பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

லோகமான்ய பால கங்காதர திலகர்

அதுவரை காங்கிரஸ் இயக்கம் பிரிட்டிஷாரை விரட்ட முடியாது என்றே நம்பிகொண்டிருந்தது, உலக யதார்த்தபடி அதற்கு வழி இல்லாமலும் இருந்தது பிரிட்டிஷாரை எஜமானர்கள் என நம்பி உரிமை கேட்ட காங்கிரசில் முதன் முதலில் அவர்கள் அந்நியர்கள் என சொல்லி ஒரு குரல் ஒலித்தது அது பெரும் கலகத்தையும் ஏற்படுத்தியது மிக தைரியமாக அக்குரலை எழுப்பி பெரும் எழுச்சிக்கு வித்திட்டவர் பால கங்காதிர திலகர், அவரின் எழுச்சியே தேசத்தில் ஒரு அணலை எழுப்பியது, அது காந்தி காலத்தில் விடுதலையாக விடிந்தது […]

சுப்பிரமணிய சிவா நினைவு நாள்

  அவர் பெயர் சுப்பராமன், ஆனால் பேசிவிட்டால் சிவ நடனம் போல பேச்சில் தாண்டவம் இருக்கும் அதனால் சிவம் என்றழைக்கபட்டார்,சுப்புராமன் சிவம் என்பது பின்னாளில் சுப்பிரமணிய சிவா ஆயிற்று தமிழகம் தந்த மாபெரும் தியாகி அவர். மிக சிறந்த மேடை பேச்சாளர், இந்துமதத்தின் மீது அபார பற்றுகொண்டவர். காந்திக்கு முந்தைய காலத்தின் தியாகி சுதந்திர போராட்டத்தில் காந்தியின் வருகை முக்கியமெனினும் இவர் போன்ற தியாகிகள் ஏற்றிவைத்த நெருப்பைத்தான் காந்தி பெரிதாக்கினார் என்பதில் அய்யமில்லை. சுப்பிரமணிய சிவா கிட்டதட்ட […]

சுவாமி விவேகானந்தர்

“இந்தியா ஏராளமான சிந்தனையாளர்களை கொடுத்திருக்கின்றது, விஞ்ஞானிகள், கவிஞர்கள், நாட்டுபற்றாளார்கள் என அந்த கொடை பெரிது அவ்வாறே அம்மண்ணில் உதித்த ஞான சூரியன்களில் மிக மிக முக்கியமானவர் விவேகானந்தர். சிறுவயதிலே ஏராளமான கேள்விகளை எழுப்பியவர், ஆன்மீகத்தையும் பகுத்தறிவினால் உணரமுற்பட்டவர், அக்கால பெரும் பீடமான பிரம்ம சமாஜம் அவரை எதிர்கொள்ளமுடியவில்லை, இறுதியில் ராமகிருஷ்ண பரம்மஹம்சரிடம் தான் தேடிய ஆத்மஞானத்தினை அடைய அடைக்கலமானார். தெளிவான முகம், குழப்பமில்லாத பதில்கள், தெளிந்த நீரோடை போன்ற பேச்சு, எதிர்கேள்வி கேட்கமுடியாத அற்புதமான உவமைகள், உள்ளத்தில் […]

எஸ்.வி ரங்காராவ் : பிறந்த நாள் நூற்றாண்டு இன்று…

தமிழ் திரையுலகின் பொற்கால படங்களில் சில நடிகர்கள் மறக்க முடியாத அற்புத நடிகர்கள். பாலையா, நாகையா போன்ற வெகுசிலரில் அந்த நடிகரும் ஒருவர். முதிர்ந்த பொறுப்பான குடும்பத்தின் தலைமகன் வேடத்திற்கு அவரை விட்டால் அந்நாளில் நடிகனே இல்லை. அவரின் ஆஜானுபாகுவான உயரமும், , தீர்க்கம் காட்டும் முகமும் அந்த வேடத்தில் அவரை பிரகாசிக்க செய்தது நீங்கள் பழைய படங்களின் ரசிகர்கள் என்றால் நிச்சயம் அந்த நடிகனை அவ்வளவு ரசித்திருப்பீர்கள். சமரல்ல வெங்கட ரங்க ராவ் எனும் எஸ்.வீ […]

வசீகரத்தாலும், எளிமையாலும், சேவையாலும் உலகை வென்றெடுத்த பெண்களில் முதன்மையாவர் டயானா

கடந்த நூற்றாண்டில் அரசியல், பொதுசேவை, விஞ்ஞானம், ஊழல்,கொலை,கொள்ளை என பல துறைகளில் முத்திரை பதித்த பெண்கள் உண்டு, அதில் தன் வசீகரத்தாலும், எளிமையாலும், சேவையாலும் உலகை வென்றெடுத்த பெண்களில் முதன்மையாவர் டயானா ஒரு விசித்திரமான பெண்மணி அவர், அதனை விட மகா விசித்திரமானது அவர் வாழ்வு எந்த பெருமைக்கும், புகழுக்கும், பதவிக்கும் ஆசைபட்டு தன் சுதந்திரத்தை தொலைக்காமல் , தான் விரும்பிய வாழ்வினை வாழ்ந்தவர் அவர், அவரின் பலமும் அது, பல்வீனமும் அதுவே சிறுவயதில் பள்ளிக்கு செல்லவில்லை, […]

முதல் தென்னிந்திய பிரதமர் பி.வி நரசிம்ம ராவ்…

சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இந்தியாவில் வட மாநிலத்தவருக்கே பிரதமர் பதவி இருந்தது, காமராஜர் தனக்கு வந்த வாய்ப்பினை ஏற்க மறுத்தார் முதன் முதலாக தென்னிந்தியாவினை சேர்ந்த பிரதமர் என நரசிம்மராவ் என்பவர்தான் அறியபட்டார், பெரும்பான்மை இல்லா நிலையிலும் 5 ஆண்டுகள் ஆட்சி புரிந்த சாகசக்காரர் மனிதர் தீவிர காங்கிரஸ்காரர், நல்ல திறமையான‌ அரசியல்வாதியும் கூட. ராமராவின் எழுச்சிக்கு பின்னும் ஆந்திராவில் காங்கிரஸ் இருந்ததென்றால் அது இவர்களை போன்றவர்களால்தான் நரசிம்மராவினை நினைக்கும் பொழுது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய […]

கஜினி முகமது

கஜினி முகமது மகா உத்தமன் என்றும், இந்து பிராமண பூசாரிகளே சோமநாதபுரி ஆலயத்தை இடித்ததாகவும் சிலர் கதை எழுதி வருகின்றார்கள் ஆலயங்களை உடைத்து புதையலை தேடுவது அக்கால வழக்கம், சாலமோன் அரசனின் ஆலயத்தை நெபுகாத்நேச்சர் எனும் பாக்தாத் மன்னன் அப்படித்தான் உடைத்தான் அனுராதாபுர புத்த விகாரையினை ராஜராஜ சோழன் அப்படித்தான் கொள்ளையடித்து வந்தான் அலெக்ஸ்டாண்டரும், நெப்போலியனும் எகிப்தின் கல்லறைகளையும் ஆலயங்களையும் விடாமல் நொறுக்க்கி தேடினார்கள் உலக வழக்கம் இது ஆப்கனின் கஜினி எனும் ஊரில் இருந்த முகமது […]

மபொசிக்கு ஆழ்ந்த அஞ்சலி

தமிழுக்காக தமிழருக்காக‌ திமுக மட்டும் பாடுபட்டது என்பதே பெரிய பொய், அதனைவிட பெரும் பொய் சீமானின் கட்சியும் இன்னும் சில தமிழ் தேசிய அலப்பறை கட்சிகளும். ஆனால் தமிழுக்காக, தமிழருக்காக வாழ்ந்த மிக சிலர் உண்டு அவர்கள் சைவ சிந்தாந்த கழகத்தில் இருந்தார்கள், இந்து மத அபிமானிளாக இருந்தார்கள், இந்திய தேசியத‌தை தமிழுணர்வோடு ஏற்றுகொள்ளமுடியும் என்ற உயர்ந்த மனநிலையில் இருந்தார்கள் அதில் ஒருவர்தான் ம.பொ.சிவஞானம் எனும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் அவர் தமிழுணர்வாளர். அவர் அளவு தமிழ் […]

ஜாக்சன் வாழ்ந்துகொண்டே இருப்பார்

அது தெருவோரமாக ஆடிகொண்டிருந்த கருப்பர் இசை குடும்பம், அந்த குடும்பத்தின் 7ம் பிள்ளை ஜாக்சன் அந்த சகோதரர்கள் நடத்திய இசைகுழுவில் நடனமாடி தன் வாழ்வினை தொடக்கினார் அவர் மின்னல் வேக அசைவுகளும் , சவால் நிறைந்த ஆட்டங்களும் அவருக்கு தனி புகழ் தேடிகொடுத்தன‌ பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த ‘பாப்’ புதிய நடனத்தை அவர் படைத்தார் சொந்தமாக பாடல், இசை என […]

மறக்க முடியா மகத்தான மனிதர் வி.பி சிங்கிற்கு நினைவஞ்சலிகள்

மிக குறுகிய காலம் இருந்தாலும் வி.பி சிங்கின் சாதனைகளை மறக்க முடியாது பெரும் சர்ச்சையினை மேல்சாதி கட்சிகள் கொண்டுவந்த போதும், மண்டல் கமிஷன் அறிக்கையினை அமுல்படுத்தியது அவர் ஆட்சியில்தான், நீண்டகால கோரிக்கையான அம்பேத்கருக்கு “பாரத் ரத்னா” வழங்கபட்டதும் அவர் ஆட்சியில்தான் இன்னும் ஏராளம் உண்டு தாழ்த்தபட்ட மக்களுக்காக ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற அவரின் செயல்பாடுகள் பாராட்டதக்கவை அதன் விளைவே அவர் அரசு கவிழ்க்கபட்டு சந்திரசேகர் பிரதமர் ஆனார் இன்று பிரபாகரன் என குதிப்போர் ஒரு விஷயத்தை […]