னா வழங்கபட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வைக்கபடுகின்றது கரியப்பாவிற்கு ஏன் பாரத ரத்னா வழங்கபடவில்லை அது கொஞ்சம் […]

ஜின்னாவின் மகள் தினா வாடியா காலமானார்

பாகிஸ்தானை உருவாக்கிய ஜின்னாவின் மகள் தினா வாடியா காலமானார் அந்த ஜின்னா அப்பொழுது பிரிட்டிஷ் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர்களில் ஒருவராக அறியபட்டார், அவர் நன்கு படித்தவர், வழக்கறிஞர் மிக சிறந்த வாததிறமை மிக்கவர் அவருக்கு ஒரு நண்பர் இருந்தார் அவர் பெயர் தின்ஷா பேட்டி, அவர் பார்சி, டாட்டாவின் உறவினர். ஜின்னாவோடு நண்பரான அவர், ஜின்னாவினை தன் சிம்லா மாளிகைக்கு விருந்துக்கு அழைத்தார் அந்த தின்ஷாபேட்டிக்கு ஒரு மகள் இருந்தாள் அவள் பெயர் ரத்னாபாய் தின்ஷா, 16 […]

எம்.கே. தியாகராஜ பாகவதர்

1940களுக்கும் 1955களுக்கும் இடைபட்ட காலங்களை ஆட்டிவைத்தவர் அவர், அன்றே அரசியலில் சினிமா கலந்திருக்குமானால் ராஜாஜி, காமராஜர் என்ற தலைவர்கள் எல்லாம் காணாமலே போயிருப்பார்கள். சுமார் 20 ஆண்டு காலம் தமிழகத்தை கட்டிவைத்தவர் எம்.கே. தியாகராஜ பாகவதர், தமிழ் சினிமாவின் கதல் வசூல் மன்னன். நாடக மேடையில் அவர் பாடிக் கொண்டே தோன்றும்போது, ரசிகர்கள் எழுப்பிய ஆரவார வரவேற்பு வேறெந்த நடிகருக்கும் கிடைத்ததில்லை. பாமரர்களும் கர்நாடக சங்கீதத்தை ரசிக்க முடியும் என்ற நிலையை உருவாக்கியவர். ஒரே சமயத்தில் நாடகம், […]

சர்தார் வல்லபாய் பட்டேல்

இந்திரா காந்தியினை நினைவு கூறும் இந்நாளில் அந்த மாமனிதரையும் நினைவு கூறத்தான் வேண்டும். சுதந்திர இந்தியாவினை ஒரே இந்தியா ஆக்கிய அரும் மனிதர் அவர். சர்தார் வல்லபாய் பட்டேல் காந்தி பிறந்த குஜராத்தில்தான் அவரும் பிறந்தார். மிக கடினமான சூழலில் வளர்ந்தார். இரவல் சட்டபுத்தகங்களிலே வழக்கறிஞனர் ஆன உழைப்பாளி அவர். காந்திக்கும் அவருக்கும் முதலில் பொருந்தவில்லை. அதற்கான சந்தர்ப்பம் ஒரு வறட்சியின் உருவில் வந்தது. குஜராத்தின் “கேடா” மாவட்டத்தில் கடும் வறட்சி, ஒன்றும் விளையவில்லை ஆனால் வரிகேட்டது […]

மருது சகோதரர்களின் மறக்க முடியா வீரமும் தியாகமும்

சுதந்திர போராட்டத்தை இந்தியாவில் தொடங்கிய வீரர்களில் முக்கியமானோர் மருது சகோதரரர்கள் அவர்களின் வீரமும் தியாகமும் பெரிது . சாதரண குடும்பத்து சகோதரர்கள், ஆனால் தங்கள் வீரத்தாலும் விசுவாசத்தாலும் சிவகங்கை அரசின் தளபதிகளாயினர், முத்துவடுகநாதரின் நம்பிக்கைகுரியவர்களாயினர். இருவருமே மருதநாயகம் போல பலசாலிகளாகத்தான் இருந்தார்கள், பீரங்கிகளை தூக்கி திருப்பும் அளவிற்கு உடல்கட்டு இருந்திருக்கின்றது முத்துவடுகநாதர் காலத்திற்கு பின் வேலுநாச்சியார் பதவியிழந்து அலையும் பொழுது அவரை காடுகளிலும் பின் ஹைதர் அலி பாதுகாவலிலும் வைத்திருந்தவர்கள் அவர்களே பின் போர்தொடுத்து வெள்ளையனை விரட்டி […]

மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி , திருநெல்வேலி

கிறிஸ்தவர்கள் மட்டும்தான் தென்னிந்தியாவில் கல்வி வளர்த்தார்கள் என்பது சரியான வாதம் அல்ல. அவர்கள் கல்விக்கான முயற்சிகளை தொடங்கினார்கள் சந்தேகமில்லை ஆனால் அவர்கள் கல்விநிலையங்களால் பல மாறுதல்கள் நிகழ்வதை கணித்த தென்னக இந்துக்களும் விழித்துகொண்டு கல்வி நிறுவணம் அமைத்தார்கள் தமிழ் அழிவதையும், சில கலாச்சாரங்கள் அழிவதையும் தடுக்க எண்ணி அவர்கள் செய்த முயற்சி அது. ஆங்கிலம் கற்கவேண்டும், அதே நேரம் தமிழ் அழியாமல் காக்கபடவேண்டும் என்ற உன்னத நோக்கம் அவர்களது, அப்படி பலர் பல கல்வி நிலையங்களை உருவாக்கியிருக்கின்றார்கள் […]