பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பாரதியார் பிறந்த தினம்…

“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்..” என தமிழக நிலமைகளை பார்த்து அழுதுவிட்டு, எங்கள் நெல்லை சீமையின் அறிவு சுடரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வோம் பாரதி பிறந்தநாள் இன்று, மன்னியுங்கள் பாரதி, கொஞ்சம் உங்கள் வரிகளை மாற்றுகின்றோம் “செந்தமிழ்நாடென்னும் பொதினிலே தேள் வந்து கொட்டுது காதினிலே எங்கள் தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ரத்த கண்ணீர் வடிகின்றது கண்களிலே..”    

புனித சவேரியர் நினைவு நாள்

  https://youtu.be/IIz_cz71ijI தோற்றம் : 07-04-1506     ::    மறைவு : 03-12-1552 இந்தியாவில் சில தொழிலாள இனங்களுக்கு கால காலமும் சிக்கல், பண்டைய காலமுதல் அப்படித்தான் இருந்திருக்கின்றது. சில தொழிலாள இனங்கள் அடக்கபட்டு,புறக்கணிக்கபட்டு இருந்தன, அதிலொரு இனம் ஆடுமாடு மேய்ப்பவர்கள். அவர்கள் மிக ஒடுக்கபட்டகாலத்தில் பகவான் கிருஷ்ணனே அவதரித்து அவர்களை காப்பாற்றி இருக்கின்றார். இன்று விவசாயமும் அந்த புறக்கணிக்கபட்ட‌ படியலில் இணைந்தாயிற்று ஆனால் காப்பாற்ற இன்னும் அவதாரம் வரவில்லை. ஆனால் இந்தியதொழிலாள இனங்களில் […]

மக்கள் பாவலர் இன்குலாப்

பட்டுகோட்டை கல்யாண சுந்தரத்திற்கு பின் மக்கள் கவிஞராய் வாழ்ந்த கவிஞர் இன்குலாப் மறைந்துவிட்டாராம் சாக வேண்டிய எத்தனையோ இம்சை கவிஞர்கள், நவீனத்துவ கவிஞர்கள் அப்படி சொல்லிகொண்டிருப்பவர்கள் உயிரோடு இருக்க, ம‌க்களுக்காக எளிய கவிதைகளை உணர்ச்சியாய் சொன்ன கவிஞன் செத்துவிட்டாராம் சாவு அவரின் உடலுக்கே அன்றி அவரின் படைப்புகளுக்கு அல்ல‌ பட்டுகோட்டையார் போலவே மானிடத்தை நேசித்த ஒரு பெரும் கவிஞனுக்கு கண்ணீர் அஞ்சலி.

தோழர்.நல்லக்கண்ணு அய்யா அவர்களின் துணைவியார் ரஞ்சிதம் அவர்கள் மறைவு.

தோழர்.நல்லக்கண்ணு அய்யா அவர்களின் துணைவியார் ரஞ்சிதம் அவர்கள் மறைவு. ஒரு நல்ல சமூக போராளிக்கு, சம்பாதிக்க தெரியா அரசியல்வாதிக்கு மனைவியாய் வாழ்வது ஒரு பெரும் தியாகம் அவ்வகையில் அந்த மகராசி இந்த சமூகத்திற்காய் பாடுபட்ட ஒருவரை இதுகாலம் வரை காத்து பெரும் சேவையினை தமிழக மக்களுக்கு செய்திருக்கின்றார். ஒரு ஆணின் வெற்றிக்கு பின் அல்ல, அவனின் தியாக வாழ்விற்கு பின்னும் ஒரு பெண் நிச்சயம் உண்டு கஸ்தூரிபாய், கமலா நேரு, நாகம்மை எல்லாம் அவ்வகை, நிச்சயம் ரஞ்சிதம் […]

அமெரிக்க அதிபர் கென்னடி : ஓர் நினைவாஞ்சலி

 தோற்றம் : 20-05-2017      ::       மறைவு : 22-11-1963 எத்தனையோ அதிபர்கள் அமெரிக்காவில் வரலாம், ஆளலாம். ஆனால் கென்னடி அளவு ஒரு துணிச்சல் மிக்க தலைவர் அவர்களுக்கு கிடைக்கமாட்டார்கள் இன்றளவும் அமெரிக்கர்களின் கனவு தலைவர் அவர். அவர் காட்டிய பாய்ச்சல் அப்படி, அமெரிக்காவினை உலக அரங்கில் உயர்த்து காட்டிய பெரும் துணிச்சலான காரியங்கள் பிரசித்திபெற்றவை அன்றைய செம்பூதம் ரஷ்யா, ஹிட்லரை ஒழித்துகட்டி தானே உலகின் ராஜா என சொல்லிகொண்டிருந்தது, ஸ்புட்னிக் […]

பத்மநாபா : உண்மை தியாகங்கள் அழிவதில்லை..

https://youtu.be/vkJknBKctzE பத்மநாபா படுகொலை சென்னையில் நடந்த போராளிகுழுக்களிடையிலான சண்டை, இது எப்படி இந்தியாவிற்கெதிரான புலி எதிர்ப்பாகும் என்கிறார் ஒருவர். பத்மநாபா இந்திய அமைதிபடையோடு சேர்ந்து இடைக்கால நிர்வாக மாகாண சபை அமைத்தவர், விடுவார்களா புலிகள் விரட்டினர். அமைதிபடை வெளியேறும்பொழுது அவர் சென்னை வந்தார் அப்பொழுது மத்தியில் விபிசிங் அரசும், தமிழகத்தில் கலைஞரும் ஆட்சியில் இருந்தனர். அந்த கலைஞர் புலிகளின் அபிமானி, முரசொலிமாறன் புலிகளின் இந்திய பிரநிதிபொலவே பேசிகொண்டிருந்தவர் சென்னை வந்த பத்மநாபா, கலைஞரிடம்தான் அடைக்கலம் கோரினார், அமைதிபடையினை […]

நாவலர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி காலமானார்.

நாவலர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி காலமானார். அவர் இயற்பெயர் நாராயண சுவாமி, சுயமரியாதை இயக்கத்தில் கலந்தபின் நெடுஞ்செழியன் என தன் பெயரை மாற்றிகொண்டு முழங்கினார். பெரியார் கழகத்திலும், திமுகவிலும் நெடுஞ்செழியனின் இடம் பிரதானம், திமுகவினை தாங்கிய ஐம்பெரும் தலைவர்களில் ஒருவர், அதனால் அவர்களாக “நாவலர்”,”நடமாடும் பல்கலைகழகம்” என்றெல்லாம் பட்டம் கொடுத்து மகிழ்ந்தனர் அவர்களுக்கென்ன பட்டம் கொடுப்பது என்ன நோபல் கமிட்டியா? ஐ.நா வா? இவர்களாக அறிஞர், பேரரிஞர், கலைஞர், போர்வாள், தளபதி, நாவலர், புரட்சி நடிகர் என […]

வீர வணக்கம் யாசர் அராபத்…

வீரமும் விவேகமும் நிரம்பிய சிங்கத்தின் நினைவு நாள் இன்று ஒரு போராட்டம் எப்படி இருக்கவேண்டும், வெல்ல முடியாத எதிரியினை எப்படி பேச்சுவார்த்தைக்கு அழைக்கவேண்டும், பேசவந்தவர்கள் எதிரிக்கு நெருக்கமானவர்கள் எனினும் எப்படி நியாயத்தை பெறவேண்டும் என்பதிலும் உலகிற்கு வழிகாட்டியவர் அவர் கொஞ்சம் சறுக்கி இருந்தாலும், இன்றிருக்கும் பாலஸ்தீனம் இருந்திருக்காது, இன்று சுவர்கட்டி இஸ்ரேல் அப்பக்கம் பாலஸ்தீனம் என ஒப்புகொண்டே ஆகிவிட்டதென்றால் அம்மனிதனால் மட்டுமே போராளிகள் வரிசையில் மறக்கமுடியா மாமனிதன் அவன் பாலஸ்தீன மக்கள் அனாதைகளான தினம் இன்று விடுதலை […]

இந்திரா காந்தி : நினைவு நாள்

இந்த நாள் அன்று அவர் பிரதமராகும் பொழுது இந்தியாவில் ஆங்காங்கு மாநில தேசியங்கள் வலுப்பெற்றன, அது இந்தியாவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது உச்சதலைவருக்கு தெரியாத விஷயமால‌, சமாளித்தார். தமிழகத்தில் திராவிடம், மும்பையில் மராட்டிய கோஷ்ம் என பல வகையான குரல்கள் உயர்ந்து கேட்டகாலம், காஷ்மீர் கேட்கவே வேண்டாம். இந்த வரிசையில் பஞ்சாப்பும் சேர்ந்துகொண்டது. டெல்லி தமிழகத்தை வஞ்சிக்கிறது, தமிழர்களை அடக்கிஒடுக்குவதில் அதீத அக்கறை காட்டுகின்றது, என்றேல்லாம் பல குற்றச்சாட்டுகள் உண்டு, கொஞ்சம் பஞ்சாப்,காஷ்மீர்,வங்கம் பக்கம் சென்று வந்தோமானால் […]

இன்று அப்துல் கலாமின் பிறந்தநாள்

தோற்றம் : 15-08-1931   :: மறைவு : 27-07-2015 இன்று அப்துல் கலாமின் பிறந்தநாள் பள்ளிகளில் விஞ்ஞான நாள் என கொண்டாடவேண்டிய நாள் இது. அந்த மாபெரும் மனிதனை, விஞ்ஞான தமிழனை இந்த தேசம் எப்படி நினைவு கூறுகின்றது என தெரியவில்லை அவரை பற்றி நிறைய எழுதியாகிவிட்டது, இன்னும் எழுதினால் அவரே வந்து கீபோர்ட்டினை உடைத்துவிடுவார். இந்தியா அவரின் பிறந்தநாளை கொண்டாடுகின்றதோ இல்லையோ, யாழ்பாண பலகலைகழகம் அதனை கொண்டாடிகொண்டிருக்கின்றது யாழ்பாண மக்கள் கல்வியால் அடையாளம் பெற்றவர்கள், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications