பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இன்று அண்ணாவின் பிறந்த நாள்

ச‌ரியாக வாராத தலை, உடல் பிடித்த கசங்கிய சட்டை,தூக்கிஎடுத்து கட்டிய வேட்டி, வாயில் வெற்றிலை கரை, கூடவே பொடி வாசனை, டெல்லி பாராளுமன்றத்தில் அவர் நுழையும்பொழுது அந்த தலமையகமே ஒரு மாதிரித்தான் பார்த்தது அவர் பேச எழும்பொழ்து சபை சுழித்தது, பேச பேச ஆழ்ந்த அமைதியில் மூழ்கியது, இது ஒரு பெரும் அறிஞனின் பேச்சு என சபை நேரு தலைமையிலே மீண்டும் பேச சொல்லி அந்த தமிழனை வாழ்த்தியது, டெல்லி என்ன டெல்லி?, உலக நாடுகளின் பெரும் […]

நலம்கெட புழுதியில் எறியபட்டவர்

நலம்கெட புழுதியில் எறியபட்டவர் செப்டம்பர் மாதத்தில் இஸ்ரேலியருக்கு பெரும் துக்கம் உண்டு, முனிச் நகரத்தில் நடைபெற்ற துயரமது. அமெரிக்கர்களுக்கு பெரும் அடியாக அமைந்த இரட்டை கோபுரத்தினை எண்ணி அவர்களும் அழுவார்கள். நெல்லை சீமையின் அறிவுசுடர் பாரதியை நினைத்து தமிழறிந்த,அறிவறிந்த தமிழரும் அழுவார்கள். மகாகவி சுப்பிரமணிய பாரதி ஒரு பிறவி ஞானி, பாட்டுகொரு தலைமகன் என பட்டம் பெறமட்டுமே  பிறந்தவர், தென் தமிழகத்தின் பெருமையான‌ அடையாளம், நிச்சயமாக சொல்லலாம் அறிவுசூரியன். ஆனால் வாழும்பொழுது ஒருவனை ஓடஓட விரட்டி, செத்த […]

கப்பல் வாங்கவைத்த தமிழன் வ.வு.சி பிறந்த நாள்

தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் பல சிதம்பரங்கள் உண்டு, தில்லை சிதம்பரம், விஞ்ஞானி சிதம்பரம், முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் என வரிசை பெரிது, அவற்றில் முக்கியமானவர் வ.உ.சிதம்பரம். அந்த காலத்திலே படித்தவர், அதுவும் வழக்கறிஞருக்கு படித்தவர். தொழிலை சுத்தமாக செய்தவர், வசதி குறைந்தவருக்கு இலவசமாக வாதாடினார் என்றெல்லாம் அவருக்கு அப்பொழுதே பெருமை உண்டு. ஆனாலும் சுதந்திர தாகமெடுத்தது, அது அவருக்கு மட்டுமல்ல, அந்நாளைய பொதுநலவிரும்பிகள் மற்றும் பலருக்கும் எடுத்தது, நாடு சுதந்திரம் அடையவேண்டும் என்பது அவர்கள் ஆசை, […]

குருவே நமஹ…குருவே துணை

குருவே நமஹ…குருவே துணை ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் உள்ள குருகுலங்களில் காலையில் வகுப்புகள் தொடங்கும் பொழுது ஒலித்துகொண்டிருந்த வார்த்தை, நமஹ என்றால் போற்றுகிறோம் அல்லது வணங்குகிறோம் என பொருள், அப்படித்தான் வணங்கினார்கள், குரு என்றால் இருளை நீக்குபவர், அறிவினை தருபவர் என பொருள், கிரகங்களில் கூட அறிவினை தரும் கிரகத்திற்கு குரு என பெயரிட்டு கொண்டாடியது பாரதம். குருவில்லாத வித்தை பாழ், குருவில்லாத கல்வி கருஇல்லாத முட்டை என்றெல்லாம் குருவின் பெருமையை உயர்த்தி பிடித்தனர், அவ்வளவு […]

உன்னத நடிகனின் நினைவு நாள்…

  முகத்தை காட்டி நடிக்க தெரியாத நடிகர்கள் மத்தியில் தன் நகத்தை கூட நடிக்க வைத்த உன்னத நடிகனின் நினைவு நாள். நாடகத்தமிழுக்கு சர்வதேச புகழ்பெற்றுகொடுத்த பெரும் கலைஞன் அவர். நவரசம் மட்டுமல்ல ஆய கலைகள் 64க்கும் உருவம் கொடுத்து கண்ணில் நிறுத்திய நடிகன் அவர். 64 கலைகளையும் முகத்திலே காட்டினார். அவரின் காந்த பார்வையும், புன்னகைத்த வசீகர முகமும் எத்தனை எத்தனை மனிதர்களை உணர்வோடு நம் கண்முன் காட்டிற்று, தெய்வத்தின் கருணையினையும் அம்முகமே அப்பழுக்கற்று காட்டியது. […]

அற்புத சண்டை கலைஞன் புரூஸ்லீ நினைவுநாள்

அவன் அமெரிக்காவில்தான் பிறந்தான், ஆனால் சீன தந்தை அவனை ஹாங்காங்கிற்கு கொண்டுசென்று வளர்த்தார். அவனோ பள்ளிக்கு செல்லும் பொழுதெல்லாம் நாலுவார்த்தை கற்றானோ இல்லையோ 4 பேரை அடிக்க மறக்காமல் கற்றுகொண்டான் அவ்வப்போது குழந்தை நட்சத்திரமாக ஹாங்காங் படத்திலும் வந்தான், ஆனால் முழுநேர தொழில் மற்றும் பொழுதுபோக்கு எங்காவது தெருவில் சண்டையிடுவது, போதாகுறைக்கு குங்பூ வேறு கற்றுவிட்டான், அட்டகாசம் தாளவில்லை அவன் தாதாவாக வேறு மாறிவிட்டான், அவனுக்கு கீழ் 10 அடியாள். பொறுத்துபார்த்த தந்தை அவன் கையில் 100 […]

இன்று கவிஞர் வாலியின் நினைவுநாள்

வாலி தமிழக கவிஞர்களில் மறக்கமுடியாதவர், தவிர்க்க முடியாதவர் ஓவியர், அறிவிப்பாளர் என அவருக்கு பல அவதாரம் இருந்தாலும் கவிஞர் வாலியாக அவர் ராமாயண வாலிபோலவே பலமாக இருந்தார் திருவரங்கத்து இயல்பான அறிவு சுஜாதா போலவே இவருக்கும் அமைந்திருந்தது, சும்மா சொல்லகூடாது அபாரமான ஆற்றல் கொண்டவர்கள் எல்லாம் அங்கிருந்து உதித்திருக்கின்றார்கள், ரங்கராஜன் என்ற வாலியும் அந்த ரகம் நல்ல தமிழறிவு, அபார சொல்வளைவு என இருந்த வாலி பல தொழில்களில் இருந்துவிட்டுத்தான் கவி எழுதவந்தார், அவர் வந்த காலம் […]

கவிஞர் நா.முத்துகுமார் பிறந்துகொண்டே இருப்பார்..

காஞ்சியிலிருந்து வந்து அண்ணாவிற்கு பின் தமிழை வசப்படுத்திய அந்த கவிஞன் இனி இல்லை. 1990களில் அறிமுகம் ஆனவர் எனினும் , கடந்த 12 ஆண்டுகளாக அவர் உச்சத்தில் இருந்தார். காதல்கொண்டேன் படத்தில் ஆரம்பித்த அவரின் உச்ச நேரம், அவரின் இறுதி நொடி வரை தொடர்ந்தது. அவரின் பாடல்களில் வார்த்தைகள் வசப்பட்டிருக்கும், அருமையான சொற் உருவகங்கள் கண்ணதாசன் போலவே விளையாடியிருக்கும், உதாரணம் ஆனந்தயாழ் போன்றவை 12 ஆண்டுகளாக தமிழ்துறை பாடல்களில் தனக்கென ஒரு இடம் பிடித்து சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தான். […]

உலகை வென்றெடுத்த பெண்களில் முதன்மையாவர் டயானா : அவர் பிறந்த நாள் இன்று

கடந்த நூற்றாண்டில் அரசியல், பொதுசேவை, விஞ்ஞானம், ஊழல்,கொலை,கொள்ளை என பல துறைகளில் முத்திரை பதித்த பெண்கள் உண்டு, அதில் தன் வசீகரத்தாலும், எளிமையாலும், சேவையாலும் உலகை வென்றெடுத்த பெண்களில் முதன்மையாவர் டயானா ஒரு விசித்திரமான பெண்மணி அவர், அதனை விட மகா விசித்திரமானது அவர் வாழ்வு எந்த பெருமைக்கும், புகழுக்கும், பதவிக்கும் ஆசைபட்டு தன் சுதந்திரத்தை தொலைக்காமல் , தான் விரும்பிய வாழ்வினை வாழ்ந்தவர் அவர், அவரின் பலமும் அது, பல்வீனமும் அதுவே சிறுவயதில் பள்ளிக்கு செல்லவில்லை, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications